நாவலாய் நீடுவிரியும்  நெஞ்சையள்ளும் கவித்துவம்

யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது.  நாவலில் பயிலும்  மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு,  ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும்  வித்தியாசமான உரையாடல்களும்  சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து  நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன.

பஞ்சவர்ணம்

இளமை நெடுக இயற்றிய கொடும்பாவங்கள் தனக்கு மிகக்குரூரமான மரணத்தை விளைவிக்குமோ என்கிற ஆழ்மன அச்சத்தைப் போக்கும்பொருட்டு ஆன்மீகக் கடலில் கழுத்துவரை மூழ்கியிருந்த அவர் இதுபோன்ற உலகியல் சச்சரவுகளை அறவே வெறுப்பவராக அப்போது மாறியிருந்தார். அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட சிதம்பரநாதனின் இளமனம், எஞ்சியிருந்த ஒரே வாசலினுள் தன்னைச் சுருட்டிக்கொண்டு நிரந்தரமாக முடங்கியது.

ராஜீவன் எனும் நண்பன்

வடிவங்கள் தாண்டி, தாம் செயல்பட்ட விதங்கள் தாண்டி, ராஜீவனின் வாழ்க்கைப் பார்வை மிகத் தீவிரமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேலியின் வழியாக, நகைச்சுவையின் வழியாக அதைத் தெரிவிக்க  முயன்றார் என்றே படுகிறது. அதுவே அவரது வாழ்நாள் முயற்சியாக இருந்திருக்கிறது.   இப்படி யோசிக்கும்போது,  ஒட்டுமொத்த ப்ரணய சதகமே காதல்மீது அவருக்கிருந்த   பகடியான அபிப்பிராயம்தானோ என்றும் தோன்றுகிறது.

சீட்டுக்கட்டு ராஜ்ஜியம்

இதனால், ஹார்ட்ஸ் ராணியின் தவறுகளைச் சரிசெய்ய அனைவரும் முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் தாமும் தவறுகளைச் செய்யத் தொடங்கினர். ஏஸ்கள் தங்களை ராஜாக்களால் ஒதுக்கப்படுவதை கண்டனர். ராஜாக்கள் நாவ்கள் பற்றிக்  குழப்பமடைந்தனர். ஒன்பதுகளும் பத்துகளும் தங்களை அரசச் சீட்டுக்களாகக் கருதும் போக்கைக் கொண்டனர். இரண்டுகளும் மூன்றுகளும் நான்குகளுக்கும் ஐந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை ரகசியமாக பிடித்துக் கொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

“உடைமை வாழ்வியல் ” மற்றும் “இருப்பு வாழ்வியல்” முறைகள் – எரிக்ஃப்ரமின் விமர்சன நோக்கு

நவீன நுகர்வு கலாசாரம் வாழ்க்கையை தொடர்ச்சியான வாங்குதல் மற்றும் கைவிடுதல் என்ற செயல்முறையாக மாற்றுகிறது. பொருட்கள் நீண்டகால பயன்பாட்டிற்காக அல்லாமல், குறுகிய கால சுகத்தை அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மனிதன் உண்மையான திருப்தியை அனுபவிப்பதற்குப் பதிலாக தற்காலிக தூண்டுதல்களின் பின்னால் ஓடுகிறான். இத்தகைய நுகர்வுச் செயற்பாடு மனித வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை மாற்றி உடனடியாக கிடைக்கக்கூடிய அனுபவங்களின் தொடர்ச்சியாக வாழ்க்கையை மாற்றுகிறது.

செத்த வீடு

வரவேற்பறையில் பட்டு வேட்டி சட்டையோடு மார்க்கண்டேயரை வளர்த்தியிருந்தார்கள். பார்த்தால் மிக வயதானவராகத் தெரிந்தார். சிவலை மனுசன். தன்னைவிட இருபது வயதேனும் குறைந்த என் மாமாவோடு எப்படி இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. நான் அவரது காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றேன்.

ஒரு நூற்றாண்டு நினைவுகள் – இதழியலாளர் மூவர்

வ.வே,.சு.ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் நேரடியாக  சுதந்திர போட்டத்தில் ஈடுபட்டவர்கள். மாதவையாவைப் பொறுத்தவரையில், அவர் மிகுந்த தேசபக்தியினைக் கொண்டிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால், அரசியல் வாதங்களில் தலையிடவில்லை. தேச விடுதலை சார்ந்தும், தமிழ்ச் சமூக மேம்பாடு சார்ந்தும் விசாலமான கனவுகளைக் கொண்டிருந்த அக்காலத்திய இளைஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்னவென்று ஒப்பிடுகிறபோது, இம்மூவர் கண்ட ஓரே கனவைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

JANUS- 2

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து அனைத்து கார் பயணங்களிலும் ஏகப்பட்ட ப்ளைஓவர்கள், பாலங்கள், அப்பாவின் நினைவிலிருந்த இடங்கள் பல மாறிவிட்டன; அவருக்கு சந்தோஷம்தான்.  இரண்டு, மூன்று லேன்கள் எல்லாம். அத்தனை செலவு தரைக்கு மேல் செய்வதற்கு முன் தரைக்கு அடியில் எத்தனையோ, பாதாள சாக்கடைகள் மாதிரி செய்திருக்க வேண்டும் அங்கிள்…”

புழக்கடைப் பேரோட்டம்!

