பொய்யாய், வெறுங்கனவாய்ப் போனவன்

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் எந்த அளவுக்கு நம்பிக்கையோ அதற்குச் சற்றும் குறையாத இறைநம்பிக்கையும் அவனுக்கிருந்தது. பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணனின் லீலையாகத்தான் புரிந்துகொண்டான். இறைவனின் அளப்பறிய ஆற்றலையும் அளவில்லா பெருங்கருணையையும் கூட அவன் கணிததின் முடிவிலியைக் (infinity) கொண்டுதான் வரையறுப்பான். சக்தி சிவத்தில் பாதியென்றாலும் இருவரும் அறுதியில்லா வல்லமை கொண்டவர்கள்தான், ஏனெனில் முடிவிலியை எப்படிப் பங்கிட்டாலும் கிடைப்பது முடிவிலிதானே என்று சொல்வான். ஏன் தன் அம்மாவின் அதிதிறமைகளை ஒரு கணிதச் சமன்பாடாக வரையறுத்துப் புரிந்துகொள்ள முற்பட்டான். வயதாக ஆக, கணிதத்தையும் இயற்பியலையும் இறையைக் கொண்டு புரிந்துகொள்ளத் தலைப்பட்டான்.

ராஜீவன் எனும் நண்பன்

வடிவங்கள் தாண்டி, தாம் செயல்பட்ட விதங்கள் தாண்டி, ராஜீவனின் வாழ்க்கைப் பார்வை மிகத் தீவிரமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேலியின் வழியாக, நகைச்சுவையின் வழியாக அதைத் தெரிவிக்க  முயன்றார் என்றே படுகிறது. அதுவே அவரது வாழ்நாள் முயற்சியாக இருந்திருக்கிறது.   இப்படி யோசிக்கும்போது,  ஒட்டுமொத்த ப்ரணய சதகமே காதல்மீது அவருக்கிருந்த   பகடியான அபிப்பிராயம்தானோ என்றும் தோன்றுகிறது.

நாடக அரங்கக்கலையில் நவீனத்துவத்தை உட்புகுத்திய நாடகர்

இவருடைய அரங்க கலைப்படைப்புகள் சில மக்களின் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அந்தப்பாதிப்புகளை தத்ரூபமாக வெளிக்கொணர்வதாய் அமைந்தன. மிக முக்கியமாக போர்ச்சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் உருவாகியிருக்கக் கூடிய உள ரீதியான பாதிப்புகள் மிகத் தெளிவாக உணரப்பட்டு சில நாடகங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன

பெல்லா தார் – இரங்கல்

தாரின் முத்திரை என்பது நுட்பமான நீண்ட காட்சிகள், காலத்தை அதன் மூல வடிவில் எதிர்கொள்ள நம்மைப் பணிக்கின்றன. கில்லெஸ் டெலூஸ் முன்வைத்த கால-பிம்பம் எனும் கருத்தாக்கத்தோடு ஆழமாகத் தொடர்புடையது அவரின் திரைமொழி. இங்கே சினிமா என்பது ஒரு செயலைத் துரிதப்படுத்துவது அல்ல, மாறாக காலத்தை அதன் போக்கில் சுதந்திரமாக விட்டுவிடுவது. ஹான்ஸ்-ஜார்ஜ் கடாமர் கூறுவது போல், கலை என்பது வெறும் தகவலல்ல, அது அனுபவத்தின் வழியே கிட்டும் ஒரு தரிசனம்.

அறிந்து கொள்ளும் விழைவே, இங்கே நம் இருத்தலை அர்த்தமுள்ளதாக்கிறது

அறிவுக்கான இந்தப் பயனற்ற ஏக்கத்தின் மீது ஸ்டாப்பர்டின் நாடகங்கள் அனுதாபம் கொண்டாலும், அந்தத் தேடல் நாடகக் கதாபாத்திரங்களை மற்றவர்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும்போது, அந்த அனுதாபம் விலகிவிடுகிறது. ஒரு திருமணத்தைக் காப்பது, மரணத்தின் பிடியில் உள்ள மனைவியைப் பராமரிப்பது, அல்லது தத்தெடுத்த குழந்தையைக் கண்டுபிடிப்பது போன்ற மனிதச் செயல்கள் இருக்கும்போது, உலகில் உள்ள செயல்பாடு என்பது அறிவுத் தேடலை விட மிகவும் முக்கியமானதாகிறது.

ஜானகி க்ருஷ்ணன் – அஞ்சலி

Curiosity and Creativity defined her. Whim also played a big part in her decisions. She learnt Kannada because my sister moved to Bengaluru and Spanish, just for fun. Perusing online English, Tamil and Kannada news outlets was part of her daily routines. She was also fond of good movies and TV shows, often getting involved with the story. She had choice epithets, especially for the villains in the show.

ஜான் சர்ல் (1932- 2025) – அமெரிக்கத் தத்துவாளர்

1990கள் மற்றும் 2000களில், சியர்ல் ஒரு புதிய துறையில் ஆராயத் தொடங்கினார்.  அவரது புத்தகங்கள் “The Construction of Social Reality” (1995) மற்றும் “Making the Social World” (2010) இந்த யோசனைகளை விரிவாக்கின. பணம், அரசாங்கம், திருமணம், சொத்துரிமை  இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மலைகள் மற்றும் ஆறுகள் மனிதர்கள் இல்லாமலும் இருக்கும். ஆனால் ஒரு இருபது டாலர் நோட்டு? ஒரு ஜனாதிபதி? இவை நமது கூட்டு ஒப்பந்தத்தால் மட்டுமே இருக்கின்றன

குகே வா தியாங்கோ

தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது. 

அரசர், அர்ச்சகர், இறைவாக்கினர்

ஐரோப்பிய அரசுகளுக்கு முதன்மை குருவாகவும் பல நேரங்களில் நேரடி அரசியல் முடிவுகளை எடுக்கவும் சக்தி கொண்டிருந்த போப் பதவி இன்று மதத் தலமை என்று சுருங்கிவிட்டது. எனவே அவரது செயல்களும் சொற்களும் அடையாளத் தன்மை (Symbolic) கொண்டவையாகவே அமைந்துவிட்டன. ஆனாலும் அவை முக்கிய அடையாளங்கள். பிரான்சிஸ் எனும் பெயரைத் தேர்ந்து கொண்டதிலிருந்தே அவர் எளிமையின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார்.

எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி

வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல்

ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்

கேரள வள்ளுவ நாட்டிலும், நிளா நதிக்கரையிலும் உலவிய மனிதர்களே அவரது அனைத்துப் படைப்புகளிலும் கதைமாந்தர். ஒரு கதையையோ அல்லது அதன் மாந்தரையோ வேறெங்கும் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை. ஒருகூட்டுக்குடும்பத்தில் அன்னையரின் வளர்ப்பில் வளர்ந்த எம்டி, நலிந்த நடுத்தரக்குடும்பங்களின் ஆண்கள் வழியறியாது தவித்து நின்றபோது தைரியமாக நின்று சவால்களை எதிர்கொண்ட பெண்களைக் கண்டும் அவர்களின் கதைகளை அறிந்துமிருந்தார்.

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது.

பிபேக் தேபராய் (1955-2024)

‘(Requiem) ‘கோரிக்கை’ என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்தியில், தன்னைத்தானே உள்விசாரணை செய்யும் விதத்தில், அவர் கடைசியாக எழுதியது  வாழ்வின் நிதர்சனம், இயற்கையின் இயக்கம், தத்துவ விசாரங்களைத் தொட்டுச் செல்லும் ஒன்று.  அவர் எழுதுகிறார் “முன்னர், யயாதி, புலனின்பத்திற்காகத்தான் இளமையைக் கேட்டான் என நினைத்தேன். இப்போது தோன்றுகிறது- தன் உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஏக்கம் அது. 

எழுத்தாளர் பொன்னம்மாள்

இந்த முரண்கள், பொது வாழ்க்கைக்கும் உதவியது. ஜாதகத்தைப் பெரிதும் நம்பினார். அதை துருப்புச்சீட்டாக்கி வாழ்வில் சோர்ந்தவர்களுக்கு பரிகாரங்களும், ஊக்க மந்திரங்களும், குட்டிக் கதைகளும் தொடர்ச்சியாகச் சொல்லி, பற்பலரை தூக்கி விட்டவர். மண வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதைத் தனிமையில் ஆலோசனை வழங்கி தாம்பத்திய உறவை வெற்றிப் பெறச் செய்வதாக இருக்கட்டும்;

அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D  ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார்.  அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, 35 வருடங்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார்.  மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை பேராளுமைகளான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். 

விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி

பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும்.  ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்‌ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ).  முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன்.  அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்).  தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.

பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்

கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். 

கி. ரா. – அஞ்சலி

தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.

ராம் என்றொரு நண்பன்

எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி “ராம் என்றொரு நண்பன்”

பூப்போலே உன் புன்னகையில்…

மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம்.  கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 2 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 1 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.

கயாம்: இசையமைப்பாளர்களில் ஒரு கவிஞர்

கயாம் இசையமைத்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தை கடைசியில் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். கயாம் பெயர் சொல்லும் சிறந்த படங்கள் பல, மெலடி பாடல்கள் அதைவிட அதிகம். ஆனால் கயாம் ஸாப் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் படம், ‘is Umrao Jaan’. அது இந்தி திரையுலகில் ஒரு திருப்புமுனை படம், அதில் பங்களிப்பு செய்திருந்த அத்தனை பேருக்கும் அது புகழ் ஈட்டித் தந்தது. முஜாஃபர் அலி, ரேகா, ஆஷா, கயாம், இந்த நால்வரும் தேசீய விருது பெற்றனர். அசாத்திய இசைக்காக இந்தப் படத்தை கயாம் பெயர் சொல்லி என்றென்றும் இருக்கும். ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாத வைரமணி.

அஞ்சலி: ஆனியெஸ் வர்தா

நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”

காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்

இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்

படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்

தன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்

நய்பாலும் நோபலும்

அக்காலத்தில் நைபாலை வாசிப்பதன் மாயம் இதுதான். அவரது பார்வைகள் மற்றும் கருத்துகளுடனும் நான் எப்போதும் மாறுபட்டேன்: ஒப்புக்கொள்ள முடியாத அளவு வலிக்கிறது என்று சொல்லத்தக்க உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் சில; கண்டனத்துக்குரியவை என்று சில; குறிப்பாய், இஸ்லாமிய உலகு குறித்த அவரது எழுத்தில். ஆனால், வேறு யாரும் பொருட்படுத்தத் தக்கது என்று கருதாத விஷயங்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார்; அனுபவத்தின் புதிய பரிமாணங்களை அகழ்ந்தெடுப்பதற்கான சொற்களை அவர் கண்டடைந்திருந்தார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர், பெண்ணியவாதி, அறிவியல் புனைவு எழுத்தாளர் – ஷெரி எஸ். டெப்பரை நினைவுகூரல்

டெப்பர் நாவல்களில் அடிக்கடி, மக்கள் தொகை மிகுந்திருப்பது ஒரு பிரச்சினையாகிறது. கொள்ளை நோய் தாக்குகிறது. …புத்திசாலி பெண்கள் சமூகத்தாலும் சூழ்நிலையாலும் தோற்கடிக்கப்படுவார்கள். ஒடுக்குமுறை மதம் அரசை ஆட்டுவிக்கும்.  பாத்திரங்களின்பார்வைகளாக அரை டஜன் இருக்கும். அந்தரங்கத்துக்கு துரோகம் இழைக்கும் தொழில்நுட்பம், பாதுகாப்புக் கவசம் என்று சந்தைப்படுத்தப்படும். .. இனப் பிரச்சினைகள் முழுக்க முழுக்க வேற்று கிரகத்துக்கு உரியவை, அல்லது, கொஞ்சம் கூட இல்லாதவை. பூச்சிக்கடி போல் அரிக்கும் காதல், பாத்திரங்கள் அதைவிட முக்கியமானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். பாலினப் பிரிவு அடிப்படையாகக் காட்டப்பட முடியுமென்றால், அது செய்யப்படும். தாவர இனங்கள் திருப்பித் தாக்க முடியுமென்றால், அதைச்  செய்யும்.

தகடூர் கோபி அஞ்சலி

நாமக்கல்லிலும், மதுரையிலும் சகாயம், ஐ.ஏ.எஸ். மாவட்ட ஆட்சியராக இருந்த போது அவரால் கொண்டு வரப்பட்ட தொடுவானம் என்ற இணைய வழி புகார் பதிவுத் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தன்னார்வலர்கள் குழுவில் மிக முக்கிய இடம் வகித்தவர் கோபி.

பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.

அப்பா அன்புள்ள அப்பா…

சென்னையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் இரவுகளில் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது. பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன.

டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்

ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.  300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள்,  விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இறுதி வரை உறுதி குலையாத லியு ஷியாவ்போ

சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லி ஷியாபோ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லி ஷியாபோ சீன மக்களில் வேறு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது.

அசோகமித்திரன் அஞ்சலி

மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.

சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.

2016இல் மறைந்த இலக்கியவாதிகள்

தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் கடந்த வருடத்தில் யாரெல்லாம் மறைந்தார்கள்? ஞானக்கூத்தன், வே.சபாநாயகம், குமரகுருபரன், கே.ஏ.குணசேகரன்… இங்கே மேற்கத்திய உலகின் ஜாம்பவான்களைப் பட்டியலிடுகிறார்கள். 2016ல் சொல்வனம் இதழில் அஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்: எழுத்தாளர் உம்பர்த்தோ எக்கோ நாடகாசிரியர் சோ கவிஞர் ஞானக் கூத்தன்  

சோ

அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், துறை வல்லுனர்கள் முதலியவர்களுக்கு இடையில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து கருத்துருவாக்குகிறவர்களாக, அவர்களை வழிநடத்துபவர்களாக சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்னால் இயக்கங்களோ, ஸ்தாபனங்களோ, பண/ஜாதி/இன பலங்களோ இருப்பதில்லை . எனக்கு முந்தைய தலைமுறையிலிருந்து, இன்றைய தலைமுறை வரை அரசியல் சமுதாய நிலைப்பாடுகளில் எவை நல்லவை என்று உடனடியாகவும், தெளிவாகவும் சுட்டி வழி நடத்திய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சோ முதன்மையானவர்

சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு

தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.

மகரந்தம்

புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …

நிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்

கவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். . . 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். . . 60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை … சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி. . . அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.

முகமது அலி

இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது. இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி …

வேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016)

ஒரு வரலாற்றாளர் ஒரு ஆவணத்தைப் படிக்கும்போது, அவர் கடந்த காலத்திற்குள் திறக்கும் ஜன்னலுள் பார்க்கவில்லை, முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பின் ஒரு செய்பொருளைப் பார்க்கவில்லை, ஆனால் தான் அதோடு ஒத்துழைத்தால், ஒப்பேறக் கூடிய ஒரு முடிவைக் கொடுக்க உதவும் ஏதோ ஒரு பொறியமைப்பையே பார்க்கிறார் என்றாகிறது. அந்த முடிவு ஆவணத்தின் படைப்பாளி என்ன சொல்ல விரும்பினாரோ அல்லது விவரிக்க நினைத்தாரோ அதனுடைய சற்றேறக் குறைய ஏற்புள்ள ஒரு பிம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்றாகிறது. அது ஒரு கூட்டமான மாற்று வாசிப்புகளுக்கும் இடம் தரக்கூடும், சிலவை மற்றவற்றை விட ‘மகிழ்வு’ தரக்கூடியனவாக இருக்கலாம். ஆனால் நாம் பெறும் பொருள் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தோற்றமளித்தாலும், நாம் எழுத்தாளரின் நோக்கங்களைக் கைப்பற்றி விட்டதாகக் கொண்டு விட்டதாகவோ, அல்லது ஒரு விவரணையாளர் என்ற அளவில் அவருடைய தரத்தைச் சரியாக மதித்து விட்டதாகவோ கொள்ள முடியாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி உறுதியான எந்த முடிவுகளையும் அடைவது பற்றி நாம் நிச்சயம் கொள்ள முடியாது- அதை விட, அதில் ஒளிந்திருக்கும் இரும்பு விதிகளை அதிலிருந்து கைப்பற்றி விடுவதாக நவீனத்துவர்கள் அடித்துப் பேசுவது சாத்தியமே இல்லை. நாம் செய்யக் கூடியதெல்லாம், நமது அறிவின் விசாலத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து சாத்தியமான விவரணைகளைக் கட்டமைப்பதுதான்.
இது வரலாறுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைத் தெளிவாகவே ஒழித்து விடுகிறது.

பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி

இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை. அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும்.

அறிவிப்புகள்

ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

தந்தையும் மகளும் போல் – இலக்கிய உறவு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும் என்னும் என்னுடைய ஆய்வு நூல் மருதா பதிப்பக வெளியீடாகச் சென்னையில் 2005 இல் வெளிவந்திருந்தது. அவர் அந்த நூலைப் படித்துத் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இருந்தார். அக்கட்டுரையில் என்னைப் பற்றியும், என்னுடைய நூலின் தேவை பற்றியும், என்னுடைய துணிவையும் பாராட்டியிருந்தார். அப்படியெல்லாம் எளிதில் வெ.சா. பாராட்டிவிட மாட்டார். தகுதியான படைப்புக்கள் அவருடைய கண்களிலிருந்து தப்பியதே இல்லை.

வெ.சா. – குறிப்பு

“உண்மை ஏன் அதிரடியாக இருக்க வேண்டும்? அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகிறதென்றால் அது எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்க வேண்டும்” என்றும், “தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள்தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் “வெ.சா. – குறிப்பு”

வெங்கட் சாமிநாதன் – முழுமையின் தொடக்கம்

சாமிநாதனின் அழகியலில் ஒரு அறிவியலுக்கான கறார் தன்மை இருந்தபடியே உள்ளது. அபிநவ குப்தரின் தொடர்ச்சி என்று கொள்ளலாம் – அல்லது தொல்காப்பியரின். இந்திய மரபில் அழகியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே அழகியலுக்கான ஒரு பொதுமைத்தளத்தை தேடியிருக்கிறார்கள். மேற்கத்திய விமர்சகர்கள் அதை மெல்ல மெதுவாக எட்டினார்கள். அதற்குள் நாம் விக்டோரிய மதிப்பீடுகளுடன் கலை ஆன்மிகம் பக்தி ஒழுக்க விதிகள் எல்லாவற்றையும் இணைத்த ஒரு bastardized நிலைக்கு வந்துவிட்டோம்.

கலைவெளியில் ஒரு தாரகை: வெ.சாவுக்கான இடம்

தமிழின் செவ்விலக்கிய மரபைக் குறித்து வெ.சா அறிந்திருக்கவில்லை, அதை முற்றிலுமாக அவர் புறக்கணித்தார் என்று கூறப் படுகிறது. இது உண்மையல்ல. அகநானூறு முதலான சங்கப் பாடல்களின் அழகியலையும் காதா சப்தசதி என்ற பிராகிருத மொழியின் பழம்பாடல் தொகுப்பையும் ஒப்பிட்டு வெ.சா எழுதியிருக்கிறார். சுவடிகளை மீட்டெடுத்த உ.வே.சாமிநாதையரின் பணியை உயர்வாகவே மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக்கால மரபிலக்கியம் முழுவதையும் எந்தக் கலாபூர்வமான அளவீடும், ஆழமான நோக்கும் இன்றி சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளும் போலித் தனத்தைத் தான் அவர் கண்டித்தார்.

நானறிந்த வெ.சா

இதழ் வெளியீடு தேதியை கன்ஃபர்ம் செய்துகொண்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பு கட்டுரைப்பகுதியை அனுப்புவார். அனுப்பும்போது மறக்காமல் ஒரு வரி இருக்கும். ‘சொன்ன தேதிக்கு முன்பே அனுப்பி விட்டேன். அதை பாராட்டி இரண்டு வார்த்தைகள் சொன்னால் தப்பில்லை’. சொன்ன தேதிக்கு இதழ் வெளிவரவில்லை என்றாலும் கோபப்படுவார். ’யாருடைய கட்டுரைக்கும் காத்திருக்கக் கூடாது. இதழ் வெளியீடு தேதி முடிவு செய்து விட்டால் வெளியிட்டு விடவேண்டும்’ என்பார். படைப்புகள் பற்றி வாசகர்களிடமிருந்து கருத்துப் பரிமாற்றம் இல்லை என்பது அவருடைய குறை. நமது வாசக சூழலே இன்று இப்படித்தான் இருக்கிறது என அங்கலாய்ப்பார். அவர்களுக்கு சொந்தக் கருத்தே இல்லையா. அல்லது சொல்லத்தயக்கமா அல்லது எதற்கு எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வது என்கிற நினைப்பா எனப் புரியவில்லை என்பார்.