தெலுங்கில்: மணி வட்லமானி మణి వడ్లమాని (Mani Vadallamani) தமிழில்: ராஜி ரகுநாதன் இரண்டு நாட்களாக ஜுரம் விட்டு விட்டு அடிக்கிறது. ஏதோ மாத்திரைகள் போட்டுக் கொண்டாலும் பெரிதாகப் பலன் தெரியவில்லை. “வரிசையாக மூன்று நாட்கள் வேலை இருக்கும். வேறு எங்கும் வேலை ஒப்புக்கொள்ள வேண்டாம்” என்று “தில தானம்”
Author: ராஜி ரகுநாதன்
சின்னா தேவி
“உன்னுடைய வேதனையும் கவலையும் எங்களுக்குத் தெரியும் கிருஷ்ணா. இன்னும் கொஞ்ச நாள்தான். நீ துளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் ஆந்திர சாம்ராஜியத்தை நிலைநிறுத்தப் போவது நீ ஒருவன்தான். இது உண்மை. வித்யாரண்ய சுவாமி மகா விஷ்ணுவின் அம்சம். அவருடைய வாக்கு பொய்க்காது, மகனே. உன்னைப் பெற்ற தாயார் நன்றாக இருக்கட்டும். நாகமாம்பாவின் ஆசியோடு தென்னாட்டுக்கு ஏக சக்ராதிபதியாக நீ மகுடம் சூடும் நாள் விரைவில் வரப் போகிறது. இந்த பூமித்தாய் அதற்காகக் காத்திருக்கிறாள். அந்த நொடிக்காகவே இந்தக் காத்திருப்பு” என்றார்.
தோழமை
“உன்னோடு இப்படிப் பேசினா மனசு லேசானா மாதிரி இருக்கு கிஷன்” கொஞ்சம் சாதாரண நிலைக்கு வந்து சொன்னாள். திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு கிஷன் வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்கு வரும் வழியில் கெளரி ஆத்தாவின் பார்வை அவனுடைய முதுகில் குத்துவது போல உணர்ந்தான்.
மானுடப் பயணம்
ஊமையாகக் கண்ணால் பேசும் நிறைமாத கர்ப்பிணியான அவனுடைய இல்லாள். அவள் நினைவு வந்தால் போதும் இதயக் கதவு திறந்து கொண்டு அன்பு பெருக்கெடுக்கிறது. எவ்வாறு அவர்களையெல்லாம் விட்டு அவன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டான்? இந்த விடுதலை ஹோமத்தில் தன்னைத்தானே ஒரு சமித்தாக சமர்ப்பித்துக் கொண்டானா? துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் மனித உடல்கள் எத்தனை நேரம் தான் எதிர்க்க முடியும். அவனுடைய இதயத்தில் மெல்லிய திகில் தோன்றத் தொடங்கியது.
என் நண்பன்
“ஊஹூம். பயமாயில்ல. ஆனா, என்னவோ போல இருக்கு. இத்தனை பெரிய மணற்பாங்கு. தூரத்தில் அவ்வளோ பெரிய சமுத்திரம். இப்படி எல்லையே இல்லாமல் இருக்குதேன்னு பார்த்தா மலைப்பா இருக்கு. இத்தனை பெரிய கடவுளின் படைப்பில் நான் எத்தனை அல்பமான சின்னவள்னு தோணுது. இதையெல்லாம் படைச்ச கடவுள் எத்தனை உயர்ந்தவர்னு தோணுது. அவரை ஒரு தடவையாவது பார்க்கணும்னு தோணுது” என்றாள். அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல மெய் மறந்திருந்தாள்.
எல்லையற்றவன்
வறண்ட நிலத்தை மழை நீர் நனைத்தது போல கிருஷ்ணனின் சொற்கள் ராதையின் மனத்தை பக்தியால் நிறைத்தன. முன்பு பாடிய இனிய கீதத்தை மீண்டும் கேட்டாள். வம்சிமோகன் வேணுகானத்தை மனத்துக்கினிமையாக இசைத்தான். இன்னிசை மழையில் நனைந்து அடித்துச் செல்லப்பட்ட ராதைக்கு நேரம் போனதே தெரியவில்லை.
கொலகலூரி இனாக்
கட்டுப்பாட்டை இழக்கும் வயது. பைத்தியக்காரக் காதல். அந்த அழகி, உடல் நிறைய நகையணிந்து வீட்டை விட்டுக் கிளம்பினாள். தங்க ஒரு இடமில்லாத தனியான இளம்பெண். கணவனாக வேண்டிய ரங்காராவை நினைத்து வாடும் உதவியற்றவள். அவளோடு யாரோ சிநேகம் செய்தார்கள். ஆசை காட்டினார்கள். அந்த ‘யாரோ’ யாரென்று யாருக்கும் தெரியாது. அவளையும் அனுபவித்து, நகைகளையும் திருடிக் கொண்டனர். ஆனால் அவள் மனத்தில் இருந்தது ரங்காராவ் மட்டுமே. அதனால் தன்னை ஏமாற்றி நகைகளைத் திருடியது ரங்காராவே என்று நம்பினாள். தன்னைக் கெடுத்தது ரங்காராவே என்று நினைத்தாள். அதையே இன்றும் கூறினாள்
கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.
