அமெரிக்க எல்லையில் சோதனைக்குள்ளாகும் டிஜிட்டல் வாழ்க்கை

டூனிக் ஒரு சாதாரண பயணி அல்ல. அவர் அட்லாண்டாவின் “Stop Cop City” இயக்கத்துடன் தொடர்புடைய போராளி. அவரது போராட்ட குணம், அரசியல் நடவடிக்கைகளே அதிகாரிகளின் கவனத்திற்கு அவரை கொண்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். அவருடைய கைபேசியை கைப்பற்றுவதைத் தடுக்க அதன் தகவல்களை அழித்ததற்காகவே குற்றம் சாட்டப்பட்டு அமலாக்க அதிகாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது எல்லை பாதுகாப்புத்துறை

வரலாறு மறக்காத நட்பு: வாஷிங்டனும் லஃபாயெட்டும்

1783ல் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் பிரிட்டன் அமெரிக்காவை முறையாக அங்கீகரிப்பதற்கு முன்பு, பல ஆண்டுகள் கடுமையான போர்கள் தொடர்ந்தன. போர்க்களங்களில் லஃபாயெட்டின் தலைமைத்துவம், ஜார்ஜ் வாஷிங்டனுடனான அவரது நெருங்கிய கூட்டாண்மை, ஃபிரெஞ்சு அரசின் ஆதரவை வலுப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றி ஆகியவை அமெரிக்கச் சுதந்திரக் கனவை நனவாக்க உதவின. அவரது சேவையைப் பாராட்டி, காங்கிரஸ் அவருக்குத் தாராளமான நிதி விருதையும் பொது நிலத்தையும் வழங்கி கௌரவித்தது. 2002ல் ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புரிமையான கௌரவ அமெரிக்கக் குடியுரிமையையும் வழங்கிச் சிறப்பித்தது

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவத் தலையீடு தொடர்பான தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக காபார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டார். உளவுத்துறை மதிப்பீடுகள், தேசியப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள் பதட்டங்கள் நிலவியதாகவும் சில அறிக்கைகள் விவரித்தன. இருப்பினும் இந்தக் கருத்து வேறுபாடுகளே அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வெளியேறுவதற்கு முன்பு ஒரு இந்து மத அமைப்புடன் அவருக்கு இருந்த கடந்தகாலத் தொடர்புகள் குறித்த ஆய்வை ஊடக அறிக்கைகள் மீண்டும் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டுகளை காபார்ட்டும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்துக்களுக்கு எதிரானவை என்றும் நிராகரித்தனர்.

மாறும் அமெரிக்கா, மாறும் கனவுகள்

அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்திய வல்லுநர்கள் எத்தகைய பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகம் அறியும். மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் நிறுவனர்கள், பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களில் ஒரு விகிதாசாரமற்ற பங்கைக் கொண்டுள்ளனர். தற்போதைய இந்த அடக்குமுறையின் முரண் என்னவென்றால், அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு யார் அடித்தளமாக இருந்தார்களோ அவர்களையே குறிவைத்திருப்பது தான்.

அமைதி நடந்த அகண்ட நிலம்

சமூக ஊடகங்களில் இந்தப் பயணம் பரவலாகப் பகிரப்பட்டு பல இடங்களில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. சிறிய நகரங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். பூங்கொத்துகள், பழங்கள், தண்ணீர், கம்பளிகள், வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து வணங்கி நின்றனர். தினமும் பல படங்களை சமூக வலைதளங்களில் போட்டு கண்ணீர் உருகினர். மிசிசிப்பி, அலபாமா, கரோலினா பகுதிகளில் குளிர்கால மழை, காற்று, பனி என்றிருந்தாலும் வழக்கமான தியான ஒழுங்கைத் தளர்த்தாமல் அவர்கள் நடையை மேற்கொண்ட மனஉறுதியைக் கண்டு விக்கித்து நின்றது அமெரிக்கா!

அரசியலின் விலை: அழியும் விளைச்சலும் விவசாயியும்

அமெரிக்க விவசாயத்தின் எதிர்காலம் இன்று குறுக்குவெட்டு பாதைகளின் சந்திப்பில் நின்றுள்ளது. குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக உலக சந்தைகளுடன் மோதும் ஒரு பாதை; விவசாயியை மையமாக வைத்து நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கட்டியெழுப்பும் மற்றொரு பாதை. விவசாயி உதவித் தொகைகளால் மட்டுமே வாழ வேண்டியவன் அல்ல. அவன் உழைப்புக்கான நியாயமான விலையை எதிர்பார்க்கும் மனிதன்.

