கலைஞனுக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளி கூத்தில் இருந்ததை விட நாடகத்தில் அதிகரித்தது. உடை மாற்றுவதும் ஒப்பனை செய்வதும் பார்வையாளனுக்குத் தெரியாத இடத்தில் நிகழ்ந்தது. அடுத்தடுத்த காட்சிகளில் வேறு வேறு விதமான ஒப்பனை அலங்காரங்களில் தோன்றிய நடிகர்களைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்தார்கள்; பிரமித்தார்கள். தங்களிலிருந்து வேறானவர்களாக, தங்களை விட மேலானவர்களாக நாடக நடிகர்களைப் பார்த்தார்கள்; கொண்டாடினார்கள். எளிதில் அணுக முடியாதவர்களாக நாடக நடிகர்கள் இருந்தார்கள்