சையது சலீம்
பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்
பாபிநேனி சிவசங்கர்
உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன
சுவரில் தொங்கிய படம்
“என்னடி? என்னடி அங்கே வந்து வேஷம் போடுறே? கிளிக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி சொன்னாலும் அங்க வந்து அந்த அழுகை அழுவறே? இந்த சான்ஸ் மட்டும் கை நழுவிப் போயிருந்தா, அங்கேயே உன்னை வெட்டிக் கூறு போட்டிருப்பேன்” என்று உறுமியவன், அவள் தலை முடியைப் பிடித்து பலமாகப் பின்னால் இழுத்தான்.
கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது.
கே. சிவாரெட்டி
பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக் கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன.
பிரபஞ்சத்தின் உலகளாவிய சுடர் வேமனா, கேள்!
தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிக் கொள்பவர் உண்மையில் அறிவாளி. எல்லாம் தெரியும் என்று கூறிக் கொள்பவர் கௌரவம் பெறமுடியாமல் நிந்தைக்கு ஆளாவர். மௌனமாக இருந்து அனைத்தையும் அறிபவரே உத்தம யோகி.
தெலுங்கு மொழியின் உ.வே.சா.
தனக்குத் தெலுங்கில் புலமை இல்லை என்றும் தான் ஒரு ஆங்கிலேயன் என்றும் பிரவுன் உணர்ந்திருந்தார். அவர் தயாரித்த அகராதியில் செயற்கைச் சொற்களையும் அவற்றின் பொருளையும் விலக்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார். புதிய சொற்களைப் பரப்பும் அதிகாரம் வெளிநாட்டருக்கு இல்லை என்றும், பழக்கத்தில் இருந்த மொழியை மாற்றுவதற்கும் அவற்தைச் சீர் செய்வதற்கும் தன்னால் இயலும் என்று தான் கனவு காணவில்லை என்றும் பிரவுன் தெரிவிக்கிறார்
‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
சாகசம் என்று ஏன் கூறுகிறேன் என்றால், ஆணாதிக்க சமுதாய அமைப்பில் பெண்களின் வளர்ச்சிக்கும் சாதித்த முன்னேற்றத்திற்கும் அங்கீகாரம் குறைவு என்றே கூற வேண்டும். சென்ற நூற்றாண்டில் வந்த சிறுகதைத் தொகுப்புகள், சாஹித்திய அகாடமி, தெலுகு பல்கலைக் கழகம், கதா சாகர், நல்ல கதைகள், சிறுகதைச் சிலம்புகள் (மஞ்ஜீரம்), போன்ற தொகுப்புகளில் பத்து சதவிகிதம் கூட பெண் எழுத்தாளர்களின் கதைகள் இல்லை தொண்ணூறு சதவிதம் கதைகள் நாம் மீண்டும் மீண்டும் படித்த ஆண் எழுத்தாளர்களுடையதே.
தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
எந்தக் கதையைப் படித்தாலும், யாருடைய கதையைக் கேட்டாலும் அதில் பெண் கதாபாத்திரம் என்ன என்று கவனமாகப் பார்த்து அந்தப் பாத்திரத்தை ஆராய்வது என் வழக்கம். இந்தக் கவனிப்பால் பல பெண்களின் மேன்மையை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் முன்பென்றும் அறிந்திராத பெண்களும், அவர்களுடைய இயல்புகளும் கதைகளின் மூலம் அறிமுகமாகி, என்னோடு உரையாடுவதும், உயிரோடு நினைவில் நிற்பதுமாக சிறந்த அனுபவத்தைத் தருகிறார்கள்
தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சந்திரஹாரம்
அம்மா என் தலை வீங்கும் அளவுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். “இப்போதே கழுத்து வரை கடனில் முழுகி உள்ளோம். இது வேறயா? பணம் கொடுத்து வாங்கினாலும், அது தெரியாதவர்கள் நாம்தான் பாட்டியின் சங்கிலியை பிடுங்கிக் கொண்டோம் என்பார்கள். நமக்கு எதற்கு இந்த அவப்பெயர்? நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளடா, சின்னா” என்றாள் அம்மா
ஸ்ரீவாணி மேடம்
சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா.
ஈஸ்வர அனுக்ரஹம்
சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்
நவதீப்
“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள்.
