படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.
Author: ரகு ராமன்
தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்
முடி என்று அழைக்கப்படும் தலை அணி தலையின் மேல் ஆதிசேஷன் போல விரிந்திருக்க அதன் விளிம்பில் மணிகள் கோர்க்கப்பட்ட சிறு வெள்ளை குஞ்சரங்கள் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன. கழுத்தை சுற்றி சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட அட்டிகை பாதி மார்பை மறைக்க, மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வெள்ளி கங்கணங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டு இருந்தது.
சிவன்ன சமுத்திரம்
இந்தக் கோவிலில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இங்கே சிற்பிகளின் பெயர்களை சிற்பங்களின் அடியிலேயே பொறித்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 800 வருடங்கள் கழித்து பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் தங்களின் கருப்புக்கண்ணாடிகளை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து, நகப்பூச்சு மின்னும் விரலால் கற்களில் பொறித்திருக்கும் கன்னட லிபியை வருடி, பாலேயா, சவுடேயா, நஞ்சைய்யா, என்ற இந்த சிற்பிகளின் பெயர்களை வாய் விட்டு உச்சரித்ததைப் பார்த்த பொழுது இது அந்த மகத்தான கலைஞர்களுக்கு நாம் செய்யும் சிறு மரியாதை என்று என் மனதில் பட்டது.
வானோர்கள்
ஆகாயத்தில் வெங்கடேஷ் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினேன். அப்பொழுதெல்லாம் மெட்ராஸில் கூட வானில் நட்சத்திரங்கள் துல்லியமாக தெரியும். நாங்கள் இருந்ததோ கும்மிடிபூண்டியை தாண்டி ஆந்திராவை தொட்டுக் கொண்டு. ஆரம்பாக்கத்தில் அமைந்து இருந்த ஒரு இரும்புத் தொழிற்சாலையுடைய மேலாளார்களின் குடியிருப்பில் தான் நாங்கள் வசித்து வந்தோம். இரண்டு சிறு சாலைகளும் மிகக் குறைவான விடுகளுமே அங்கு உண்டு. இரவு ஒன்பது மணிக்கு மேல் சில தெரு நாய்களும், இங்கொன்றும் அங்கொன்றுமாக பழுப்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கும் சாலை விளக்குகளும், அதைச் சுற்றும் பூச்சிகளும் தான் கண்ணில் படும்.
பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்
கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.
சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்
கிருஷ்ண தேவ ராயர் காலத்திலேயே ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்த தலைநகரம் சில நாட்களிலேயே இடுகாடானது; போர்துகீச யாத்ரி டாமிங்கோ பேஸ் விஜயநகரில் நாட்டியம் ஆடும் பெண்கள் கூட செல்வ செழிப்போடு இருந்தனர் என்று குறிப்பிட்ட அளவிட இயலாத செல்வம் சூறையாடப்பட்டது; சிற்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ என்று ஐயப்படும் அளவிற்கு செதுக்கப்பட்ட பல கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இருநூற்று ஐம்பது வருட காலம் தென் இந்தியாவிற்கு ஒரு அரணாய் இருந்த சாம்ராஜ்யத்தை பேரிருள் கவ்வியது.