இருபத்து நான்கு வருடங்களாய்..

இதுவரை ஆராய்ச்சியாளர்கள் மரபணுக்கள், ஸ்டெம்செல்கள், வளர்ச்சியைத் தூண்டும் புரதங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைத் தனித்தனியாக ஆராய்ந்திருந்தனர். ஆனால் AI உருவாக்கிய முறை உடலில் உள்ள செல்களை ஒரு பெரிய தகவல் வலை அமைப்பாகக் கருதியிருந்தது. இதற்காக ஒரு விசித்திரமான தொடர்ச்சியான கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. அதில் பல கட்டுப்படுத்தப்பட்ட இடையூறுகளும், மீண்டும் மீண்டும் செ யல்படும் தகவல் சுழற்சிகளும் இருந்தன. ராமநாதன் மூன்றாவது பகுதியைப் படித்தார்.

காற்று சீதையாகும் வெளி: கோவிந்தன் அரவிந்தனின் தூரிகைச் சினிமா, தொன்மத் தனித்துவம் மற்றும் அவதானிப்பின் சூழலியல்

அவரது சூழலியல் பிரக்ஞை என்பது இயற்கையோடு கரைந்துவிடும் வெறும் ரொமாண்டிசிச ஐக்கியம் அல்ல; மாறாக, மானுட வன்முறையைக் குறுக்கிட்டுத் தடுக்கும் ‘பிரகிருதி’யின் அறமும், எளியோரின் வாழ்வாதாரமும் உறைந்த நிலப்பரப்பாகும். ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியுடனான ஒப்புநோக்கல், இவ்விருவரும் காற்று, நீர், நெருப்பு மற்றும் ‘புனிதப் பித்தன்’ படிமங்களைப் பகிர்ந்துகொண்டாலும், முற்றிலும் வேறுபட்ட இலக்குகளை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.

 சுழி

ஒப்புக்கொள்கிறேன். நான் அச்சமயத்தில் உன்மீது அன்பை பொழிந்திருக்கவேண்டும். “அய்யோ! என் கண்ணே!” என்று உன்னை ஆரத்தழுவி, உனது காயம்பட்ட முகத்தை எனது மார்பினில் புதைத்துக்கொண்டு தலைகோதியிருக்கவேண்டும். எதுவும் செய்யாமல், ஒரு வார்த்தை பேசாமல் நான் அங்கிருந்து எழுந்து சென்றது உன்னை நிச்சயமாக காயப்படுத்தியிருக்கும். ஆனால் டேனியல், அன்று மாலையே நான்தானே ஓடிச்சென்று மருத்துவரை கையோடு அழைத்துவந்தேன்.

மெளனத்தில் ஒலித்த குரல்

புத்தரின் காலத்தில் துறவு பூண்ட பெண்கள் பாடல்கள் பாடினார்கள். அவை தேரிகாதை என்று தொகுக்கப்பட்டன. உலகின் மிகப் பழைய பெண் கவிதைத் தொகுப்புகளில் அதுவும் ஒன்று. கணவனின் அடிமைத்தனத்திலிருந்தும் சமையலறையின் சுமையிலிருந்தும் விடுதலை பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் பாடினார்கள்.

சீனு ராமசாமி கவிதைகள்

நகரத்தின் சாலையோரத்தில்
இறங்கிவிட்டது ஒரு மைனா.
காலை எனினும் வெயில்,
அதன் பூர்வீக நிறம்
வெளுத்திருந்தது.

விசித்திரமும் அங்கதமும்: புலம்பெயர் புனைவில் அன்னியத்தின் அழகியல்

உதாரணத்திற்கு, ஒரு துப்பாக்கிச் சூடு நடக்கும் சூழலில் ஒருவன் தன் செருப்பைத் தேடுவது போன்ற மிகச்சிறிய, ஆனால் அந்தச் சூழலில் அபத்தமான ஒரு செயலை அவர் விவரிப்பார். குடிவரவுத் துறையில் நடக்கும் உரையாடல்களை சுட்டலாம். இது ஒரு ‘Ethnographic study’ (இனவரைவியல் ஆய்வு) போலவும் அணுகலாம். ஒரு எழுத்தாளன் எப்படி ஒரு மானுடவியலாளராக மாறி அந்நியச் சமூகத்தைப் பார்க்கிறான் என்பதை விளக்குகிறது.

