பீட்டரும் பக்கிரியும் : டேக் 5 புத்தக வெளியீடு – ஏற்புரை

சில சமயங்களில் புறத்தின் நிதர்சனங்களே கட்டுரையின் முடிவை நிர்ணயிக்கிறது. பெல்லோ கட்டுரை இறுதியில் அமெரிக்கத் தேர்தல் மிக மூர்க்கமாக தன்னை இருத்திக் கொள்கிறது, ஹெர்சாக் பாணியில் அமைந்தருக்கும். பெல்லோ வாசகி ஒருவள், அவருக்கு எழுதும் காத்திரமான கடிதத்தின் வழியே. க்ரஸ்நஹொர்கையின் சேடன் டாங்கோவப் பத்திப் பேசறச்சே பெய்லா டாரோடா படத்தையும் பேசறது இயல்பாகவே கட்டுரையின் போக்கே நிர்ணயிக்கிறது.

வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள்

வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது.