வாசகர் பொறுப்பு

தமிழகத்தில் தோன்றிய சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள், ஆக்கபூர்வமான, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையை உருவாக்காமல், சரித்திர சுகத்தில் இளைப்பாறும், பின்நோக்கி அசைபோடும் மனப் பான்மையை வளர்த்திருக்கின்றன. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து, வாளோடு பிறந்த மூத்த குடியினரின் தொன்மைச் சிறப்பைப் பற்றி அரற்றும் அசட்டுத்தனம் அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கொள்கையாக ஆகிவிட்டது. ‘எங்கள் மொழியில் இல்லாதது இல்லை’ என்ற அப்பாவித்தனமான திருப்தி, இந்த மொழிக்குத் தாங்கள் வாரிசு என்ற காரணத்தால், ‘எங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை’ என்ற ஒரு போலி அந்தஸ்தை, இந்த வள்ளுவக் குஞ்சுகளுக்குத் தந்திருக்கிறது. ‘கலைகள் மெத்த வளரும்’ மேல்நாட்டோடு போட்டியிட முடியாத தளர்ச்சி விளைவித்துவிட்ட தாழ்வு மனப்பான்மையே இந்த மன நிலைக்குக் காரணம்.

இதற்கு எதிர் நிலையாக, ‘தமிழில் இதுவரை என்ன இருந்திருக்கிறது. நாங்கள் எழுதுவதுதானே, தமிழ் இலக்கிய சரித்திரத்தின் முதல் அதிகாரம்’ என்று சொல்லும், இலக்கிய ரீதியாக ஐரோப்பிய உடையணிந்த, கறுப்புத்தோல், நவீன வாதிகள் இருக்கிறார்கள். ‘கருவுற்றிருக்கும் மாற்றான் மனைவியை ஸ்நான அறையில், அவள் சம்மதத்தோடு ஒருவன் கட்டியணைக்கும் காட்சிகள்’ நமது இலக்கியத்தில் இல்லையே என்று குறைப்பட்டுக்கொண்டு, அதேமாதிரியான ஒரு நிலையைச் செயற்கையாகச் சிந்திக்க முயலும் ஒரு கிளிப்பிள்ளைத்தனம் இவர்களுடைய துர்பாக்கியம். இவர்களுக்கு நமது சரித்திரத்தின் மீது நம்பிக்கையில்லை; சரித்திரமும் தெரியாது.

இன்றைய நமது தமிழலக்கியத்தின் சாபக்கேடு, முதல் மனப் பான்மைக்கு ஜனரீதியான செல்வாக்கும், இரண்டாவது மனநிலைக்கு விமர்சகர்களின் ஆதரவும் இருப்பதுதான்.

நமது இலக்கிய சரித்திரத்தை ஆராயும் போது புலப்படுகின்ற ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப, புதிய மாறுதல்களை அடிப்படையான சமுதாயப் பாரம்பரிய பண்பாட்டு அஸ்திவாரத்தின் மீது அமைத்துக் கொண்ட, அக்காலத்தவர்களின் விவேகம், நமக்கு இப்பொழுதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சங்ககாலப் பாடல்களில் காணப்பட்ட அவைதிக மதங்களை எதிர்ப்பதற்கான பக்தி இயக்கம் தோன்றிய அகத்துறை உணர்வு, கி.பி. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில், காலத்தில், பக்தி உணர்வாக உருவெடுத்தது, தர்க்கரீதியான மாற்றமாகும் (Logical transition). ஆசார்யன் தண்டி ‘காவ்ய தரிசம்’ எழுதிய பிறகு அதை யொட்டிக் காவியங்கள் எழுதுவதற்கான சூழ்நிலை ஏற்பட்ட சோழப் பேரரசு ஸ்தாபிதமான மகோன்னத காலத்தில் – தமிழில் இயற்றப் பட்ட காவ்யங்கள் அந்தந்த நூற்றாண்டுக்கு ஏற்ப மாறுதல்களைத் தாங்கி – செயற்கை இலக்கியம்’ என்று தவிர்க்கப்பட முடியாமல் விளங்கின.

‘தண்டியின் தன்னேரில்லாத் தலைவன்’ கொள்கையை இளங்கோ வடிகளே முறியடித்து விட்டார். ‘இலட்சியத் தலைவன்’ என்ற கொள்கை மிகையான குணச் சித்திரங்களைப் படைப்பதற்கு உதவிய காரணத்தால், கம்பன், இளங்கோவடிகளின் விதி தத்துவத்தையும் புறக்கணித்து, ஒவ்வொரு குணச் சித்திரத்தின் அமைப்பே அவனுக்கு எவ்வாறு விதியாக அமைகின்றது என்ற மனோதத்துவத்தை இலக்கியத் தளமாகக் கொண்டு எப்படிக் காவ்யம் செய்தான் என்பது ராமாயணத்தைப் படித்தால் நன்கு அறியலாம்.

கம்பனுடைய காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட உரையாசிரியர்களை, சிருஷ்டி நூல்கள் ஒன்றும் இயற்றவில்லை என்ற காரணத்துக்காக ஒதுக்கிவிட முடியாது. வைஷ்ணவ நூல்களுக்கு (பிரபந்தம்) வியாக்கி யானம் செய்தவர்களைக் காட்டிலும், அவர்கள் காலத்துக்கு முன்னாலும் யாரும் ஒன்றும் சாதிக்கவில்லை; இனிமேலும் சாதிக்க முடியாது. தங்களுடைய பரந்த சமஸ்கிருத அறிவைத் தமிழின் எல்லை கண்ட புலமையோடு இணைத்து இவர்கள் ஆற்றியுள்ள அற்புதங்களுக்கு ஈடு உலக இலக்கியத்திலும் காணமுடியாது.

இதைத்தான் மாறுதல்களுக்கு ஏற்ப அநுசரித்துப் போகும் விவேகம் களை இலக்கியம் என்று சொல்லும் நவீன வாதிகளுக்கு இது வேடிக்கை என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். ஸ்நான அறை, காம விகற்பங் யாகப் படலாம். பழைமையினின்று மாறுபடுவதற்கும் பழைமையைப் புரிந்து கொண்ட ஒரு தெளிவு வேண்டும். ஐரோப்பிய இலக்கியங் களிலும் புது இயக்கங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு துணிச்சலைத் தந்தது. தமிழ் எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கத் தெரிந்த மரபு உணர்ந்த தெளிவே அம்மரபினின்றும் மாறுபடுவதற்கான ஒரே பலத்தைக் கொண்டு, ‘மரபுகளை எதிர்க்கின்றேன்’ என்று சொல்வது, தமிழ் நாட்டில் தான் சாத்தியம்.

அறைக் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்துக்கொண்டு வெளியிலிருந்து காற்று உள்ளே வரக்கூடாது என்று தமிழ் வெறிச்சிறைக் கூட்டில் அவதிப்படும், மெல்லச்சாகும் தமிழ் அறிஞர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. இவர்களுக்கும் நவீனவாதிகளுக்கு மிடையே உள்ள மிகுந்த தூரந்தான் என் அக்கறை. இவ்விடைவெளி குறுகினாலன்றித் தமிழுக்கு எதிர்காலமில்லை. குறுகச் செய்யும் பொறுப்பு வாசகர்களுடையது.


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.