பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும்.
Series: தெய்வநல்லூர் கதைகள்
Tamil Stories – Village Incidents
தெய்வநல்லூர் கதைகள் – 2
பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.
தெய்வநல்லூர் கதைகள்- 3
ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஆறாம் வகுப்புக்கு நேரு நடுநிலைப்பள்ளிக்கு மாறினோம். துவக்கப் பள்ளியில் படித்ததில் எங்களுடன் இருந்தவர்கள் மூன்று பேர்தான். சிலர் நேரடியாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்குப் போய்விட்டனர். ஆறாம் வகுப்பு போனதும் நாங்கள் எங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கும் முடிவினை ஒத்த மனதுடன் ஒருமிக்க எடுத்து புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம். அவர்களை இணைக்கையிலேயே நாங்கள் எங்கள் அனுபவ மூப்பினை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம் என்றும் இணைப்பு உறுதிமொழியாகக் கொடுத்திருந்தோம்
தெய்வநல்லூர் கதைகள் -4
மறுநாள் காலையில் சிவாஜி வீட்டிற்கே வந்து அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிய மு மாரியப்பன் பதட்டத்துடன் சொன்னார் – “ஏல, நம்ம சுனா கானா மருந்தக் குடிச்சிட்டாம்ல. ஜவஹர் டாக்டர் ஆசுபத்திரிக்கு இப்பதாம் தூக்கிட்டு போனாக. வாரியா, போயி பார்ப்போம் “. இவர்கள் சென்று பார்க்கையில் சுனா கானா எனும் சுப்பையா கணேசனின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. வாழ்க்கையில் பீடி தவிர வேறெதுவும் குடிக்காத, எங்களைக் குடிக்கவிடாத , தனக்குக் கிடைத்த ஒவ்வொரு பண்டத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட, தன் துக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாத பிரியம் மிக்க நண்பர் சுனா கானா இவ்வாறாக மீண்டும் ஒருமுறை மீள வரமுடியா விதத்தில் எங்களிடமிருந்து சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டார்.
தெய்வநல்லூர் கதைகள் – 5
காலாண்டுத் தேர்வு முடிந்து ஒரு திங்களன்று நாங்கள் வகுப்புக்குள் நுழைந்தபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி தாக்கியது. அங்கு அறிஞர் அண்ணா அணி என்ற பெயரில் இரண்டு காலண்டர் அட்டைகளை மூங்கில் வரிச்சால் பின்பக்கமாக இணைத்து நீளமாக ஆக்கி முழுவதும் வெள்ளைத்தாளால் ஒட்டப்பட்டு ஒரு பதாகை இருந்தது. அதுவரை வகுப்பில் மூன்று அணிகளே உண்டு. பெண்கள் தரப்பிலிருந்து “ஜான்சிராணி” அணி, பையன்கள் அணியிலிருந்து நாங்களே உருவாக்கி எங்கள் துணை அணியாக நடத்திக்கொண்டிருக்கும் “தமிழன்னை” அணி. முக்கியமான ஆளும் அணியாக எவ்வித எதிர்ப்புமின்றி அதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தது எங்களது குழுவான “ஆசியஜோதி நேரு” அணி.
தெய்வநல்லூர் கதைகள் – 6
ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி முடுகி தேடுகையில் திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.
