அலாஞ்சியம் சால்விஃபோலியம்

முதலில் ஆஸ்பத்திரி மாதிரி ஒரு மருந்து நெடியும் வீச்சமும் அடித்தது. இருட்டாக இருந்தாலும் குளிர்ச்சியாக இருந்தது.சிறிய வரவேற்பறையில் அரை இருட்டில் ஒலி இல்லாத டீவிக்கு முன்பு சக்கர நாற்காலியில் இருந்தது பெரியப்பா என்று அறிய ஒரு கணம் தாமதம் ஆனது. நாங்கள் உள்ளே வந்தது அவருக்கு தெரியவில்லை, கண்களை பாதி மூடிய மாதிரி அசையாமல் டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திரிசங்கு மாலை: எழுத்தாளனின் அலைபாயும் கனவும் நதிக்கரையோர வாசகியும் – ஊடே போஸ்டன் விசாரகனும்

சலிப்பு ஏன் வரவேண்டும்? நல்ல கேள்வி. பதில்தான் சிலர் எதிர்பார்த்தபடி வராமல் போகும். பெயரென்பது — அது பல் உதிர்வது போல, மீசை அரும்புவது போல — பிரக்ஞைக்கு உள்ளேயும் வெளியேயுமாக தன்னியல்பாக நிகழும் சமாசாரம். முதல் கவிதையை எழுதி முடித்ததும், ஏதோ இரண்டாம் ஆளுமை சட்டென்று கிளம்பி வந்துவிட்டது. அதற்குப் பெயரிட வேண்டியதிருந்தது. “யுவன்” என்று எந்தப் படைப்பு வழியாக வந்தேன் என்று இன்றைக்குக்கூட எனக்கு ஞாபகம் இல்லை.

ஸ்விட்ச்

ஸ்னாக் சுதாரித்து, விண்கலத்துடன் ஒன்றுவதைக் கைவிட்டு, அதன் உந்துவான்கள் (thrusters) வேகமாக உந்தித்தள்ள, அவசரமாக சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகியது. சற்றைக்கெல்லாம், ஆராய்ச்சி  நிலையத்திற்கும், ஸ்னாக்கிற்கும் இடையில், விண்வெளிக் குப்பைகள் மிதமிஞ்சிய வேகத்துடன் அவ்விடத்தைக் கடந்து போயின. எல்லாமும் கடந்து போய்விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்யும் ராடார் கருவி மற்றும் நட்சத்திரக் கண்காணிப்பான் (star trackers) இருளைத் துழாவிவிட்டு பச்சையில் ஒளிர்ந்தது. 

வேட்கை கொண்ட மனதின் ஆன்மீகத் தேடல்

பக்தி நாவலின் முக்கிய புள்ளியாகிறது. கலை வெளிப்பாடுகளின் வழியே, பண்பாட்டு நிகழ்வுகள் வழியே பக்தியை காணும்போது அவற்றை அர்த்தமற்றவையாகவே நாயகன் கருதிக் கொள்கிறான். அஸீசுன் எனும் சிறிய கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அவர்கள் தங்களை மறந்து, பசியில் நடனமாடுகிறார்கள். நடனத்தின் வழியே ஒரு உன்மத்த நிலையை அடைய முயற்சிக்கிறார்கள். முதலாளித்துவ பார்வையில் தேவைகளை செல்வத்தின் மூலம் நிரப்பி விட முடியும். ஆழ்மன ஆசைகளையும் வேட்கைகளையும் செல்வத்தின் வழி நிறைவேற்றிவிட முடியும் எனும் போது செல்வமற்றவர்கள் எதைக் கொண்டு தங்களின் ஆழ்மனத் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் ? நடனத்தின் வழியே எந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப முனைகிறார்கள் என்று சிந்திக்கிறான்.

