சந்திரனில் முதல் மனிதனை இறக்குவது என்பது இப்பொழுது பிரச்னை அல்ல, அகண்ட வெளியில் ஆங்காங்கு ‘ஸ்பேஸ் நிலையங்கள்’ நிறுவி, இன்னும் பல வெற்றிகளைக் காண வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளுடைய லட்சியம். சந்திரனுக்கு அப்பால் செவ்வாய் சுற்றிவர இரண்டு ‘மாரினர்கள்’ அனுப்ப திட்டம் வகுத்திருக்கிறார்கள். செவ்வாயில் ஒரு வகையான தாவர உயிர் வர்க்கம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். செவ்வாயின் சுற்றளவும் பூமியில் பாதி. அதன் புவியிர்ப்பு சக்தி பூமியைக் காட்டிலும் மிகவும் குறைவு. பூமியில் ஆறடி உயரம் தாண்ட முடிந்தவன், செவ்வாயில் 16 அடி தாண்டலாம். பூமியில் 220 பவுண்டு எடை உள்ளவன், செவ்வாயில் 80 பவுண்டுதான் இருப்பான். செவ்வாயில் சராசரி சீதோஷ்ண நிலை எப்பொழுதும் பூஜ்யத்துக்குக் கீழேதான் இருக்கும்.
Category: இதழ்
காலம் வென்ற கவிஞர்கள்
வியக்கத்தக்க செயல் புரியும் எவரைப் பற்றியும் கற்பனைக் கதைகளும் கருத்துக்களும் எழுவது இயல்புதான் என்பது உலக வரலாற்றுச் செய்தி. நம்நாட்டிலும் காளிதாசனைப் பற்றியும், கம்பனைப் பற்றியும் எத்தனை கட்டுக்கதைகள் உள்ளன! மேல் நாடுகளில் அதீத கற்பனையில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், ஷேக்ஸ்பியர் நாடகங்களை இன்னொருவர் எழுதியிருக்கக் கூடுமென்று கூறுகிறார்கள்; அதீத கற்பனைகள் நிறைந்த நம்நாட்டில் கல்வியறிவில்லாத காளிதாசனுக்குக் காளியின் அருள் கிடைத்ததென்று கூறுகிறோம்.
றெக்கை – அத்தியாயம் 24
மாயா என்ற மாயசண்டிகை, விஞ்சையர் பூமியிலிருந்து வந்தவளாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பேரிளம்பெண் . நிறைசூலியாக இங்கே வந்தாள். முத்தச்சன் பார்வையில் அவள் படாமலே இருந்திருக்கலாம். அவளை முத்தச்சன் எனக்கு பரிச்சயப்படுத்தாமலேயே போயிருக்கலாம். ஈன்று புறம் போடுதல் மட்டும் என் தலைக் கடனே என்று அவள் பிரசவித்து இருக்கலாம்.பிறப்பிலேயே ரெண்டு வயசுக் குழந்தை உயரத்தால் நாலு வயசுக்காரனாக இறக்கை கட்டிப் பறக்காமல் இருக்கலாம்.கூடவே ஆறு வயதில், றெக்கை அடர்ந்து எட்டு வயதுக்கான உயரத்தோடு அவன் சகோதரியையும் மாயசண்டிகை என்னிடம் ரெண்டு நாள் மட்டும் ஒப்படைக்காமல் இருக்கலாம். திருவள்ளுவர் மஹரிஷி சொன்ன மாதிரி, யாதனில் யாதனில் நீங்கியான் நோதல் அதனில் அதனில் இலன்,
கன்னித்தீவு
கொலம்பஸ் காலடி பட்ட 30 வருடங்களிலேயே, அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது. ஐரோப்பியர்களால் அறிமுகமான, அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத, அம்மை (Smallpox) போன்ற நோய்களாலும், கட்டாயப்படுத்தப்பட்டுத் தங்கச் சுரங்கம் தோண்டுவது உள்ளிட்ட பலவிதமான கடின உழைப்புகளாலும், விவசாய வேலைகள் தடைப்பட்டு, ‘குடும்பம்’ என்னும் அமைப்பு உடைந்து, விளைச்சல் குறைந்து, உடல் நலிந்து, ஸ்பானிஷ் படையெடுப்பை எதிர்க்கும் திராணியற்றுப் பலரும் மடிந்தனர்.
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
இறைவனே பிரபஞ்சப் படைப்புக்கு நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறார் என்ற இந்த கருத்தை துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதப் பள்ளிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவற்றுக்கும், அத்வைத வேதாந்தத்துக்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு இருக்கின்றது. பிற பள்ளிகள் இறைவனே இந்த உலகமாக மாற்றமடைந்து நிற்கின்றார் என்று கொள்கின்றன. அதாவது எப்படி பால் உறைந்து தயிராக மாறுகின்றதோ அதுபோல இறைவனே பரிணாமமடைந்து இவ்வுலகமாக மாறி நிற்கின்றார் என்பது அவர்களது கருத்து. அதாவது இறைவனை அவர்கள் “பரிணாமி உபாதான காரணம்” என்கின்றனர்.
பைரஸி
தன் தந்தையின் மரணத்திற்குப்பின் இத்தாலிக்குச் சென்றார் கிறிஸ்டியன் பாக். தொடர்ந்து இசை பயின்றார். ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக இருந்த அவர் கத்தோலிக்கராக மாறினார். இத்தாலிய பாணி ஆபரா நிகழ்ச்சிகளை நடத்தினார். மிலன் நகரில் புகழ் பெற்றார். அன்றைய இத்தாலி அவரைப் போன்ற பல திறமையான இசைக் கலைஞர்களைப் பெற்றிருந்தது. தேவாலயங்கள், அரசவைகளில் இசைக்கலைஞர் பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவியது. கிறிஸ்டியன் பாக், லண்டன் நகரம் வழங்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.
பாளையக்காரரும் பறங்கியரும்
ஒரு வினாடி என் கண் முன்னே கி ரா வின் கோபல்ல கிராமத்து மக்கள் தோன்றி மறைந்தனர். நான் நிற்கும் கரிசல் பூமியில் அவர்களின் நினைவு எப்படி வராமல் போகும். ஐந்து கொட்டை பாக்குகளையும், அரை கட்டு வெற்றிலையும், வெள்ளை புகையிலையும் சேர்த்து வாயில் குதப்பும் கோவிந்தப்ப நாயக்கரும்; கருப்பட்டியும் தயிரும் மட்டும் உண்டு, சுவற்றில் சாய்ந்தவாறே கோபல்ல கிராமத்தின் கதை சொல்லும் மங்கத்தாயாரு அம்மாளும், எங்கோ பக்கத்தில் தான் இருப்பார்கள் என்று தோன்றியது.
பாறை, பனி, பனியாறு பகரும் காலங்களின் வரலாறு
ஹைதராபாதின் பண்டைய பாறைகள் பூமியின் ஆழ்ந்த காலத்தைப் பேசுகின்றன. இமயமலையில் வீற்றிருக்கும் லதாக் மலைகள் கண்டங்கள் மோதிய கதையைக் கூறுகின்றன. கீனாய் ஃபியோர்ட்ஸ் அதில் இன்னொரு அத்தியாயத்தைச் சேர்க்கிறது. மெதுவாக நகரும் பனிப்பாறைகள், மலைகளைச் செதுக்கும் பொறுமையிலும், நீரைச் சேமிக்கும் கருணையிலும், ஒளியையே நீலமாக மாற்றும் அற்புதத்திலும், புவியியல், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று தங்கள் திறனை வெளிப்படுத்துகின்றன!
சுய-நாடுகடத்தல், அரிராங் மற்றும் அக நெருக்கடி
கிம் கி-துக்கின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பது என்பது, இன்னும் அரிய தீவிரமும் உண்மையான அழகும் கொண்ட தூய சினிமாவை எதிர்கொள்வதாகும். அந்தச் சந்திப்பை நாம் நேர்மையுடன் நிகழ்த்த வேண்டும் என்றால், நாம் இப்போது அறிந்தவற்றின் முழு எடையையும் தார்மீகப் பொறுப்பையும் அதற்குள் கொண்டு வர வேண்டும். அதன் உருவாக்கச் சூழல்கள், அந்தப் படைப்புகளுக்காகப் பேச முடியாத அல்லது பேச அனுமதிக்கப்படாத விளிம்புநிலை பெண்கள்/மனிதர்கள் கொடுத்த விலை, மற்றும் யாருடைய மௌனத்தை நாம் திரையில் அழகாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பவற்றை நாம் உணர்ந்தாக வேண்டும்
வரலாறு மறக்காத நட்பு: வாஷிங்டனும் லஃபாயெட்டும்
1783ல் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் பிரிட்டன் அமெரிக்காவை முறையாக அங்கீகரிப்பதற்கு முன்பு, பல ஆண்டுகள் கடுமையான போர்கள் தொடர்ந்தன. போர்க்களங்களில் லஃபாயெட்டின் தலைமைத்துவம், ஜார்ஜ் வாஷிங்டனுடனான அவரது நெருங்கிய கூட்டாண்மை, ஃபிரெஞ்சு அரசின் ஆதரவை வலுப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றி ஆகியவை அமெரிக்கச் சுதந்திரக் கனவை நனவாக்க உதவின. அவரது சேவையைப் பாராட்டி, காங்கிரஸ் அவருக்குத் தாராளமான நிதி விருதையும் பொது நிலத்தையும் வழங்கி கௌரவித்தது. 2002ல் ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புரிமையான கௌரவ அமெரிக்கக் குடியுரிமையையும் வழங்கிச் சிறப்பித்தது
தகவல் இளக்காரம்
இவர்கள் சொல்வது என்னவென்றால், இரண்டு வருட ஒப்பந்தம் என்று இருந்தால், ஒப்பந்தத்தின் கடைசி 6 மாதங்களில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இவர்களை அழைத்து, புதுச் சலுகைகள் ஏதாவது உள்ளதா என்று நச்சரிக்க வேண்டும். இல்லையேல் உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், மறக்காமல், மாதா மாதம் பில்லை மட்டும் கட்டி விடுங்கள். பில்லைக் கட்ட அவர்களது இணையதளத்திற்குச் சென்றால், உங்களது மின்னஞ்லைக் கொடுத்தவுடன், அனைத்து விஷயங்களும் மாயமாக, உங்கள் முன் நொடிகளில் காட்டப்படும்.
