சுழியமே காரணம், அதன் காரணியமே ஒன்று. சுழியம் எனும் சாரமற்ற ரூபம், ஒன்று அதன் நாமம். சட்டென அலுவலகத்தில் கண்முன் இருந்த கணினிகளெல்லாம் சுழியங்களும் ஒன்றுகளும் சேர்ந்த நாமரூபங்களின் தொகுப்பாகத் தெரிந்தது. அலுவலகத் தோழர்களும் அவ்வாறே தோன்றினர். ’அது’ சாரமற்றதெனில் அதனைக் காணும், உணரும், உற்றறியும், ’இது’?
Category: கட்டுரை
சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!
நம் பெற்றோருக்கு வயது கூடக் கூட அவர்களின் தேவை ஒரே மாதிரியாகவும், இதுதான் என்று எதிர்பார்க்கக்கூடியவையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தேவைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் வாழ்வுமுறைகளில் நாம் பெரும் சமரசத்தைச் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, நம்மைப் பல விதங்களில் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
அசோகமித்திரனின் கதையுலகம்
மகத்தான ஆக்கங்களில் பொங்கியெழும் அறச்சீற்றமாகவும், மானுடர் மேல் கொண்ட கருணையாகவும் வெளிப்படும் அதே கனிவு மறுபுறம் அவர்கள் கொண்ட துயராகவும் அதன் விளைவான கசப்பாகவும் கூட வெளிபடக்கூடும் என்கிறார். இருத்தலியல் காலத்தில் எழுதப்பெற்ற பல படைப்புகள் இன்று காலாவதியாகிப் போய்விட்டாலும் கூட, இன்றளவும் அசோகமித்திரனின் கதைகள் நமக்கு நெருக்கமாக இருப்பதன் காரணம் அவர் கதைகளில் அத்தனை கதாப்பாத்திரங்களின் ஊடாகவும் வெளிப்படும் அவரது கனிவுதான்!
ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
இந்த சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம், உள்ளூர் சந்தையில் உருளைக்கிழங்கை விற்றுக்கொண்டிருந்த விவசாயிகளின் வருமானத்தை 75% அதிகரித்தது. இது இந்திய விவசாயிகளின் வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், இந்திய உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனங்களின் விதியையும், தரத்தையும் மாற்றி அமைத்து, 2017-ம் ஆண்டு முதல் உலகெங்கும் உருளைக்கிழங்குகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவை மாற்றியது.
நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் – 1
ஆனால், நிஜ உலகில் இயந்திர அழிவு என்பது மாறுதலாகத்தான் இருக்கும். போல்ஷெவிக் சதிக்குப் பிறகு, ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரை நினைவில் கொள்ளுங்கள். கடைசி முடியரசான ரோமனாவ் 30 பகுதிகளாகச் சிதறுண்டது; மன்னரும், சுற்றமும், உற்றமும் கொல்லப்பட்டனர்; பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அயல் இராணுவம் இந்தப் போரில் உட்புகுந்தது; இந்தப் போர் தொடர்ந்த 3-5 வருடங்களில், 10 மில்லியன் மக்கள், இந்தச் சண்டை சிக்கலினால் இறந்தார்கள்.
கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.
பாயும் குதிரை
இந்த சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரையின் பெயர் சாலீ கார்டனர் (Sallie Gardner). அன்று லீலன்ட் ஸ்டான்போர்ட் மற்றும் அவரது நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த பாலோ ஆல்டோ (Palo Alto) பண்ணையில் கூடியிருந்தனர். ஓடு தளத்தின் ஒரு முனையில் குதிரை சாலீ நின்றுகொண்டிருந்தது. உத்திரவு கிடைத்தவுடன் சாலீ பாய்ந்து ஓடியது. சாலீயின் குளம்பொலியும், காமிராக்களின் ஷட்டர் ஒலியும் படபடத்தது போலவே பார்வையாளர்களின் இதயங்களும் படபடத்தன.
சக்கர வியூகம்
பழக்க வழக்கங்களை எதிர்பார்த்திராத வகைமைகளில் மாற்றும் (தென் கொரியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு). பல்லாயிரக்கணக்கான உபகரணங்கள் சாதாரண மக்களின் கரங்களிலும் இருக்கிறது/ பணம் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் ஆகியோரின் கைகளிலும் இருக்கிறது. எனவே, தரவுகள் பெறுவதோ, அதை அலசுவதோ, அதன் மூலம் விரும்பும் ஒரு கருத்தைப் பரப்புவதோ, அதை நம்பச் செய்வதோ, அதன்படி கட்டுப்படுத்துவதோ இயல்பாக, நாம் அறியா வண்ணம் நடை பெற்றுக் கொண்டேயிருப்பதால், கணக்கீடுகளும், உயிர் கூட்டமான மனிதர்களும் இணைந்து ஒரு சைபர்னேடிக்ஸ் அமைப்பாக நாம் வடிவெடுத்து வருகிறோம்.
இராணுவ உடையில் ஒரு கூலிப்படை
பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள்.
2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு
நம் வளர்ச்சியின் ரகசியம் 2025 ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நாடுகளின் வளர்ச்சியைத் தாங்குகிறது என்பதை கணித மாதிரிகளால் விளக்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இவை வெறும் கோட்பாடுகள் அல்ல – நமது அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் எல்லாவற்றையும் பாதிக்கும் உண்மையான மாற்றங்கள்! “2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு”
ஃபுகு – மரணத்தின் சுவை
ஃபுகு உணவு மிக அதிக விலைகொண்டதாக இருக்கக் காரணம் அதைத் தயாரிக்கும் வழிமுறைகளும் அதன் பிரத்யேக சுவையும்தான். ஒரு கிலோ ஃபுகு 7-லிருந்து 10 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டிருக்கிறது. ஃபுகு அப்படியே பச்சையாகவும், சமைத்தும், ஆவியில் வேகவைத்தும், வாட்டியும், புகைத்தும், வறுக்கப்பட்டும், பொறிக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. ஃபுகுவின் சதை மட்டுமல்லால் அதன் துடுப்புகளும் வாலும் விரும்பி உண்ணப்படுகிறது.
2025 அமைதிக்கான நோபல் பரிசு
சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் “2025 அமைதிக்கான நோபல் பரிசு”
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025
இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்புகள் அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெறும். அனைத்து பரிசு அறிவிப்புகளும் தமிழில் இங்கே — சொல்வனம் — தளத்தில் பகிரப்படும். பரிசுகள் குறித்த விரிவான தகவல்களும் இங்கே சொல்வனத்தில் வெளியிடப்படும். நமது உடலை ஒரு பரபரப்பான நகரமாக கருதுவோம். அங்கு “உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025”
மூலமும் உரைகளும்
வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.
சால்மோனெல்லோசிஸ்
சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.
உண்மையைத் தேடி
ன் புரிதல்கள், நம்பிக்கைகள், இவற்றை அவன் சரி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே? அவன் சிந்தனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சீரற்ற குணத்தை சாதியா வெறுக்கிறாரோ, அதை நேர்மை என நான் உணர்கிறேன். கீழ்ப்படிதல் என்பது சிறந்த குணம் என்று மதங்கள் சொல்லக்கூடும்-ஆனால், அது அறிவுத் துறைக்குப் பொருந்துமா? ஏதோ ‘வெளிப்பாடுகளினால்/ உபதேசங்களால்’ சிந்தனை முன்னேறாது-அது கடவுளிடமிருந்து வந்தாலும், அது உனக்கு ஆன்ம விடுதலை தருவேன் என்று உறுதி கூறினாலும்.
நீலமலையில் வாழ்பவனே……..!- சாலபேகா – ஒடியா கவிஞர்
அவ்வாறே ரத யாத்திரையின்போது, ஜகந்நாதர், பலபத்ரா, சுபத்ரா ஆகியோரின் தேர்கள் சாலபேகாவின் குடிசையின் முன்பு நின்றுவிட்டன. அங்கிருந்து நகரவேயில்லை. சாலபேகா வந்து தேர்க்கயிறுகளைத் தானே இழுத்தபின்னரே அவை அங்கிருந்து நகர்ந்தன. அவனுடைய தாய் லலிதா இறந்தபின்னர் கோவில் பூசாரிகள் அவளை இந்துமுறையில் தகனம் செய்யவும் அனுமதி மறுத்தனர்.
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!
செத்ததற்குப் பின்னர் கடற்கரையில் ஐந்து ஏக்கர் நிலமும் சமாதியும் அழகிய மணிமண்டபமும் கேட்கவில்லை. பலான நடிகையுடன் ஓரிரவு படுத்து எழுந்துவர வேண்டவில்லை. பசிபிக் மகா சமுத்திரத்தில் இருநூறு ஏக்கர் பரப்புள்ள தீவும் ஆங்கோர் மாளிகையும் விசைப்படகும் கணிகையரும் சொந்த விமானமும் கேட்கவில்லை. சில லட்சம் கோடிகள் சொத்துக் கேட்கவில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரும்பினார் இல்லை
தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!
அகந்தையை அழிக்க வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமையை அனைத்துப் பெரிய மகான்களிடமும் காண்கிறோம். குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் சொல்கிறார்: அகந்தை என்பது கிழங்குபோல மானிடர்கள் உள்ளத்தில் வேரோடிக் கிடக்கிறதாம். இந்தனை அகழ்ந்து எடுத்துப் பிடுங்கிக் களைபவர்கள் உள்ளத்தில் மீனாட்சியம்மை விளக்காக ஒளி வீசுகிறாள் என்பார்.
கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை
என்னைத் தடுப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. ஆயினும் ஆழ்மனத்தில் எங்கோ அந்தத் தாத்தாவுக்கு உதவி செய்யவேண்டும் போல இருந்தது. ஏதோ ஒரு சாயலில் அவர் என் தாத்தாவின் தோற்றத்தைக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் பேனா முனையையும் அவர் கண்களையும் சில கணங்கள் நான் மாறிமாறிப் பார்த்தேன்.
புளித்த முட்டைக்கோஸ்
நொதித்தலில் லேக்டோபேசில்லஸ் உள்ளிட்ட ஏராளமான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உருவாவதால் இதை ஒரு Probiotics ஆக உபயோகிக்கலாம். நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும், ஜீரணசக்தியை மேம்படுத்தவும் இது வெகுவாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே, இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் சத்து நிறைந்திருக்கிறது.
உணவாகும் எச்சில்!
அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. சின்ன உழவாரப்பறவைகள் (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின. மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின் புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.
கே. சிவாரெட்டி
பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.
வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக் கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன.
வயதுக்கேற்ற கல்வி முறை
இந்த வயதில் மாணவர்கள் சிக்கலான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். மீராவின் கதையில் வெளிப்படுவது போல, அவர்கள் சவாலான சூழ்நிலைகளில் உதவக்கூடிய தனிப்பட்ட பலங்களையும் வளங்களையும் அடையாளம் காணுகிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
அகாவே
மிக ஆக்ரோஷமாகக் கடிக்கும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க உடலெங்கும் பன்றிக்கொழுப்பை பூசியபின்னர் தங்கள் பாதங்களைப் பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளும் இவர்கள் கற்றாழையின் வேருக்கடியில் செல்லும் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து கூட்டை கண்டுபிடிப்பார்கள். கரண்டி போன்ற ஒரு கம்பியால் மண்ணைத் தோண்டி கூட்டைப் பார்த்ததும் எறும்புக்கூட்டின் மேல்மண்ணை மண்வெட்டியால் மெல்லத்தட்டி உதிர்ப்பார்கள்.
வளரிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்
இந்தப் பிரிவினரில் எவருடனாவது தாங்கள் சார்ந்திருக்கவில்லை என வளரிளம்பருவத்தினர் உணரும்போது குறிப்பிட்ட அந்தப் பிரிவினரின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்படுவார்கள். அந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் விரும்பும்வகையில் எதிர்வினைகள் கிடைக்காதபோது, தங்களிடமும் அதிகாரம் இருக்கிறது எனக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அது பெற்றோருடனும் ஆசிரியர்களுடனுமான அதிகார மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது.
போய்
போய் உணவு தயாரிப்பது மிக மிக எளிது. சேம்புக்கிழங்கு சுத்தமாக்கப்பட்டு நீராவியில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் தோல் நீக்கி சுத்தமாக்கப்பட்டு, மென்மையாகிவிட்டிருக்கும் கிழங்குகள் மரத்தொட்டி அல்லது கல்தொட்டிகளில் சிறிதளவு நீர் விட்டு பசையாக அரைக்கப்பட்டு சற்று இனிப்பாக இருக்கையில் அப்போதே உண்ணப்படுகின்றன அல்லது சிறிதுநாட்கள் நொதிக்க வைக்கபட்டு புளிப்புச்சுவையுடன் உண்ணப்படுகின்றன.
சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
நேர்மறையான பள்ளி சூழல் சமூக உணர்ச்சி கற்றலுக்கான அடித்தளமாக செயல்படுகிறது. பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் மாணவர்கள் தங்கள் புதிய திறன்களை தயக்கமின்றி பயிற்சி செய்ய முடிகிறது. தவறுகள் செய்து அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், ஆதரவான உறவுகளின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.
பாங்சி (Banksy) யார்?