தெய்வநல்லூர் கதைகள் – 7
பிரேம் முதலில் செந்தில் அணியில் இணைவதாகவே இருந்திருக்கிறார். காரணம் அவர்கள் தெண்டில் தலைமையில் உமையொருபாகன் கோவிலுக்கு வெள்ளி தோறும் செல்லும் வழக்கத்தில் இருப்பதும், தெண்டில் கொண்டுவரும் திருநீறை அவர்கள் அணியினர் அனைவரும் தினமும் காலை நெற்றியில் அணிந்து கொள்வதும் அவரைக் கவர்ந்திருந்தது. ஆனால் ஓட்டக்கை அதன் காரணத்தை பறைசாற்றியதும் பிரேம் ஆர்வமிழந்து விட்டிருக்கிறார் – “அது பைரவர்ட்ட வச்சி வாங்கிட்டு வந்த திருநாறு , அத வச்சிக்கிட்டோம்னா நம்மள எந்த நாயும் வெரட்டாது,கடிக்காது.” அடுத்ததாக, சிங்கி சொன்ன நடுநிலை ஒப்பந்தத்துக்கான முக்கிய ஷரத்து பிரேமை விலக்கம் கொள்ள வைத்து விட்டிருக்கிறது – “பொம்பளப் புள்ளயள்ட்ட இருந்து எடுக்க பண்டத்துல ரெண்டுநாள் மட்டும் ஒனக்கும் பங்கு உண்டு.”
தெய்வநல்லூர் கதைகள் -8
பிரேம் திரும்பி வருகையிலேயே அவர் முகம் அரியர்ஸ் அறிவிப்பினைக் கண்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகியின் முகத்தை ஒத்திருந்தது கண்டு நாங்கள் இனி யோசிக்க வேண்டியதில்லை என்ற ஆசுவாசம் பற்றி பெருமூச்சு விட்டு எங்கள் முகத்தையும் மலர்த்தினோம். சிவாஜிதான் வந்தவுடனே கேட்டார்- “ காயா பழமா ?”. புன்சிரிப்பைச் சிந்திய மறுநொடியே அதற்கான பிராயசித்தமான கடுகடுப்பை முகம் பூசிக் கொண்டு பிரேம் விவரங்ககளை எடுத்துரைத்தார். விவரம் என்னவெனில் வெள்ளி மாலை பள்ளி விட்டதுமே சங்கீதா வீட்டினருடன் கிளம்பி நாகர்கோவில் செல்கிறார், அங்குள்ள ஆச்சி வீட்டில் சனி,ஞாயிறு இருந்து கொண்டாடிவிட்டு திங்கள் அதிகாலை கிளம்பி தெய்வநல்லூர் வந்து சேர்ந்து உடனே பள்ளிக்கு வந்து விடுவதால் திங்கள் அன்று ஒப்படைக்க வேண்டிய வீட்டுப்பாடங்களை எடுத்துச் சென்று எழுத பெரிதும் சிரமப்பட்டிருக்கிறார். ஒரு திங்களன்று வீட்டுப்பாடம் எழுதவில்லை என வீட்டுப்பாட நோட்டை வாங்க வந்த தெண்டிலிடம் சொல்ல தெண்டிலார் காரணம் வினவ தன் நாகர்கோவில் பயணத்தை சொல்லியிருக்கிறார்.
தெய்வநல்லூர் கதைகள் – 9
இருவரும் பேசிமுடித்ததும் சில முடிவுகள் உடனே அமுல்படுத்தப்பட்டன. வகுப்பினைக் கவனிக்கும் பொறுப்பு உடனடியாக ஆசிய ஜோதி அணியினருக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. தெண்டில் அணியினர் அனைவரும் அவரவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இனி குறிப்பேடுகளை தேதி வாரியாக சரி பார்த்து ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூடுதல் தனிப் பொறுப்பு பிரேமுக்கு ஒதுக்கப்பட்டது. தவறு செய்த மூவருக்கும் அன்று மாலை பள்ளி முடியும்வரை வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் நின்று கொண்டேயிருக்கும்படியாக தண்டனை அளிக்கப்பட்டது.
தெய்வநல்லூர் கதைகள் 10
முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார்.
