1486-ல் சலமங்கா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மோதல் 19-ம் நூற்றாண்டில் வாஷிங்டன் இர்விங் எழுதிய நாவல் பாணி வரலாற்று நூலில், வெகுவாக மிகைப்படுத்தப்பட்டது. சலமங்காவில் இருந்த முட்டாள்தனமான மதகுருமார்கள் “பூமி தட்டையானது; அதனால் கொலம்பஸின் கப்பல் கடலின் முனையில் கீழே விழுந்துவிடும்” என்று வாதிட்டதாகவும், புத்திசாலியான கொலம்பஸ் “பூமி உருண்டையானது” என்று அவர்களிடம் போராடி நிரூபிக்க முயன்றதாகவும் இர்விங் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கினார்.