ஒரு கொலையிலிருந்து உருவாகும் புதிய அரசியல் மதம்

அவர் இறந்த பிறகு அவர் மனைவி எரிக்காவுடன் சேர்ந்து நிறுவிய Turning Point USA என்ற அமைப்புடன் இணைந்து ட்ரம்ப் அரசே ஒரு பிரமாண்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகுந்த உணர்ச்சிப் பொழிவுடன் இயேசு கிறிஸ்துவை நினைவூட்டும் மதப் படிமங்களுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் கடுமையான போர்முனை பேச்சுகளுடன் நடைபெற்றது. ‘சார்லி கிர்க்’ ஒரு தியாகியாக உருவகப்படுத்தப்பட்டார்.

நழுவும் பாதரசம்

மேல்சபையின் (Senate) வெளியுறவுக் குழுவின் தலைவர், ஜோ பைடன், 2008ல், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் சம நிலையில் இல்லாததைப் பற்றிய கருத்துக்களை வரவேற்றார். தான் வாங்குவதை விட அதிகமாக பொருட்களை அமெரிக்காவிற்கு விற்ற சீனா, அதிலிருந்து கிடைக்கும் இலாபங்களை, அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் முதலீடும் செய்து, தன் செல்வ நிலையை உயர்த்திக் கொண்டது. சீனாவின் மிகப் பெரிய கடனாளியாகியது அமெரிக்கா.

2025 அமைதிக்கான நோபல் பரிசு

சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் “2025 அமைதிக்கான நோபல் பரிசு”

பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்

அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”

நியூயார்க் நகரில் அரசியல் பரிணாமமா?

மம்தானியின் திட்டமோ செல்வந்தர்கள், பெரும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பது. நியூயார்க் நகரம் தனியாக வரிகளை உயர்த்த முடியாது. மாநில சட்டமன்ற ஒப்புதல் தேவை. இதற்குப் பணக்காரர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். செல்வந்தர்களின் தயவில் ஆட்சி நடக்கும் அமெரிக்காவில் இது சாத்தியமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!

எழுச்சியா? கலகமா?

ஆவணமற்றவர்கள் மீதான நடவடிக்கை என்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த லத்தீன் இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என்று பலரையும் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து அவர்கள் இருக்குமிடத்தையும் குடும்பத்திற்குத் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். அதைத்தொடர்ந்து சாலைகளை ஆக்கிரமித்து ICE மற்றும் LAPD உடன் லத்தீன் சமூக மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.

முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள்

‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினம் ஒரு அஸ்திரத்தை ஏவி முதல் 100 நாட்களில் “கண்ல மரண பயத்தை காமிச்சிட்டான் பரமா” என்று ‘வால்ஸ்ட்ரீட்’டை மிரட்டி வருவதால் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகளவிலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதுவும், அங்கிள்சாமின் ராணுவ நிலைப்பாடு, வர்த்தக கூட்டணிகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றின நிர்வாக உத்தரவுகள் கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விவாதங்களும் அதிகரித்து வருகிறது.

வெளிவரும் ரகசியங்கள்: கென்னடியைக் கொன்றது யார்?

படுகொலை தொடர்பான அனைத்து கோப்புகளும் பொதுமக்களுக்கு கிடைக்கவும் பல வருட ரகசியத்தையும் ஊகங்களையும் முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்பதால் 1992ல் ‘ஜேஎஃப்கே பதிவுச் சட்ட’த்தை அமெரிக்க காங்கிரஸ் வடிவமைத்தது. கென்னடியின் படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்த பல்வேறு ஆவணங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. CIA அறிக்கைகள், FBI கண்காணிப்பு கோப்புகள், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். இருப்பினும், பல முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டன.

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது.

ஹண்டர் பைடன்

ஜோ பைடன் துணை அதிபராக இருந்த பொழுது ஹண்டர் பைடனின் போதைப் பழக்கம், சீனாவில் அவரது நடவடிக்கைகள், உக்ரேனிய எண்ணெய் மற்றும் எரிவாயு வாரியத்தில் அவரது பதவியில் நடந்த சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் அனைத்தும் 2020 தேர்தலின் பேசுபொருளாக இருந்தாலும் உண்மையை வெளிவராமல் ஜனநாயகக் கட்சியினர் பார்த்துக் கொண்டனர்

வெற்றி யாருக்கு?

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற நிலையில் அக்டோபர் 1, 2024 அன்று இரு துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நடந்த விவாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக இவர்களின் விவாதம் அதிபர் தேர்தலில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிசுடன் மூன்றாவது விவாதம் செய்ய மறுத்ததால், ‘வேன்ஸ்-வால்ஸ்’ விவாத மேடை அதிக கவனத்தை ஈர்த்தது

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

இதுவரையில் வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்துக் கொண்டிருந்த குடியரசுக்கட்சியினரின் சுருதி கமலா ஹாரிஸின் வருகைக்குப் பிறகு சற்றே குறைந்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படித்தான் 2016லும் ட்ரம்ப்பிற்கு எதிராக ஊடகங்கள் இருந்தன என்று குடியரசுக்கட்சியினர் புறந்தள்ளுகிறார்கள். இரு அதிபர் வேட்பாளர்களும் தங்கள் துணை அதிபர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இருவருமே அத்தனை பிரபலமானவர்கள் இல்லை.