4.167 மைல்கள் நீளமுள்ள ஓடுபாதை. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இதைச் சுற்றி வர வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் அந்தச் சுற்றை முடிக்கவில்லை என்றாலோ அடுத்த சுற்று ஆரம்பிக்கும் பொழுது ஓடத் தொடங்கவில்லை என்றாலோ போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். மற்ற ஓட்டப்பந்தயங்களைப் போல இவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. இறுதியில் ஒருவர் மட்டும் எஞ்சி நிற்கும் வரை ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால் பந்தயம் ஒரு நாளில் முடியலாம், இரண்டு நாட்கள் தொடரலாம் அல்லது இந்த வருடம் நடந்தது போல நான்காம் நாள் வரைக் கூடச் செல்லலாம்.

சந்திரா தங்கராஜின் ‘மலையேற்றம்’

இந்நாவலின் உருவகங்கள் உயிரோட்டம் அளிக்கின்றன, ராசபாண்டியின் தனிமையின் சுவர்கள் இயற்கையின் அழகில் பாளங்களாய் உதிர்கின்றன. அப்பாவின் அருகில் போவதும் வருவதுமாய் இருக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை அவன் அம்மாவாகக் காண்கிறான். ‘தேன் இருக்கும் லட்சம் பூக்களை விட்டுவிட்டுக் காய்ந்த மரக்கட்டைகளில் அவை எதைத் தேடுகின்றன’ என வியக்கிறான்

மீசை

“உழைப்பு, பணம், உறவு, வயசு எல்லாம் போச்சு,” என்று நினைக்க நினைக்க வலி தாங்க முடியல. நினைக்காமல் இருக்கவும் முடியல. நினைக்காமல் இருந்தா உடம்பு நடுங்குது, நினைத்தா கண்ணீர் வழியுது. முடியல.” அவன் உடல் நடுங்கியது; கண்களில் நீர் ஊறி வழிந்தது. அவன் முன் தலையில் லைட் விழுந்து ஒளிர்வதைக் கோபால் அப்போதுதான் கவனித்தான். இருக்கும் முடி உப்பும் மிளகும் கலந்த கலவை. காலம் வரைந்த கோலம்!

 ஆவுடை அக்காள் காட்டும் மானிட விடுதலை

கவிஞர், ஞானி என்ற பார்வைகளில் போற்றப்படும் ஆவுடையக்கா செங்கோட்டை அக்கிரகாரத்தில் ஆசாரமான ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர். திருமண வாழ்க்கை, யார் தன்னுடைய கணவன், என்பது பற்றிய தெளிவு என்று எதுவுமறியாத பருவத்தில், வயதுக்கு வருமுன்பே பெற்றோர் அவளுக்கு அண்டை வீட்டுப் பையனை மணமுடித்து வைத்தனர். ஒரு நாள் தன் வீட்டில் அழுகையும், அதிகமான வருத்தமும் தொடர்ந்திருக்க, ஆவுடை அக்கா தாயிடம் அதற்கான காரணம் கேட்கிறாள். அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்து விட்டான் என்று தாய் சொல்ல. அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்ததற்கு நாம் ஏன் அழ வேண்டுமெனக் கேட்கிறாள்.

மகளிர் மட்டும்

இத்தனை நடக்கிறது.. இன்னும் என்ன முக்காடு வேண்டியிருக்கிறது?” என்று ரஜாக், பர்தாவைப் பிடித்து இழுக்க, பர்தா கழன்று ஒரு ஆண் நிற்பது தெரிந்தது. நீண்ட கருத்த தலை மயிர், வெளுப்பான சருமம், கருப்பு பேண்ட், சட்டை, இடுப்பைக் கச்சிதமாய்ப் பிடித்த பெல்ட், காலில் உயர் ரக காலணிகள் என்று கதா நாயகன் போல் இருக்க, “ஹோ”வென்ற இரைச்சல் பெண்கள் மத்தியில் எழுந்தது

10. செயல் என்னும் நிவேதனம்

நற்பண்புகள் நிறைந்த எந்த ஒரு மனிதனும் மேற்கூறிய வகையிலேயே இயங்கி வருவான். ஆனால் கர்மயோகம் என்பது இவ்வாறு செயல்புரிவது மட்டுமல்ல. அதே நேரத்தில் அது எந்த வகையிலும் அடங்காத ஒரு தனித்துவமான செயலும் அல்ல. பொதுப்புரிதலில் கர்மயோகம் என்றால் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டு அதிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வது என்பதாக அறியப்படுகிறது. அவ்வாறு செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கர்மயோகிகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அத்வைத வேதாந்தத்தின் கூற்றுப்படி இது தவறான புரிதலாகும்

