சிஸ்கின்ஸ் பறவையின்
அழகிய கோப்பை வடிவக் கூடு
பைன் மரத்திலிருந்து
காற்றில் நழுவி
கீழே விழுந்து விட்டது
எடையின்மையின் துயரம்
மனதை உடைத்திட
தாமிர வயல்களில் மலரும்
எஃகு பூக்களை
அசைத்துக் கொண்டிருக்கக் கடவது
என்று காற்றை சாபமிடுகின்றன
சலசலக்கும் இலைகள்
Author: கார்த்திக் திலகன்
போலியுடல்கள்
ஓம் வடிவ பட்டமரத்தில்
கந்தப்பிரகாசமுடைய
வேல் முகமாக
தளிர் விட்டிருந்தது ஒற்றை இலை
உடலெல்லாம் பச்சை வேலால்
அலகு குத்திய ஆயிரம் மரங்களுக்கு இல்லாத அழகு அதற்கு
