தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 15 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெண்கள் உடைமாற்றும் அறையை ஆரம்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார்கள் மாடசாமி கோஷ்டியார். ஒப்பனையாளர் மற்றும் டீச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து உள்ளே இருந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. பெண்களும் சன்னல் மூடியிருக்கிறது என்ற நினைப்புடன் சன்னலை ஒட்டிய மூலையில் உடைமாற்றியிருக்கிறார்கள். ( ஆனால் சன்னல் கதவின் கொக்கியை ஒட்டி ஈர்க்குச்சி நுழையும் அளவு அறுக்கப்பட்டிருந்த நுண்ணிய இடைவெளி,

தெய்வநல்லூர் கதைகள் -12

This entry is part 12 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

உள் பிரகார சுற்றுப் பாதை  கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பி‌ல் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு  உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி)  சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம்.

தெய்வநல்லூர் கதைகள் 10

This entry is part 10 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார்.

தெய்வநல்லூர் கதைகள் -8

This entry is part 8 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

பிரேம் திரும்பி வருகையிலேயே அவர் முகம் அரியர்ஸ் அறிவிப்பினைக் கண்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகியின் முகத்தை ஒத்திருந்தது கண்டு நாங்கள் இனி யோசிக்க வேண்டியதில்லை என்ற ஆசுவாசம் பற்றி பெருமூச்சு விட்டு எங்கள் முகத்தையும் மலர்த்தினோம். சிவாஜிதான் வந்தவுடனே கேட்டார்- “ காயா பழமா ?”. புன்சிரிப்பைச் சிந்திய மறுநொடியே அதற்கான பிராயசித்தமான கடுகடுப்பை முகம் பூசிக் கொண்டு பிரேம் விவரங்ககளை எடுத்துரைத்தார். விவரம் என்னவெனில் வெள்ளி மாலை பள்ளி விட்டதுமே சங்கீதா வீட்டினருடன் கிளம்பி நாகர்கோவில் செல்கிறார், அங்குள்ள ஆச்சி வீட்டில் சனி,ஞாயிறு இருந்து கொண்டாடிவிட்டு திங்கள் அதிகாலை கிளம்பி தெய்வநல்லூர் வந்து சேர்ந்து உடனே பள்ளிக்கு வந்து விடுவதால் திங்கள் அன்று ஒப்படைக்க வேண்டிய வீட்டுப்பாடங்களை எடுத்துச்  சென்று எழுத பெரிதும் சிரமப்பட்டிருக்கிறார்.  ஒரு திங்களன்று வீட்டுப்பாடம் எழுதவில்லை என வீட்டுப்பாட நோட்டை வாங்க வந்த தெண்டிலிடம் சொல்ல தெண்டிலார் காரணம் வினவ தன் நாகர்கோவில் பயணத்தை சொல்லியிருக்கிறார்.