ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?

பிரபஞ்சத்தில் எங்கேயாவது எப்போதாவது யாராவது தன்னை சந்தித்தால், அவர்களிடம் தெரிவிப்பதற்காகவே, மனிதகுலத்தைப் பற்றிய பல விவரங்களை ஒரு தங்கத்தட்டில் பதித்து ஏந்திக்கொண்டு, நமது சூரியக் குடும்பத்தையே தாண்டி வெளியே செல்லும் நிச்சயமான குறிக்கோளுடன் பயணத்தை துவக்கிய முதல் விண்வெளிப் பயணி

அபிராமியும், அண்டங்களும்

சூர்யனைச் சுற்றி வரும் நம் புவியின் வட்டப்பாதை மாறிக் கொண்டு வருகிறது; அது பெரிய அளவில் வருடம் தோறும் மாறுவதில்லை. சந்திரன், மற்றும் சில கிரகங்களின் ஈர்ப்பு இழுவைகளால், புவியின் சுற்று வட்டப் பாதை பாதிக்கப்பட்டு அதில் மாறுதல்கள் உண்டாகின்றன. இதனால், நம் பூமி காலநிலை/ பருவ நிலை மாற்றங்களுக்கு உட்படுகிறது. பூமியின் அச்சு சிறிது சாயும், அதன் சுழற்சி பாதை மாறும், மெலான்கோவிட்ச் கால நிலை சுழற்சிக்குக்(MilankOvitch Climate Cycles)  காரணமாகும்.

எண் சாண் உடம்பிற்கு

மேஜையின் மீது ஒன்றின் அருகே ஒன்றாக அடுக்கப்பட்ட எழுதுகோள்களை மனதில் நினைத்துக் கொண்டால் நமக்கு இந்த கிடைமட்ட அடுக்குகள் புரியும். தூண்டப்பட்ட pluripotent திசுக்களில், மென்மையான உயிர் மையைக் கொண்டு,அதில், மூளை அணுக்களை வளர்த்து, கிடைமட்ட அடுக்குகளில் பொதிந்து, மூளை அணுக்கள் மற்றும் தொடர்புகள் இவற்றை வெற்றிகரமாக இந்த இழைகளில் செய்திருக்கிறார்கள்.

நீயும், நானுமா?

வழக்கின் முதன்மையான கேள்வி, தங்கள் இதழில் வெளியாகும் கட்டுரைகளையும், செய்திகளையும், தனது செயற்கை நுண்ணறிவின் ‘உரையாடலுக்காக’, அதன் கட்டமைப்பான, பெரும் மொழி மாதிரிகளுக்கான (Large Language Models) பயிற்சிக்காக எடுத்தாளும் ஓபன் ஏஐ, உரிமை மீறல் செய்துள்ளது; எங்கிருந்து பெறப்பட்டது என்ற செய்தியையும் அது வெளியிடுவதில்லை.

நிழல்கள், நீட்சிகள்

அவர்கள் கூட யாரோ ஒருவரின் நிழலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முற்றத்தில் படர்ந்த கொடி சம்பங்கியாக, மலைக் காட்டில் பூக்கும் பொன் கொன்றையாக, அடர்ந்த கிளைகளின் உள்ளே கூவும் குயில்களாக, அவர்களின் சிறப்புக்களை தங்கள் பெருமைகளாகக் கூவும் அதிகாரிகளின் ஆணவத் திமிரை சகித்துக் கொள்பவர்களாக….

கருஞ்சாந்து நிற ஆற்றலாளர்கள்

ஈரம் கசியாத, சுகாதாரப் பட்டியுடன், அணையாடையும் இருக்கும், பெண்கள் பாதுகாப்பாக சங்கடமில்லாமல் உணரும். ‘அட்ஜெஸ்டபில் பெல்ட்டை’ இவர் வடிவமைத்தார். முதலில் இந்த சாதனத்தை வரவேற்ற ஒரு குழுமம், இவர் ஒரு கறுப்பினத்தவர் என்று அறிய வந்ததும் சந்தைப் படுத்த மறுத்து விட்டது. காப்புரிமைக் காலம் முடிந்து விட, எவரும் இந்த சாதனத்தை வடிவமைக்கலாம், சந்தைப் படுத்தலாம் என்ற விதி முறையின் படி, இவரது இந்தக் கண்டுபிடிப்பு, இவருக்கு அழியாப் புகழை தந்ததே தவிர, பணம் தரவில்லை.