இரண்டாம் பிரிவினர் விசித்திரமானவர்கள் , மர்மமானவர்கள். இப்பிரிவினர் எக்காரணத்திற்கும் தங்கள் நிஜ அறிமுகத்தைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தனிமைக்கும் ஆக்க சுதந்திரத்திற்கும் சுய அறிமுகம் பாதமாக அமைந்துவிடக்கூடாதென நினைப்பவர்கள். புகழின் பின் விளைவுகளை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது அதை வரம்பிக்க விரும்புவார்கள். பிரபல தமிழ் இலக்கிய ஆளுமை ‘பேயோன்’ , “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” எனச் சொல்வதில் வாசகர்களுடன் கண்ணாமூச்சி ஆடுவதில் விருப்பமில்லாதவர் என்பது தெளிவாகிறது.
தடுமாற்றத்தின் குரல்
ஒரு கால கட்டத்தின் கதைகளை எழுதத் தொடங்கி, என்றைக்குமான பிரச்சனைகள் சிலவற்றைத் தொட்டுச் செல்வதால் ஆதவன் ஒரு முக்கியமான எழுத்தாளர் ஆகிறார். ஆனாலும், பல சமயங்களில் ஆதவன் சிறு சிறு விஷயங்களிலேயே முட்டி மோதி கொண்டிருப்பதாக படுகிறது. பல நுட்பமான விஷயங்களைத் தொட்டு சென்றவர், ஒரு பெரிய தீர்வை நோக்கி சென்றதாக தெரியவில்லை. ஒருவேளை மனிதனின் வெவ்வேறு பாவனைகளை அப்படியே பதிவு செய்தாலே போதுமானதென்று அவர் நின்று விட்டது போல தெரிகிறது.
ஸாம்பா
புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அந்த வாளியிலிருந்து கொஞ்சம் ஸாம்பாவை எடுத்து காற்றில் மூன்று முறை சுண்டி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் ஸாம்பாவை வாயிலிட்டுச் சுவைத்த பின்னர் ‘’தாஷி டெலெக்’’ ( Tashi delek.) என்று உரக்கச் சொல்லி ஆசியளிப்பார்கள். ’’தாஷி’’ என்றால் நல்ல விஷயங்கள் ’’டெலெக்’’ என்றால் ’’ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ’’என்று பொருள்
சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
ஒவ்வொரு மாணவனின் திறமையையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும் பாராட்ட வேண்டும். நம் வகுப்பில் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவர்கள் இருக்கலாம். ஒருவர் கிராமத்து பின்னணி, இன்னொருவர் நகர பின்னணி என்று இருக்கலாம். ஒருவர் வீட்டில் தமிழ் பேசுவார், இன்னொருவர் தெலுங்கு அல்லது இந்தி பேசுவார். இந்த வேறுபாடுகளை பலவீனம் என்று நினைக்காமல், அது ஒவ்வொருவருடைய தனித்துவம் என்று பாவித்து, அவற்றைப் பாராட்ட வேண்டும்.
9. ஒருங்கிணைப்பின் வழியே
அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்
நியூயார்க் நகரில் அரசியல் பரிணாமமா?
மம்தானியின் திட்டமோ செல்வந்தர்கள், பெரும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பது. நியூயார்க் நகரம் தனியாக வரிகளை உயர்த்த முடியாது. மாநில சட்டமன்ற ஒப்புதல் தேவை. இதற்குப் பணக்காரர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். செல்வந்தர்களின் தயவில் ஆட்சி நடக்கும் அமெரிக்காவில் இது சாத்தியமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!
யானை – மனிதன் வாழ்வுராய்வின் இலக்கணம்
நேற்று இரண்டு யானைகள் துண்டுச் சோலைக்குள் இருந்தன. மாலை வெளியே வரும் என எதிர்பார்த்தேன், வரவில்லை. காலை வெளியே வந்து தோட்டத்திற்குள் சென்று அடுத்த மலைமேட்டைக் கடந்து சென்றிருப்பதற்கான காலடித் தடங்களோ, உடைந்த மரக்கிளைகளோ எதுவும் காணவில்லை. கண்டிப்பாக இரண்டு யானைகளும் இப்பொழுதும் சோலைக்குள் தான் இருக்க வேண்டும். வெளியே வருவதென்றால் காலை 6, 7 மணிக்குள் வெளியே வந்திருக்கவேண்டும், அப்படித் தெரியவில்லை.
எழுச்சியா? கலகமா?