தெய்வநல்லூர் கதைகள் 11
அந்தப் புள்ளையும் பாவம்தானல. அவளும் நல்லாப் படிக்க பஸ்ட் ரேங்க்கு புள்ளன்னாலும் பீத்தகாரியா இல்லாம சேக்காளியாத்தான இருந்தா. “ சிவாஜி முதன்முறையாக ஒரு “கேர்ள்க்கு” நிகழ்ந்ததைப் பொருட்படுத்தி வருந்தியது எனக்கு வியப்பாக இருந்தது. இனி நாமும் பிரேம், சிவாஜி போல “கேர்ள்ஸ்”காக யோசித்து வருத்தப்பட வேண்டுமென்று பின்னாட்களில் நாங்கள் பலரும் நினைத்துக் கொண்டதற்கு இச்செயலே அடிப்படை.
தெய்வநல்லூர் கதைகள் -12
உள் பிரகார சுற்றுப் பாதை கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பில் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி) சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம்.
தெய்வநல்லூர் கதைகள் 13
பெரிய கோவில் சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம். வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு “தெய்வநல்லூர் கதைகள் 13”
தெய்வநல்லூர் கதைகள் 14
அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியான நியூ ஏல் இங்லீஷ் ஸ்கூல் நடத்திய ஆண்டுவிழா. எல் கே ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை – எல் கே ஜி யை முதன்முதலில் தெய்வநல்லூரில் அறிமுகம் செய்த நர்சரி பள்ளி நியூ ஏல் இங்க்லீஷ் ஸ்கூல் என அறிக. தெய்வநல்லூரே வியக்கும்வண்ணம் ரதவீதியில் பந்தல் மேடை போட்டு புளியங்குடியிலிருந்து மைக் செட்டும், சங்கரன்கோவிலில் இருந்து டிஸ்கோ லைட்டுகளும்( போட்டோ எடுக்கும்போது அடிக்கும் ஃப்ளாஷ் போல மேடையில் அடிக்கும் லைட்டும்
தெய்வநல்லூர் கதைகள்
பெண்கள் உடைமாற்றும் அறையை ஆரம்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார்கள் மாடசாமி கோஷ்டியார். ஒப்பனையாளர் மற்றும் டீச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து உள்ளே இருந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. பெண்களும் சன்னல் மூடியிருக்கிறது என்ற நினைப்புடன் சன்னலை ஒட்டிய மூலையில் உடைமாற்றியிருக்கிறார்கள். ( ஆனால் சன்னல் கதவின் கொக்கியை ஒட்டி ஈர்க்குச்சி நுழையும் அளவு அறுக்கப்பட்டிருந்த நுண்ணிய இடைவெளி,
தெய்வநல்லூர் கதைகள் – 16
தோட்டத்துக்கு நடுவில் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட காய்கறி பாத்திகளிலிருந்து கொடிக்கால் கத்திரிக்காய் எனப்படும் வெள்ளைக் கத்திரிக்காய், சிவப்பு வெண்டைக்காய், பச்சை மிளகாய், ஈத்தக்குச்சியின் கையை விட பருமனாக இருக்கும் மலை முருங்கை, தோட்டத்துக்கு வெளியே மலைச்சரிவில் நிற்கும் புளியமரத்திலிருந்த பாதி பழுத்த புளிக்காய்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. சுனா கானா எங்களுக்கெலாம் பணிப் பகிர்வு செய்து கொடுத்தார்.
தெய்வநல்லூர் கதைகள்
பண்டப் பரிமாற்றங்களில் அவர் முன்பு காட்டிய நாசூக்கான நனி நாகரிகத்தன்மை குறைந்து இயல்பான போக்கு தென்பட ஆரம்பித்தது. சில பண்டங்களை அவரே கேட்டு வாங்கி உண்டு மகிழ்ந்தார் ( டொம்ப்ளீ, கருவடாம்ல வெங்காயம் சேர்க்க மாட்டா எங்க ஆத்துல, நீ அன்னைக்கு எடுத்துண்டு வந்த வடாத்துல வெங்காயம்லாம் போட்டு நல்லாருந்தது. நாளைக்கு எடுத்துண்டு வர்றியா? – பிரேம்). நோன்பு காலங்களில் மாலை நேரம் பெரிய பள்ளிவாசல் போனால் பாட்ஷா எங்களுக்காக போணி ஒன்றில் நோன்பு கஞ்சியுடன் காத்திருப்பார்.
சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
ஒரே ஆறுதலாக அமைந்த வகுப்பு தமிழ் வகுப்பு. ராயகிரியிலிருந்து வரும் ஜெயராஜ் சார்தான் தமிழ் எடுத்தார். அவர் வகுப்பில் மட்டும்தான் எல்லோரும் சிரிக்க முடிந்தது. செய்யுள் பகுதி என்றாள் எவர் தனி உற்சாகம் அடைவார். புத்தகத்தில் உள்ள பாடல்களைத் தாண்டியும் அவர் சொல்லிக் கொண்டே போவார். வகுப்பில் 3 முறைகளுக்கு மேல் சந்தேகம் கேட்கக்கூடாது என பிற ஆசிரியர்களால் நிறுத்தப்பட்டிருந்த பிரேமுக்கு ஜெயராஜ் சார் வகுப்பில் எந்தத் தடையுமில்லை.
தெய்வநல்லூர் கதைகள் – 19
மதிய வகுப்புகளில் முதல் வகுப்பு மீசை சாருடையது என்பதால் அதிகம் பதட்டப்பட வேண்டியதில்லை என ஆறுதல் கொண்டோம். மீசை சார் வரும்போதே ஓரக்கண்ணால் பிரேமை கவனித்தவாறே வருவது தெரிந்தது. இயல்பாக இருப்பது போல பாடத்தை ஆரம்பித்தவருக்கு ஐந்து நிமிடங்கள் கூட தாங்க முடியவில்லை. பிரேமை தன் இருக்கை அருகே அழைத்தார். உரையாடல் இருபது விநாடிகளில் முடிவடைந்தது. மீசைக்குள் ஒரு இளநகை அரும்புவதை எங்களால் உணர முடிந்தது. அதன்பின் வகுப்பு வழக்கத்தை விட இனிமையாக போனது.
தெய்வநல்லூர் கதைகள் – 20
இன்று இருப்பதுபோல தேர்வானாலும் ஆகாவிட்டாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பும் முறை அன்று இல்லை. ஆகவே சில வகுப்புகளில் இருமுறை (சிலர் மூன்று முறை) அமர்ந்து வந்த தகை சால் மாணவர்கள் சிலர் எல்லா வகுப்பிலும் உண்டு. அவ்வாறே உடலால் இளமையும், மனதால் முதுமையும் எய்திய மாண்பமை மாணாக்கரும் உண்டு. இவர்கள் இருவரும் இணைவதால் உருவாகும் அணியே வகுப்புகளில் அதிருப்தி அணி என ஆனது. சரியாக மீசை வளராத வாழைத்தண்டு கால்களோடு எங்கள் குழு போன்ற “நல்மாணாக்கர்” முதல் வரிசைகளில் அமைய முருங்கைக் கம்பளியின் முதுகுமயிர் வரிசையென அமைந்த மீசையும், மயிரடர்ந்த கால்களுமாய் இன்னொரு குழுவும் வகுப்புகளில் அமைந்தன.
தெய்வநல்லூர் கதைகள் – 21
சிறுவர்களை கூட்டி வைத்து விளையாடுவதாக கேட்டவர்களுக்கு குருசாமியண்ணன் சொன்ன பதில்களின் தொகுப்பாக இப்பதிலைச் சொல்லலாம் – “அதென்னடே சின்னப்பயலுகங்கே? நீ பொறக்கையிலேயே மீச மயிறோடயே பொறந்தயோ? பள்ளிக்கூட பாடத்தக் கூட படிக்கமாட்டாம படிப்ப நிப்பாட்டுனவன்லாம் பெரிய மனுசன். பாடத்தத்தாண்டி பொஸ்தகம் படிக்க இவங்கல்லாம் சின்னப்புள்ளைக, என்னடே?
தெய்வநல்லூர் கதைகள்
ன்று மாலையே வசந்தம் சந்திப்பில் டிரிப்பிள் எஸ் சார் இதில் ஏதோ விஷமமான வேலை நடந்திருப்பதாக தோழர் குருசாமியிடம் ஐயப்பட்டார். ஆகவே மறுநாளே இருவருமாக கிளம்பி திருனவேலிக்கு சென்றார்கள். கட்சி மற்றும் சங்க ஆட்கள் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன. அன்று இரவு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கட்சி அலுவலகத்தில் தங்கிய இருவரும் மறுநாள் தெய்வநல்லூர் திரும்பினார்கள். கைவசம் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த வேண்டி உடனே குருசாமியண்ணனால் அழைக்கப்பட்ட உள்ளூரின் ஒரே வக்கீல் குமாஸ்தாவான நயினா(ர்)ப்பிள்ளை வரவும் பேசியதில் ஒரு விஷயம் தெளிவானது
தெய்வநல்லூர் கதைகள் 23
எம் எஸ் சி சார் வந்ததும் பிரார்த்தனை ஆரம்பிக்கையில் கேட்வாசலுக்கும் பிரார்த்தனை மாணவர்கள் கடைசி வரிசைக்கும் நடுவில் நின்று கொண்டார். ஆரம்பித்த நொடிக்குப் பிறகு வருபவர்களை போக்குவரத்து காவலர் போல கைகாட்டி ஒரு ஓரத்தில் நிறுத்தினார். முடிந்ததும் வருபவர்கள் தனி குழு. முதல் குழுவினரை பிரார்த்தனை முடிந்ததும் வரிசையில் நிறுத்தி பெயர், வகுப்பை குறித்துக் கொண்டு இடது கையை நீட்டச் சொல்லி பிரம்பால் ஒரு அடி. ஒரு வாரத்தில் இருமுறை தாமதமாக வந்தால் இரண்டாம் குழுவுடன் சேர்க்கப்படுவார். இரண்டாம் குழுவுக்கான தண்டனை சற்று வித்தியாசமானது. இரண்டாம் குழுவினர் மொத்தமாக பள்ளி மைதானத்தை இரு சுற்றுகள் ஓடி வர வேண்டும்.
எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
எம் எஸ் சி சார் செந்நாய்களால் சூழப்பட்ட சிறுத்தை போல தன்னை உணர்ந்தார். அவர் செயலைக் கண்டித்துப் பேசும் மாணவர்கள் ஒருவரைக் கூட இதுவரை அவர் பார்த்ததில்லை. இங்கே ஒரு பையனை அடித்தால் இத்தனை பேர் வந்து எதிர்ப்பது அவருக்கு திகைப்பை கொடுத்தது. ஆனாலும் இந்தப் பயகளுக்கு நாம என்ன பதில் சொல்றது என நினைத்தவரைப் போல மறுபடி பிரம்பை ஓங்கினார். அனைவரது பார்வையும் தன்னை வெறுப்புடன் பார்ப்பதை உணர்ந்த நொடி எம் எஸ் சி சார் தன்னிலை இழந்தார்
மொகரைல சவக்களை
எம் ஏ என் சார் கேட்பதற்குக் கூட காத்திராமல் நாங்கள் நடந்ததைச் சொன்னோம். முக்கியமாக எதையுமே கேட்காமல் நேரே போய் படுத்திருந்த பிரேமை அடித்து எழுப்பியதையும், பிரேமிடம் எதையும் கேட்காமலேயே தொடர்ந்து அடித்ததையும், நாங்கள் அவரை தடுக்க முயற்சித்ததையும் நால்வருமாக சொல்லி முடித்தோம். எம் எஸ் சி சார் முகத்தில் அதுவரை இருந்த “ஹேண்ட்ஸம்நெஸ்” மெல்ல வடிந்து ஜெயராஜ் சார் வகுப்பில் வைவதைப் போல “மொகரைல சவக்களை” வந்தமர்ந்தது.
தெய்வநல்லூர் கதைகள் – 26
அதுவரை குழப்பமாகவே இருந்த எங்களுக்கு சூழலின் விபரீதம் புரிந்தது. ஆனால் எம் எஸ் சி சார் எவ்வித வெறுப்பும் வெளிப்படாத முகத்தையே காட்டினார். இதற்கு முன் இந்த வகுப்புக்குள் தான் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (பெயர், படிப்பு – என் பேரும் படிப்பும் ஒண்ணுதாண்டே ) தன்னுடைய குடும்பம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஒவ்வொருவரையும் குடும்பம் குறித்து சொல்லச் சொன்னார். வழக்கம் போல முன் பெஞ்சு மாணவனாகிய தெண்டிலு எழுந்தபோது அவரை கையசைவால் அமர வைத்தவர் –“அதென்னடே, மொத பெஞ்ச்சுன்னதும் எல்லாத்துலயும் மொத ஆளா வந்துரணுமா? அடுத்தவனும்தான் வரட்டுமே” தெண்டிலு முகம் குழப்பமானபோது பிரேம் முகம் இறுக்கமானது.
தெய்வநல்லூர் கதைகள் -27
கணிதத் தேர்வில் தன்னுடைய கணக்கு சரியாக இருந்தும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பிரேம் எம் எஸ் சி சாரிடம் முறையிட்டார் (சார், நீங்க சொல்லிக் கொடுத்தபடிதான் சார் இந்தக்கணக்கை போட்ருக்கேன். ஏழு ஸ்டெப்தான சார் மொத்தம், ஏழும் சரியாத்தான போட்ருக்கேன். ஆனா 5 க்கு மூணு மார்க்தான் சார் போட்ருக்கீங்க- விடைத்தாளை நீட்டியபடி). எம் எஸ் சி சார் சிறிதும் அலுங்காமல் பிரம்பை கையில் எடுத்தபடியே துரையை அழைத்து அவர் விடைத்தாளை வாங்கி பிரேம் முகத்தின் முன் நீட்டினார்
தெய்வநல்லூர் கதைகள்- 28
தோழரண்ணனிடம் முன்பே நாங்கள் சொல்லியவற்றை அவர் டிரிப்பிள் எஸ் சாரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் மெல்ல எம் எஸ் சி சாருக்கும், பிரேமுக்குமான உரசல் குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் ‘பழிவாங்கல்களையும்’ சொன்னோம். டிரிப்பிள் எஸ் சார் முகம் இறுகியது. தோழரண்ணன் கூட அதிர்ச்சி அடைந்தார்
தெய்வநல்லூர் கதைகள்- 29
வாரத்தேர்வு தண்டனை முறைகளில் மாற்றம் வரக் காரணம் நாங்கள் தொடர்ந்து 100% மதிப்பெண்களை அடைந்ததே. எங்களை மாட்டிவிட வேண்டி கடினமான கணக்குகளைக் கேட்டால் அவரிடம் தனிப்பயிற்சிக்கு வருவோர்தாம் அதிக அடிகளைப் பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருந்தனர். ஆகவே “கெரில்லா” தாக்குதல் முறைகளைக் கையாள ஆரம்பித்தார்.
தெய்வநல்லூர் கதைகள்- 30
தயாராக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தனக்கு வந்திருக்கும் புகாரில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருப்பதாக குறிப்பிட்டார். அதன்பிறகும் இதை எம் எஸ் சி சார் மறுப்பாரேயானால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளியில் விசாரணை செய்யப்படும் என்றார். முதல் சுற்றில் தோல்வி அடைந்ததாக உணர்ந்த எம் எஸ் சி சார் தான் தாக்கவில்லை எனவும் தண்டித்தது அம்மாணவனின் கல்வித்தரம் உயரவே எனவும் அதனால் அம்மாணவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் வாதிட்டார்.
தெய்வநல்லூர் கதைகள்- 31
ஆனால் அந்த விடுமுறை ஒரு வதையாக மாறிப்போனது. புதன்கிழமையிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம் என்ற மகிழ்வில் விடிந்த ஒரு திங்கள்கிழமை காலை ஊரின் பொது இடங்கள் சிலவற்றில் கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களை ஒத்த ஆண்,பெண் உருவங்கள் உடலுறவின் எல்லா நிலைகளையும் முயற்சிப்பது போன்ற கரிக்கோடு ஓவியங்கள் தென்பட்டன. அதில் ஆணுக்கு நேராக பிரேம், பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் பெண் படத்துக்கு நேராக சங்கீதா, பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தது.
தெய்வநல்லூர் கதைகள்- 32
அன்று மாலை சந்திப்பில் யக்கா கொதித்தார் – “பிரிக்காஷன், டிக்காஷன்னு .. அறிவில்லாதவன விட தனக்குதான் அறிவிருக்குன்னு நெனக்கறவன் நாக்குலதான் இபிலீஸ் எறங்குவான்னு நம்ம உப்புக்கண்டத்தோட பெரிய அத்தா சொல்லுவாரு. சரியாத்தாம்ல இருக்கு, சும்மா ரெண்டு வரிக்கு ஒருக்கா இங்லீசுல பேசுனா அறிவாளின்னு நெனப்பு அவருக்கு. இங்க்லீசுதாம்ல இவருக்கு இபிலீசு. மீச சார், தமிழ் சார்லாம் அதுக்கப்பறம் ஒரு வார்த்த பேசுதாங்களா அதப்பத்தி? புதுசா வந்த வேல்முருகன் சார் கூட அத மறந்துட்டு படிப்பைப் பாருடேன்னு அன்பாத்தான சொன்னாரு. நீ ஏம்டே பிரேம் அவர் முன்னாடி அழுத?”
தெய்வநல்லூர் கதைகள்- 33
அந்த இன்னொரு குறிப்பேடு கலையக்காவுடையது. பிரேம் மிக இயல்பாக டெஸ்க்கின் உள்ளே வைத்து அக்குறிப்பேட்டை சோதித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நான்காக மடிக்கப்பட்ட இரு பக்க கடிதம் ஒன்று குறிப்பேட்டின் உள்ளட்டைக்குள் இருந்தது. இன்னும் இயல்பாக அக்கடிதத்தை எடுத்த பிரேம் தன் புத்தகத்திற்குள் செருகி, விரித்து பாடத்தை புத்தகத்தில் கவனிப்பதுபோல அக்கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். இவை அனைத்துமே பிரேம் சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டவை.
தெய்வநல்லூர் கதைகள்-34
அன்றைய நாளின் மாலையில் பிரேம் தள்ளாட ஆரம்பித்ததும் நாங்கள் சற்று பயந்தோம். ஆனால் பிரேம் சமாளித்துக் கொண்டார். என்னை அழைத்து ஜெயராஜ் சார் மேசையில் இருக்கும் குறிப்பேட்டை கொண்டுவர முடியுமா எனக் கேட்டார். காளிமுத்து அண்ணன் கேட் அருகே வருகையில் நான் பாய்ந்தோடி என் பை உள்ளே இருப்பதாகவும், அதில்தான் வீட்டின் ‘தாக்கோல்’ இருப்பதாகவும் கெஞ்ச, ஒரே நிமிசத்துல ஓடி வந்துரணும் என அனுமதித்து வேறு எவரும் உள்ளே வராமல் நின்று கொண்டார். நான் பாய்ந்து ஓடி ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றபோது அங்கு அந்த குறிப்பேடும் இல்லை, ஜெயராஜ் சாரும் இல்லை.