நவீனப் போர்விமானங்கள்

பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது.  அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது.  அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும்.  அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது.

கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்

இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!

அரசியலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சியே நிலைத்த ஆட்சியைத் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது கனடாவில் நடந்த சமீபத்திய தேர்தல். உலகிலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடும் மக்கள் தொகையில் அதிகமுள்ள நாடுகளில் 38வது இடத்தை வகிக்கும் கனடாவில் 38 million மக்கள் வசிக்கிறார்கள். “600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!”

”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்

இன்று அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி வரை எட்டியிருப்பது மற்ற அனைவரின் கண்களை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது அமைந்திருக்கும் பைடன் அரசில் பல்வேறு உயர் பதவிகள் இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருவதையும் மறந்துவிடக் கூடாது.
சீனர்களிடம் காட்டப்படும் வெளிப்படையான வெறுப்புணர்வு, இந்தியர்களிடம் இலைமறையாக காட்டப்படுகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.

அமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா?

இந்தியர்கள் என்றால் மருத்துவம், கணிணி சார்ந்த துறைகளில் மட்டுமே கோலோச்சுகிறவர்கள் என்கிற பொதுக்கருத்து இந்த நியமனங்களின் மூலமாக உடைபட்டிருக்கிறது. பைடனின் ஆட்சி அதிகாரத்தில், துணை அதிபரில் துவங்கி நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக இந்திய முகங்கள் தென்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தரும் நல்ல மாற்றம்.

பைடனின் மந்திரி சபை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் தான் தேர்தலில் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை புதிய அதிபராக அவர் அங்கீகரிக்கவும் இல்லை.  நடந்து முடிந்த தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பைடன் தரப்பினர் மோசடி செய்து “பைடனின் மந்திரி சபை”

ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்

பழமை விரும்பும் நீதிமன்றத்தை அமைத்துச் சென்ற டிரம்ப் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ட்ரம்ப் அரசு காட்டிய ஆர்வமும் அவசரமும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் “ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்”

அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?

கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.

ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை

1960-1970களில் ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ நீக்கப்பட்ட பிறகு, குற்றம் புரிந்தவர்களாக அறியப்படுபவர்கள், தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் , பல மாநிலங்களில் வாக்களிக்க அனுமதிக்கும்போது, ஃப்ளோரிடாவும் வேறு சில மாநிலங்களும் அந்த தடையை மாற்றிக் கொள்ளவே இல்லை. மேலும் இம்மாநிலங்களில் போதை மருந்து குற்றங்களுக்காக அதிக அளவில் கறுப்பர்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்கள். இதனால் ஐந்தில் ஒரு கறுப்பர் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020

மூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எனப் பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.

அன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான்……கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாத்தரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம்கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார் – என்பதாகப் பேசினார் ஒபாமா.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

தமிழகத்து ஷ்யாமளாவிற்கும், ஜமைக்காவின் ஹாரிஸுக்கும் அமெரிக்க மண்ணில் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். தன் பெயரைத் தவிர வேறெந்த இந்திய அடையாளங்களையும் முன்னிருத்தாதவர் கமலா. அவரின் சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிரிந்து தாயிடம் வளர்ந்திருந்தாலும் தந்தையின் வழியில் தன்னை கறுப்பின கிறிஸ்தவ பெண்ணாக, ஆஃப்ரிக்கன் அமெரிக்கனாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறவர். கறுப்பின அமெரிக்கர்களுக்காக, தனியாரால் நடத்தப்படும் ‘ஹாவர்ட் பல்கலை’ யில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.

குறைந்த தண்டனை, அதிக நீதி

தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல.

விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!

வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.

இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்

உணவு வங்கிகள் பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை சார்ந்துள்ள பொட்டண உணவறைகள் (food pantries), சிற்றுணவகம் (soup kitchens), மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது.

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்

நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் 24 மக்கள் பிரதிநிதிகளும், 9 கட்சிப் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள். அதிபர் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆரம்ப கட்ட ப்ரைமரியில் நம்பிக்கையான வேட்பாளர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்பதாலும், அடுத்தடுத்து நடைபெறும் ப்ரைமரிகளில் அவர்கள் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இறுதி நிலவரம் தெரியவரும்.