மறைக்கப்பட்ட வாழ்க்கை

ஆனால், தன் பெற்றோர் எதைப் பற்றியும் இப்படி வெளிப்படையாகப் பேசுவதைக் குறித்து நிதிக்கு எந்த மனக்கசப்பும்  அசௌகரியமும் இல்லை. அது அவளுடைய அப்பாவின் ‘சோம்பேறி கண் பார்வை’ யைப் போலவோ,  அல்லது முன்பு பரதநாட்டிய கலைஞராக இருந்த அவளுடைய அம்மா, உள்ளூர் பெண்களுக்காகத் தங்கள் வீட்டின் மொட்டைமாடியில் நடத்திவந்த ஏரோபிக்ஸ் வகுப்புகளைப் போலவோ, சாதாரணமான விஷயம் தான் என்றே தோன்றியது. தன் கர்ப்பம் முன்னேறிக்கொண்டிருந்தபோதும் அவள் அந்த வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தினாள்.

காலத்தின் பின்னலில் காசி

This entry is part 2 of 2 in the series காசி

தன்னை மறந்து இசையில் மூழ்கியிருக்கும்பொழுது, மனம் மயக்கும் அசாத்திய மணமும் ஒளியும், அர்ச்சகர் கூட வந்திராத நேரத்தில் அவர் அருகே உட்கார்ந்துகொண்டு அவர் வாசிப்பை யாரோ கேட்டுக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வும் அவருக்கு பல முறை ஏற்பட்டிருக்கிறது. அவர் செய்த ரியாஸ் (சாதகம்) மட்டும் அல்லாது, அதைச் செய்த இடத்தின் விசேஷமும் சேர்ந்துதான் அவரை வாழ்வில் பெருமளவு உயர்த்தியதாக அவர் நம்பினார்.

ஊசியின் முனையில் உயிர்

தோட்டத்திலேயே இவ்வளவு வெக்கை இருந்தால் கொதிக்கும் அடுப்பு போல் இருக்கும் வீட்டுக்குள் மனதிலும் உடலிலும் அக்னி எரிய எப்படி இருப்பது என்று நினைத்துக் கொண்டான்.  மரங்களுக்கிடையில் நடக்க நடக்க மனதில் வெப்பம் குறைந்தது.  சுற்றிலும் சூழ்ந்திருக்கிற அமைதி மனதில் இறங்கியதில் லேசாக உணர்ந்தான். நேராக மோட்டார் அறைக்குச் சென்று  மோட்டாரை இயக்கினான். சொட்டுநீர்க் குழாய்கள் வழியாக தண்ணீர் மரங்களுக்கு பாயத் தொடங்கியது. 

இணைபிரியாத இரு பறவைகள்

“இந்த உடல் அழிந்த பின்னரும் அழியாதிருக்கிற அந்த தத்துவம் என்ன?” என்ற கேள்விக்கான விடையை யமனிடம் கேட்கிறான். உடனே யமன், “இந்த அறிவை அடைவது மிக்கடினம். எனவே நீ வேறு ஒரு வரத்தைக் கேள்,” என்கிறார். நசிகேதனுக்கு மேலான இந்த உண்மையை அறியும் முக்கியமான தகுதியான முமுக்ஷூத்துவம் (உண்மையை அறிவதில் நாட்டம்) இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவே அவர் இவ்வாறு சொல்கிறார். நசிகேதனோ, “இது மிகக்கடினமானது என்பதால்தான் அதை நாடுகின்றேன்,” என்று தன் ஊக்கத்தில் உறுதியாக நிற்கின்றான்.

சிலப்பதிகாரமும் சி.சு. செல்லப்பாவும்

சிலப்பதிகாரத்தில் சிலம்பின் உள்ளேதான் முத்து – மாணிக்கம் என்ற வேறுபாடு இருக்கிறது. ஆனால், சிறுகதையில் சிலம்பின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு சிறிய வேறுபாட்டை அரசனும் அரசியும் பார்க்கத் தவறுகிறார்கள். கண்ணகி வந்து சுட்டிக்காட்டிய பின்பே அதைக் கவனிக்கிறார்கள்.