தனிமையும் அழைப்பொலியும்
காவல் இல்லக் காப்பாளன் தனிமையில் இருக்கிறான். மான்களை விரட்டுவதற்காக நெருப்பு உண்டாக்கிப் புகை வெளியிட்டு அதன் மணத்தால் வயலிலிருந்து மான்களை விரட்டியும் அவை வயலுக்குள் நுழைந்துவிடாமலும் காக்கிறான். யாருமில்லாமல் அவன் மட்டும் வனத்தில் தனிமையில் காவல் காத்திருக்கையில் தனக்கு உறக்கம் வராமலிருப்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தாமிர மணியைத் தானே அடித்து ஒலியை உண்டாக்குகிறான்.
இந்திரா பார்த்தசாரதி நிழற்படங்கள்
புகைப்பட ஆல்பம் – படத்தொகுப்பு
ஷ்வார்ஸ்வால்டில் தண்ணீரைத் தேடி
அர்ச்சனா விளக்கினாள். அந்த இம்மிக்ரேஷன் பெண் திருப்தி ஆகாமல், யார் அழைத்திருகிறார்கள், திரும்பச் செல்ல டிக்கெட் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டாள். அர்ச்சனாவுக்கு எரிச்சலாக வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிறது. சென்ற முறை ஷீலாவுடன் வந்த போது, அவளை ஒரு கேள்வியும் கேட்காமல் விட்டு விட்டார்கள். அர்ச்சனாவுக்கு மட்டும் இதே மாதிரி கேள்விகளுக்கு பதிலும் டாக்குமெண்ட்களும் கொடுக்க வேண்டி இருந்தது.
பெண் தெய்வங்களும் மண் பாண்டங்களும்
ஆதிச்சநல்லூரில் இருந்த சிறு அருங்காட்சியகம் இரண்டாம் வகை. நிலத்திற்கு அடியே உள்ள பாறைகளை குடைந்து, மண்ணை அகழ்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்பானைகளை சுற்றி வந்து பார்வையிட மர சட்டங்களால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. விட்டத்தில் பொருத்தப்பட்ட குவி விளக்குகளின் வெளிச்சத்தில் நாம் நடக்கும் பாதைக்கு அடியே இருந்த இந்தப் பானைகள் வெண்மை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மெளனமாக மிளிர்ந்தன. இவை யாவும் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும் ஈமத்தாழிகள் (Burial urns). அதாவது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மண் கலன்கள்.
தண்டனைக்குரியவன்
சட்டென அவன் நினைவில் ஒரு சொல் ஒலித்தது. “வார்ம்த்” என்றான் தன்னை அறியாமலேயே. எல்லோரும் சுற்றி அமர்ந்து இருந்தனர் அறையில். பாரி சொல்வதை ராகவன் புரிந்தவன் போல் சிரித்தான். பார்வதி குழம்பியவள் போல் பார்த்தாள். கிருஷ்ணன் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான் ராகவனிடம். பாரி எதையுமே கவனிக்கவில்லை. மது போத்தலை எடுத்து கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த திரவத்தின் ஒளியும் பாரிக்குள் அந்த வார்த்தையை மீண்டும் எழுப்பியது. “வார்ம்த்” என்றான் சொக்கிய மன ஓட்டத்துடன்.
தரவு ஏக்கம்!
புறநகர் ரயில் நிறுவனம் போல, இன்னொரு அமைப்பு, நான் வசிக்கும் ஊரின் அரசாங்கம். இவர்களது ஒரே குறிக்கோள், வருடம் ஒரு முறை சொத்து வரியை உயர்த்துவது. அதுவும் சில வருடங்கள், முந்தைய வருடத்தை விட 10% -க்கு மேல் உயர்த்துவது. ரயில் நிறுவனம் போல, இவர்களிடம் என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் உண்டு. வருடம் ஒரு முறை ஒரு அறிக்கையை அனுப்புவார்கள். அந்த அறிக்கை வருவது, வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். இதுவரை நான் கட்டிய வரிக்கு நன்றி என்று ஒரு வருடம் கூடச் சொன்னதில்லை.
மன எல்லைகள் விரியும்போது ….
‘அப்பாடா! நல்லபடியா இத்தோடு கெளம்பி போனாரே?’ ராதிகா வாசற்கதவை சார்த்தி கொண்டு உள்ளே வந்தாள். அவளும் அலுவலகம் கிளம்ப வேண்டும். அந்த நேரத்துக்கு அவனுக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டாளே தவிர அவள் மனதில், ‘என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்? ஏன் பேச்சு கொறஞ்சு போச்சு?’ என்று அவன் கேட்ட கேள்வியே சுழன்று கொண்டிருந்தது.
கால வெளிக்கு அப்பால்
பிரபஞ்சம் (Universe ) என்ற சொல்லே குழப்பமானது. ‘அனைத்தையும் கொண்டிருக்கிற’ ஒன்றே பிரபஞ்சம் என்றால், இரண்டாவது பிரபஞ்சம் என ஒன்று இருக்க இயலாது. ஆனால், அண்டவியலில் பிரபஞ்சம் வேறொரு அர்த்தத்தில் வருகிறது: நாம் தொடர்ந்து கண்டறியும் விண்மீன் மண்டலங்களை, அதன் வடிவியலுடனும் வரலாற்றுடனும் கொண்டுள்ள காலவெளி தொடர் பொருண்மையே அது. இந்த நோக்கில், காணும் இப்பிரபஞ்சம் மட்டுமே திகழ்கிறது என்பதில்லை. ஜான் வீலரின் கூற்றுப்படி, காலவெளியிட தொடர் பொருண்மை ( spatiotemporal continuum ) அல்லது காலவெளி , கடல்நுரையென சிதறி நிகழ்தகவுகளின் துளிம மேகங்கள் எனப் பரவும் புள்ளி வரை கடந்த காலத்தை மறு கட்டமைப்பு செய்யலாம்.