தொட்டால் பூ மலரும்

ப்ரோஸ்தெடிக் கரங்கள் அல்லது ரோபோடிக் கரங்களின் பரப்பில் இந்த உணரிகள் இடம் பெறும்போது, அவை இலாகவமான, தொட்டுணரும் தன்மையைக் கொடுக்கின்றன. இந்த உணரிகள் இடம் பெறும் தோலினால் அமையும் ரோபோக்கள், முட்டையை உடைத்தல், சிறு பழத் துண்டுகளை எடுத்துச் சுவைத்தல் போன்ற சின்னஞ்சிறு செயல்களுக்கும் உதவும். மனிதத் தோலைப் போலவே இந்த உணரியும் மிருதுவாக இருப்பதால், மனிதர்களுடன் செயல்படும்போது ஆபத்து விளைவிக்காமலும், மென்மையாகவும் மனித வாழ்க்கைக்கு ஒத்துப் போகிறது. 

காற்றில் கலக்கும் பேரோசை

கிரெடிட் சூயிஸ் மற்றும் யூ பி எஸ் யின் சங்கமம் சிறிய அளவில், அதுவும் சில அன்னிய வர்த்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் செய்திகள் வந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இல்லை. மார்ச் 2021ல் ரூ 9.6 ட்ரிலியனாக இருந்த வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.175.4 ட்ரில்லியனாக வளர்ந்துள்ளது- அதாவது, ஜி டி பியில் (GDP- Gross Domestic Product) 45% ஆக இருந்தது 67.6% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வர்த்தகங்கள் குறையும், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரின் நம்பிக்கைகள் குறையும்

மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்

அதிர்ஷ்டம் தரும் என அவர்கள் நம்பும் பொருட்களை வைத்திருந்தவர்கள், தங்கள் விரல்களை, குறிச் சின்னத்தைப் போல வைத்திருந்தவர்கள், திறன் போட்டியிலும், புதிர்களை விடுவிப்பதிலும் மேம்பட்டிருந்தார்கள் என்று ஜெர்மானிய மனவியலாளர்கள் சொல்கிறார்கள். இங்கே நாம் ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்- ஒரு அறிவியலாளர்- பகுத்தறிவுவாதி-அவர் ஒரு வீடு கட்டினார். நிலைப் படி வைக்கும் போது, அந்த ஊரில், அதன் கீழே, குதிரரை லாடத்தைப் புதைத்து வைப்பார்கள்; கட்டிட வல்லுனர் அதை வைக்க வேண்டுமா, நீங்கள் இதையெல்லாம் நம்பாதவர் அன்றோ என்று கேட்ட போது, ‘எதற்கும் இருக்கட்டுமே; வையுங்கள்’ என்று சொன்னாராம்! சடங்குகள் செய்யும் தளகட விளையாட்டு வீரர்கள், ஒப்பு நோக்க சிறப்பாக விளையாடியதாக ஆய்வுகள் சொல்கின்றன.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

நம் கணித மேதை இராமானுஜனை, இலண்டன் மருத்துவமனையில் சந்திக்க வந்த கணித வல்லுனரான ஜி ஹெச் ஹார்டி, தான் வந்த வாடகைக் காரின் எண் 1729 மிகவும் சலிப்புத்தரும் ஒன்று என்று சொன்னார். இராமானுஜன் உடனே சொன்னார் : “அது ஆர்வமூட்டும் ஒரு எண். அதுதான், இரு கனசதுரங்களின் (cubes) கூட்டுத் தொகையாக, இரு விதங்களில் சொல்லப்படக் கூடியவற்றில் மிகச் சிறிய எண் என்று சொல்லி இவ்வாறு விளக்கினார். 13+123 = 1729; 93+103= 1729.” ஒரு எண், தன்னளவில் ஈர்ப்பு ஏற்படுத்தாத ஒன்று, இரு மாறுபட்ட வழிகளில், இரண்டு விதமான நேர்மறை எண்களால் விளக்கப்பட்ட விதம் அருமை. ‘ஃப்யூச்சுராமா’ (Futurama) தொடரில், வரும் ஒரு ரோபோவின் எண் 1729.  அதைப் போலவே, ஃபார்ன்ஸ்வொர்த் பேராபாக்ஸ் (Farnsworth Parabox) தொடரில் அதன் பாத்திரங்கள் பல்வேறு உலகங்களில் குதிப்பார்கள்.

மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா?

என்னைப் போன்ற சாதாரணர்களின் இயல்பு இது.  நாங்கள் மேற்சொன்ன விதத்தில் செயல்படலாம். ஆனால், இயற்பியலாளர்கள் கூட இந்த இரகம் தான் என்பதில் ஒரு குரூர திருப்தி! அந்தத்துறையில் மிகப் பழமையான நகைச்சுவை ஒன்று உண்டு- ‘ நாம் பசு மாட்டை கோளமாக (Sphere) உருவகித்துக் கொள்வோம்.’ மன்னிக்கவும், இது ஜோக் தான். இதன் பொருள், ஒரு கோளத்தின் செயலை புரிந்து கொள்வது, அதன் வடிவத்தால் எளிதாகிறது; எனவே தொடக்க அனுமானமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராயப்படும் பொருளின் சில குணாதியசங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லாத நிலைகளில், சில எளிய கருதுகோள்களைக் கொண்டு நாம் அகிலத்தை அறிந்து கொள்ளத் தொடங்குகிறோம்.

கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்

வீடுகளிலும், நகராட்சிகளிலும் இந்த பி எஃப் ஏவைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறுமணிகள் போன்ற துகள் நிரம்பிய கரிப் பொருள் வடிகட்டியும், (Granular Carbon Filters) தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) முறையும் பொதுவில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவை செலவு பிடிப்பவை மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் கடினமே. (நம் ஊரில் மணற்படுகையும், கூழாங்கற்களும் நீர்த்தொட்டிகளில் பயன்படுத்தி, குழாயின் வாயில் துணியில் முடிந்து வைத்துள்ள படிகாரத்தைக் கட்டி குளிப்பதற்கும், தோய்ப்பதற்கும் உபயோகிப்பார்கள்; வெட்டி வேர், நன்னாரி வேர் போன்றவற்றை குடிக்கும் நீரிலும் போடுவார்கள். செப்புப் பாத்திரங்களைப் பயன் படுத்துவார்கள்- எங்கேயோ கேட்ட நினைவு!)

நேரம் எனும் கள்வன்

நம் வீட்டுக் குழாயில் நாம் பெறும் தண்ணீர் இவைகளில் ஒன்று. இன்று நாம் குழாயைத் திறந்து பயன்படுத்தும் நீரை, 19ம் நூற்றாண்டில், 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் அவ்வளவு எளிதாகப் பெற முடியவில்லை. உலகின் செழிப்பான நாடுகளிலும் அப்போது இதுதான் நிலை. அந்தக் காலத்தில், வீட்டிற்குத் தேவையான நீரைக் கொணர்வதும், சேமிப்பதும், மீண்டும் நிரப்புவதுமே ஒரு தனித்த வேலையாகிப் போனது. இந்தக் கருத்தை, ‘அமெரிக்க வளர்ச்சியின் ஏற்றமும், இறக்கமும்’ (The rise and fall of American Growth) என்ற நூலில் பொருளியலாளர் ராபர்ட் ஜெ கோர்டன் (Robert J Gordon) சொல்லியிருக்கிறார்.

மாற்றாரை மாற்றழிக்க

ஓனிடா டி வியின் விளம்பர வாசகம் ‘அக்கம் பக்கத்தோர் பொறாமை கொள்வார்கள்; உடமையாளருக்கோ மகிழ்ச்சி’ நம் அருமை நண்பன் சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் நமக்குத் தொல்லை தந்து கொண்டேயிருக்கிறது. அதனுடைய வேவுக் கப்பல் இந்தியப்பெருங்கடலில், நமது கால் சுண்டு விரலான ஸ்ரீலங்காவை கடன்களாலும், வணிகத்தாலும் கட்டுப்படுத்தி, நயவஞ்சகமாக அதன் “மாற்றாரை மாற்றழிக்க”