தேநீர் விருந்து

ஒரு காலத்தில், தலையைச் சாய்த்து வரிசையான வெண்பற்கள் தெரியச் சிரிக்கும் அவளின் சிரிப்புத்தான் அவனை அவளிடம் இழுத்துச் சென்றிருந்தது. 1975ஆம் ஆண்டு, மே மாதத்தில் ஒரு நாள், ராக்கிங் தொந்தரவில் மனம் நொந்துபோய் முகத்தைக் கீழே போட்டுக்கொண்டு வகுப்பின் ஒரு மூலையில் அவன் அமர்ந்திருந்தான். திடீரெனச் சிரிப்புச் சத்தம் கேட்டது. அப்போது, இரண்டு மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்தபோது அவனுக்கு வியப்பாக இருந்தது.

ஹாம் சோக்-ஹோன் – உலகளாவிய மனிதநேயத்தின் குரல்

ஹாம் சிறையில் அமர்ந்து, வரலாற்றின் ஓட்டத்தை சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ​​அவருடைய எண்ணங்கள் பின்வருவனவற்றைச் சுற்றியே வலம் வந்தன: “வரலாற்றின் இந்த ஓட்டம் தேசிய எல்லைகளின் மாற்றங்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இது மனிதச் சமூகத்தின் கட்டமைப்புகள், மாறிவரும் ஓர் உலகப் புரட்சியின் தொடக்கமாகும். உலகம் ஒரே நாடாக மாற வேண்டும். அரசு குறித்த கண்ணோட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் காலம் முடிந்துவிட்டது. உலகத்தைப் பற்றிய பார்வை மாறிவருகிறது; அதற்கேற்ப சமயமும் மாறும். அது தற்போதைய நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தை மேற்கொள்ளாதா? சமயத்தின் அடிப்படையான  சத்தியம் என்றும்  மாறாதது;

துயர்வண்ணம் உறுவது உண்டோ? 

அந்தக் காலத்தில் விசோனின் ஊர்களுக்கிடையே அலைந்து திரிந்து மெய்மையைத் தேடும் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. குலங்களின் வாழ்வை விட்டு வெளியேறித் தனித்திருந்தார்கள். மனிதர்கள் எதை அறிந்தார்கள் என்பதைவிட, எதனால் அறிந்தார்கள் என்பதைக் கேட்டார்கள். ஒருவர் சொன்னதை இன்னொரு ஊரில் சோதித்துப் பார்த்தார்கள். அவர்களில் சிலர் சிந்தாமணியின் ஊருக்கு அருகே தங்கிப் பள்ளி அமைத்திருந்தார்கள். அவர்களைக் கௌதமர்கள் என்றார்கள்.

வெப்பக் காலம்

காலத்திற்கும் வெப்பத்திற்கும் ஓர் இணைப்பு உள்ளது என்பது பழங்காலத்திலிருந்தே மீண்டும் மீண்டும் வரும் ஒரு கருத்து. நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், கால நகர்வை நாம் உணரும் எந்தவொரு நிகழ்வும் வெப்பநிலையுடனும் தொடர்பு கொண்டிருப்பதைக் காணலாம். காலத்தின் சிறப்பு அது முன்னால் மட்டுமே நகரும், பின்னால் நகராது – அதாவது ஒரு மீள்திரும்பா (Irreversible) நிகழ்வு. வெப்பம் இல்லாத இயக்கவியல் நிகழ்வுகள் மீள்திரும்பக்கூடியவை.

இன்னும் இரண்டு மாதங்கள்

அந்த வார்த்தையை நான் யாரிடமும் உரக்கச் சொன்னதில்லை. ஆனால், அது என் ஆழ்மனதில் கனன்றுகொண்டே இருந்தது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் ஒரு லட்சியத்தை வைத்திருப்பான்—அது உலகிற்குப் பெரிதாக இல்லாவிட்டாலும், அவனுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். என்னுடைய லட்சியம் அதுதான். ஐம்பத்தைந்து வயதுக்கு முன்பே ஒரு நிறுவனத்தின் இயக்குநராகி, பிறகு ஓய்வு பெறுவது. யாரையும் வெல்ல வேண்டும் என்ற வெறி இல்லை, இங்கே வெல்வதற்கும் யாரும் இல்லை.

பாயில் நிழல்

This entry is part 21 of 19 in the series ஹைக்கூ

பதினேழாம் நூற்றாண்டுக்கு முன் ததாமி பணக்காரர்களின் விரிப்பாக இருந்தது. அது உயர்ந்த தகுதியுள்ளோர் இல்லங்களின் தரைகளை அலங்கரித்தது. வீட்டின் வரவேற்பறையில் பணம் படைத்தோர் ததாமியில் அமர்ந்தனர். இந்த நோக்கில் நிலவொளியும் பைன் மரமும் சேர்ந்து உருவாக்கும் நிழல் கவிஞரின் ததாமியில் விழுந்து ஓவியத்தை உண்டாக்கும் காட்சியின்,  நிலவு நிழல் வடிவில் வந்ததைச் சொல்லும் காட்சியின், பின் இணைப்பாக உயர்ந்த தகுதியுள்ள நிலவொளி நிழலாகக் கவிஞர் இல்லத் ததாமியில் அமர்ந்தது / உறங்கியது என்றும் பொருள் கொள்ளலாம். இது ஒரு கூடுதல் வாசிப்பு மட்டும்.

கோடானு கோடி கோடுகள்

இதனால் பெருங்குழப்பங்கள் உண்டாயின. குறிப்பாக நாடு விட்டு நாடு செல்லும் பயணிகள் எந்தக் கணக்கை பயன்படுத்துவது எனத் தெரியாமல் தடுமாறினர். போக்குவரத்து வசதிகள் கூடக்கூட சர்வதேச வணிகம் எளிதானது. அதற்கு தந்தி, கப்பல்கள் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் வசதி செய்தன. ஆனால் இவை எல்லாம் எளிதாக எளிதாக, எந்த நெடுங்கோட்டை முதன்மையாகக் கொண்டு நேரத்தைக் கணிப்பது, செல்லவிருக்கும் ஊர்கள் இருக்குமிடத்தை நெடுங்கோடு அட்சக் கோடு கணக்கில் சொல்வது போன்றவை எளிதாகச் செய்ய முடியாதவை ஆகின.

சொல்லும் பொருளும்…..

This entry is part 3 of 3 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

எழுத்து என்பது பேச்சின் ஒலிவடிவமே. கையால் எழுதப்படுவதாலும் வாயால் ஒலி எழுப்பப்படுவதாலும் எழுத்து என்னும் பெயர் வந்தது என்கின்றனர். கையால் எழுதப்படும் வரிவடிவ எழுத்து காலங்கள் தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது. இவற்றிற்கு முற்கால எழுத்துக்களே ஆதாரமாகும். இவற்றைப்பற்றிய ஆராய்ச்சிக்கு தொல்லெழுத்தியல் (Palaeography) என்று பெயர்.

வேதியியல் தேர்ந்தெடுக்கும் மூலக்கூறின் கண்ணாடிப் பிரதிமை

பூமியிலுள்ள உயிரினங்களின் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, அமினோ அமிலங்கள் போன்ற அடிப்படைக் கூறுகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரே பக்க அமைப்பையே கொண்டுள்ளன. இந்த விசித்திரப் பண்பு பூமி தோன்றுவதற்கு முன்பே விண்வெளியில் உருவானதா என்ற கேள்விக்கான தேடல் பல தசாப்தங்களாக நடந்துவருகிறது. இயற்கையின் இந்த ஒற்றைச்சார்புத் தன்மைக்கு (homochirality) விடை தேடி, விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஆராயத் தொடங்கினர். விண்மீன்கள் உருவாகும் பகுதிகளில் வட்டமுனைப்படுத்தப்பட்ட ஒளி (circularly polarized light) பரவியுள்ளது. இக்கதிர்வீச்சு விண்வெளியில் மிதக்கும் பனித்துகள்களின் மீது படும்போது, இடது-கை மூலக்கூறுகளைவிட வலது-கை சர்க்கரை மூலக்கூறுகளை (D-சர்க்கரைகள்) அதிகம் சிதையாமல் பாதுகாக்கிறது.