அதிபன்

ராஜகோபால் அந்தத் திரையைச் சுருக்கிவிட்டு, மற்றொரு திரையைத் திறந்து, அதில் அவர் சற்றுமுன் பதிவிறக்கம் செய்துவைத்திருந்த காணொளியை ஓடச்செய்து நோக்கினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அரவிந்தன் மிக வேகமாய் சிலம்பம் பயிற்சி செய்வதும், திடீரென செவி அருகே வந்த பூச்சியைத் தவிர்க்கும் முயற்சியில் அவன் நிலையிழப்பதும், கையில் அசுரவேகத்தில் சுழன்றுகொண்டிருந்த கழி தறிகெட்டுத் தெறித்து, ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டனின் முகத்தைத் தாக்குவதும் அதில் தெளிவாக பதிவாகியிருந்தது.

கொலம்பஸ் -1

கொலம்பஸிற்கு வைஸ்ராய், அட்மிரல் மற்றும் கவர்னர் போன்ற பட்டங்களும், அதற்கான அதிகாரங்களும் அளிக்கப்படுமென்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய நிலப்பரப்புகளில் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பில் 10% கொலம்பஸிற்கு வழங்கப்படுமென்றும், எதிர்காலத்தில் அவர் கண்டுபிடித்த நிலப்பரப்புகளிலிருந்து கிளம்பும் எந்த வணிகக் கப்பலின் செலவிலும் எட்டில் ஒரு பங்கு (1/8th) அளிக்கும் பட்சத்தில், அதில் கிடைக்கும் லாபத்திலும் எட்டில் ஒரு பங்கு அவருக்கு அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

அருந்துணை

ஒவ்வொரு மூன்று தலைமுறையிலும் அதே வகையான அதித்திறன் கொண்ட ஆட்டிசம் பாதிப்புள்ள மனிதர்கள் கதிரின் தலைமுறையில் இருந்தார்கள் என்பதைச்  சொல்ல இயல்மனிதர்கள் யாரும் கதிரோடு தொடர்பில் இல்லை. 

ஏழாவது தளம்

கோபால்ராவுக்கு அத்தகைய ஆச்சர்யம் விளைவித்த அனுபவம் ஐம்பது ஆண்டு கால வாழ்க்கையில் இன்னொன்று ஏற்படவில்லை. லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றியவர்களைப் பார்த்திருக்கிறான். தொகையை நீட்டினாலொழிய  கோப்புகளை நகர விடாதவர்களையும் பார்த்திருக்கிறான். ஆனால் கேட்டும் கேட்காமலும் இருக்கும் போதே வேலையை முடித்து விட்டு பணத்தைப் பற்றியே பேசாமல் அனுப்பிவிட்ட மனிதரை முதல் முறையாகப் பார்த்தான். அப்படி நினைத்து மகிழ்ந்து போனான் கோபால்ராவ். 

‘சாதகப் பறவையின் காத்திருப்பு’ மற்றும் ’துப்பாக்கி போல் சொகுசாய் கிடக்கிறது பேனா’ 

படைப்புலகம் என்கிற அரசவையில் வீற்றிருக்கும் படைப்பாளிகளில் திறனை அவரவர் படைப்புகள் ஊடாக அவரது விமர்சன துலாக்கோல் அளவிட முயற்சிக்கிறது. ’செட்டியார் மிடுக்கை’ப் பார்க்காது, அதாவது படைத்தவர் யார் என்பதைக் காட்டிலும்  அன்னாருடைய சரக்கின் மிடுக்கைக் கணக்கிற்கொண்டு, படைப்பினை நவீன இலக்கிய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அணுகியுள்ளார்.

றெக்கை – அத்தியாயம் 20  

This entry is part 20 of 20 in the series றெக்கை

பாவலன் அதிகமாக மது அருந்தி விட்டு அவனது சமூக பூர்வமான மனைவி பாதவி உறங்கிக்கொண்டிருந்தபோது  அசமூகமான பந்தம் புலர்த்த காதலி பண்ணிகை இல்லம் நாடிச் சென்றான். இரண்டு மணி நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு போதை தலைக்கேற, எடுத்துப்போன மது போத்தலை பத்திரமாக திரும்ப எடுத்துக்கொண்டு வழியோடு நடக்க, வடக்கு வாசல் அருகே டாகினியிடம் சிக்கினான்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு: வாக்குறுதிகளும் யதார்த்தங்களும்

சில திட்டங்கள் அந்த அந்தப் பிராந்தியங்களுக்கு ஏற்ற வண்ணமும், சில மாநிலம் முழுமைக்குமானதாகவும், சில தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுபவையாகவும் இருக்கின்றன. . இந்த வகையில் பல தெரிவுகள் இருப்பது பயனர்களுக்கு ஒருவகையில் வரமாகும். ஆனால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பதைக் கொடுக்கும் சாபமும் கூட.  

11. ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்

லௌகீகமான இலக்குகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிக இலக்கை அடைவதற்கும் உடல் நலமும், அதன் வலிமையும் இன்றியமையாதவை. உபநிஷத் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக பாடப்படும் சாந்தி பாடங்கள் சிலவற்றில் உடல்நலமும், வலிமையும் முதன்மையாக வேண்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஓர் ஆன்மிக சாதகன் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு உடல் நலத்தை இழந்த பின்னர் அதை மீட்டெடுப்பதற்காகப் போராடுவதைவிட, ஆரோக்கியத்தைக் காப்பது எளிதானது, செலவு குறைந்தது, காலத்தை மிச்சப்படுத்தக் கூடியது.

காசு மேல காசு வந்து…!

முதலாவது தொலைக்காட்சி மற்றும் இணையவெளி நேரடி ஒளிபரப்பு உரிமைகளுக்கான விலை. ஒரு வருடத்தில் 74 போட்டிகள்தாம். இரண்டு மாதங்களில் மொத்தத் தொடரும் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தப் போட்டிகளைப் பல்வேறு ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பும் உரிமைக்காக ஊடக நிறுவனங்கள் பெரும் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கின்றன. காரணம் அதன் மூலம் அவர்கள் பெறக்கூடிய விளம்பர வருமானம். 2023ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒளிபரப்பு உரிமைகளுக்காகச் செலுத்தப்பட்டிருக்கும் தொகை 6.1 பில்லியன் டாலர்கள்

மணம் மறக்கப்பட்ட உணர்வா?

எரிமலை கந்தகத்திலிருந்து ஆயுர்வேத மருந்துகள், அங்கிருந்து நவீன எரிவாயு குழாய்கள் வரை, மணம் மனிதனுக்கும் வேதியியல் உலகத்திற்கும் இடையிலான பாலமாகவே இருந்துள்ளது. இது இன்று பொறியியல் முறையில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாக மாறியுள்ளது. பெரும்பாலும் மணத்தை நாம் புறக்கணித்தாலும், அது மூலக்கூறு அளவிலான தகவல்களை நேரடியாக உணர்த்தும் அறிவியல் வாயிலாக செயல்பட்டு வருகிறது.

பொய்மையின் பக்தன்

தந்தை, தாய் மற்றும் அவர்களது மூத்த மகனுக்கு இடையிலான அந்த முக்கோண உறவுதான் இந்த வியக்கத்தக்க புத்தகத்தின் மையக்கரு. ஏமாற்றங்களும், அதே சமயம் வசீகரமும், ஆபாசமும், வீண் பெருமையும் கொண்ட தந்தை, சிறுவன் மிமியை ஒரே நேரத்தில் அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறான். தந்தையின் கலை லட்சியங்கள் நிறைவேற எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் மிமி, அந்தப் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள ‘The Drinkers’ ஓவியத்திற்காக நீண்ட நேரமும் வலியுடனும் முழங்காலிட்டு போஸ் கொடுக்கிறான்

சிவப்பின் பின்னிருளில்: ‘பலி பீடம்’ ஒரு வாசிப்பு

யாமாவின் பெரிய தெருவில் இடதுபக்கம் முதல் வீட்டுக்குடிக்கு டிரெப்பல் என்று பெயர். டிரெப்பல் அப்பகுதியில் முதல் தரமான விடுதி. டிரெப்பலில் வேளைக்கு மூன்று ருபிள்களும், ராத்திரி முழுவதும் தங்குவதென்றால் பத்து ரூபிள்களும் வாடிக்கை. இரண்டு ரூபிள் விடுதிகள் யாமாவில் மூன்றுண்டு. ஒன்று ஸொபிவாஸிய்வனா நடத்துவது. மற்றொன்று அன்னா மார்க்கோவ்னா நடத்துவது.

