இரு இயக்குநர்களும் பகுத்தறிவுக்கும் (Rationality) அதன் தோல்விகளுக்கும் இடையிலான உறவில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளனர். தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டை நோக்கிய அதீத முனைப்பு எவ்வாறு அபத்தமான அல்லது விபரீதமான விளைவுகளைத் தருகிறது என்பதை இவர்கள் ஆராய்கின்றனர். குப்ரிக்கின் 2001 படத்தில், HAL 9000 கணினி, மனிதர்களைக் காப்பதை விடத் தனது ‘பணிக்கு’ (Mission) முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஒரு உறைந்த பகுத்தறிவு மனித உயிர்களைப் பறிக்கத் துணிவதைக் காட்டுகிறார்.
Category: உலக சினிமா
உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும்
நோலனின் திரைமொழியில் மிகவும் வியக்கத்தக்க அம்சம் அதன் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பாகும். ஃபாலோவிங் (1998) தொடங்கி, நோலன் கதையாடல் விவரிப்பைத் துண்டாடும் ஒரு தனித்துவமான நடைமுறையை (Practice of narrative fragmentation) நிறுவினார். இது மரபார்ந்த ஹாலிவுட் கதைசொல்லல் முறைக்கு நேரெதிரானது. கிளாசிக்கல் கதையாடல் என்பது, போர்ட்வெல் விளக்குவது போல, காரண-காரியத் தொடர்புகளால் பிணைக்கப்பட்ட, ஒரு இலக்கை நோக்கி நேர்க்கோட்டில் நகரும் நிகழ்வுகளின் சங்கிலித் தொடர். நோலன் இந்தத் தர்க்கத்தை முறையாகச் சிதைக்கிறார்.
ஈழத்தின் தமிழ்த்திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி சார்பான பார்வை
தாண்டி ஒரு படைப்பை தயாரித்து வெளியிட்டால் அதற்காக செலவிடப்பட்ட முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை த்தானும் பெறமுடியாத இக்கட்டான தோல்வி நிலையை பல படைப்புகள் சந்தித்து விடுகின்றன. இவ்வாறான தோல்விகள் படைப்பாளர்களை மீளவும் தலை தூக்கமுடியாத நிலைக்கும் கொண்டு சேர்த்துவிடுகின்றன். அப்படியான நிலைமையிருந்தும் பலர் துணிவுடன் அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் துணிகரமாக ஈடுபடுவதை நாம் எம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது.
கிரிஸ்டோஃப் கீஸ்லோவ்ஸ்கியின் அழகியல்: ஊழ்வினை, உணர்வெழுச்சி, உருவகம்
அவனது உலகில், தற்செயல் என்பது கடவுளின் இன்னொரு பெயர். ஓடும் ரயிலைப் பிடிப்பதிலோ அல்லது தவறவிடுவதிலோதான் ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையும் ஊசலாடுகிறது. அங்கே விதியென்பது வானத்திலிருந்து எழுதப்படும் சாசனம் அல்ல; அது நாம் தினமும் கடந்து செல்லும் அந்நியர்களின் பார்வையில், தவறவிட்ட தொலைபேசி அழைப்புகளில், காற்றில் மிதந்து வரும் ஒரு பழைய பாடலின் மெட்டில் ஒளிந்திருக்கிறது. அவன் நமக்காகப் பின்னிய திரைக்கதைகள், வெறும் கதைகள் அல்ல; அவை கண்ணுக்குத் தெரியாத நூலிழைகளால் இணைக்கப்பட்ட மனிதத் தீவுகளின் வரைபடம்.
நெட்பிலிக்ஸ் (Netflix) பிறந்த கதை
இந்த வழக்கின் க்ளைமாக்ஸ் காட்சி 1983 ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறியது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வைத்த ஒற்றைக் கேள்வி இதுவே. “மக்கள் தங்கள் விருப்பம் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கும் VCR ஐத் தடை செய்ய வேண்டுமா?” கேட்பதற்கு எளியதாகத் தோன்றும் இந்தக் கேள்வி, தொழில்நுட்பம், படைப்புரிமை மற்றும் சட்டவரையறை என்ற பல சிக்கல்களைக் கொண்டிருந்தது.
