வ.வே,.சு.ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் நேரடியாக சுதந்திர போட்டத்தில் ஈடுபட்டவர்கள். மாதவையாவைப் பொறுத்தவரையில், அவர் மிகுந்த தேசபக்தியினைக் கொண்டிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால், அரசியல் வாதங்களில் தலையிடவில்லை. தேச விடுதலை சார்ந்தும், தமிழ்ச் சமூக மேம்பாடு சார்ந்தும் விசாலமான கனவுகளைக் கொண்டிருந்த அக்காலத்திய இளைஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்னவென்று ஒப்பிடுகிறபோது, இம்மூவர் கண்ட ஓரே கனவைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
