கர்ணனும் குந்தியும்

தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும்.

சாமுண்டியின் குழி

அவன் கற்படிகளில் ஏறி நடந்து கோயிலின் முற்றத்தில் மறைந்தான். விதியைப் போல பயமுறுத்தித் தன் முன்னால் நின்ற செங்குத்தான சுவர்களை ருக்மிணி வெறித்தாள். அந்தச் சுவர்கள் பாறைகளிலிருந்து வடிக்கப் பட்டவை ; கீழே ஒரு சிறையைப் போல சிறிது உயர்த்தப்பட்ட பகுதி. யாருமே, காற்று கூட அவளுடைய வேய்ந்த சிறிய குடிசையைப் பார்க்க முடிந்ததில்லை

தோழமை 

“உன்னோடு இப்படிப் பேசினா மனசு லேசானா மாதிரி இருக்கு கிஷன்” கொஞ்சம் சாதாரண நிலைக்கு வந்து சொன்னாள். திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு கிஷன் வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்கு வரும் வழியில்  கெளரி ஆத்தாவின் பார்வை அவனுடைய முதுகில் குத்துவது போல உணர்ந்தான்.  

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தனர்

This entry is part 8 of 8 in the series நள சரித்திரம்

ஓ நளனே! அவள் ஒரு தவறும் செய்யவில்லை. அரசனே, அவள் உன்னையோ, உன் உறவு மக்களையோ, குற்றம் சொல்லவும் இல்லை, எதையும் விட்டுக் கொடுக்கவும் இல்லை.  மூன்று ஆண்டுகளாக உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாள். யோசித்து யோசித்து உன்னை உசுப்பி எழுப்பவே இப்படி ஒரு செய்தி உன் காதில் விழச் சொல்லியிருக்கிறாள்.  நாங்கள் சாட்சி

தேரோட்டியான நளன்

This entry is part 7 of 8 in the series நள சரித்திரம்

மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். ‘ஒரு வேளை அவளால் தாங்க முடியாமல் போயிருக்கும்.  அல்லது என்ன உசுப்பி எழுப்பவே கூட செய்திருக்கலாம். ஆ!  வேறு விதமாக விதர்ப ராஜ குமாரி நினைத்திருந்து என்னை விலக்கி விட்டால் என்ன செய்வேன். நான் அவளுக்கு இழைத்த துரோகத்தை விடவா?  என் பாப செயல்கள், அறிவில்லாமல் நடுக் காட்டில் கை விட்டது – இவைகளை எந்த அளவு தான் பொறுக்க முடியும், உலகில் சாதாரண பெண்கள் செய்யலாம், இவளுமா?’ 

நளனும் கார்கோடகனும்

This entry is part 6 of 8 in the series நள சரித்திரம்

நளனும் நடந்தான். ஆனால் பத்தாவது காலடியில் அந்த நாகம் அவனைக் கொட்டியது.  உடனே நளனுடைய உருவம் மெள்ள மெள்ள மாறியது.  அந்த நாகம் தன் இயல்பான உருவை எடுத்துக் கொண்டது, ஆனால் நளன் தன் இயல்பான உருவை இழந்தான்.  கார்கோடகன் சொன்னது: நள மகாராஜா, உன் அழகை தான் இழந்தாய். வருத்தப் படாதே. அந்த கொடியவர்கள் உன்னை அடையாளம் காண முடியாது. உன்னை ஏமாற்றியவர்கள் இன்னமும் உன்னைத் தேடுகிறார்கள்.

தஞ்சம் புகுந்த தமயந்தி

This entry is part 5 of 8 in the series நள சரித்திரம்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன்.  இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?  

பிரிந்து சென்ற நளன்

This entry is part 4 of 8 in the series நள சரித்திரம்

நளனின் உடலில் இருந்து அவனை ஆட்டுவித்த கலி அரசனை விடுவானா?    அவளை ஏறிட்டு பார்த்த அரசன் நளன், ஒரு வார்த்தையும் பதில் சொல்லாமல், திரும்ப ஆட்டத்தில் முனைந்தான்.   நாட்டு மக்கள் மிக்க வருத்தத்துடன்  திரும்பினர்.  யுதிஷ்டிரா! அந்த புஷ்கரனும், நளனும் தொடர்ந்து பல மாதங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.  பழைய நளனுடைய நற்குணங்கள்  வெறும் பேச்சு பொருளாக ஆயிற்று.  

முதல் மல்லிகைப்பூக்கள் (தாகூர் – பிறைநிலா)

மேகங்கள் மிதந்து செல்லும் ஆகாயத்தில் அவற்றிற்கு வடிவங்கள் (யானை, சர்க்கஸ் கோமாளி, கரடி) அமைத்துக் கொடுத்து அவற்றைப் பெயர்சொல்லி ஊகிக்கக் கூறி விளையாடும் குழந்தைகள் விளையாட்டு! பிற்காலத்தில் திறந்தவெளிக் கச்சேரிகளில் ஆகாயத்தை நோக்கியவாறே கேட்ட ‘சௌந்தரராஜம் ஆச்ரயே’வில் பாடகர் ‘நந்த நந்தன ராஜம்’ எனப்பாடும்போது குட்டிக் கிருஷ்ணனின் லீலைகளை அந்த மேகங்களில் கண்டு களிக்கத் தோன்றியது.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 11 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து

This entry is part 3 of 8 in the series நள சரித்திரம்

யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது.  இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம்.   இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.   

தமயந்தியின் ஸ்வயம்வரம்

This entry is part 2 of 8 in the series நள சரித்திரம்

தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது.  போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்?  நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின்  என்னை நம்ப வேண்டுமே,  நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா?

நள சரித்திரம்

This entry is part 1 of 8 in the series நள சரித்திரம்

தன் தயக்கத்தையும், வெட்கத்தையும் கடந்து வந்து, தன் விருப்பத்தை தெரிவித்தாள். தானும் இது வரை கேள்விப் பட்டதில் இருந்து நளனை விரும்புவதைச் சொன்னாள்.  ஒத்த மனமுடைய இரு உயிர்கள் இணவது தான் இயல்பு. பறவை இனம் வேறு இனத்தை விரும்புமா?  தன் தந்தை மறுக்க மாட்டார். ஆயினும் வேறு காரணத்தால், விதியின் விளையாட்டால் வேறு விதமாக அவரே நினைத்தால் நான் உயிரை விடவும் தயங்க மாட்டேன் என்றாள்

ஸ்ரீ ஹர்ஷ கவியின் நைஷத நூலில் தத்துவங்கள்

முதல்வர், ஒரு பொருளின் நிழலே இருட்டு என்பதையே ஆக்ஷேபித்தார்.  ஏனெனில் நிழல் அசையும்.  இந்த அசைவு நிழலின் தன் முயற்சியால் அல்ல. எந்த பொருளின் நிழலோ அது அசைந்தால் இதுவும் அசையும்.  தவிர நிழல் உள்ள இடத்தில் குளுமை போன்ற மூல உருவத்துக்கு இல்லாத குணங்களும் இருக்கும்.  அடுத்து ஸ்ரீதர் என்பவரும் இருட்டு என்பது ஒரு பொருளல்ல என்றார்.  ஆனால் இதற்கு ஒரு தனித்வமான வண்ணம்-கருமை உள்ளது.  இது பொருளல்ல என்றால் இது சாத்யமில்லை.  அதே சமயம் பொருளுமல்ல. இதை பரமாணுக்களால் உருவாக்க முடியாது.

1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்

அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.

முடிசூட்டப்படாத ஆட்சியாளர்

அவரது வாழ்நாளிலே அவர் நிம்மதியாக இருந்த காலம் குறைவே. தந்தையிடம் வந்து சேர்ந்ததில் துவங்கி, இரத்த சொந்தங்களிடையே நடைபெற்ற கோர குருஷேத்திர யுத்தம் வரை அவர் பார்த்தது துரோகங்களும், பகையுமே. இருந்தும், அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை.

ஹர்ஷனின் உறுதிமொழி

என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும்  வரை,   என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை,  என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து  தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன்.  இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்

கண்டான் சகோதரியை!

மைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள்.   யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும்.   போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள்.  வழியில் பேரீச்ச மரங்கள்  உண்டு. முள் கிழித்ததோ என்னவோ.  தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன.  தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்

இராஜகுமாரனின் மன விசாரங்கள்

தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும்  கவனித்துச் செய்தார்.  என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே.   ஏன் இப்படி செய்தான்?  அப்படி என்ன துக்கம் அல்லது கவலை?  தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்

சகுனம்

எனக்கு முன்னால், நடைபாதையில்,ஓர் இளம் ஜோடி. அந்த இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். அவளுடைய நீண்ட கழுத்து.. வட்டமான கழுத்து, அவன் உதடுகளால் அதை எட்ட முடியவில்லை. அவன் என்ன சொல்கிறானென்று அவள் கவனிக்கவில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் முன்னால் நின்றிருக்கலாம். அவர்களால் இன்னும் கொஞ்சம் இந்தப் பக்கம் நகர்ந்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால், அவன் என்ன பேசினான் என்பதை நானும் கேட்டிருக்க முடியும்

பெருங்காய கச்சோடி

நான் இலந்தை ஊறுகாய் போட போகிறேன். உனக்கு கொஞ்சம் வேணுமா? ஊறுகாய் இன்னும் தயாராகவில்லை நான் வெல்லம் மட்டும் தான் சேர்த்திருக்கிறேன்.” இப்படியாக குசுமும் நானும் மறுபடியும் பேச ஆரம்பித்தோம். குசும்  இலந்தை ஊறுகாயை என் கையில் தந்ததுமே என்னுடைய கோபத்தையும் வலியையும் நான் மறந்து போனேன். நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு நான் குசுமின் அறையை ஒட்டியிருந்த மாக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இருந்தன

ஹர்ஷ சரித்திரம்

ராஜ்யஸ்ரீ  தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள்.  சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை.  எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.

ஸ்வப்ன வாசவ தத்தா – 8

This entry is part 8 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

அவந்திகா, வேகமாக கட்டிலை விட்டு இறங்கி கை கூப்பி மனதால் வணங்கி விட்டு வெளியேறினாள். இவ்வளவு கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு முதன் மந்திரி செய்த திட்டங்களுக்கு ஒத்துக் கொண்டு இங்கு வந்து பணிப்பெண் போல இருந்து வருகிறேன், அனைத்தும் வீணாகும் என்ற எண்ணம் அவளை உந்தித் தள்ளியது. இருந்தும் கட்டிலில் தேடுவது போல இருந்த உதயணனின் கையை எடுத்து  அருகில் படுக்கையில் வைத்து விட்டு, யாரும் பார்க்கும் முன் போய் விட வேண்டும் என்ற பரபரப்புடன் வெளியேறவும்.  உதயணன் விழித்துக் கொண்டு யாரது,  வாசவதத்தே என்று அழைக்கவும் சரியாக இருந்தது.  

பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும்

This entry is part 7 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

பணிப்பெண், இளவரசி,  அவந்திகா கண்கள் கலங்குகின்றன, என்ன காரணம்? திரும்பிப் பார்த்த பத்மாவதியும் விசாரித்தாள். அவந்திகா சமாளித்தாள், இந்த வண்டுகளை கிளப்பி விட்டதில் தூசியை தட்டி விட்டு விட்டது. என் கண்களில் விழுந்திருக்கும் போல.  வேறு ஒன்றுமில்லை.  இருக்கலாம் என்று பத்மாவதியும் ஆமோதித்தாள்.

தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்

மிருக ராஜனின் மகன் போல- சிங்கத்தின்  குட்டி – கூட்டில் அடைத்து இருப்பது போல எங்கும் ஆயுதம் தரித்த  காவல் வீரர்கள் சுற்றி நின்றனர்.   ஹர்ஷன், தாத்ரியின் கை விரலைப் பற்றிக் கொண்டு ஐந்தடி வைத்தான்.  அந்த சமயம் மூத்தவன் ராஜ வர்தனன் ஆறாவது வயதை அடைந்தான். மகாராணி ராஜ்யத்தின் செல்வத்தை மேலும் கூட்டுவது போல அடுத்து கருத் தரித்தாள். பகவான்  ஸ்ரீமன் நாராயணன் பூ தேவியை தாங்கியது போல என்று வர்ணிக்கிறார் கவி.  பின்னால் ராஜஸ்ரீ என்றே அழைக்கப்பட இருக்கும்  பெண் மகவை கருவுற்றாள். 

தன் கணவர் மற்றொரு பெண்ணிற்கு உரியவனாக ஆகப் போகிறான்

This entry is part 6 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

கூடை நிறைய பூக்களுடன் ஒரு பணிப் பெண் வந்தாள்.  அம்மா அவந்திகே! உங்களைத் தான் தேடினேன். இந்த பூக்களைக் கொண்டு மணமகளுக்கான வர மாலையை உங்கள் கையால் கட்டிச் தரச் சொன்னார்கள். உற்ற உறவினர் அல்லது சகிகள் தான் செய்ய வேண்டும். பத்மாவதி ராஜ குமாரிக்கு நீங்கள் தானே உற்ற தோழி.

ஹர்ஷ சரித்திரம் – 4

என் பால பருவம் வெறுமையாக இருந்திருக்கவில்லை. “சதாயுஷ: புருஷ:” மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு.  அதற்குள்  தங்களைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடனேயே வளர்ந்தவன் நான்.  மறு உலகம், மறு பிறவி உண்டு என்பதை நம்புவதால்,  இதையும் நம்பி அதற்கான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப் பட்டவன்.  என் பால பருவம் வீணாக ஆனதாக நான் நினைக்கவில்லை. எந்த குறையும் இல்லை. 

ஸ்வப்ன வாசவ தத்தா – 5

This entry is part 5 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

யௌகந்தராயன் என்ற அந்த மந்திரி அந்தணர் வேஷத்தில் இருந்தவர் அருகில் வந்தார். வாஸவதத்தாவும் திகைப்புடனே அவரை பார்த்தாள். ராஜ குமாரியின் அருகில் சென்றவர், தேவி! தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.    கஞ்சுகி அருகில் வந்தவள், ஓ நீங்கள்  புதியவரா, சற்று முன் வந்தீர்களே என்றாள். பத்மாவதியும் மரியாதையுடன் ஐயா, சொல்லுங்கள். நானே எதுவானாலும் தருவதாக வாக்களித்து விட்டு மறுப்பேனா, தயங்காமல் சொல்லுங்கள், என்றாள். 

ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள்.  மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம்.  மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது.  கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார்.  தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம்.  கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால  அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார்

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 4

This entry is part 48 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில்   பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய  மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன

ஸ்வப்ன வாசவ தத்தா – 4

This entry is part 4 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

எங்கள் வத்ஸ ராஜன் பிரசித்தமான ராஜ குலத்தில் வந்தவன்.  ராஜ தர்மம் அறிந்தவன். யுவதியான ஏதோ ஒரு பெண்ணை மாணவியாக ஏற்று, பின்  அவளை பாணிக்ரஹணம் செய்து கொண்டால் அபவாதம் வரும் என்று அறியாதவரா?  பாரத வம்சத்தினன்.  தான் மணமகளாக கை பிடித்த பெண்ணிடம் விசுவாசமாக இருக்கும் தீர புருஷன். 

ஹர்ஷ சரித்திரம்- 2

ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான்.  அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது.  வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள்  அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை.

ஸ்வப்ன வாசவ தத்தா – 3

This entry is part 3 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

சகே, ருமன்வான், வாசவதத்தா இல்லாமல் அரசர் கௌசாம்பி வர மாட்டார். இந்த வேஷம் இருக்கட்டும். நாம் சாதாரண பிரஜைகள். அரசரிடம் கொண்ட அபிமானத்தால் யோசிக்கிறோம். புல் படுக்கையில் படுப்பவன் அரச போகங்களை உயர் தர சயனாசனங்களை நினைத்து பார்க்க கூட முடியுமா? அரசனுக்குரிய பட்டு ஆடைகளை, விரிப்புகளை எண்ணித் தான் பார்ப்பானா? நம் வரையில் திட்டமிட்டோம். ஸ்வாமி ஜாதி- செல்வந்தர்கள் வழி.  சிறைக்குள் இருப்பவனுக்கு மோகம் வரச் செய்வதில் கந்தர்ப்பனுக்கு என்ன ஆனந்தம் ? 

வக்கீலின் கடிதம்

அக்கம்பக்கத்தில் கரும்புத் தோட்டம் இருப்பதால் சிராஜ்ஜித்தௌலா சண்டையிட்ட யுத்தகளம் இப்பொழுது காடுமேடாகிக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த மாம்பழத் தோட்டமும் இல்லை. இருந்தாலும் பலாஷி என்ற பெயர் மிகவும் சரித்திரப் புகழ் பெற்று விட்டது. ஸ்டேஷனுக்கு அருகே இந்த மீராபஜாரும் அந்தப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கல்கத்தாவிற்கு நான்கு மணி நேர வழி லாங்கோலா பாசஞ்சரில். கேஷ்டநகர் போகாமல் நல்ல பொருள் கிடைப்பது மிகவும் கஷ்டம்.

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1

பாணருடைய படைப்புகள் நீள நீளமான சம்ஸ்க்ருத கூட்டு எழுத்துக்களால் ஆன வசன நடை.  காதம்பரியில் எளிய சொற்களை பயன்படுத்திய பாண கவி, இந்த ஹர்ஷ சரித்திரத்தில் பத பிரயோகங்களும், வசனங்களுமாக  கடினமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.  பதங்களைப் பிரித்தபின் திரும்ப படித்தால் தான் பொருளே புரியும்,  மற்ற மூன்று நாடகங்கள் பிரசித்தமானவை. ரத்னாவளி, நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா. அவர் காலத்தில் ஹிந்து மதமும், பௌத்தமும் தழைத்திருந்தன என்று அறிகிறோம்.

கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2

This entry is part 1 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க  கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன். 

கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1

This entry is part 2 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாஸவ தத்தா என்ற இந்த நாடகம், அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு கதையின் அடிப்படையில் எழுதப் பட்டது என்று அறிகிறோம். உதயனன், பத்மாவதி என்ற இருவரின் கதை இது. அவர்களின் சந்திப்பும், வாழ்க்கையுமே கதையின் அடிப்படை.   வத்ஸ என்ற ப்ரதேசத்து ராஜா உதயனன். அவன் மனவி வாஸவதத்தா. யௌகந்தராயன் என்ற மந்திரி.  இந்த நூலுக்கு முன்னோடியாக யௌகந்தராயன் என்ற பெயரில் ஒரு நாடகம் இந்த கவியே எழுதியுள்ளார்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 17

அசுர சக்ரவர்த்தி ஆத்திரத்தில் மதியிழந்தவனாக,  ரதத்திலிருந்து இறங்கி த்ரிபுராரி மகனையே, கார்திகேயனையே குறி வைத்து அடிக்கும் எண்ணத்துடன் பயங்கரமான ஆயுதம் ஏந்தி அவர் இருந்த திக்கில் ஓடினான்.  தன்னை நோக்கி வேகமாக ஓடி வருபவனை ஈசன் மகன், கார்த்திகேயன் தூரத்திலிருந்தே பார்த்து, அவன் புஜ பலத்தையும், கோபத்தால் யுகாந்த அக்னி போல ஜொலித்தவனை ,  தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்

ஸ்கின்ஷிப் – பகுதி 2

This entry is part 1 of 3 in the series ஸ்கின்ஷிப்

ஆரவாரமாக வந்து நுழைந்தவர், நிலவறையில் மறைந்து போனார் எங்கள் அப்பா. சுமார் ஒரு வாரம் நாங்கள் அவரை அனேகமாகக் காணவில்லை. பகல் பூராவும் உறங்கினார், இரவில் அலைந்து திரிந்தார். என் அம்மா அவருக்குச் சாப்பாட்டை வெளியில் வைத்துப் போகத் துவங்கினார், அதை ப்ளாஸ்டிக் விரிப்பில் மூடி வைத்திருந்தார். எங்கள் அப்பா எப்படி இருக்கிறார் என்று பார்க்க அவள் நிலவறைக்குள் போவதை நான் பார்க்கவில்லை

4. தெய்வீகப் பணியாளன்

பல திக்குகளிலிருந்தும் எதிர்பாராமல் வரும் சவால்களை சந்தித்து வாழ்வதற்கு மனிதப் பிரயத்தனத்தால் இயலாது. எந்த மானுட சக்தியுமே இதனை எதிர்கொள்ளும் வலுவற்றது. ஆத்மாவின் நிரந்தரமான மகிழ்ச்சி தெய்வத்தின் புன்னகை ஒன்றினாலேயே கிடைப்பது. அது அனைவரையும் இன்பம் கொள்ளச்செய்தும் உண்மையின் வடிவாகவும் திகழ்கிறது.

ஸ்கின்ஷிப் – பகுதி 1

This entry is part 2 of 3 in the series ஸ்கின்ஷிப்

ஒரு தடவை எங்கள் அப்பா, அம்மாவுக்கென்று எதையோ தன் கைகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கருப்பு வெல்வெட் நகைப் பெட்டி. சி-ஓவும் நானும் அதை அவர் தட்டித் திறந்த போது பார்ப்பதற்கு அழைக்கப்பட்டோம், அதில் தங்கத்தில் பதிக்கப்பட்ட சிறிய வைரக்கற்கள் இருந்த காதுக் கம்மல்கள் இருந்தன

குமார சம்பவம் மஹா காவ்யம்- 16

நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர்.  ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும்,

கணப்பின் ஒளி 

விலைச் சீட்டைக் குறி வைத்து நேராகப் போய்ப் பார்த்து,  விலையை எப்படி ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்று சுற்றி இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்கும்படி குறை சொல்லிக் கொண்டு தம் தலையை ஆட்டிக் கண்டனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களும்  விலைகளை ஒப்பீட்டில் சோதித்து வாங்குபவருமான  சிலரைப் போன்றவர் இல்லை என் அம்மா.  விலையைப் பற்றி அவருக்கு அப்படி ஒன்றும் அக்கறை இல்லை. அவரிடம் பணமும் இல்லை, ஆனால் அதை விட ஆழமானது ஒன்று இருந்தது அங்கு. அவர் பொருட்களைப் பார்வையிடுவதை விரும்பிச் செய்தார், ஏனெனில் கடைகளில் தான் இயல்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 15

கார்த்திகேயன், எதிரி பலத்தையும் கவனித்துக் கொண்டான். தன் பக்ஷத்து வீரர்களின் பயத்தையும் பார்த்தான். அம்ருதம் பொழியும் தன் கடைக் கண்ணால் அனைவரையும் பார்வையாலேயே வருடி ஆட்கொண்டு பயப்பட வேண்டாம் என்று அபயம் அளித்து,  கவலையின்றி யுத்தம் செய்வோம் என்று ஆறுதலாக சொன்னான்.    அதனால் பெற்ற உத்சாகம், சக்தி தரனான குமாரன் இருக்கிறான் என்ற தைரியமும், போர் செய்ய தூண்டுதலையும் பெற்றனர். 

நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்

நம்மில் உயிர்க்கும் இறைமையை நாமே நமது உடலைவிட்டுத் தள்ளிநின்று பார்ப்பது போன்ற உணர்வு. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொருள் செறிந்த சொல்நயம்!

தேவதைப் பருப்பொருளின் நெசவு

லியோ-எரிக் ஃபு ஹாங்காங்கிலிருந்து வந்திருக்கும் சுதந்திரப் போராட்டக்காரராக இருப்பாரோ என்ற ஐயத்துடன், பாட்ரிக் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறார். ஒரு கணத்துக்குப் பிறகு, இந்த ஊகச் சிந்தனையைத் தன் புத்திப் பக்கத்திலிருந்து அழித்து விடுகிறார். பெய்ஜிங்கிலிருந்து வருபவர் கூட சுதந்திரப் போராட்டக்காரராக இருக்கக் கூடும். ஒருக்கால் பாட்ரிக்தான் ஜனநாயக மனோபாவம் சிறிதும் இல்லாத மனிதராக இருக்கக் கூடும்.

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 2

This entry is part 46 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது கதையின் அச்சாக,  அதிரியனுக்குப் பதிலாக புளோட்டினாவைக் கையாளுவது எனக்கு இயலாது. தவிர பெண்கள் வாழ்க்கையென்பது வரையறைக்குட்பட்டது; இரகசியம் காக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடியது.  ஆணைப்பற்றி எழுதுகிறபோதே  சில உண்மைகளை அவனுடைய வாயால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.

குமார சம்பவம் மஹா காவ்யம்- 14

படையினரின்  போர்க் கொடிகள் விழுந்து பூமியில் நிரம்பி, புழுதியோ, கடலோ, நீர் நிலையோ எது என்ன என்று புரியாமல்  திசைகள் ஆக்ரமிக்கப் பட்டன. வழிப் போக்கர்கள் சாதாரணமாக திசையை அறிந்து கொள்ளும் ஒரு உபாயமும் பயன் படாதது போல திகைத்தனர்.  யானைகளின் கழுத்து மணிகள் தாறு மாறாக ஆடி, கர்ஜனையாக ஒலிக்க, பெரு வெள்ளம் வந்த நதியின் இரைச்சல் போல கேட்டன. 

குமார சம்பவம் மஹா காவ்யம்- 13

தாயாரையும் அவள் பாதங்களைத் தொட்டு குமாரன் வணங்கினான்.  அவளும் மகனை அணைத்து தன்  ஆனந்த கண்ணீரால் முழுக்காட்டியவளாக மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தாள். வீரனை பெற்றவள் மகிழ்வது இயல்பே.  மடியில் இருத்திக் கொண்டு, உச்சி முகர்ந்து, ‘சத்ருக்களை வெற்றி கொண்டு, செயல் வீரனாக திரும்பி வா மகனே, என்னை உலகில் மா வீரனைப் பெற்றவள் என்று புகழும்படி செய்’ என்றாள்.  

குமார சம்பவம் மஹா காவ்யம்- 9

இந்த வினாடியே என் மகனை உங்கள் சேனாபதியாக நியமித்துக் கொள்ளுங்கள். இவன் அந்த பதவியைப்  பெற சக்தியுடையவனே. சத்ருவை ஜயித்து, தேவ லோகத்தை நீங்கள் அனைவரும் திரும்பப் பெறுவீர்கள்.  இதைச் சொல்லி விட்டு பகவான்  தன் மகனைப் பார்த்தார். அவனோ மகா உத்ஸாகமாக இருந்தான். மிகப் பெரிய உக்ரமான யுத்தம் அதில் பங்கு பெறுவேன் என மகிழ்ந்தான். மகனே! அந்த தேவ விரோதியான அசுரனை வதைத்து விடு என்று சொன்னார்.