ஹோசோவில் வாழ்தல்
அமெரிக்காவின் பூர்வகுடி இனங்களில் ஒன்றான ‘நவாஹோ’ மக்கள் தற்போது பெரும்பான்மையினர் வசிப்பது அதன் தென்மேற்கு மாநிலங்களான அரிசோனாவின் வடகிழக்கிலும், நியு மெக்ஸிகோவிலும்தான் (கொஞ்சமாக உடா-வில்). அவர்கள் பேசும் மொழி தென் அதபாஸ்கன் மொழியான நவாஹோ. சமீபத்திய இரண்டு தலைமுறைகள் காலனிய மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டாலும், மூத்த தலைமுறயினர் அனைவரும் பேசும் மொழி நவாஹோதான்.
வண்ணங்களே வாழ்வு
அப்பாஸ் சித்தப்பாவின் திருமணத்திற்காக காப்பே ஒன்றைப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் சித்தப்பா திரும்பி வருவதற்குள் பாட்டி இறந்துவிட்டாள். அப்பா, பாட்டியை ஒரு பசுமையான கல்லறையில் சிறப்பாக அடக்கம் செய்தார். அப்பாஸ் சித்தப்பாவிற்கு பாட்டியின் கூடாரத்தில் பாட்டி பின்னிக் கொண்டிருந்து முடிக்காமல் விட்ட பாதி காப்பேதான் பார்க்கக் கிடைத்தது. பாட்டியின் காப்பேயையாவது பார்க்க முடிந்ததே என்பதில் அவருக்கு ஒரு ஆசுவாசம்.
கோயன் சகோதரர்கள் திரைக்கதை எழுத்தாளர்களாக: தனித்துவமான உலகங்களின் சிற்பிகள்
இந்த உள்ளுணர்வு சார்ந்த செயல்முறை, பிரதான திரைப்படத் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வழக்கமான மூன்று-அங்க கட்டமைப்பிலிருந்து அவர்களை அடிக்கடி விலகிச் செல்ல வைக்கிறது. இவர்களுடைய திரைப்படங்கள் பெரும்பாலும் தொடர்ச்சியானதாகவும், சில சமயங்களில் இலக்கில்லாமல் அலைந்து திரிவது போலவும் அல்லது வட்ட வடிவமான கதையோட்டத்தையும் கொண்டிருக்கும். உதாரணமாக, ‘தி பிக் லெபோவ்ஸ்கி’ (The Big Lebowski) திரைப்படம், ஒரு சாதாரண ஆள்மாறாட்டத்திலிருந்தும், கறை படிந்த தரைவிரிப்பிலிருந்தும் தொடங்குகிறது.
கிங் காங்
இந்தப் படத்தின் திரைக்கதையைத் தயார் செய்த கூப்பர், தனது நண்பர் டீலோஸ் (Delos W. Lovelace) என்ற எழுத்தாளரைக் கொண்டு தான் உருவாக்கி இருக்கும் கிங் காங் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுத வைத்தார். இந்த நாவல் கிங் காங் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பு பதிப்பிக்கப்பட்டது.
ஒரு அமெரிக்க ஒடிஸி: ஓ பிரதர், வேர் ஆர்ட் தௌ? (2000) இல் கட்டுக்கதை, இன்னிசை மற்றும் கலாச்சாரக் கலவையின் சிம்பொனி
கோயன்களின் ஹோமரின் ஒடிஸி யை மாற்றியமைப்பதில் விளையாட்டுத்தனமான, கிட்டத்தட்ட அலட்சியமான அணுகுமுறை, தழுவலின் தன்மை மற்றும் கிளாசிக் நூல்களின் கலாச்சார எடை குறித்த ஒரு பின்நவீனத்துவ வர்ணனையாக செயல்படுகிறது. காவியத்தை அமெரிக்க தெற்கிற்கு மாற்றி, பிராந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இசையுடன் அதை உட்செலுத்துவதன் மூலம், அவர்கள் ஒரே நேரத்தில் அசலை மதிக்கிறார்கள் மற்றும் மர்மத்தை நீக்குகிறார்கள்;
ஆற்றுவன ஆற்றி அமைவது – “The Brutalist”
தனது முக்கியமான கலைப்பணியின் மையத்தில் ஒரு சிலுவையைச் சேர்ப்பது, ஒரு யூதக் கட்டிடக் கலைஞருக்கு அளிக்கும் மன நெருக்கடி அசாதாரணமானது. மேற்கத்திய சூழலில் நிதியுதவி பெறவும், பெருமை அடையவும், ஒரு யூதக் கலைஞனாக இருந்தாலும், கிறிஸ்தவ அடித்தளத்தில் கட்டிடமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிலுவை, அந்த ஆதரவுக்கான சின்னமாகும் — ஒரு விலைபோல.
