அரசியல் இந்தியாவில் மட்டுமா? அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கில் முட்டிக் கொண்டு இருக்கும் பொழுது ஈரான் அணி அமெரிக்காவில் விளையாட வேண்டும். தங்களுக்கு தேவையில்லாத அழுத்தங்கள், தொந்தரவுகள் வருவதாக அந்த அணியினர் புலம்புகின்றனர். ஈராக்கிற்கும் அதே கதிதான். விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை இல்லை. ஒரு நடுவருக்குக் கூட விசா கிடைக்காமல் போனது பெரிய பிரச்னையானது. விளையாட்டில் அரசியல் கூடாது என்பதெல்லாம் சொல்ல அழகாக இருந்தாலும் செயல்முறையில் எல்லாம் பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது.
Tag: உலகக் கோப்பை
உலகக் கோப்பை உற்சவம்!
முதல் போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தானை கிட்டத்தட்ட தோற்கடித்துவிட்டனர். அதே போல அமெரிக்கா இந்தியாவையும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தையும், நேபால் இங்கிலாந்தையும் திணறச் செய்தனர். பெரிய போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம் இல்லாத காரணத்தினாலேயே கடைசிக் கணத்தில் அவர்கள் கோட்டை விட்டனர். அவர்கள் முக்கியமான சில கேட்சுகளைக் கோட்டை விட்டதும் கூட ஒரு காரணம். யாருக்கும் வெற்றி உறுதி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
