சொல்வனம் வழங்கும் “எண்ணெய்யும் தண்ணீரும்” ஆங்கிலப் புத்தகம்

அந்தக் காலகட்டத்தில் பிளாட்பார்மில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் ஆண்கள்தான். நிறுவனத்தின் ஆன்ஷோர் (கரை) பிரிவுகளிலும், தலைமை அலுவலகத்தின் சப்போர்ட் ரோல்களிலும் பெண்கள் பணிபுரிந்த போதிலும், இந்த ஆஃப்ஷோர் வேலைகள் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்ததாகவே இருந்தன. ஊழியர்களின் வயது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து ஐம்பதுகளின் இறுதிவரை விரிந்திருந்தது. மாதத்தில் பாதி நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஊழியர்கள் படும் சிரமங்களை நிறுவனம் நன்கு உணர்ந்திருந்ததால், பிளாட்பார்மில் எங்கள்  வாழ்க்கையை எவ்வளவு சொகுசாக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாக வைத்து கவனித்துக் கொண்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைத்த வருவாய் அங்கே வழங்கப்பட்ட தாராளமான வசதிகளை எளிதாக நியாயப்படுத்தியது.

முடிவிலி

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பால்கனியில் நின்றுகொண்டு, தண்ணீர் வழிந்து தரையைக் கறைபடுத்தும் வரை மல்லிகைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளது கூந்தல் ஒழுங்கற்று அள்ளி முடிக்கப்பட்டிருந்தது. எந்தவொரு ராகமும் இன்றி அவள் ஏதோவொரு மெட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவர் அப்போது இளைஞராக இருந்தார்; அந்தத் தண்ணீர் வீணாவதைக் கண்டும், அந்தச் சேற்றைக் கண்டும், குடும்ப வாழ்க்கைக்குள் அன்பு நுழையும்போது ஏற்படும் அந்த ஒழுங்கின்மையைக் கண்டும் எரிச்சலடைந்திருந்தார்.

ஒளிரும் ஒரு நதி

இடைவிடாத அதன் அதிர்வில்
பூஜை பொருள்களின்
மணத்தை கேட்கிறேன்.
மௌனமடைந்த குரல்களைக் கேட்கிறேன்.
செவ்வந்தி மாலை அணிவித்த
படத்திலிருந்து வெளியேறி வந்து
சற்றுமுன் பூத்த வியர்வையுடன்
கற்பூரம் ஏற்றிய தட்டை நீட்டும்
உன் கைகளை பார்க்கிறேன்.
அந்த பின் மதியத்தின் கூடலில்
அத்வைத மோட்சம் அடைந்த
நம் இருவரின் பொருட்டும்,
மொட்டை மாடி நிழலில்
கரையும் காகங்களின் குரலில்
வெயிலை கேட்கிறேன்

பூமியைச் செதுக்கும் இரு எதிர் மூலகங்கள்:நீரும், கரியமில வாயுவும்

இயற்கை பரிணாம வளர்ச்சியில் கரியமில வாயு, நீர், நொதிகளுக்கு இடையே உள்ள சிக்கலான வேதியியலை வடிவமைக்க பல யுகங்களைச் செலவிட்டபோது, எதிர்பாராத சிக்கலையும் எதிர்கொண்டது. வாழ்வின் வளர்சிதை மாற்றப் பாதைகள் முற்றிலும் தூய்மையாக இருப்பதில்லை. அவை அடிக்கடி எதிர்பாராத வேதியியல் பக்கவிளைவுகளையும் உருவாக்குகின்றன. உயிரியலால் ஒருங்கிணைக்கப்பட்ட மிக மோசமான, சிக்கலான பக்கவிளைவுப் பொருட்களில் ஒன்று அதிக எதிர்வினை கொண்ட ஆக்ஸலேட் (oxalate C₂O₄²⁻) அயனி ஆகும்.