பெரும் காட்சிப் பிழைதானோ!
“நாம் இயற்கையாகப் பார்க்கும் விதத்தைப் பிரதிபலிப்பதால் திரைப்படங்கள் நமக்கு புரிகின்றன” என்ற கோட்பாடு எளிமையானதாக இருந்தது. நீங்கள் ஒரு அறைக்குள் நுழையும்போது, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உள்வாங்குவதில்லை – இங்கே அங்கே பார்க்கிறீர்கள், பிறகு துண்டுகளிலிருந்து காட்சியை உருவாக்குகிறீர்கள். சினிமாவும் இதையே செய்கிறது என்று நம்பப்பட்டது.
எழுத்தாளரின் நரகம்: பார்டன் ஃபிங்க் (1991) மற்றும் ஹாலிவுட்டின் மாயத்தோற்றம்
ஹோட்டல் எர்லின் பரவலான, கிட்டத்தட்ட உயிருள்ள சிதைவு, பார்டனின் மோசமடைந்து வரும் மனநிலையை ஆழமாக பிரதிபலிக்கிறது; இது கலை சமரசத்தின் புழுக்கத்தையும், மாயை மற்றும் சூத்திரத்தின் மீது கட்டப்பட்ட ஹாலிவுட்டின் வெறுமையையும், அதன் ஆன்மிக வறுமையையும் குறிக்கிறது. பிசுபிசுப்பான திரவத்தைக் கசியவிடும், உரிந்து தொங்கும் சுவரொட்டிகள், அடக்குமுறை மிக்க, தவிர்க்க முடியாத வெப்பம், மற்றும் சிதைவின் பொதுவான துர்நாற்றம் ஆகியவை பார்டன் சந்திக்கும் மற்றும் ஒரு அளவிற்கு உள்வாங்கிக் கொள்ளும் படைப்பு மற்றும் தார்மீக அழுகலின் உடல் வெளிப்பாடுகளாகும்.
சிக்கலான வன்முறை செறிந்த விட்டேத்தியான உலகமும், நக்கலான அபத்த எதிர்வினையும்
‘ஈருருவில் ஒளிரும் ஒற்றைக் கலைச்சுடர்’ என வர்ணிக்கப்படும் இந்த சகோதரர்கள், கூட்டாக தங்கள் படங்களை எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், தயாரிக்கிறார்கள், மேலும் படத்தொகுப்பும் செய்கிறார்கள்; பிந்தையப் பணியை பொதுவாக ரோட்ரிக் ஜெயின்ஸ் (Roderick Jaynes) என்ற புனைப்பெயரில் மேற்கொள்கிறார்கள். ஒரு கருவின் முதல் பொறி முதல் இறுதி வடிவம் வரை நீளும் இத்தகைய விரிவான தனித்துவமிக்க செயற்பாடு, ஒரு வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் மட்டுமல்ல, அவர்களின் நிலையான கலைத்துவ முத்திரையை இயக்கும் மற்றும் வரையறுக்கும் ஒரு முதன்மை நெறிமுறையாகும். இந்த ஒருங்கிணைந்த செயல்முறை கட்டுப்பாடு, அவர்களின் தனித்துவமான திரைமொழியை அவர்களின் தனித்துவமான காட்சி மற்றும் தொனிநயத்துடன் தடையின்றி சங்கமிக்க அனுமதிக்கிறது
பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்
அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”
கண்ணீரில் சிரித்து வாழ்தல்
நகைச்சுவைக்காக மட்டுமே படைக்கப்படாத படைப்புகளில், நகைச்சுவை என்பது ஒரு கம்பீரமான விருந்தில் அழைப்பில்லாமல் நுழையும் விருந்தாளியைப் போன்றது – ஓரளவு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அது ஒரு வகையில் அவசியமானதாகவே இருக்கிறது. இது ஒரு பதற்றமான சூழலில் ஒரு பாத்திரம் நேரம் காலம் புரியாமல் வைக்கும் சங்கடமான குறிப்பாகவோ, அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழ்நிலையின் நகைமுரணாகவோ இருக்கலாம்
டேவிட் லிஞ்ச் (David Lynch) – ஆழ்மன நினைவுகள்
இரு பெண் கதாபாத்திரங்களை முன் வைத்து எடுக்கப்பட்ட பெர்சோனா, அவர்களிடையே நடக்கும் உளவியல் ரீதியான போராட்டத்தைத் திரைக் காவியமாக்கியது. பெர்சோனா தீவிர உளவியல் தேடல். இரு பாத்திரங்களில் ஒருவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் திடீரெனப் பேச்சுத்திறன் இழந்தவர் இன்னொருவர் அவருக்குப் பேணுகை செய்யவந்த பெண் செவிலியர். இவர்களுக்குள் ஒரு தீவில் நடக்கும் கலந்துரையாடல், செயல்கள், சிந்தனைகள் போன்றைவையே கதை. இரு பாத்திரங்களை மட்டும் ஒரு கண்ணாடிக்கூண்டில் அடைத்துக் கேமரா மூலம் புலன்விசாரணை கோணலிலிருந்து உருவாக்கப்பட்டது பெர்சோனா.
ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி
இதனைக் கண்ட டாட்டி திருவாளர். ஹ்யூலோ கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். R K லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் (Common Man) போன்ற ஒரு மனிதன். வட்டத்தொப்பி, நீள் மேலங்கி, குதிகாலுக்கு மேல்வரை மட்டும் நீண்ட பேண்ட், வாயில் புகைகுழாயுடன் சற்றே முன் சாய்ந்து குதிகாலை உந்தி நடக்கும் ஒரு கனவான். ஹ்யூலோவுக்கு என்ன வேலை எங்கு வசிக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எந்த ஒரு காட்சியிலும் அவர் நுழையும்போது ஏற்கனவே அறிமுகமாகியவரென்றே பார்வையாளருக்குத் தோன்றும்.
தேகயாத்திரை
Soul – Movie Review வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்? இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் “தேகயாத்திரை”
சாதலும் புதுவது அன்றே: An Elephant Sitting Still
ஏராளமான அண்மைக் காட்சிகள், Medium Shot-கள். தேவைப்பட்டாலொழிய, சட்டகத்தின் தெளிக்குவி நடுவத்தில் ஏனைய கதாபாத்திரங்கள் காட்டப்படுவதில்லை. பிரதான கதை மாந்தர்களுடனான உரையாடலின் போது கூட துணைக் கதாபாத்திரங்கள் மங்கலான குவியத்திலேயே (Shallow Focus) விலக்கி வைக்கப்படுகிறார்கள். இசைவான தொலைவிலிருந்து கொண்டு இயங்குகிறார்கள். காமெரா நகர்வுகளில் மந்தமான செயலூக்கமின்மை நிறைந்திருந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கையில் அது முனைப்பு கொள்கிறது. அத்தகைய தருணங்களில் மட்டும் அவர்களது உருத்தோற்றங்கள் தெளிவு பெறுகின்றன.
வாசகர் மறுவினை
உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.
கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்
படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.
குரங்கில் இருந்து பிறந்து…
படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம்…
பருவம், படம், பீஷ்மர் & போப்
துரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே? திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன? அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும்? இதை பைரப்பா கவனிக்கவில்லையா? பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.
இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை
தி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து அவற்றைப் படமாக எடுத்தவை ஒரு தொகுப்பாகக் கிட்டுகின்றன. அந்தத் தொகுப்பில் சிலவற்றைக் கார்டியன் “இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை”
கரிக்கும் பாதையின் இனிக்கும் ஆரஞ்சுகள்
தடைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், கடினமான சூழலில் தீர்வுகளைக் கண்டெடுக்கும் கட்டாயத்தால்தான் பாலெஸ்டீனிய சினிமா இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அனைத்துமே கடினமாக இருப்பதால் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இக்கடினங்களை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை, ஏனெனில் இரண்டே வாரங்களில் ஐம்பது வயதாகியது போல் களைத்து விடுகிறது. இது இரானியச் சினிமா போலதான், சற்று வித்தியாசமான விதத்தில். அங்கே சென்சார் தடைகளை மீற மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன. அவ்வழிகளைப் பயன்படுத்த அவர்கள் இன்னமும் நுண்மையாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை வெல்ல எப்போதுமே அவர்கள் ஜாக்கிரதையாகவும் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. பாலெஸ்டீனிலும் இது மாதிரியான ஒரு…
கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்
வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…
மகரந்தம்
சில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்!
உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை
டாரில் பால்ட்வின் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும். முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.
ஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்
கார்ட்டூன் சினிமா என்றால் எலியும் பூனையும் துரத்திக் கொண்டிருக்கும் படங்கள் என்றோ, தூங்கும் ராஜகுமாரியை ஒரு ராஜகுமாரன் எழுப்பி மணம் புரியும் கதை என்றோ நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எந்தத் துறையும் நூறு உள்பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. சில சமயம் ஒரு சிறு உப “ஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்”
தூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்
உழைக்கும் வர்க்கம், வர்க்க பேதம், அரசு நிர்வாக அமைப்பின் அதிகாரப் படிநிலை ஆகிய கருத்துருவாக்கங்களின் பின்புலத்தில், பல்கேரிய எல்லைப் பகுதியில் யூகாஸ்லேவியாவில் உள்ள போர் (Bor) என்ற தொலைதூர மலைப்பிரதேசத்தை இந்தத் திரைப்படம் களமாய்க் கொள்கிறது. திரைப்படத்தில் இடம்பெறும் வழிகாட்டியின் குரலில் அரசுபிரசாரத்துக்கே உரிய போற்றுதல்கள் (“தாமிரம், வெள்ளி மற்றும் தங்க உற்பத்தியில் உலக அளவில் முதன்மை நிலை வகிக்கும் மையங்களில் ஒன்று”) அடிப்படை வசதிகளற்ற, சாம்பல் பூச்சு கொண்ட பின்னணியில் படம் பிடிக்கப்பட்டிருகின்றன.
வஞ்சினங்களின் காலம்
வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு.
உலக சினிமா: அன் ஷியான் ஆண்டலூ-வின் கல்வீச்சுப் பார்வை
அன் ஷியான் பற்றிப் பேசுவதானால் இன்று அழியாப் புகழ்பெற்றுவிட்ட கண்ணைக் கீறும் காட்சியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சி ஒரு பெண்ணின் முகத்தில் துவங்குகிறது. அவளது இடப்புறம் ஓர் ஆடவனின் உருவம் தோள் வரை தெரிகிறது (அந்த உருவம் இப்போது ஒரு டை அணிந்திருக்கிறது). அது தன் இடக்கை பெருவிரலையும் சுட்டு விரலையும் கொண்டு பெண்ணின் கண்களை அகல விரிக்கையில் வலக்கரம் திரையின் கீழ்பாதியில் ஒரு சவரக்கத்தியோடு நுழைகிறது. அந்தக் கத்தி பெண்ணின் கண்ணைக் குறுக்கே கிழிக்க வருகிறது. (இந்தக் காட்சி ஸெர்கி ஐஸன்ஷ்டைனின் (Sergei Eisenstein) Battleship Potemkin படத்தில் துப்பாக்கியின் முனைக்கத்தியால் ஒரு பெண்ணின் கண் சிதைக்கப்படும் நாடகீயத் தருணத்தை நினைவுறுத்துகிறது).
