இமையம் சிறுகதைகள்: பகிரமுடியாத பெண்களின் துயரக் கதைகள்

இமையம், சிறுகதை உத்திகளில் நம்பிக்கையற்றவர். அதனால் நவீனத்துவக் கூறுகளை இவரது கதைகளில் தேடிச் சலிப்படைய வேண்டியதில்லை. இவரைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிற எளிய மக்கள்தாம் இவரது கதைகளைப் பின்னிருந்து எழுதுகிறார்கள். ‘இலக்கியம் என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளைச் சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன்’ என்பதுதான் இமையம் தன்னுடைய எழுத்து குறித்து முன்மொழியும் கருத்து