அஷ்டத்யாயீ

பாணினி ( Pānini ) கி மு 350ல் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வசித்தவர் எனக் கூறப்படுகிறது. இந்திய மொழியியலின் தந்தை என்று மதிக்கப்படுபவர். அவர் எழுதியது, (சிற்சில முன் தொகுப்புக்களின் உதவி கொண்டும், தானே பெரும்பாலும் வடிவமைத்தும்) அஷ்டத்யாயீ என்னும் வடமொழி இலக்கண புத்தகம். எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ள நூல். இங்கே அத்தியாயங்கள் என்று குறிப்படுவது புத்தகங்களை. ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பாடாந்தரங்கள். வடமொழி இலக்கணத்திற்கான 4000 நெறிமுறைகள் கொண்டுள்ளது. இதன் சிறப்பே இது வெறும் இலக்கண நூல் மட்டுமில்லை; படிப்படியான வழிமுறைகளின் படி, இதைக் கொண்டு இலக்கண சுத்தமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைக்க முடியும் என்பதால் இது முழு அளவிலான ஒரு மொழி இயந்திரம்.

காசு, பணம், துட்டு, மணி, மணி

பணமாகப் பெற்று அந்த நீர்மைப் பணத்தை அதிக வருவாய் தரும், ஆனால் உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் வங்கிகள் போன்றவற்றிற்கு ஒரு தனி நபர் சந்திக்கும் நிதிச் சிக்கல்களை, கூட்டாகச் சந்திக்கும் நிலை பொதுவாக ஏற்படாது. பலவாறாக, அது, சமச்சீர் பேணுவதாக நினைத்து, உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்து விடும். அதாவது நடப்புக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் ஒரே நாளில் அவசரத் தேவையென பணத்தை எடுக்க நேரிடாது என்பது நம்பிக்கையாகும்.

மூத்தோர்கள்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள் என்று இன்றைய அறிவியல் கருதுகிறது. இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து  உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை.

க்ளிக், க்ளிக், பயோ க்ளிக் (Click, Click, Bio Click)

இந்தத் தருணத்தில் நம் இந்திய அறிவியலாளர்கள், தங்க நுண் துகளை, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுண்ணி பூஞ்சையுடன்  இணைத்து சாதனை செய்துள்ளார்கள். இது அளவில் சிறிய ஆற்றலில் பெரிதான ஒன்று. நான்கு அறிவியல் அமைப்புகள் இதை அமைப்பதில் பங்கேற்றன போடோலேன்ட் பல்கலை, கோவா பல்கலை,, ஸ்ரீ புஷ்பா கல்லூரி, தஞ்சாவூர், விலங்கு நோய்கள் அமைப்பு, போபால் ஆகியவற்றைச் சேர்ந்த பயோடெக்னாஜிஸ்ட் உருவாக்கிய இதற்கு ஜெர்மனி, சர்வதேச காப்புரிமை தந்திருக்கிறது.

அவனாம் இவனாம் உவனாம்..

இந்த நிறப்புடவை இந்தப் பெட்டியில் இடம் பெற வேண்டுமென்று ‘மறைந்துள்ள மாறிகள்’  நினைக்கின்றன. (இதைத்தான் இந்தப் பிறவியை இங்கே எடுக்க வேண்டுமென்று வினைப் பயன் தீர்மானிப்பதாக நாம் சொல்லி வருகிறோமோ, என்னமோ?) இது முதல் நிலை மாய எண்ணம் என்றால் அவைகளைப் பிரித்து, தொலைதூரத்தில் வைத்தாலும் அவைகளின் தொடர்புகள் அறுபடுவதில்லை, பிரிக்கப்பட்ட பொருட்கள், தங்களுக்குள்  தொடர்பு கொண்டு ஒரே நிலையை அடைய முடியும்  என்பது மிகப் பெரிய மாயம். இதைத்தான் ஐன்ஸ்டெய்ன் ‘தொலைவில் உள்ள பயமுறுத்தும் ஒன்று’ என்று சொல்லி தனது ஐயத்தைச் சொன்னார்.. அது அப்படியல்ல என்று பின்னர் வந்த குவாண்டம் இயக்கவியல் இயற்பியலாளர்கள் காட்டி வருகின்றனர். 