கொரியப் பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய வடு
கொரிய ஊடகங்களிலும் 2018 MBC ஆவணப்பட விசாரணையிலும் ஆவணப்படுத்தப்பட்ட கிம்மிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில், பல நடிகைகளை வற்புறுத்தி முத்தக் காட்சிகளில் நடிக்க வைத்தது, அவர்கள் விரும்பாத இழிவான காட்சிகளில் நடிக்கக் கட்டாயப்படுத்தியது, ஒத்திகையின் போது அறைந்தது மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற புகார்கள் அடங்கும். MBC-யின் ‘பண்டோராஸ் பாக்ஸ்’ ஆவணப்படத்தில், ‘லீ’ என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நடிகை, மொபியஸ் (Moebius – 2013) படப்பிடிப்பின் போது கிம் தன்னை அறைந்ததாகவும், ஸ்டாப் (Stop – 2015) தயாரிப்பின் போது பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பகிரங்கமாகத் தெரிவித்தார். இவை அநாமதேயப் புகார்கள் அல்ல; சட்டப்பூர்வ செயல்முறைகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தவர்களால் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள்.
கூர்வேல்
வந்தியத்தேவர் செறுமினார். “எனக்கென்னவோ கங்கவர்மனின் ஆள் எவனோதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாம் ராஜதந்திரம் என்று அவனிடம் ஒரு ஒற்றனை அனுப்பினால் அவன் திறமையாக நம் ஒற்றனைக் கொன்றுவிட்டு அந்தக் கொலையையே நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறான். அவனுக்கு சாரங்கபாணி விமலாதித்தனை அழைத்து வரப் போயிருப்பது தெரிந்திருக்க வேண்டும். இப்போது பழி விமலாதித்தன் மீது விழுந்துவிட்டால், அவன் தண்டிக்கப்பட்டால், வேங்கி சாளுக்கியரோடு இணையும், நம்மை எதிர்க்கும்” என்று சொன்னார்.
டியரா டியரா!
வரலாற்றாசிரியர்கள், ஒருவேளை கொலம்பஸ் அன்று தனது திசையை மாற்றாமல் நேராகவே மேற்கு நோக்கிச் சென்றிருந்தால், அவர் முதலில் அமெரிக்காவின் மிக ஆபத்தான, பலமான எதிர்க்காற்றும் கொந்தளிக்கும் கடலலைகளும் கொண்ட புளோரிடா கரையை அடைந்திருப்பார் எனக் கருதுகின்றனர். அப்படிச்சென்றிருந்தால் அவரது கப்பல்கள் அங்கு உடைந்திருக்கலாம் அல்லது காற்றின் கட்டற்ற விசையினால் அறியாத திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். ஆனால், பறவைகளைப் பின்தொடர்ந்ததால் அவர் பாதுகாப்பான பகாமாஸ் தீவுகளுக்குச் சென்றடைந்தார்.
றெக்கை – அத்தியாயம் 23
இறகு எஜமானி, எனக்கும் கிழவருக்கும் பொன்னும், வைரமும், முத்தும் மரதகமும் பவிழமும் எல்லாம் வீட்டில் வைத்தும் விரலில் அணிந்தும் மகிழ்ச்சியோடு பாடி ஆடவும் வயசு பாக்கியாக ஒன்றும் இல்லை. நானோ என் கணவர் கிழவரோ நினைத்தால் மனதில் கொடூரமாகத் திரும்பும் நினைவுகள் திரும்பத் திரும்ப நெஞ்சில் ஆழமாகக் குருதி நனைத்து நிலைக்கவொட்டாமல் ஒரு நொடியில் சுவாசிக்க மறந்துபோக வைக்கும். பொன்னும் வைரமும் எம் போன்ற தொண்டு கிழங்களுக்கு ஏற்பில்லை. டாக்டர் எஜமானி, சரிதானே?
போனதும் நின்றதும் : சேர்வராயன் மலை சாட்சி சொல்கிறது
‘போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில் இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒரு போதும் தன் இளமையை இழப்பதில்லை. காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத்தேடி அமைதியைத்தேடி பாதுகாப்பத்தேடி வெற்றியைத்தேடி சுதந்திரத்தைத்தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.’
பிரார்த்தனை
இப்போது இதற்கு
காலம் கடந்து விட்டது என்று அவள் அறிவாள்
விரைவில் அவளும்
மறைந்து போவாள் என்பதையும்
பனைமரங்களை மட்டுமே தனக்குப் பின்னால்
விட்டுச் செல்வாள் என்பதையும் கூட
அவள் அறிந்திருக்கக் கூடும்.
ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
ஆத்மா, பிரம்மம் இரண்டும் ஒன்றே என்ற கருத்தை உபநிஷத்துக்கள் “அஹம் பிரம்மாஸ்மி” (நானே பிரம்மம்) மற்றும் “தத் த்வமஸி”(அது நீயாக இருக்கிறாய்) போன்ற மகா வாக்கியங்கள் மூலம் பிரகடனப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், “சிறிய, வரம்பிற்குட்பட்ட நான் (ஆத்மா) எப்படி இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் எல்லையற்ற பேராற்றலுடன் (பிரம்மம்) ஒன்றாக முடியும்?” என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால் இந்த உண்மையை “பாக-த்யாக-லக்ஷணா” (பொருந்தாத பகுதிகளை நீக்கி, சாரத்தை மட்டும் ஏற்கும் தர்க்க முறை) மற்றும் சில எளிய உதாரணங்கள் மூலம் விளக்க முடியும்
வேம்பும், அரசும்
தன் நண்பன் கண்மூடிக் கிடப்பதை அருகில் சென்று பார்க்க அவருக்கு தைரியமில்லை. பெரியசாமியின் வீட்டிற்கு எதிர்சாரியிலிருந்த அந்த நாவல் மரத்தடியிலேயே அமர்ந்து விட்டார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பெரியசாமியின் ஆத்ம சிநேகிதர். ஐந்து வயதில் ஆரம்பப் பள்ளியில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தபோது ஆரம்பித்த அறுபது வருட சிநேகிதம். கருவேல முள்வேலியில் கையைவிட்டு புளியம்பழம் பொருக்கவும், மரத்தில் ஏறி நாவல் பழம் உலுக்கவும், குளம் கண்ட இடத்திலெல்லாம் குதிக்கவும் என்று ஒன்றாகத் திரிந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் அடித்த வெள்ளமும், புயலும், கொளுத்திய அனலும் அவர்களின் சிநேகிதத்தைச் சிதைக்க முடியவில்லை. எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த நேரங்களில், ஒருவர் கையை ஒருவர் இறுக்கிக் கொண்டு கரையேறினார்கள்.
மனிதர்கள் காந்தப் புலத்தை உணர்கிறார்களா?
ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, காந்தம் என்றால் நினைவிற்கு வருவது திசைகாட்டியோ அல்லது குதிரைக்குளம்பு வடிவ காந்தம்தான். ஆனால் இன்று நாம் தினமும் பயன்படுத்தும் பல சாதனங்களின் மையத்தில் அமைதியாகச் செயல்பட்டு வருவது பல்வகை காந்தங்கள் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. காலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, பணப்பையில் இருக்கும் ஏடிஎம் அட்டை, பாக்கெட்டில் இருக்கும் கைப்பேசி, பையிலுள்ள மடிக்கணினி, டேப்லெட், ஐபாட் ஆகியவை. இவை அனைத்திலும் பொதுவாக மறைந்து கிடப்பது மிகச் சிறிய, சக்தி வாய்ந்த காந்தப்பொருட்கள்.
பிள்ளையிழப்பு
கம்பராமாயணத்தில் இந்திரஜித் போரில் வீழ்ந்த பின், பிள்ளையிழந்த துயரத்தால் இராவணன் அடையும் வேதனைகளையும் அவனுடைய புலம்பலையும் விருத்தத்தில் வடிக்கிறார். அதில் ஒரு பகுதியாக, // மைந்தனெ எனக் கதறுவான், பெருமை பெற்ற மகனே எனக் கூவுவான், என் தந்தையே என்பான், என் உயிரே எனச் சொல்வான், உன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் இன்னும் இருக்கிறேனே எனத் தன்னைத் தானே நொந்துகொள்வான், வெந்த புண்ணின் மீது வேல் பாய்ச்சப்பட்டது போன்ற துயரத்தை அனுபவிப்பான் // என்னும் பொருளுடைய வரிகளைப் படிக்கையில் அரக்கர்களின் அரசனாக இருப்பினும் மகனை இழப்பின் அத்துயரத்திலிருந்து ஒரு தந்தை தப்ப முடியாது என்பது தெளிவு.
உலகக் (கோப்பை) கொண்டாட்டம்
அரசியல் இந்தியாவில் மட்டுமா? அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கில் முட்டிக் கொண்டு இருக்கும் பொழுது ஈரான் அணி அமெரிக்காவில் விளையாட வேண்டும். தங்களுக்கு தேவையில்லாத அழுத்தங்கள், தொந்தரவுகள் வருவதாக அந்த அணியினர் புலம்புகின்றனர். ஈராக்கிற்கும் அதே கதிதான். விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை இல்லை. ஒரு நடுவருக்குக் கூட விசா கிடைக்காமல் போனது பெரிய பிரச்னையானது. விளையாட்டில் அரசியல் கூடாது என்பதெல்லாம் சொல்ல அழகாக இருந்தாலும் செயல்முறையில் எல்லாம் பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது.
கட்டில்- அலமாரி
மாநாட்டில் எல்லோராலும் கவனிக்கப்பட்டு , மிகப் பெரிய பாராட்டுகளுடன் சிவனேறு என்ற பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளை அவர்கள் மாநாட்டு தீர்மானங்கள் பலவற்றுடன் ஒத்துப்போவதில்லை. குறிப்பாக முதலாவது தீர்மானமான “சைவ உணவு உண்ணும் தொண்டை மண்டல முதலியார், கார்காத்தார், சைவ செட்டியார் , தேசிகர், ஓதுவார் , ஓமநல்லூர் , பட்டர்புரம் சீமைச்சம்பிரதி வேளாளர் , சோழபுரம் வேளாளர் என்பவர்கள் அனைவரும் இனி சைவ வேளாளர் என்று அழைக்கப்படுவர்’ என்று குறிப்பிட்டது பிள்ளை அவர்களுக்கு தங்க முடியாத வருத்தத்தை அளித்தது. ‘அது எப்படில நமக்கு இணையா’ என்று குமுறுவர்
அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு: விருப்பமான மருத்துவர் அமைப்பு
உடல்நல பாதுகாப்பு நிறுவனங்களில் (HMO) இருப்பது போல PPO-வில் ஒரு கட்டாய முதன்மை மருத்துவர் (Primary Care Physician – PCP) தேவையில்லை. நீங்கள் நேரடியாக ஒரு தோல் நிபுணரையோ, இதய நிபுணரையோ, எலும்பு நிபுணரையோ — யாரையும் நேரடியாகச் சந்திக்கலாம். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்குப் பிடித்த மருத்துவர் ஒருவர் வலையமைப்பில் இருந்தால், இடையில் யாரும் பரிந்துரைக்க வேண்டியதில்லை.
இழையும் இசை; இணையும் இயல்;கசியும் கண்கள்
ஏன் அவன் விடை கூறாமல் நாட்களைக் கழிக்கிறான்? ‘வருகிறேன், வர இயலாது’ என்றோ, தனது எண்ணத்தைச் சொல்லிவிட்டால், பின் எனக்குத் தோன்றுவது என்னவோ அதைச் செய்து கொள்வேனே என எண்ணி அதனையும் தோழியிடம் கூறுகிறாள். ‘அவன் வராவிடில் யாருக்கும் சுயம்வர மாலையை அணிவிக்க மாட்டேன்; கன்னிகையாக இருந்தே காலத்தைக் கழித்து விடுவேன்’ என்று சூளுரைக்கிறாள்; இருப்பினும் அடிமனதில் பயம். மற்ற அரசர்கள், அவர்களுடைய இளவரசர்கள் பூமியில் உள்ளனர்; இவர்களில் எவரையாவது மணந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தப் படுவேனோ எனப் பரிதவிக்கிறாள் ருக்மிணி.
கூழாங்கல்
முன்பு எப்போதோ
சென்று வந்த காட்டை
இப்போது நினைத்து
என் அறைக்குள்
கூட்டிக் கொண்டு வந்தேன் –
ஒரு விலங்காய்
அதற்குள் திரிய-
ஒரு பறவையாய்
அதற்குள் பறக்க
வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்
குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவத் தலையீடு தொடர்பான தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக காபார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டார். உளவுத்துறை மதிப்பீடுகள், தேசியப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள் பதட்டங்கள் நிலவியதாகவும் சில அறிக்கைகள் விவரித்தன. இருப்பினும் இந்தக் கருத்து வேறுபாடுகளே அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வெளியேறுவதற்கு முன்பு ஒரு இந்து மத அமைப்புடன் அவருக்கு இருந்த கடந்தகாலத் தொடர்புகள் குறித்த ஆய்வை ஊடக அறிக்கைகள் மீண்டும் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டுகளை காபார்ட்டும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்துக்களுக்கு எதிரானவை என்றும் நிராகரித்தனர்.
ரதநிலைதனை தருவாயே!
அலையின் அலைக்கழிப்பில்
பிடிமானக் கயிற்றின்
ஒரு முனைத்
தொக்கி நிற்கிறது!
அலைகளுக்கோ ஓய்வில்லை!
மூழ்கி முத்தெடுக்கும்
தன்முனைப்பும்
குறைவதாய்த் தோன்றவில்லை
கொஞ்சேமேனும்
கருணை காட்டுங்கள்
அலைகளே!
பாஹி ஜனனி
சிறு சிறு நகாசுகளுடன் ஸ்திரமான காலபிரமாணத்தில், ஆங்காங்கே கார்வை குடுத்தபடி நாட்டைக்குறிஞ்சியின் வளைவுகளை வெவ்வேறு ஸ்தாயியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வைத்தியநாதன். நங்கூரம் போல நடேசப் பிள்ளையின் நடைச் சொற்கள் உடன் ஒலித்துக் கொண்டிந்தன. நாட்டைக்குறிஞ்சியின் மென் பிரயோகங்கள் அழுந்திவிடக் கூடாது என்று சிரத்தை எடுத்து மிருதங்கத்தின் ஒலி அளவை மட்டுப்படுத்தி வாசித்துக் கொண்டிருந்தார் நடேசன். நடேசனின் நடைச் சொற்களைக் கேட்க வேண்டுமென்பதற்காகவே சில சதுஸ்ரங்களை மௌனங்களாக்கிக் கொண்டார் வைத்தியநாதன்.
சிந்தனைச் சோதனைகளின் நவீன வடிவமைப்பு
தேனீக்கள் இந்த சோதனையில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றன. காட்சி அமைப்பு, அடர்த்தி ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டபோதும், தேனீக்கள் தங்களின் குறைவானது என்ற விதியை புதிய வடிவங்களுக்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்தின. மிகவும் வியக்கத்தக்க வகையில், முற்றிலும் வெற்று அட்டை, அதாவது பூஜ்யம் என்ற எண் மதிப்பு கொண்ட கார்டு காட்டப்பட்டபோது, தேனீக்கள் அதை வடிவம் கொண்ட கார்டை விடக் குறைவானது என்று சரியாக அடையாளம் கண்டன. எண்கணித அறிவாற்றல் என்பது வெறும் காட்சி குழப்பத்தின் பக்கவிளைவு அல்ல; அது பூச்சியின் சிறிய மூளைக்குள் நடக்கும் உண்மையான எண்கள் பற்றிய பகுப்பாய்வையும் புரிதல்களையும் பிரதிபலிக்கிறது என்பதை இது நிரூபித்தது.
எது சனாதனம்?
சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீமைகளுக்குமான ஒரு பெயர் சனாதன தருமம் என்று இவர்கள் சொல்கிறார்கள். எனவே ’சனாதனத அழிப்பு’ என்கிற வெறுப்பு நிலைபாட்டை இப்படி சொல்லித்தான் நியாயப்படுத்துகிறார்கள்.இதன் எதிர் நிலைபாடு என்னவாக இருக்க வேண்டும்?
ஹிக்கூரி
அவள் மணலை விரலால் மெதுவாக மூடினாள். அப்போதுதான் சேவியர் அவள் கைகளைக் கவனித்தான். விரல் நுனிகளில் ஒரு பழைய ஆழமான வெட்டுக்காயம் . காயத்தின் தழும்பு வெண்மையாக இருந்தது . அவன் தன் கைகளைப் பார்த்தான். நடுங்கிய விரல்கள், இறுக்கிய கைகள். அவளுடைய காயத்துக்கும் அவனுடைய கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு கணம் அப்படி நினைத்தான்.
காயம் கசியும் வையகம்
வெனிஸ், பெர்லின், லோகார்னோ போன்ற புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை அள்ளிய அதே வேளையில், அவரது படங்கள் சித்தரிப்பின் அறநெறிகள், பாலின அரசியல் மற்றும் ஓர் இயக்குநரின் அறம் குறித்த கடுமையான விவாதங்களையும் கிளப்பின. இக்கட்டுரை கிம்மின் திரை உலகை முழுமையான விமர்சனப் பார்வையின் வழி மதிப்பிட முயல்கிறது. அவரது படங்களில் இழையோடும் தத்துவ மற்றும் அழகியல் கோட்பாடுகளை—குறிப்பாகத் துன்பம், ஆசை, மீட்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பௌத்த பிரபஞ்சவியல்; விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீதான தொடர் கவனம்; கொரிய நவீனத்துவம், அரசியல் வரலாறு மற்றும் தேசத்தின் வடுக்கள் குறித்த ஆழமான வெளிப்பாடு; உடல்ரீதியான தூண்டுதல்களிலிருந்து வார்த்தைகளற்ற, உறைந்துபோன மௌனக் கவிதையாக உருவெடுத்த அவரது வன்முறை மிகுந்த காட்சி மொழி போன்றவற்றை—இக்கட்டுரை ஆராய்கிறது.
பால் மாறிய பாறைகள்
சிஸ்கின்ஸ் பறவையின்
அழகிய கோப்பை வடிவக் கூடு
பைன் மரத்திலிருந்து
காற்றில் நழுவி
கீழே விழுந்து விட்டது
எடையின்மையின் துயரம்
மனதை உடைத்திட
தாமிர வயல்களில் மலரும்
எஃகு பூக்களை
அசைத்துக் கொண்டிருக்கக் கடவது
என்று காற்றை சாபமிடுகின்றன
சலசலக்கும் இலைகள்
கண்ணாடிச்சுவரின் இந்தப்புறம்: ஐந்து நிலப்பரப்புகளில் பெண்
நாவலின் தொடக்கத்தில் நாற்பதை நெருங்கும் பெண்ணாக அறிமுகமாகும் லீலா தன் கடந்த காலத்தை நினைவுகூறுவதன் வழியாக, அவளது குழந்தைப் பிராயம், பதின்ம வயது மாற்றம் பின் இளவயதிலேயே திருமணம் எனத் தன் வாழ்வை மீண்டும் மீண்டும் கனவுகளாலேயே அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதாக இந்தக் குறுநாவல் அமைந்திருக்கிறது. லீலா தனது நினைவுகளை மீட்டெடுக்கும் விதம், அவளுக்கு கடந்தகாலம் என்பது நினைவுகள் அல்ல; காலத்தின் முன் எப்போதும் பதினாறு வயதுப் பெண்ணாகத் துள்ளிக்குதிக்க விரும்புகின்ற அவளால், இயல்பாக சுவாசிக்க முடிகின்ற ஒரே உலகம் எனக் காட்டுகிறது.
பழத்தோட்டத்தில் ஒரு காவல்
கங்குவின் பேச்சு உற்சாகமானதாக இருந்தது. பணம் இரட்டிப்பாகும் போது யாரும் எதுவும் சொல்வதில்லை. ஆனால் முதியவர் மனம் நிறைந்திருந்தது. தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த முதுமையால் அவர் சிலவற்றை இழந்திருந்தாலும், மிக வேகமாக மரங்களை நோக்கி நடந்தார்.கங்கு திரும்பவும் படுத்துக் கொண்டான். தாப்பியின் ஞாபகங்கள் அவனுக்குள் படர்ந்து அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டன. ஒரு எலும்பு, ஒரே ஒரு விலா எலும்பு உடைந்திருந்தாலும், தாப்பி பக்கத்தில் உட்கார்ந்து அந்தக் கட்டை நீவிக் கொண்டிருந்திருப்பாள்
புதிய லண்டன்
புதிய லண்டன் மாறுபட்டிருந்தது. பாரம்பரிய மரபுப்படியான அமைப்பிற்குப் பதிலாக, வாணிபப் பொருளாதாரத்திற்கு நோக்கம் கொண்டு வணிகப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது அரசின் வர்த்தக மையம் பெரிதாகக் கட்டப் பட்டிருந்தது. 1694 ல் உருவான இங்கிலாந்து வங்கி வணிக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது. காப்பீட்டுத் தொழில் உருவாகியிருந்தது. வியாபாரிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பை புதிய காபிக் கடைகள் உருவாக்கின.