மாலாம் ஜுமாஆட்

‘ஹபிபி, வீட்டில் நுழைந்த கையோடு லக்கேஜை அப்படியே நடு வீட்டில் போட்டுவிட்டு, இவளை நோக்கி ஓடி வருகிறார். வீட்டில் இருந்ததால் துப்பட்டா போட்டிருக்கவில்லை. துப்பட்டாவில் அழுந்தி படிந்து கிடக்கும் கூந்தல், இப்போது சிலிர்த்தெழுந்து, தனது அழகிய கேசத்தைக் காட்டி மயக்கியது. கூந்தலின் அழகு அத்தானைப் பித்தமுற வைத்திருக்க வேண்டும். பீபீயைக் கட்டியணத்துக்கொண்டு, ரகசியக் குரலில் மகளைக் கேட்கிறார். அவள் நித்திரையில் இருப்பது தெரிந்ததும், ‘இந்த அழகையெல்லாம் அனுபவிக்க முடியாம இந்த மூனு வருஷமா நா பட்ட பாடு இருக்கே, அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.’ என்று படபடத்து, மனைவியை ஆசை பொங்க முத்தமிடுகிறார்.

கொலம்பஸின் வீழ்ச்சி!

This entry is part 12 of 12 in the series கொலம்பஸ்

கியூபா தீவில் பயணம் செய்தபோதுதான் கொலம்பஸின் குழுவைச் சேர்ந்த ரோட்ரிகோ டி ஹெரெஸ் (Rodrigo de Jerez) மற்றும் லூயிஸ் டி டோரஸ் (Luis de Torres) ஆகிய இரு மாலுமிகள், தைனோ மக்கள் அந்த உலர்ந்த இலைகளைப் பயன்படுத்துவதை நேரில் கண்டனர். தைனோ மக்கள் மக்காச்சோள இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ புகையிலையைச் சுருட்டி, ஒரு முனையில் தீமூட்டி, மறுமுனையில் வரும் புகையை மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும் உள்ளிழுத்து “குடிப்பதை” (Drinking the smoke) பார்த்து வியந்தனர்.

மாற்றமா, தொடர்ச்சியா? அமெரிக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 இடைத்தேர்தல்

அதிகரித்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், குடியேற்றக் கொள்கை பெயரில் நடக்கும் அராஜகங்கள், மருத்துவச் செலவுகள், கல்வி, ஜனநாயகத்தின் எதிர்காலம், பொதுமக்களின் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கைகள் எனப் பல பிரச்சினைகள் வாக்காளர்களின் முடிவை வெவ்வேறு திசைகளில் இழுக்கின்றன. தற்போதைய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பவர்கள் ஒருபுறமும் நாட்டுக்கு வேறு அணுகுமுறை தேவை என்று கருதுபவர்கள் மறுபுறமும் இரு கட்சிகளின் மீதும் அதிருப்தி கொண்டவர்களுமாய் வாக்காளர்கள் சிதறுண்டு இருக்கிறார்கள்.

பிம்பக்கூத்து

கலைஞனுக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளி கூத்தில் இருந்ததை விட நாடகத்தில் அதிகரித்தது. உடை மாற்றுவதும் ஒப்பனை செய்வதும் பார்வையாளனுக்குத் தெரியாத இடத்தில் நிகழ்ந்தது. அடுத்தடுத்த காட்சிகளில் வேறு வேறு விதமான ஒப்பனை அலங்காரங்களில் தோன்றிய நடிகர்களைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்தார்கள்; பிரமித்தார்கள். தங்களிலிருந்து வேறானவர்களாக, தங்களை விட மேலானவர்களாக நாடக நடிகர்களைப் பார்த்தார்கள்; கொண்டாடினார்கள். எளிதில் அணுக முடியாதவர்களாக நாடக நடிகர்கள் இருந்தார்கள்

அகம் திறத்தல்

 “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய..” என்ற கிள்ளி வளவனின் பாடலுக்கு பசித்திருத்தல் என்று தலைப்பிட்டிருக்கிறார். தன் இளம் பிராயத்திலிருந்து உடனிருந்த எப்போதும் பசித்திருக்கும் இவரின் தோழி தேவியைப் பற்றி விவரிக்கிறார்.  பசியோடிருக்கும் பிள்ளைகள்தான் உணவை கவனமாக சிறிதும் வீணாக்காமல் உண்பார்கள். காரணம், அவர்களுக்குத்தான் அதன் இன்றியமையாமை புரியும். ஒரே தட்டில் உண்டு ஒன்றாக திரிந்து இரட்டையர் போல இரண்டு தேவிகளும் வாழ்ந்த கதை அத்தனை அழகு. அத்தோழியின் கதை கண்ணீர் வரவழைப்பது.