ஆயிரம் இதழ்கள்

அன்னையை ஆயிரம் கண்கள் (ஸகஸ்ராக்ஷி) கொண்டவள் என்று வணங்குகிறோம். ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாவுகள் இருப்பதாகச் சொல்வார்கள். ‘பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று லலிதா சகஸ்ரநாமம் அன்னையைத் துதிக்கிறது. இவைகள் வெறும் பெயர்கள் மட்டுமல்ல, மொழிகளைக் குறிப்பவையும் கூட. இதில் மொழியியலும் அடங்கியுள்ளது. ரிக் வேதம் கூறும் நான்கு வடிவங்கள் இவை. வாக்கு நான்கு வடிவங்கள் எடுக்கிறதென்றும், அவற்றில் மூன்று மறைந்திருக்க ஒலி வடிவாக ஒன்று மட்டும் வெளிப்படுகிறது என்றும் அந்தத் தொல் வேதம் சொல்கிறது.

கான மயிலாட, மோனக் குயில் பாட

இந்தக் கணக்கீட்டின்படி, இந்த வெற்றிகரமான மீம்ஸ் போர்கள், சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலை வடிவமைத்து வந்திருக்கின்றன; ஆனால், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும் சிதைந்திருக்கிறது.  ஆக்ரோஷமான போராளிகள் குற்றச்சாட்டுக்களை, சிறை தண்டனையை, திவாலாகும் நிலையை, குடும்பத்தை, தங்கள் பெருமிதங்களை இழக்கும் அவலத்தை இப்போது சந்தித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்து, மீம்ஸ் வடிவில் வெளிப்பட்ட கருத்து, நம் சமூகத்தின் குருதியில் புனலாகப் பாய்ந்து கொண்டுள்ளது. Learn to Code, It’s about Ethics in Journalism, Race is Real, It’s Ok to be white, Critical Race Theory, Let’s go Brandon, Blue Lives Matter, A Deep State Operates extra legally inside the US Govt. இவையெல்லாம் கவர்ச்சிகரமாக மக்களை ஈர்த்தன. பெரும்பாலானவை வெள்ளைத் தோலின் மேன்மையைப் பறை சாற்றும் வண்ணம் எழுதப்பட்டவை.

எங்கிருந்தோ—இறுதிப் பகுதி

This entry is part 9 of 9 in the series எங்கிருந்தோ

பாரதத்தில், ஆறு மார்க்கங்கள் முதன்மையாகத் தொகுக்கப்பட்டு சனாதன தர்மத்தின் கீழ் வந்தது. சூர்ய வழிபாடு ‘சௌரா’ என்று அழைக்கப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘சௌராஷ்ட்ரான மந்த்ராத்மனே! சௌ வர்ண ஸ்வரூபாத்மனே! பாரதீச ஹரிஹராத்மனே! பக்தி முக்தி விதரணாத்மனே!’ என்று சௌராஷ்டிர இராகத்தில் துதிக்கிறார்.

நீலமலைக் கள்ளன்

This entry is part 8 of 9 in the series எங்கிருந்தோ

பக்தி, இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக் கலை. சித்திரக் கலை, ஆடற் கலை எதைச் சொல்ல எதை விட? சென்னை, தில்லி போன்ற மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிதான புவனேஷ்வரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத கோயில் கட்டுமானங்கள் நடந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு மிஞ்சியிருக்கும் 500 கோயில்களில் முந்நூற்றிலாவது வழிபாடுகள் நடை பெறுகின்றன. பல கோயில்களில் சிவனே முக்கிய தெய்வம். ஆனால், சக்திக்கும், விஷ்ணுவிற்கும், சூரியனுக்கும் அருமையான கோயில்களும் உள்ளன. எங்கள் கோயில்களில் ரேகா விமானங்கள் பிரசித்தி பெற்றவை. நேர்க்கோட்டில் புடைப்பாக காணப்படுவதை ரேகா விமானங்கள் என்போம்.

ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும்

This entry is part 7 of 9 in the series எங்கிருந்தோ

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காளி என்பவள் அளப்பரிய ஆற்றல் உள்ளவள்- ஊழிப் பெருந்தீ. அவளை அனைத்துமாக வழிபடுவது காலந்தோறும் பழகிய ஒன்று. அவள் நவீன யுகத்தில், பெண் விடுதலையெனக் கருதப்படும் பேதைப் போதைகளின் ஆதிக்கத்திலில்லை- தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் படைப்பாளி காளியின் வாயில் ‘சிகரெட்டை’ வைத்து சமீபத்தில் காட்சிப்படுத்தினார். இதை ஃபெமினிசம் என அவர் நினைத்திருப்பாரேயானால் அவருக்கு எந்தக் கொள்கையிலும் தெளிவில்லை எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

பேயவள் காண் எங்கள் அன்னை

This entry is part 6 of 9 in the series எங்கிருந்தோ

இன்று நீர் கங்கை ஆறெங்கள் ஆறே! ஹூக்ளி என்பது இங்கு அதன் பேரே! என் ஆன்மீக குரு மற்றும் கணவருமான ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு இந்த ஹூக்ளியின் மேற்கரையில் 40 ஏக்கரில் மிக அழகிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதனுள் எனக்கும், ஸ்வாமி விவேகானந்தருக்கும், தனித்தனியே கோயில்கள் உள்ளன. வளாக முகப்பினுள்ளேயே என் கோயில்! பரமஹம்சருக்கு இவ்விதம் ஆலயம் அமைத்து சமூக நல்லிணக்கதிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென விவேகானந்தர் விழைந்தார். உலகம் முழுதும் பார்த்தவராதலால், இந்தியாவில் பின்பற்றப்படும் மும்மதங்களான இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகியவற்றைச் சுட்டும் படியும், முன்னர் நிலவி வந்த பௌத்த, சமண சமயங்களைக் காட்டும் வகையிலும் அவரது கோயில் கட்டுமானம் இருக்கிறது

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

This entry is part 5 of 9 in the series எங்கிருந்தோ

ஜிந்த் கௌராகிய நான் இந்திய விடுதலையில் எங்கள் பங்கினைப் பற்றிச் சொல்ல வேண்டிய நேரமிது. கண்ணீராலும். செந்நீராலும் வளர்த்த விடுதலையின் விலையை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிய வேண்டும். ஜாலியன் வாலாபாக்கின் சுவர்களில் இன்றும் கூட குண்டுகள் துளைத்த ஓட்டைகளை நீங்கள் பார்க்கலாம். இந்த இடமே தனித்த “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?”

பொற் தேவன்

This entry is part 4 of 9 in the series எங்கிருந்தோ

சிறு வயதில் தாக்கிய பெரியம்மை நோயினால் ஒரு கண்ணில் பார்வை இழந்தவர். ஆனால் எவ்வளவு பரந்த சாம்ராஜ்யம் அமைத்தார் தெரியுமா? இன்றைய சீனாவின் எல்லை, இன்றைய இஸ்லாமிய ஆப்கன் எல்லை என அவர் அரசின் எல்லைகள் இருந்தன. 1799-ல் லாகூரை கைப்பற்றினார். அவர் ஆட்சியில் செல்வம் பெருகியது; மத நல்லிணக்கம் நிலவியது. படை வீரர்களில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் இருந்தனர். முதல் ஆங்லோ –சிக் போரில் கிழக்கிந்திய கம்பெனி வஞ்சகமாக வகுத்திருந்த ஒப்பந்தங்கள்- (லாகூர், பைரோவல் ஒப்பந்தங்கள்) எங்கள் பரந்த அரசைச் சுருக்கின.

காலக் கணிதம்

This entry is part 3 of 9 in the series எங்கிருந்தோ

உலகின் மிகப் பெரிய கல்கட்டுமான சூரியக்கடிகாரம் ஜெய்ப்பூரில் உள்ளது. இது யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஜந்தர் மந்தர் என்ற அழகான பெயரில் இயங்கும் இது, முன்- நவீன வானக்கண்காணிப்பகங்களில், துல்லியமாகக் கிரகங்கள் மற்றும், விண்ணகப் பொருட்களின் இயக்கங்களை கணிப்பதற்கும், அறிவதற்கும் உலகத்தில் சிறந்த ஒன்று என யுனெஸ்கோவும், மற்ற வானியலாளர்களும் பாராட்டுகின்றனர். 4609 ஏக்கரில் 19 வானியல் கண்காணிப்புக் கருவிகள் உள்ள ஜந்தர் மந்தர் 1729-ல் கட்டப்பட்டது.

துவாரகையில் இருந்து மீரா

This entry is part 2 of 9 in the series எங்கிருந்தோ

நான் இதே துவாரகையில் கிரிதாரியுடன் கலந்தேன். எத்தனை உயிரோட்டத்துடன் அவன் கோயில் அமைந்திருக்கிறது! கடல் மட்டத்திலிருந்து நாற்பதடி உயரத்தில் கோமதி ஆற்றங்கரையில் மேற்குத் திசை நோக்கி எழுந்துள்ள இந்தக் கோயில் முதலில் கண்ணனின் பேரனால், கண்ணன் வசித்த ‘ஹரி நிவாசை’ கோயிலாக்கிக் கட்டப்பட்டது. ராப்டி தேவியின் (முதல் கட்டுரையில் வந்த பெண்) கணவரைப் போரில் வென்ற முகம்மது பெகேடா தான் இந்தக் கோயிலையும் இடித்து அழித்தார்.

எங்கிருந்தோ

This entry is part 1 of 9 in the series எங்கிருந்தோ

இந்த மண்ணில் இராமாயணமும், மகாபாரதமும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. தமிழக மல்லையில் அர்ச்சுனன் தவம் சிலையெனக் கவர்ந்தால், குஜராத்தின் பாவ் நகரில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து லிங்கங்களை வழிபட்ட இடம் கடலினுள் காணக்கிடைக்கிறது. பெரும்பாலும் காலை 10 மணி முதல் மதியம் நான்கு மணிவரை கடல் உள் வாங்குகிற நேரம்; கிட்டத்தட்ட 1.5 கி மீட்டர் கல்லில், கூழாங்கற்களில், சறுக்கும் மணலில் மனிதர்கள்,நடந்து வருகிறார்கள். கடற் பறைவைகள் காத்திருக்கின்றன. கடல் நீரெடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். தொன்மத்தையும், ஆன்மீகத்தையும் இணைக்கும் இந்த சடங்கின் இனிமை அழகு, அதன் வெள்ளந்தித்தனம் அருமை. இயற்கையும், வரலாறும், புராணமும் சங்கமிக்கும் முக்கூடல்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச

உலகம் சீன அரசாளர்களை தம் மக்களை அடக்கியாள்வோராகப் பார்ப்பதை மாற்றுவதற்கு சீனா செய்யும் முயற்சிகள் இந்த வலைஒளிகள். இது அயலகத்தில் இருப்போரை சீனாவின் செயல்பாடுகளில் இரக்கமும், ஆமோதிப்பும் கொண்டவர்களாக மாற்றும் ஒரு பெரிய திட்டம் என்றே சொல்லலாம். பல நிழல் கணக்குகள் மூலமாக இத்தகைய வலைஒளி நிகழ்ச்சிகளைப் பெருக்கிக் காட்டுமாறு தன் தூதர்களுக்கும், அரசின் செய்தித் துறையினருக்கும் சீன அரசு கட்டளையிட்டுள்ளது.

பார் சாரதி, பார்(த்த) சாரதியை

“இந்தக் கார்களை ‘தானே முழுதாக இயங்கும் ஒன்று; என்றும், ‘தானியங்கி ஓட்டுனர்’ என்றும் சொல்லக்கூடாது. ஏனெனில், அது மக்களை அவ்வாறே நம்ப வைக்கும். உண்மையில், இவைகள் மனிதர்களின் சக ஓட்டுனர்களே.” என்று சொன்னார் இன்றைய அரோரா (Aurora) கம்பெனியின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் டெஸ்லா பொறியியல் தொழில் நுட்ப வல்லுனருமான ஸ்டெர்லிங் ஆண்டர்சன்.(Sterling Anderson)

ஆறாம் அறிவின் துணை அறிவு

உலகெங்கும் கணிதத்திற்கும், சங்கீதத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் ஆராயப்பட்டு வருகின்றன. நமது சி வி இராமன் அவர்கள் மிருதங்கத்திற்கும் இயற்கையின் தாள ஒத்திசைவுகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமைகளைப் பற்றி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. நம்முடைய சம்ஸ்க்ருத சந்தங்களும், தாள லயங்களும், சூத்திரங்களும் கணினியின் மொழிக்கு ஏற்ற ஒன்றாக இருப்பதாக ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

இந்திய அரசு ‘போஷன் அபியான்’(Poshan Abhiyan) மூலம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, இளம் தாய்மார்களின் உடல் நலம், அவர்களுக்குத் தேவையான போஷாக்கு போன்றவற்றிற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கிராம நல சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாட்கள்’ தேசியக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலை நிற்கும் வளர்ச்சி(Sustainable Development Goals) அதன் குறிக்கோள். சுய உதவிக் குழுக்கள், சமூக நல அமைப்புகள், கிராம முன்னேற்ற அமைப்பு, தாய் சேய் நல கேந்திரங்கள், குடும்ப நலம் மற்றும்  வளர்ச்சி, பஞ்சாயத்து சபைகள், நல்ல குடி நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றும் அமைப்புகள்…