தலைப்பாறை 

ஒரு பெரும் மரம் வழியில் முறிந்து கிடந்தது. அம்மரத்திற்கு கிட்டத்தட்ட நூறு வயதிருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சொன்னான் நிஷாந்து. அம்மரத்தை மொத்தமாக முறிக்காமல் பாதையில் இடையூறாக இருக்கும் பாகத்தை மட்டும் அருகில் முறித்து போட்டிருந்தனர். அதைக் கண்ட திலீப் அண்ணன் “பாத்திய இந்த மரத்த மொத்தமா வெட்டக்கூட நம்மாளுங்களால முடியல, அவ்ளோ பெரிய மரம்” என்று சொல்லிக் கொண்டே  முழு மரத்தின் நீளத்தையும் தன் கண்ணால் ஒருமுறை அளந்தான். அவ்வளவு பெரிய மரத்தை அப்பெரும் காட்டிலிருந்து முழுவதுமாக அகற்றுவதென்பது பெரும் சிரமத்திற்குரிய வேலை என்பதால் அந்த மரம் வாழ்ந்த காட்டிலேயே அதை அப்படியே விட்டுவிட்டு பாதைக்கு இடையூறான அதன் பாகத்தை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் அது பாதுகாக்கப்பட்ட வனமானதால் சீசன் காலகட்டத்தில் மட்டுமே அதற்குள் செல்ல அனுமதியுண்டு.

வாழ்வெனும் விசும்பின் ஓர் துளிர் 

இத்தொகுப்பில் பல கதைகள் மனதை நெகிழ வைத்து கண்கள் நிறைத்தன. அவர் ஒரு ஏழை கோவில் அர்ச்சகர்/குருக்கள். மகன் திருமணமாகிய சில வருடங்களிலேயே இளம் வயதில் இறந்து விடுகிறான். மருமகள் இரண்டு குழந்தைகளுடன், இங்கு புக்ககத்தில் தான் வசிக்கிறாள். பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவின் மேல் மிகப் பிரியம். மகள் முக்தா திருச்சி கணவன் வீட்டிலிருந்து சில நாட்கள் முன்பு தான் இங்கு வந்திருக்கிறாள். கொஞ்ச நாள் தங்கிவிட்டு திரும்பிப் போகிறாளா? என்ன விஷயம் என்று முழுதாகத் தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு முக்தாவிடம் இருந்த கலகலப்பும், உற்சாகமும் இப்போது இல்லை. குருக்களுக்கு சமீப காலமாக மனதில் சஞ்சலமும், கேள்விகளும், நாத்திக எண்ணங்களும் தலைதூக்குகின்றன

அசுவ யாகம்

மடொன்னா, தனக்கொரு உடனடி விமோசனம் வேண்டி பரிதாபமாய் யாசித்துக்கொண்டிருந்தது. கடந்துகொண்டிருந்த விநாடிகளின் நரக வேதனையைக் கால்கள் காட்டித் துடித்தன! வழக்கமாக, கருணைக் கொலையைக் கால்நடை மருத்துவரே செய்வார். டத்தோ, தன் கையாலேயே மடொன்னாவின் வேதனையை முடித்து வைக்க விரும்பி, மருத்துவரிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சினார். மருத்துவர், இக்கொலையில் பிரதானமாக உறுதிசெய்யப்பட வேண்டிய உடனடி மயக்கமும், மரணமும் பற்றி விலக்கி, அதற்கானத் துல்லியமான இடத்தை நெற்றிப் பொட்டில் சுட்டிக் காட்டி,  அரைமனதுடன் உடன்பட்டார்.

சம்பூ: வசந்தத்தின் பிரிவும் பறவையின் பாடல் உதிர்க்கும் மீனின் கண்ணீரும் -தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

இளவேனிற்காலத்தின் தொடக்கக் காற்றில் நிலவும் குளிரைக் கண்டு அஞ்சி, பாஷோ வடக்கு நோக்கிப் பயணம் செய்வதை சம்பு தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஷோவிற்கும் சம்புவிற்கும் இடையிலான அந்த இணக்கமான உறவே, பாஷோ இந்தக் கவிதையை இயற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது, ஒருவேளை மீன்களைக் குறிப்பிடுவதன் மூலம், அவர் தனது இளமைக்காலத்திலிருந்து ஒரு தெளிவான முறிவை ஏற்படுத்த எண்ணியிருக்கலாம்.

நவரத்தின விலாசத்தின் யானைக் கொட்டில்

ப்ரின்ஸ் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். இளைய மகாராணி அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ஏதோ கேட்டார்.  இன்றும் பெண்கள் மகாராஜா முன்னிலையில் சாதாரணமான குரலில் பேச மாட்டார்கள். பெரிய மகாராஜா அதை எதுவும் கவனிக்காமல் மேசையில் தலைமை இடத்தில் அமர்ந்து கொண்டு பெரிய குரலில் “குட்மார்னிங் ஆல்” என்று எல்லோரையும் புன்னகையுடன் பார்த்து விட்டு உணவு கொண்டு வரச் சைகை செய்தார். வெள்ளைச் சீருடையில் இரண்டு பணியாளர்கள் வெள்ளி தம்ளர்களில் பழ ரசம் ஊற்றி விட்டு, பெரிய வெள்ளி தட்டுகளில் பரிமாறினார்கள். முதலில் வந்தது குங்குமப்பூ போட்ட பாதாம் ஹல்வா போன்று இருந்தது. ப்ரின்ஸ் ஹல்வா வேண்டாம் என்று கையை மறித்தார். 

கனவின் சாவி

மீண்டும்
எனக்குள் பயணம் செய்த போது
அங்கொரு நீதி மன்றம் இருந்தது
பூனையும் எலியும்
வாதி பிரதி வாதிகளாக
விவாதித்துக்கொண்டிருந்தன
ஒரு மலைப்பாம்பு
நீதிபதி
என் கவலையெல்லாம்
நீதிபதியிடமிருந்து
பூனையின் எலியின் நீதியை
எப்படி காப்பாற்றுவது என்பதுதான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

ஒரு ஞானி தானே ஆத்மா என்று உணர்ந்திருக்கிறான். எனவே ஆத்மாவுக்கு கிருஷ்ணர் குறிப்பிடும் அத்தனை இலக்கணங்களும் அந்த ஞானிக்கே சென்று விடுகின்றன. ஒரு ஞானி ஒருபோதும் தன்னை ஞானி என்று உணர்வதில்லை. அவன் எப்போதும் தன்னை ஆத்மா என்றே உணர்கிறான். ஆத்மா எந்தச் செயலையும் செய்யாதது என்று அவன் அறிந்திருப்பதால் அவன் தனது எல்லாச் செயல்களை தன்னுடைய அறிவால் துறந்து விடுகிறான். எனவே அவன் சர்வகர்ம சன்யாசி (எல்லாச் செயல்களையும் துறந்தவன்) என்றழைக்கப்படுகிறான். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் எந்தச் செயலையும் அவன் செய்யாமல் விட்டு விடுவதில்லை.

றெக்கை –  அத்தியாயம் 26

This entry is part 26 of 26 in the series றெக்கை

இறந்தவர்களுக்கு வணக்கம் சொல்லப் புறப்பட்டு விட்டேன், சாரட் உள்ளே ஒற்றை மெழுகுவர்த்தி இருளை அதிகமாக்கிக் கொண்டு எரிந்தது. அதன் சுடர் எந்த தொந்தரவும் தராமல் அணைய லெவி மெழுகுதிரி மேல் காற்றை ஊதினான், உய்ய்ய் என்று உதட்டில் சூடான  மெழுகு திரவம் ஒட்ட பின்வாங்கி இனிச் செய்ய வேண்டியது என்ன என்று என்னை உற்று நோக்கினான்.சாரட் முழுக்க இருள் அப்ப,அருகில் அமர்ந்து என் ஸ்தனங்களை கை குவித்து பற்றினான், பேசலானான்.

ஒளிரும் இருள்

விண்மீன்களைப் பார்க்க முடியாமல் மட்டும் செய்வதில்லை இந்த ஒளி மாசு. அது உடல் நலத்தையும் பாதிக்கிறது. உணவுச் சங்கிலியில் இதன் பாதிப்பு நீடித்தும், பெருகியும் வருவது உடல் நலத்தை பாதிக்கும் ஒன்றாகும். இருள் நல்லதே; அது செயல்படும் உயிர் சக்தி. சரியான இடத்தில் சரியான விகிதத்தில், தேவையான அளவு ஒளி இருந்தால், சரியான இருட்டும், அதன் நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். நகரப் பூங்காக்கள், நகர அமைப்பு மற்றும் வாழ்விடங்கள், வானவியல் கூடுகைகள், எரிமலை உச்சிகள், பல கட்டுமானங்கள் இவற்றில் இருளிற்கு உரிய இடத்தை பெற்றுத்தர பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், போரடுகிறார்கள். இது ஒரு சரியான நடவடிக்கை.

ரூட் 66: கண்ணீரிலும் கரையாத நம்பிக்கை 

மனிதர்கள் எப்படி பெரும் துயர் களை எதிர் கொள்கிறார்கள் என்பது இந்த நாவலில் காட்டப்படுகிறது. முகாமில்  வசதிகளே  இல்லாத பொழுதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். தம் பசியை விட வழியில் சந்திப்பவர்களின் துன்பமும் பசியும் பெரிது என்று உதவுகின்றனர். தனித்தனிக் குடும்பங்களாகப் பயணிப்பவர்கள், வழியில் ஒன்றிணைந்து ஒரு பெரிய சமூகமாக மாறுகிறார்கள்.  மனிதநேயம் மற்றும் ஒற்றுமையே பிழைப்பதற்கான ஒரே வழி என்பதை ரூட் 66 பயணம் கற்பிக்கிறது. ரூட் 66 பயணம் செய்பவர்கள் எல்லாச் சவால்களையும் கடந்து நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் இடம் பெயர்ந்து தமக்கான வாழ்க்கையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொலம்பஸும் கொலம்பியாவும்!

This entry is part 7 of 7 in the series கொலம்பஸ்

1486-ல் சலமங்கா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மோதல்  19-ம் நூற்றாண்டில் வாஷிங்டன் இர்விங் எழுதிய நாவல் பாணி வரலாற்று நூலில்,   வெகுவாக மிகைப்படுத்தப்பட்டது. சலமங்காவில் இருந்த முட்டாள்தனமான மதகுருமார்கள் “பூமி தட்டையானது; அதனால் கொலம்பஸின் கப்பல் கடலின் முனையில் கீழே விழுந்துவிடும்” என்று வாதிட்டதாகவும், புத்திசாலியான கொலம்பஸ் “பூமி உருண்டையானது” என்று அவர்களிடம் போராடி நிரூபிக்க முயன்றதாகவும் இர்விங் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கினார்.

தேடல்

அந்தக் கட்டிடங்கள்
கயிறுகள், இஸ்திரிப் பலகைகள்,
சன்னல் சட்டங்கள் மற்றும் கம்பிகளால்
நிரம்பியவை.
தொப்புள் கொடிகளைப் போல
கருப்பு மற்றும் நீலச் சுருள்களாக
பின்னப்பட்ட இரும்புக் கம்பிகள்,
சவரக் கத்திகள் மற்றும் சாம்பல்காரக் கரைசல்
விநியோகிக்கப்பட்ட குடியிருப்புகள்.

எழுத்தின் விலை – அமெரிக்காவின் பைரஸி வரலாறு

This entry is part 8 of 8 in the series காப்பிரைட் கதைகள்

பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் என்று தான் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் தன் மனக்குறையை வெளிப்படுத்தினார் டிக்கென்ஸ். அமெரிக்காவில் தங்கள் புத்தகங்கள் விற்பனையாவதால் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. அமெரிக்கர்கள் இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் பைரஸியைக் கண்டிப்பதில்லை. அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். என்று கூட்டங்களில் பேசினார் டிக்கென்ஸ். இந்தப் பேச்சை அமெரிக்கர்கள் ரசிக்கவில்லை.

உயிரின் தேடல்

இப்போது
இங்கு நான்
என் உயிரையே
தொலைத்து நிற்கிறேன்.
அது எங்கு?
எப்படி?
யாரிடம் உள்ளது?
என்று கூடத் தெரியாமல்…
வெறும் உடலாய் மட்டும்

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு – அறிவின் புதிய போராட்டம்

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

தெய்வங்களைக் கொல்லுதல் எனும் புனித சடங்கு

சிப்பாய் கோடாரியை வீசினான். முதல் அடி தாடையில் விழுந்தது. கல் பொடியாகி வெண்மையான தூசியாக கீழே விழுந்தது. இரண்டாவது அடி முழங்காலில். மூன்றாவது வயிற்றில். உடைந்த சிலைக்குள்ளிருந்து எலிகள் திரண்டோடின. கடவுளின் உடலை வீடாகக் கொண்டிருந்த சிறு உயிரினங்கள் திடீரென்று வீடிழந்தன. கும்பலில் சிலர் பின்வாங்கினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் அழுதார்கள். கடவுளுக்காக அல்ல. தங்கள் இளமைக்கால நினைவுகள் கைவிட்டு போவதால் அவர்கள் அழுதார்கள்.

திறன்பேசி என் சிறந்த நண்பன்

This entry is part 4 of 4 in the series தரவு ஏக்கம்

பொறுப்பற்ற வாழ்க்கை நடத்தும் இளம் பெண் என்று கடிந்து கொள்ள வந்த என்னை, ‘தனியாக, பல விஷயங்களையும் எப்படித்தான் சமாளிக்கிறாளோ’ என்று நினைக்க வைத்து விட்டது. ஒருவருடன் பேசி அவர்களை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால், என் திறன்பேசியோ பேச வந்த என்னையே மாற்றிவிட்டது. நான் ஒரு கருவியைப் பயன்படுத்தும் மனிதன் என்பதைத் தாண்டி, என் உறவுகள், என் கோபங்கள், என் குறைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நண்பனாக மாறுவது ஒரு விந்தை. இத்தனைக்கும், என்னுடைய மனதில் உள்ள ஆதங்கம், என்னுடைய கோபம் எதையும் என் திறன்பேசியிடம் சொல்லவில்லை

ஓடும் நதி.. உதவாக்  கரை..

முக்தா அப்பாவின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது அது அதனதன் இடத்தில் – தாத்தாவின் உபதேசமென அப்பா பல முறை சொன்னது.  அப்படியேதான் இருந்தது. இருட்டில் கூட வந்து எடுக்கலாம்.  டைரியின் நடுவே  இருந்த ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்து முக்தா படிப்பதை பூரணி பார்த்துக் கொண்டிருந்த்தாள். ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான காகிதங்கள் அப்பாவின் கையெழுத்துடன். 

அரிதாரம் பூசும் கனகம்

ஆனிப்பொன் பெட்டகத்தை
“தகரம்” என்று
எப்படியோ
நம்ப வைத்து விடுகிறார்கள்
பழைய இரும்புத்தகரத்திற்கு
பேரீச்சம்பழம் விற்பவர்கள்!

மெடிக்கேர் (Medicare) 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூட்டாட்சி சுகாதாரக் காப்பீடு

This entry is part 27 of 16 in the series பொது நலம்

1960களின் நடுப்பகுதியில், அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பான்மையினருக்கு தனியார் சுகாதாரக் காப்பீடு கிடைப்பது கடினமாக இருந்தது — வயதான பின் நோய் அபாயம் அதிகரிப்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களைத் தவிர்த்தன அல்லது மிக அதிக பிரீமியம் கோரின. இந்த இடைவெளியை நிரப்ப, 1965-இல் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன்(Lyndon B. Johnson) இன் கீழ் மெடிக்கேர் சட்டமாக்கப்பட்டது. முதியோர்களின் மருத்துவச் செலவை ஈடுசெய்வதோடு, தனியார் சந்தையில் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பாரத்தையும் குறைப்பதே அதன் நோக்கம்.

ஒரு மண்ணின் நினைவுகளும், ஒரு சமூகத்தின் ஆன்மாவும்

இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைக் கதாபாத்திரங்களாக இல்லை. சமூகத்தின் இயக்க சக்திகளாக இருக்கிறார்கள். உண்ணிமாயா, கொழும்பிலிருந்து பொருளாதார வசதியுடன் வரும் கொழுந்தனை விரும்பி, அதே மனிதன் வேலை இழந்து வறுமையுடன் திரும்பியபோது ஒரு கிழிந்த பாயை மட்டும் கொடுத்து ஒதுக்கும் காட்சி, மனித உறவுகளில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.