தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது

புறவயமாக நமக்குத் தென்படும் உலகம் என்று ஒன்று இருக்கிறது அகமுகமாக நம்முள் ஒரு இயக்கம் இருக்கிறது. செயல்படு கருவிகளும், உணர்தல் தன்மை உள்ள கருவிகளும் மனிதனிடத்தே இருக்கின்றன. அக்கருவிகளும் கூட கண்கள் அறியாத ஒரு செயலை அல்லது செயல்களை நம் உள்ளே நடத்துகின்றன. முன்னொரு காலத்தில் அறிதல் என்பது “தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது”

இயல் விருது அனுபவங்கள் – 2025

இலக்கியம் பலவீனமானது. அன்றாட லௌகீக நோக்கத்திற்கு பைசா பிரயோசனமில்லை. அது எங்களுக்கு உணவளிக்கவோ அல்லது தங்க மாளிகையில் ஆபரணம் வாங்கவோ உதவாது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலொழிய உங்களை வளப்படுத்தாது. ஆனால் மனிதகுலத்தின் எந்தவொரு கலாச்சார முயற்சியும் இருந்ததைப் போலவே இலக்கியமும் அழியாமைக்கு நெருக்கமாக உள்ளது.

சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்

ஷாஹ் இனாயத்தின் தியாகத்துக்கு 305 ஆண்டுகள் கடந்துவிட்ட இக்காலப்பகுதியில், சமூக நீதிக்காவும், தீவிர ஜனநாயகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த மண்ணின் மைந்தன் ஷாஹ் இனாயத்தின் மரபுகளை இன்றைய 21 ம் நூற்றாண்டின் இந்திய-பாகிஸ்தானிய புதிய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்கும், புத்துயிரூட்டுவதற்குமான முயற்சியாக இந்தக் கட்டுரை அமைகிறது. 

நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

கற்பனையோ இல்லையோ,  காலம் கடப்பதையோ ஓடுவதையோ ஒழுகிச் செல்வதையோ எப்படி விளக்குவது? காலம் கடப்பதை நாம் நன்றாகவே அறிகிறோம். நமது சிந்தனைகளும் பேச்சும் காலத்தில் தான் இருக்கின்றன. மொழியின் அடிப்படை கட்டமைப்பே காலத்தைச் சார்ந்தது – ஒரு பொருள் இருக்கிறது – இருந்தது –  இருக்கலாம் . பொருட்களோ வண்ணங்களோ,  ஏன் வெளியோ இல்லாமல்  கற்பனை செய்ய முடியும்‌ பிரபஞ்சத்தினை காலம் இல்லாமல் கற்பனை செய்வது மிகவும் கடினமானது.

கருஞ்சாந்து நிற ஆற்றலாளர்கள்

ஈரம் கசியாத, சுகாதாரப் பட்டியுடன், அணையாடையும் இருக்கும், பெண்கள் பாதுகாப்பாக சங்கடமில்லாமல் உணரும். ‘அட்ஜெஸ்டபில் பெல்ட்டை’ இவர் வடிவமைத்தார். முதலில் இந்த சாதனத்தை வரவேற்ற ஒரு குழுமம், இவர் ஒரு கறுப்பினத்தவர் என்று அறிய வந்ததும் சந்தைப் படுத்த மறுத்து விட்டது. காப்புரிமைக் காலம் முடிந்து விட, எவரும் இந்த சாதனத்தை வடிவமைக்கலாம், சந்தைப் படுத்தலாம் என்ற விதி முறையின் படி, இவரது இந்தக் கண்டுபிடிப்பு, இவருக்கு அழியாப் புகழை தந்ததே தவிர, பணம் தரவில்லை.

அறிவியல் கொள்கைகளுள் அழகானது

ஜூரிச் (Zurich) பல்கலையில் சேர்ந்த பிறகு, இயற்பியல் கல்வியில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 1905ம் ஆண்டில்,அக்காலத்தின் முதன்மையான அறிவியல் இதழான Annalen der Physikக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பினார். அந்த ஒவ்வொரு கட்டுரையும் நோபல் பரிசு பெறும் தகுதி கொண்டது. முதல் கட்டுரை பொருட்களில் அணுக்கள் இருப்பதை உறுதியாக விளக்கியது.

நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்?

இன்றைய உருவத்தை அடைவதற்கு முன்னரும்கூட அட்டவணைகள் ‘ஒத்திசைவுகளும், வேறுபாடுகளும்’ கொண்டு பயன்பாட்டில் இருந்தன. பக்கங்களில் எண்கள் அச்சிடப்படத் தொடங்கிய காலத்தில் இவைகள் ஒரு நிலைப்பை அடைந்தன.

காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம்

சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் தெருக்களில் கயோட்டி ஓநாய்கள் ஓடின. அமெரிக்கக் கோமான்கள் புழங்கும் மார்த்தாஸ் வைன்யார்ட் என்ற ஊரில் வான்கோழிகள் காலியான வீடுகளின் கூரைகளைப் பிடித்துக் கொண்டன, விளைவு தெருக்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிஸ் நகரில் பெருங்கொம்புள்ள கலை மான்கள் நிழற்சாலைகளில் உலாப் போயின, துருக்கியில் மாநகரப் புறநகர்களில் காட்டுப் பன்றிகள் கூட்டங்களாக படையெடுத்தன. ஆஸ்த்ரேலியாவின் அடலெய்ட் மாநகரில் கங்காருகள் நகர் மையத்தில் குதித்தோடிக் கொண்டிருந்தன. வேல்ஸ் மாநிலத்தில் காட்டுச் செம்மறி ஆடுகள் கிராமப் புறங்களில் எங்கும் ஓடின. சிலே நாட்டின் சாண்டியாகோ நகர மையத்தில் சிறுத்தைகள் உலவின.

பய வியாபாரியா ஹிட்ச்காக்?

அவருடைய மிக விரிவான நினைவுகள்… எல்லாம் பயம் பற்றியவை. இந்த எரிபொருளை நம்பித்தான் அனைத்தையும் நசுக்கி ஓடும் ஹிட்ச்காக் வாகனம் ஓடியது. அவர் கிட்டத்தட்ட எதைப் பார்த்தாலும் தான் அச்சமடைவதாகச் சொல்லிக் கொண்டார்: பொலீஸ்காரர்கள், புது மனிதர்கள், காரோட்டுவது, தனிமை, கூட்டங்கள், உயரங்கள், தண்ணீர், மேலும் எந்த வகை மோதலும்.