ஆர்த்தேறும் கடல்

சூழல் சீர் கேடுகளுக்கும் நில வீழ்ச்சிகளுக்கும் மறைமுகமானத் தொடர்பு இருக்கிறது. வெப்பமயமாகும் புவியில் வறட்சி என்பது அதிகத் தீவிரத்துடன் அடிக்கடி ஏற்படும் சாத்தியங்களுள்ளது. ஒரு வருடத்தில் எத்தனை அளவு மழை பெய்திருந்தாலும், நீடித்த வறட்சி, சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்டு விடுகிறது. அதிக வறட்சியின் காரணமாக அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படும்; ஏறி வரும் கடலோ, மூழ்கும் நிலத்தில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

விஷ்வ சாந்தி

பல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா? என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை.

பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில்

அவர்கள் கொலை செய்தார்கள், அதிகாரிகளை நேரே பகைப்பதில்லை. ஒத்துப் போகும் பொதுப் புள்ளியில் அவர்கள் நிறுவனத்திடமும் பொது மக்களிடமும் உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். (அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் தொழில் முனையும் பெரு நிறுவனங்கள் வன்முறையாளர்களுக்குக் கப்பம் செலுத்தியதும் முன்னர் ஜம்மு- காஷ்மீரத்தில் செயல்பட்ட வங்கிகள் ‘வாடிக்கையாளரை அறிவோம்’ மற்றும் ‘பெருந்தொகை வரவை ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்தக் கூடாது’ என்பது போன்ற மிரட்டல்களை எதிர் கொண்டதையும் குத்து மதிப்பாக நாம் அறிவோம்.) இப்படித்தான் ஊட்டம் பெறுகிறார்கள். இதாலியின் பொருளாதாரத்திலும், அதன் அரசியலிலும் இவர்கள் ஆற்றல் மிக்க சக்தி.

இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம்

1998-ல் புதிய கல்விப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும், வரலாறு என்னவோ 1943-ல் நின்றுவிட்டது. மாற்றங்களில், அராபிய இலக்கியங்களின் இடத்தை மோசமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உலக இலக்கியங்கள் எடுத்துக்கொண்டன; புதிய தத்துவப் புத்தகம், ‘செய்ய வேண்டும்’ என்ற வார்த்தகளோடு (ஒரு முழு அத்தியாயம் புனிதப்படுத்தும் ஆசைகளைக் கைக்கொள்ள அறிவுறுத்தி) மேலும் குடிமைப் பண்புகள் என்று ஒரு புதுப் பாடத் திட்டமும் இடம் பெற்றன. வரலாறு, உள்நாட்டுப் போர்களுக்கு முந்தைய காலகட்டத்துடன் நின்றதென்றால், மகிழ்வான எதிர்காலத்திற்குக் குதித்தோடியது குடிமைக் கல்வி.

பேரழிவின் நுகத்தடி

இறந்தவர்களின் வார்த்தைகளோடு உயிரோடிருப்பவரின் சொற்கள் ஒன்றாகக் கலக்கின்றன. தங்கள் முன்னோர்களின் மொழியை சற்றேனும் அகழ்ந்து எடுத்து கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள். கசிந்தோ, கலந்தோ, அவர்களின் மொழியுடன் தன் மொழி இணைவதை அவர் இவ்வாறு சொல்கிறார் : “வண்டுகள், பூச்சிகள், கிருமிகள், களைகள் அறியா வண்ணம் நுழைந்து தங்கள் வேலையைத் தொடர்வது போல் என் மொழி அமைந்துவிடுகிறது.”

பெட்டகம்- வாசக மறுவினை

குட்டி ரேவதியின் ‘உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்த’ அருமையான நேர்காணலுக்கு மிகுந்த நன்றிகள். உடலையும், அதன் பட்டுணர்வையும் சொல்லும் அம்பையின் பார்வை மிகச் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்வழி நோக்கில் உள்ள சமுதாயத்தில் பெண்ணின் உடல் கூட அவளுடையது என்ற எண்ணம் அற்றுப் போனதுதான் மிகப் பெரிய குரூரம் என அம்பை தெளிவாகச் சொல்கிறார்.