றெக்கை – அத்தியாயம் 19

This entry is part 19 of 19 in the series றெக்கை

அவசரமாக இங்கே வரும்போது இடுப்பில் வளைத்துக் கட்டி இருந்த கீசை இருக்கிறதா என்று தேடினேன். காணவில்லை. எனக்கு ஆச்சரியமில்லை.. நானும்  லெவியும் மதுவோ மாதுவோ மாந்தி கண்ணுக்கு மேல் போதை ஏறி இருந்தால் ஆப்பிரிக்க கடவுள் யெபுருவை வந்தித்தால் தொலைந்து போன மனுஷர், பொருள், உடுதுணி எல்லாம் அரை மணி நேரத்தில் திரும்பக் கிட்டும்.வேர்க்கடலை அச்சு ரெண்டு நைவேத்தியமாக கொடுத்தால் போதும்

இயற்கை கற்பிக்கும் மருந்து-தரவுத்தளம்

பல்வேறு உயிரினங்கள் மனிதனுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக இயற்கை மூலக்கூறுகளை உருவாக்கவில்லை. செடிகள் பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. நுண்ணுயிர்கள் இடத்திற்கும் உணவுக்கும் போட்டியிடுகின்றன; அதற்காகவே அவை நுண்ணுயிர் எதிரிகள் மற்றும் சமிக்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. பூஞ்சைகளும், கடற்பஞ்சுகளும், விலங்குகளும் தங்கள் வாழ்வைத் தாங்கிக்கொள்ள சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

உறங்குவது போலும்………

தொற்று பாக்டீரியாக்கள் உடலினுள் புகுந்தால், உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்புச் சக்திகள் (Body’s natural immunity) அவற்றை அழித்துக் கொன்றுவிடும். நம் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள பொழுதுகளில் அவற்றின் கை ஓங்கி அவை நம் உடலில் பல்கிப் பெருகும். சில பொழுதுகளில் அவ்வாறு அவை நம் உடலில் பெருகும்போது ஆன்டிபயாடிக்குகளை உட்கொண்டு அவற்றை அழிக்க வேண்டியிருக்கும்.

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

ஆமையைத் துரத்திச் செல்லும் அஃகிலீஸ் நினைவுக்கு வருகிறாரா? மெதுவாக நகரும் ஆமையை துரத்திப் பிடிக்க எல்லையற்ற எண்ணிக்கையிலான தொலைவுகளை அவர் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் கருத்தாக்கத்தில், ஒவ்வாத ஏதோ ஒன்று இருப்பதாக ஜீனோ (Zeno) கருதினார்.  எல்லையற்ற படிப்படியான சிறு இடைவெளிகளே என்றாலும் அறுதியுள்ள மொத்த இடைவெளிக்கே சமானமாகும் என கணிதம் இச்சிக்கலுக்கான  தீர்வினை கண்டறிந்தது.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து

ஒவ்வொரு நாட்டின் அரசும், தங்கள் நாணயத்தின் மதிப்பு என்று ஒன்றைச் சொல்ல, அதை அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் ஏற்க, ஒரு பொருண்மையான பொருளின்றி, அதாவது, தங்கம் போன்ற ஒரு அடிதாங்கியின்றி, நாணய மாற்று விகிதம் உருப்பெற்றது. நாணயக் கொள்கையின் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய வங்கிகளுக்குத் தேவையான நீர்மையை இது வழங்கினாலும், தங்கம் முன்பு விதித்திருந்த கட்டுப்பாடான ‘நாணய வழங்கல்’ (Money Supply) இல்லாமல் போய், நாடுகள் அதிக நாணயங்களை அச்சிடத் தொடங்கின.

முதற்பனி

This entry is part 13 of 11 in the series ஹைக்கூ

புதிய தொடக்கத்தைக் கவித்துவமாகக் குறிப்பிடும் வார்த்தையாக மொழியிலும், கடந்த கால நிகழ்வுகளுக்கு மன்னிப்புக்கேட்டுப் புதிதாகத் தொடங்குவதற்கு ஏற்ற பருவகாலமாகக் கலாசாரத்திலும் ஹட்சுயுகி என்னும் முதல் பனிப் பனிப்பொழிவு இணைகிறது. ஹைக்கூவின் முதல் அடி பருவகாலத்தின் முதற்பனியை மட்டும் குறிப்பிடாமல் உள்ளுறையாக ஒரு புதிய தொடக்கத்தைச் சொல்வதாகவும் பார்க்கப்படுகிறது.

பைரப்பாவின் நாவல் ‘பிளவு’ – ஒரு பார்வை

கணவன் மனைவி முரண்களில், குழந்தைகள் நிலை பரிதாபமானது. நாவலில் வரும் குழந்தைகள், தந்தையைச் சார்ந்தே இருப்பது, பொருளாதாரம் சார்ந்ததா? பாசம் சார்ந்ததா? பெண்ணுரிமையில் தாய்மை உணர்வு அற்றுப்போய்விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது.