இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரதத்தில் அணுவியல், அணுத்தன்மை, புவியீர்ப்பு, இயக்க விதிகள், அணுவின் அமைப்பு என்பதைப் பற்றிய சூத்திரங்கள் இருந்திருக்கின்றன என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ‘வைசேஷிகம்’ என்பது அணுவைப் பற்றி மகரிஷி கனாதா (Kannada) எழுதிய சூத்திரங்கள் அடங்கிய நூல். சூத்திரங்கள் என்பவை புரிவதற்குக் கடினமாக இருக்கும் விஷயங்களை, சுருக்கமாக, நினைவில் நிற்பதற்கு ஏற்ற வழியில், அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் சொல்வதாகும். நம் திருக்குறளை நினைவில் கொள்ளுங்கள்.
Category: அறிவியல்
நான் யார் யாரென்று சொல்லவில்லை
ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.
கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது
இனத் தொடர்ச்சி எனும் இச்சை
அச்சமயம் முன்னர் வந்த பெருங்காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புறாக்களை விரட்டும். இதில் நாங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்- முன்னர் தானியம் கொத்திய பறவைகள் இன்று நொறுக்குத்தீனி கேட்கின்றன. சில இயல்பாகவே தன் பசியை மட்டும் தீர்த்துக் கொள்கின்றன. சில உணவிடுவோருக்கும், உணவை உண்ண வரும் போட்டியாளருக்கும் ஒரே மாதிரி பயப்படுகின்றன. தான் மட்டுமே சாப்பிட்டாலும், தன் இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு உணவு கிடைக்கவில்லையெனில் பகையைப் போராடி துரத்தும் இன உணர்வும் இருக்கிறது.
காலக் கணிதம்
உலகின் மிகப் பெரிய கல்கட்டுமான சூரியக்கடிகாரம் ஜெய்ப்பூரில் உள்ளது. இது யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஜந்தர் மந்தர் என்ற அழகான பெயரில் இயங்கும் இது, முன்- நவீன வானக்கண்காணிப்பகங்களில், துல்லியமாகக் கிரகங்கள் மற்றும், விண்ணகப் பொருட்களின் இயக்கங்களை கணிப்பதற்கும், அறிவதற்கும் உலகத்தில் சிறந்த ஒன்று என யுனெஸ்கோவும், மற்ற வானியலாளர்களும் பாராட்டுகின்றனர். 4609 ஏக்கரில் 19 வானியல் கண்காணிப்புக் கருவிகள் உள்ள ஜந்தர் மந்தர் 1729-ல் கட்டப்பட்டது.
அகிலம் அண்டம்
இவ்விரு சொற்களும் ஒன்றையே சுட்டுவதா? அல்லது அகில அண்டங்களையா? திருவானைக்காவின் அரசி, தாடங்கம் அணிந்த தேவி, அகிலாண்டேஸ்வரி என்ற திரு நாமத்தால் வணங்கப்படுகிறார். அனைத்து அண்டங்களையும் உள்ளடக்கிய அகில நாயகி அன்னை என்ற பொருள் அந்த ஒரு நாமத்தால் உணர்த்தப்படுகிறது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி இந்த உலகில் 68% கரும் “அகிலம் அண்டம்”
நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?
நல்ல வேளையாக, சில கிழ விஞ்ஞானிகள் இந்த விஷயத்திலும் விஞ்ஞான ரீதியில் உதவ முன் வந்துள்ளார்கள். குறிப்பாக, யோகான் ராக்ஸ்ட்ரோம் (Johan Rockstrom) என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, மற்ற பல விஞ்ஞானிகளுடன் கடந்த 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து, தங்களது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்திற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், இந்தப் பகுதியை அவசியம் படிக்க வேண்டும்.
ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)
ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம்.
அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?
நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!
கடலைப் பயிரும் கார்வரும்
கார்வர் முதன்முறையாக அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கற்றுக்கொடுத்தார் பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும்.
கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைப்பயறு சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார்.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
இந்திய ஞானம் தர்க்கத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து உலகிற்குக் கொடையாக அளித்திருக்கிறது. பொது யுகத்திற்கு முன்பான 5-ஆம் நூற்றாண்டில் பாணினி அளித்த சமஸ்ருத இலக்கணம் தர்க்கமாகவும், தர்க்க விதிகளுக்குட்பட்டும் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கேசாவின் ‘நவ்ய ந்யாயா, ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் என்று தர்க்கத்தின் கூறுகளைச் சொல்கிறது.
ஏரோசால் (தூசிப் படலம்)
எல்லாவகை ஏரோசால்களும் சூழலுக்கு ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கடல் உப்பு அடிப்படை கொண்ட வெளிர் நிற ஏரோசால்கள் ஒளியை பிரதிபலிக்கக் கூடியவை. இவை பூமியைக் குளிர்விக்கின்றன.
காட்டுத்தீ கக்கும் ஒளிர் கருநிற (jet -black ) புகைக்கரி சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. அதிக உயரப் பிரதேசங்களில் ஏரோசால் இதைச் செய்வதால் குறைவான வெப்பமே நிலப் பரப்பைத் தாக்குகிறது. கருத்த ஏரோசால் வெண்பனி மற்றும் பனிப் பொழிவுகளைக் கருப்பாக்கி விடுகிறது. அதனால் அவற்றின் ஒளி திருப்பும் திறன் (albedo) குறைந்து பனி உருக ஆரம்பிக்கிறது.
மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை
பெரும்பாலான தொழில்நுட்பங்கள் கடந்த பத்து-15 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்டவை, மெருகேற்றப்பட்டவை. அவற்றினை உருவாக்குவதற்கு, அதற்கு முன்பு சுமார் 30 வருட காலம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைக்க ☺ பணமும், மனமும் கொண்ட நல்லுள்ளங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள்தான் தொழில்நுட்பத்திற்கும், முன்னேற்றத்திற்குமான அஸ்திவாரம்; இப்பொழுது புரிந்திருக்கும், இந்தியாவில் ஏன் இது போல் ஒரு புரட்டிப்போடும், புதுமையான தொழில்நுட்பம் கூட உருவாகவில்லையென்று. இங்கு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி கொடுங்கள் என்று கேட்பது, ஒட்டகப் பாலில் டீ போடுங்க – என்று நாம் கேட்பது போல் பார்க்கப்படும்.
மொபைல் தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G
யூரோப்பிய நாடுகளில் 3G உரிமங்களுக்கு அலைக்கற்றையை ஏல முறையில் விற்றதுவே தொலைத்தொடர்பு தொழிலையே பாதித்த முக்கிய விபரீத சம்பவங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் யூரோப் முழுதும் 3G அலைக்கற்றை ஏலமுறை விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. அலைக்கற்றை விலை இயக்குனர்களால் (operators) தாங்க முடியாத அளவில் இருக்கும் என்று கருதப் பட்டதால் இதற்கு முன்பே இதே போன்ற 3G அலைக்கற்றை ஏல விற்பனை அமெரிக்காவில் கைவிடப் பட்டிருந்தது.
காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021
தடுப்பூசிகளைத் தவிர வாய் வழி உட்கொள்ளும் மாத்திரையான ‘மோல்னுபிராவரை’ (Molnupiravir) ‘மெர்க்’ (Merck) அறிமுகம் செய்தது. அக்டோபரில் (2021) அது தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நோயின் தாக்கத்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிட்சை பெற வேண்டிய அவசியம் பாதியாகக் குறையும் என்று சொன்னது. ….நவம்பர் மாத நடுவில், அமெரிக்காவை முந்திக் கொண்டு பிரிட்டிஷ் கூட்டரசு (U K) இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவும் அந்த் மாத இறுதியில் அனுமதி வழங்கியது.
முன்னர் ‘மெர்க்’ அழுத்திச் சொன்னது போல். கிருமியோ, இறப்போ, சரி பாதியாகக் குறையவில்லை எனத் தரவுகள் சொல்கின்றன. ஆனால், 30% கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மெர்க் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம். அதற்கு அத்தனை அரசியல் தாக்கம் உள்ளது!
லினன்
ஆளி எல்லாவித நிலங்களிலும், வளரும் இவற்றிற்கு மிகக்குறைந்த அளவே உரங்களும் நீரும் தேவைப்படும்..பயிரிடபட்ட நிலத்தில் சத்துக்கள் எல்லாம் ஆளி உறிஞ்சிவிடுவதால் பின்னர் பல்லாண்டுகளுக்கு நிலம் தரிசாகவே விடப்படும்..ஒரு நிலப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் ஆளி சாகுபடி செய்யப்படுவதில்லை. குறைந்த பட்சம் 7 வருட இடைவெளியில் ஆளி பயிரிடுகையில் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கிறது….பயிர் முற்றுவதற்கு முன்னரே அறுவடை செய்கையில் இளம் தண்டுகளின் நார்கள் மிக மிருதுவாக இருப்பதை அறிந்துகொண்டு, விதைகள் உருவாகும் முன்பே அறுவடை செய்யும் முறையை இன்று வரை கையாளும் அயர்லாந்தில் ஆளி விதைகள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.
நூடுல்ஸ் நூடுல்ஸ்!
லக்னோவில் ’மோனோசோடியம் குளுட்டமேட் சேர்க்கப்பட்டு இருக்கவில்லை’ என்று அறிவிக்கும் உறையுடன் இருந்த மேகி நூடுல்ஸின் ஆய்வக சோதனைகள் மோனோ சோடியம் குளுடமேட்டை கண்டறிந்தபோது முதல் அதிர்ச்சியும், ஆயிரம் மடங்கு அதிகமாக காரீயம் இருக்கிறது என்றபோது அடுத்த அதிர்ச்சியும் நாடு முழுவதும் உண்டானது.
நெஸ்லே அப்போது பிரச்சனையின் தீவிரத்தை முழுதாக அறிந்து கொண்டிருக்கவில்லை. விற்கப்பட்ட மேகி பாக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தீர்ப்பை நெஸ்லே அலட்சியமாக எடுத்துக் கொண்டு, மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு 3 வாரங்கள் அமைதியாக இருந்தது.
புவிக்கோளின் கனிமவளம்
இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.
மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும்
ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளிலும் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு ஆராய்ச்சியில் உபயோக்கிப்படும் பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது, ஆனால் தடுக்கப் படமுடியாதது.
சோள பாப்பியும் ஓபியம் பாப்பியும்
இரத்தப்பாப்பிகளும் (Bloodroot -Sanguinaria canadensis) பாப்பிச்செடிவகைதான் என்பதே வியப்பளிக்கும், தண்டுகளில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக இலைகளும் மலர் காம்புகளும் உண்டாகும் இந்த செடியில் இளஞ்சிவப்பு தீற்றல்களுடன் வெண்ணிற மலர்கள் இருக்கும். இச்செடியின் வேர்களை நறுக்குகையில் செந்நிறச்சாறு வருவதால் இதற்கு இரத்தச்செடி என்று பெயர்.
மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்
சிறுகோள் வடிவங்கள்
பெரிய வான்கோள்கள் ஏன் கோள வடிவத்தில் இருக்கின்றன என்பதற்கான எளிய விடை ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் அவை இருப்பதால் தான் என்பதே. ஒரு பொருளின் ஈர்ப்பு இழுவிசை எப்போதும் அதன் பொருள் திணிவின் மையத்தை நோக்கியே இருக்கும். பெருத்து இருக்கும் பொருட்கள் பேரளவு பொருள் திணிவைக் கொண்டிருக்கும்; அதேபோல் அதன் ஈர்ப்பு விசையும் மாபெரும் அளவினதாகவே இருக்கும்.
போன்ஸாய் – குறைவே மிகுதி!
போன்ஸாய் உருவாக்கத்தில் பொதுவான விதிகள் சிலவுண்டு. ஒரு போன்ஸாயின் எந்த இடத்திலும் அதை உருவாக்கியவரை பார்க்க கூடாது என்பது முதன்மையான விதி, அதாவது கிளைகளை வெட்டிய தழும்போ இலைகளை கத்தரித்த தடமோ கம்பிகளோ எதுவுமே பார்வையாளர்களுக்கு தெரியக்கூடாது. போன்ஸாய்கள் ஒரு மெல்லிய துயரை பார்ப்போரின் மனதில் உருவாக்கவேண்டும் என்பதும் இதன் விதிகளில் ஒன்று .
பொதுமங்களும் அரசாங்கமும்
சுற்றுச் சூழல் பேரழிவுகளின் காரணமாக சர்வாதிகார அரசுகள் தங்கள் மக்களுக்கு இயற்கை வளங்களின் கடைசி துண்டங்களைப் போராடிப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் உருவாகி ஒரு வித சூழல் பாசிசத்துக்குக் (ecofacism) கூட வழி நடத்தப்படலாம்; உண்மையில் சமனற்ற கொரோனா தடுப்பூசி விநியோகம் இதை முன் கூட்டியே உலகுக்கு உணர்த்தி விட்டது….எனினும் இதே காரணங்களுக்காகத்தான் அரசியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த போராட்டம் நிகழ்த்தும் ஒரு முக்கிய செயற்களமாக அரசு நிலைத்திருக்கிறது. எனவே அரசு ஒரு மிகையான அமைப்பு அல்லது இயல்பாகவே அது ஒரு மக்கள் விரோத அமைப்பு என்று காட்டுவது விவேகமற்ற நடத்தை என்று உணர்ந்து பொதும உந்தம் (momentum) செயல்பாட்டாளர்கள் அரசு எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.
பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
காற்றுமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தளவு வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படி 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம், உலகின் மிக முக்கிய சூடேற்றும் வாயுவான நீராவி. மேகங்கள் (நீராவி) நம் பூமி, உறையாமல் இருக்க முக்கிய காரணம்.
புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3
நதிகளின் வண்டல்படிவுகள் (sediment deposits) , பயிர்கள் செழிக்க மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அணைகள், நீர்பாசனத்திற்கு உதவினாலும், அதன் மிகப் பெரிய பின்விளைவு வண்டல்படிவுகளில் கை வைப்பதுதான்.
பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?
புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்
இதில் விந்தையான விஷயம் என்னவென்றால், ஏழை நாடுகள், இது என்னவோ பணக்கார நாடுகளின் சதி மற்றும் பிரச்சனை என்று நினைக்கின்றன. உண்மையோ முற்றிலும் வேறு. இது பூமி சம்பந்தப்பட்டது. இதில் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம், நாடு, எல்லைகள் இவற்றுக்குப் பங்கே கிடையாது. பணக்கார ஸ்வீடன் நாட்டையும் ஏழை பங்களாதேஷையும் வேறுபடுத்திப் பார்க்காத பிரச்சினை இது. சொல்லப் போனால், ஏழை நாடுகளை அதிகமாகப் பாதிக்கவல்ல ஒரு பிரச்சனை இது.
நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்?
இன்றைய உருவத்தை அடைவதற்கு முன்னரும்கூட அட்டவணைகள் ‘ஒத்திசைவுகளும், வேறுபாடுகளும்’ கொண்டு பயன்பாட்டில் இருந்தன. பக்கங்களில் எண்கள் அச்சிடப்படத் தொடங்கிய காலத்தில் இவைகள் ஒரு நிலைப்பை அடைந்தன.
இரண்டாவது சூரியன்
சூரியனின் தோற்றத்தைப் பற்றிய இன்றைய “ஒற்றைச் சூரியன்” கருத்துக்கு அடிப்படை மாற்றம் கோரும் கருதுகோளை முன்வைத்துள்ளது. ஆதியில் சூரிய அமைப்பு இரு விண்மீன்கள் விண்வெளியில் ஒன்றை மற்றது வலம்வரும் இருமை விண்மீன் அமைப்பாகத்தான் உருவானது என்பது இவர்களின் கருதுகோள்.
விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
எந்த ஒரு தேர்ந்த விஞ்ஞானியும் பறக்கும் தட்டுக்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், சிலர் இரவில் பார்த்ததாகக் கூறுவர். மேலும், இது வேற்றுக் கிரக ஊர்த்தி என்று கதை கட்டிவிடுவார்கள். இவர்களுக்குத் தனியாக இயக்கம், இணையதளங்கள் என்று ஒரு பெரிய இயக்கமே உள்ளது. சிலர் கொஞ்சம் ஓவராக, வேற்றுக் கிரக மனிதர்களைப் பார்த்ததாகவே கதை கட்டிவிடுவார்கள்.
காவிய ஆத்மாவைத் தேடி…
எதற்குத் தகுதியாக எதைச் செய்தல்? கவிஞன், காட்டும் கற்பனை உலகுக்குத் தக்கதாக மொழியைச் செய்கிறான். தான் கண்ட காட்சியை ரசிகனும் துய்க்க வேண்டிய அளவு அணிகளைச் செய்கிறான். சொல்லவந்த கருத்துக்கும், துய்க்கவந்த ரசிகனுக்கும், மனத்தில் காணும் தனக்கும் தகுந்தபடி மொழியை அவன் செய்யும் பொழுது அங்கு அலங்காரம் பிறக்கிறது. காவிய உலகில் கவிஞனே பிரம்மா. அவன் இஷ்டப்படிதான் படைப்பு. வெளி உலகின் மூல தத்துவங்களையும், முற்ற முடிந்த சித்தாந்தங்களையும் அவன் தன் காவிய உலகைப் படைக்கும் பொழுது…
தலைமைச் செயலகம்
மூளைக்கும், மனதிற்கும் வேற்றுமைகள் இருக்கிறதா? மனதின் ஒரு பகுதி மூளையா அல்லது மூளையின் ஒரு பகுதி மனமா? மனம், சித்தம், புத்தி இவைகளின் தள எல்லைகள் என்ன? இவற்றிற்கான அறுதியான பதிலை தெளிவாக அறிந்திருக்கிறோமா? சைவர்கள் ‘நினைவை’ ஆகாய அம்சம் என்றும், நினைவும், காற்றும் இணைவது ‘பாய் மனம் அல்லது பேய் மனம்’ என்றும், நினைவும் தீயும் புத்தி என்றும், நினைவும் நீரும் சித்தம் என்றும், நினைவும், நிலமும் அகங்காரமென்றும்…
விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
ஓர் அறம் நிறைந்த உலகம் இப்படியிருக்க, மறுபுறம் திரித்தல்காரர்களின் ஜாலங்களையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். இவர்கள், பல முறைகளைப் பல்லாண்டுகளாகப் பயன்படுத்திவந்துள்ளனர்.
விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
லாப நோக்குடைய நிறுவனங்களும் விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றன. லாப நோக்கற்ற மற்றோர் அணியும் அதே முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது. இதில் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுகொள்வது?
அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல்
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சோலார் நெபுலா எனப்படும் வாயு மற்றும் துகள்கள் நிறைந்த சுழலும் பெரு மேகம், வரம்பு மீறிய ஈர்ப்பு விசையால் தகர்ந்து, பின் தற்சுழற்சியால் தட்டையான வட்டத் தட்டாகிப் பெரும்பாலான (99.8%) உட்பொருட்கள் தட்டின் மையத்துக்கு ஈர்க்கப்பட்டுப்பின் அந்த மையமே சூரியனாகியது.
செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்
அறிவுடைப் புதுப்பொருள்
இந்த இரு பரிமாண மின் பகுப்பிகள் பல்வகையான கரைப்பான்களில் (solvents) தங்கள் அணுக்களைக் கரைத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை. வெளிப்புற நிலைகளான வெப்பம், பிஹெச் (pH-potential of Hydrogen) ஆகியவற்றைக்கொண்டு இந்தப் புதுப்பொருளின் அமைப்பு முறைகளை மாற்றமுடியும் என்பதால், குறிப்பிட்ட உடல் பகுதிக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படவேண்டிய மருந்துகளை மிகத் துல்லியமாக அங்கேயே உட்செலுத்த முடியும்.
செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கைச் சர்க்கரை ரசாயனம் சாக்கரீன் ஆகும். 1879–ஆம் ஆண்டு, கரித் தாரில் (coal tar) ஆராய்ச்சி செய்தபோது, கான்ஸ்டான்டீன் ஃபால்பெர்க் என்ற வேதியல் விஞ்ஞானியால் ஏதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தான் கண்டுபிடித்த ரசாயனத்திற்குச் சாக்கரீன் என்று ஓர் ஆண்டுக்குப் பின்னர் பெயரிட்டார்.
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி….
இவர் தன் வாழ் நாளில் பிடித்த பிணங்கள் ஏராளம். சிலது நேர் வழி முறைகள், பலது சந்தேகத்திற்கு உட்பட்டது. இவர் கூலிக்கு ஆள் அமர்த்தி இராணுவத்திலிருந்து உடல்களைத் திருடினார் என்றும் சொல்லப்பட்டது; சிலது, இறந்தவரின் உடல், சிலது அழுகும் நிலையில் உள்ளவை, சிலது இறந்தவுடனேயே கொண்டு வரப்பட்டவை, சிலது தோண்டப்பட்டவை, சிலது மெலிந்தவை, பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த சில உடல்கள் மருத்துவ மனையிலிருந்து பெறப்பட்டவை. உடல்களைப் பதனிடுவதற்காக சில திரவங்களைப் பயன்படுத்தினார் இவர். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இவர் உடல் உள் உறுப்புக்களை எடுத்து அவற்றை அச்சில் வடித்தார்.
டால்கம் பவுடர் – பகுதி 2
வழக்கம்போல, தன்னுடைய தயாரிப்பிற்கும் புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாய்மார்களை என்றும் நாங்கள் கைவிடமாட்டோம். அதுவும், சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றை ஜா & ஜா என்றுமே தயாரிக்காது என்று ஒரேடியாக மறுத்தது.
பசும் நீர்வாயு (Green Hydrogen)
புவியின் வளி மண்டலத்தில் கரிவளி 0.04% மட்டுமே. அந்த 0.04%-லிலும், 95% இயற்கையாக வருவதே. அதாவது எரிமலைகளால், மற்றும் உள்ளிருக்கும் கரிப் படுக்கைகள் தங்கள் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டு எரிவதால் வெளியேறும் கரிவளி போன்றவை இயற்கை நிகழ்வுகள். ஆஸ்திரேலியாவின் எரியும் மலையை நினைவில் கொள்ளுங்கள். தாவரங்களுக்கு, நுண்ணிய விதத்தில் இந்தக் கரிவளி, ஒளி சக்தியை, வேதிய சக்தியாக மாற்றி ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதால் தாவர உணவு கிட்டுகிறது.
காகித மலர் – ழ்ஜான் பாரெ
உறுதியான கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.
’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract) எனப்படும் மலரடிச் செதில்கள் , உள்ளே சிறிய குச்சிகளை போல வெண்ணிறத்தில் இவற்றினால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள் ‘’ என்றார் பாரெ.
டால்கம் பவுடர்
டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது.
விண்வெளிக் கழிவுகள் அகற்றம் சீராக நடைபெறவில்லை
(மூலம்: சைண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகைக் கட்டுரை. எழுதியவர் லியொனார்ட் டேவிட்) 1968-ல் அமெரிக்க சூழலியலாளரான Garret ஹார்டின் முன்வைத்த “Tragedy of Commons” என்னும் நிலைப்பாடு, பொதுப் பயன்பாட்டுக்குரிய இயற்கை வளங்கள் அளவுக்கு மீறி சுரண்டப் பட்டு அருகிப் போய்விடும் என்றும் அதனால் பயனர் அனைவரும் இடருறுவர் என்றும் “விண்வெளிக் கழிவுகள் அகற்றம் சீராக நடைபெறவில்லை”
பரிணாம வளர்ச்சியும் தொல்லெச்சச் சான்றுகளும்
மயசீன் (Miocene) சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுறும் சமயத்தில், அதாவது, 9.3 மில்லியன் மற்றும் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நாம், குறிப்பாகச் சிம்பன்ஸி வகைக் குரங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் நாட்டுப்புற அமெரிக்கர்கள்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தாக்கம் குறைந்துவிட்ட பின்பும், தடுப்பூசி விகிதம் குறைவாக இருந்த அந்த தனித்த பகுதிகளில், செழித்து வரும் கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மக்களுக்கு நோயையும் மரணத்தையும் தந்து கொண்டிருக்கும்.
விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
ஆறு வகையான கனிமப் பொருள்களுக்குப் பொதுவான பெயர் ஆஸ்பெஸ்டாஸ். அதிக நார்கள்கொண்ட சிலிகேட்டினால் (silicates) உருவானவை இவை. ஆஸ்பெஸ்டாஸ், மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாது. இதனால், பல நூறு ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஒரு கட்டுமானப் பொருளாக வெற்றிநடை போட்டது உண்மை.
ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்புத் தன்மை
ஆன்டிபயாட்டிக் சிகிச்சையின்போது பெரும்பாலான நோய் விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. ஒருசில பாக்டீரியாக்கள் தங்களது மரபணுக்களில் மாற்றங்களை (mutation) ஏற்படுத்திக்கொண்டு ரெஸிஸ்டன்ட் பாக்டீரியாக்களாகத் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.
புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள்
கோள்களின் பிறப்பிடம், இளம் விண்மீன்களைச் சூழ்ந்திருக்கும் வாயு மற்றும் தூசு நிறைந்த அடர் வட்டு (disk) என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள்.