‘உறங்கும் நிலை’ – வித்தித்தல் (Sporulation)

நிலைமை பாதகமாகும்போது இந்த பாக்டீரியாக்கள் தம்மைச்சுற்றி ஒரு கடினமான உறையை (spore coat) உருவாக்கிக் கொண்டுவிடும். அமைதியாக அதனுள் இருந்துகொண்டு இறந்துவிட்டது போலும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் (dormancy). இதனை உடைத்து இவற்றை மருந்துகளால் அழிப்பது கடினம். அதிகப்படியான நீண்ட சூட்டினால் (பிரஷர் குக்கர் போன்ற அமைப்புகளில் – autoclave) மட்டுமே இவற்றை அழிக்க முடியும். இது உறக்கத்திற்கு சமானம். இந்த உறக்கம், இவை தம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது.

காலம் என்பது இல்லை

சுழல்நுரைகளை வைத்து கணிக்கும் துளிம ஈர்ப்பியலின் இந்த வழிமுறை, கோட்பாட்டு இயற்பியலின் வழக்கமான கணக்கீட்டு முறைக்கு முற்றிலும் வேறானதாக முதல் பார்வையில் தெரியும். குறிப்பிட்ட வெளியோ காலமோ இல்லை , சுழல்நுரைகள் பொது மாதிரியின் துகள்களிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பொருட்கள் எனத் தோற்றமளிக்கிறது. ஆனால், சுழல்நுரை உத்திகளுக்கும் ( techniques)  பொதுமாதிரி உத்திகளுக்கும் இடையே வலுவான ஒற்றுமைகளும் உள்ளன.

தலைக்குடைகள்

This entry is part 14 of 12 in the series ஹைக்கூ

ஹைக்கூக்கள் ஒற்றை வரியில் கடந்துசெல்லும் காட்சி பொதுவான இயற்கைக் காட்சியாக அமைந்திருப்பின் அதன் படிமங்களை ஜப்பானியரல்லாத வாசகரும் உணர்ந்துகொள்ள இயலும். ஆனால், காட்சிப்படுத்தலில் ஜப்பானிய சமூக, கலாசாரப் பின்னணிகளும் கலந்திருக்கையில் அந்தக் கவிதையை அதன் தளத்தில் நின்று புரிந்துகொள்வதற்கு அந்தக் கவிதை எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக அமைப்பை மேலோட்டமாகவாவது அறிந்துகொள்ளும் தேவை இருக்கிறது.

கல்பாக்கத்தில் ஒரு கற்பகத் தரு

மேலை நாடுகளைப் ‘பார்த்து செய்பவை’ அல்ல அவரது வரைவுகள். நாட்டின் இயற்கை வளம், குறைந்த செலவு, இடு பொருளுக்கு ஆகும் செலவை விட பெறும் பொருள் மிகுதி என்ற கனவு, ஆகியவற்றால், தனித்து நிற்பவர் அவர். இத்தகைய அணு மின் உலைகள், சூழலை மாசு படுத்தாது. இன்று உலகம் எதிர் கொள்ளும் மாபெரும் சூழற்சிதைவான பசும்வாயு விளைவு இந்த அணு உலைகளால் ஏற்படாது

அ. முத்துலிங்கத்தின் ‘பூனை மனிதன்  (உலகச் சிறுகதைகள்)’

கதைகளைவிட, முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையில் குறிப்பிடும் சம்பவங்களும், ஒவ்வொரு கதாசிரியரின் மனோபாவம் மற்றும் அவர்களது அனுபவப் பகிர்வுகளும் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள்! ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் முத்துலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘எப்போது பெர்லின் நகருக்கு வந்தாலும் தன் வீட்டு அழைப்பு மணியை அடியுங்கள்’ என்று கரிசனையுடன் அழைத்திருந்தாராம் – ‘ஆனால் வீட்டு முகவரியைத் தர மறந்துவிட்டார்’ என்று அ.மு. குறிப்பிடுகின்றார்!