ஆவணமற்றவர்கள் மீதான நடவடிக்கை என்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த லத்தீன் இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என்று பலரையும் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து அவர்கள் இருக்குமிடத்தையும் குடும்பத்திற்குத் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். அதைத்தொடர்ந்து சாலைகளை ஆக்கிரமித்து ICE மற்றும் LAPD உடன் லத்தீன் சமூக மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பெல்லடோனா
நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள் மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை. அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும் பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன.
குகே வா தியாங்கோ
தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது.
7. மூன்றே பொருளாய் முடிந்தது
சித்த மருத்துவம் என்று குறிப்பாகவோ, இல்லை காலத்தை தெளிவாக குறிக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி முடிவுகளோ, இலக்கிய குறிப்புகளோ கிடைப்பதில்லை. மாறாக, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் விடுத்த காதையில், “ஆயுர்வேதரும் காலக்கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்ற குறிப்பு காணப்படுகிறது. காவிரிபூம்பட்டினத்தில் காலத்தைக் கணிப்பவருக்கும், ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தனித்தனி தெருக்கள் இருந்ததாக தெரியவருகிறது.
இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
ஆனால், அறிமுகம் செய்து பல கலாசார வேறுபாடுகளை உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. மாறுபட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்தக் குடும்பத்தில், சமூகத்தில், வகுப்பில் சேர்ந்தவர்களாக உணர்வதும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிலாங்கிங்’ என்கிறார்கள். இதன் பொருள் “நான் இங்கே சொந்தமானவன், என் தேவை இங்கே அவசியம், என் கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது” என்ற உணர்வு.
பெட்டைப் புலம்பல்
ஆனால் உருகி இறைஞ்சி இரந்து நின்ற ஒரு மகாகவிக்கு, அவன் கேட்ட எதுவும் தரவில்லை பராசக்தி. அஃதோர் வரலாற்றுச் சோகம். குறைந்தபட்சம் மேலும் சில பத்தாண்டுகள் ஆயுள் தந்திருக்கலாம் பராசக்தி. துஷ்ட நிக்ரகம், இஷ்ட பரிபாலனம் என்பர் பண்டு. இன்று இஷ்ட நிக்ரகம், துஷ்ட பரிபாலனம் ஆகிப்போயிற்று
பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. மாணவர்கள், இளம் வயதினர்களை உணர்ச்சியால் எடுக்கும் முடிவின் பின்விளைவுகள், மாறுபட்டு எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியிலிட்டுக் காட்டி சிந்திக்க கற்றுத் தர வேண்டும். நல்லது என்ன அல்லது என்ன அவர்களே புரிந்து கொள்வார்கள்.
கலைச் செல்வம் சேர்க்கும் பணியில் ஒரு கை
இரண்டாவதாக, நான் கவனப்படுத்த எண்ணியது தமிழில் நாடகங்களின் நிலையைப் பற்றி. தமிழில் நவீன நாடகங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிகச் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி, நெருக்கமான இளம் நண்பராக வாய்த்திருக்கும் விக்னேஷ் ஹரிஹரன் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆழமான வாசிப்புக்கும் தேடலுக்கும் பிறகு தீவிரமான கேள்விகளை எழுப்பும் விதமாக இந்தக் கட்டுரையை தந்திருக்கிறார் விக்னேஷ்.
ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்
மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல, அது ஒரு பண்பாட்டு பரிமாற்றம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலின் வாயிலாக நாம் புதிய உலகங்களை கண்டுபிடிக்கிறோம்; புதிய யூகங்களை அணுகுகிறோம்;புதிய மனிதர்களை அறிந்தும் புரிந்தும் கொள்கிறோம்.
தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்
எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது.
ஒதுங்குதல்
உறவுகள் சூழ வாழ்கிறார். ஆனால், உண்மையில் அவர் தனியன்தான். எப்படி? கதை தொடங்குவதே ஒரு தற்காப்புடன்தான்! ஒரு பழைய தோழி சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததும், “நான் இல்லைன்னு சொல்லிடுமா” என்று கூறி மாடி அறைக்குள் விரைந்து கதவைத் தாழிட்டுக் கொள்கிறார்.
தன்னைத் தெரிந்து கொள்ளல்
ஒரு பொருளை மற்றொரு குழந்தையிடமிருந்து மாணவர் பறித்தபோது, அந்தச் செயலால் மற்ற குழந்தை எப்படி வருத்தமடைந்தது என்பதை விளக்குதல். “அவர் எப்படி உணர்ந்திருப்பார்? ஏன் அவர் அழுதார்?” போன்ற கேள்விகள் மூலம் விளக்குதல்.
