சாகசக்காரிகளின் ஆலங்காடு

இத்தொகுப்பு காரைக்கால் அம்மையாரையும் அவர் ஜயபாஸ்கரன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாடுகிறதென்றாலும் அம்மையாரையும் விஞ்சிவிடும் ஓர் ஆளுமை இத்தொகுப்பில் ஆச்சரியமான விதத்தில் பதிவாகி இருக்கும் விதமே இத்தொகுப்பின் மணிமகுடம் எனலாம். கவிஞரின் பெரியம்மா ஒரு அழகான சிறுகதைப் பாத்திரத்தின் ஆழத்துடன் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் பரிணமிக்கிறார். சமயோஜிதர், அனுபவத்திலிருந்து வாழ்வதற்குத் தேவையான ஞானத்தை மட்டுமே இயல்பாக வடிகட்டிக் கொண்டவர்.