றெக்கை – அத்தியாயம் 22
வலனாடு ஊரில் செம்பாதி ஆண்களும் அபூர்வமாக பெண்களும் கடந்த ரெண்டு வருஷத்தில் தான் சைக்கிள் வாங்கி ஓட்டி சவட்டிப் போகிறார்கள். பக்கத்து ஊர் முழுக்க எஸ்பானிய கலாசாரத்துக்கு பங்கம் வராமல் ஆண்டு தோறும் கார்னிவால் என்ற கலைவிழா நடத்துவதில் மும்முரமாகி விக்ஞான முன்னேற்றத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். பெலன் என்ன என்றால் ஓபரா, பேலட், கொல்லேர் தழுவும் மாட்டை அடக்கும் விளையாட்டு என்று நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து விட்டு வேலை செய்கிற கரும்பு ஆலைக்கு கால் தேய நடந்து போகிறார்கள்
இல்லை என்பதும் வாழ்க்கையின் அங்கம்: சட்டிச்சாமியிலிருந்து சார்லு வரை
அங்கம்மாவின் கடி தவரிகளோ வேண்டுகோளோ மட்டும் அவன் ஊருக்குத் திரும்பி வருவதற்கான காரணமல்ல. அங்கம்மாவின் சொற்களுக்கு அப்பால் அவன் எழுதிய கூடுதல் சொற்களே முக்கியக் காரணம். அதன் கூர்மையும் அழுத்தமும் தாங்காமல்தான் அவன் வெளி நாட்டிலிருந்து வேக வேகமாகத் திரும்பிவிட்டான். அது தெளிவாகத் தெரிகிறது.ஆனால் அவனை வரவழைக்கும் வகையில் என்ன எழுதியிருப்பான் என்பது புதிராகவே இருக்கிறது.’ கதையில் புதிராகவே விடப்பட்டுள்ளது என்பதுதான் கதையின் வெற்றி. அந்த மெளனமே விட்டல்ராவின் சிறுகதைக்கலை என்கிறார் பாவண்ணன்.
குற்றலைகள்
வீட்டைவிட்டு நான் வெளியேறும்போது புழக்கடையில் டெய்சி இருந்திருக்கிறது. பந்தை தனது மூக்கினால் தள்ளியபடியும், பின்னர் அதை தானே துரத்தி எடுத்து மிதித்து விளையாடியபடியும் அது ஆனந்தமாகத்தான் இருந்தது. நான்கு கால்களையும் பரப்பி அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனோவை அது ரொம்ப நேரத்திற்கு சட்டைசெய்யவேயில்லை. பந்து விளையாட்டு சலித்ததும் நட்புடன் வாலை ஆட்டியபடியே அது மனோவை நெருங்கியதும், ஒரே பாய்ச்சலில் பாய்ந்த மனோ அதன் மெல்லிய கழுத்தைக் கவ்வி, வெறியுடன் பலமுறை ஆட்டி வீசியது. பிளவுபட்ட டெய்சியின் கழுத்திலிருந்து ரத்தம் கருநிறமாய் கசிவது அந்தக் காட்சியில் அத்தனை துல்லியமாய் தெரிந்தது.
பிழைகளும் கொலைமுயற்சியும்!
செப்டம்பர் 13 லிருந்து 17ம் தேதி வரையில், அட்லாண்டிக் கடலின் மத்தியில் கப்பல்கள் இருந்தபோது, மாலுமிகளின் காம்பஸ் ஒவ்வொரு நாள் மாலையிலும் நேராக வடக்குத் திசையைக் காண்பிக்காமல் சற்றே விலகி வடமேற்கைக் காண்பித்தது. அக்காலத்தில் காம்பஸ் எனும் திசைகாட்டும் கருவி கடவுளின் அருளால் செயல்படும் ஒரு மந்திரக் கருவியாகவே மாலுமிகளால் நம்பப்பட்டது. அது திசையை மாற்றிக் காண்பித்ததால், கப்பல்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்படாத, கடவுளின் ஆளுகைக்கு அப்பாற்பட்ட, மனிதர்கள் வசிக்க முடியாத ஒரு பிரதேசத்தை நோக்கிச் செல்வதாக அனைவரும் அச்சமுற்றனர்.
நானாகிய
பூங்காவை விட்டு வெளியேறும் போது அழகான அரிவை என் முன் தோன்றினாள், அன்று நான் பார்த்ததில் கடைசி முகம் அதுதான் என்ற அளவிற்கு அந்த முகம் என்னுள் பதிந்துள்ளது. அவள் அணிந்திருந்த உடை எனக்கு சிந்தையில் இல்லை, கருமையான அவளது முகத்தின் சிறப்புகளை மட்டுமே மீட்க முடிகிறது-கடுமையான செயல் ஒன்றும் இல்லை இப்போதும் என்னால் எளிமையாக அந்த முகத்தை விவரிக்க இயலும்- புருவம் குறைவாக இருந்தது; உதடுகளுக்கு அரக்கும் சிவப்பும் கலந்த ‘பால்ம்’ பயன்படுத்தியிருப்பாள்போல, தண்ணீர் போன்ற அந்த உதடுகள் அவளது அழகென்ற சேனைக்கு அணு ஆயுதம்போல வலு சேர்த்தது. இருப்பினும், என்னை பெரிதாக கவர்ந்தது அவளது தாடைதான்.