ஆதரவு
நான் பதவி ஓய்வு பெற்றேன். சொந்தமாக வீடு கட்டினேன். பென்ஷன் வந்தது. பொருளாதார ரீதியாகக் குறை ஒன்றுமில்லை. அந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவள் ரமணி. வீட்டுக்கு வருபவர்களுக்கு பதில் சொல்வது, பணியாளர்களை வேலை வாங்குவது, வீட்டைச் சுத்தம் செய்து அடுக்கி வைப்பது, கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வருவது, மின்சார பில் கட்டுவது என்று வீட்டுப் பொறுப்புகள் எல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள்
மேரா பாரத் மகான்
மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது
குங்கும பரணி
தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்
ஸ்வர்ண சீதா என்ற நாவல்
சுவர்ண சீதா நாவலில் அனுமன் அந்த வேலையைத் தொடருவதாகவும் பாறைகளின் மேல் எழுதி கடலில் பாதுகாப்பாக வைப்பதாதாகவும் கூறப்படுகிறது. ஹனுமத்ராமாயணம் என்று ஒன்று இருப்பதாகவும், அனுமான் ராமனை அருகிலிருந்து பார்த்தவர் என்பதால் ராமனுடைய வாழ்க்கையை மலைப் பாறைகளின் மீது எழுதினார் என்றும் வால்மீகி ராமாயணத்திற்கு போட்டியாக இருக்கக் கூடாது என்று அதைக் கடலில் போட்டார் என்றும் உலக வழக்குச் செய்தி ஒன்று உள்ளது
மோகனவம்சி என்ற நாவல்
ராதா, தபதி, சந்திரிகா அனைவரும் கிருஷ்ணனின் பௌதீகமான சிந்தனை, கானம், சௌந்தர்யம் ஆகியவற்றில் களித்திருப்பவர்களே. அவர்களுக்குத் திருமணம் ஆகி சம்சாரம் இருந்தது. வயதில் கிருஷ்ணரை விடப் பெரியவர்கள். கிருஷ்ணருக்கும் அவர்கள் மீது சமமான அன்பு. உண்மையில் அவனுடைய பார்வையில் பெண்களனைவரும் வேறு வேறு பெயர்களோடு பௌதீகமாக மாறுபட்டு தென்படும் பெண்மையும் வேறுபட்ட தோற்றங்களே.
இது துளசிவனம் என்ற நாவல்
தவறு செய்வதால் கூட பாரதப் பெண்கள் வணக்கத்தை பெற முடியும் என்கிறார் லதா. கணவனாலோ, இன்னொருவராலோ அல்லது தனக்குத்தானாகவோ தப்பான அடி எடுத்து வைத்த பெண்ணின் கண்ணிலிருந்து பச்சாதாபத்தோடும் துயரத்தோடும் ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தால் அந்தக் கண்ணீரால் துளசிச் செடிகள் பெருகி வளரும் என்கிறார்.
ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 1960ல் வெளிவந்த ராகஜலதி நாவலின் உள்ளே, இந்த நாவலின் எழுத்தாளர் லதா எழுதிய இதர நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் ஆறு நாவல்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று ஜீவன ஸ்ரவந்தி. மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி இந்த நாவலின் கதை நகருகிறது. “ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்”
மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல்
அழகே செல்வமாகக் கொண்டவள் என்ற சிறப்பு இருந்தாலும் சமுதாயத்தில் தாழ்வாக பார்க்கப்படுகின்ற குலத்தில் பிறந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறருக்கு போகமளிக்கும் குலத்தில் பிறந்த பெண் திருமணம் செய்து கொண்டாலும் ஒரு ஆணையே நம்பிக்கொண்டு வாழ்ந்தாலும் அவளுடைய கற்பு எப்போதும் சந்தேகப்படத் தக்கது என்று எண்ணும் சமுதாயத்தில் வித்யா திருமணம் செய்து கொள்வதை அவளுடைய தாய் விரும்பவில்லை. பெண் அனாவசியமாக கஷ்டங்களில் சிக்க கூடாது என்பது தாயின் அபிப்பிராயம்.
ராகஜலதி என்ற நாவல்
உப்புப் படகை விட்டு படிப்பதற்காக ராஜமுந்திரி சென்றபோது சூரியாவோடு சேர்ந்து அவனுடைய அறையில் தங்கினான். சூரியாவின் தாய் கனகாங்கியின் ஆதரவைப் பெற்றான். சூரியா தன் தாயை ஏன் வெறுக்கிறான் என்று அவள் மூலமாகவே தெரிந்து கொண்டான். அவனுடைய வாழ்க்கை அதுவரைதான். திருமணமான மீனாட்சியுடனான சூரியாவின் சிநேகம், அவளோடு வீட்டை விட்டு வெளியே போவதில் தொடங்கி, சூரியாவின் வாழ்க்கையில் வந்த மாற்றங்களின் கதையாக வளர்ந்த இந்த நாவலின் கதையம்சத்தில் மீனாட்சியின் தம்பி நடராஜனின் வாழ்க்கைப் பரிணாமங்கள் முக்கியமான பகுதியை நிரப்புகின்றன. ஆரணிக்கு சூரியாவிடம் சந்தேகமில்லாத நட்பு இருந்ததால் அவன் பார்த்தோ அல்லது அவன் கூறிக் கேட்டோ அறிந்த விவரங்களோடு சூரியாவைப் பற்றி கூற முடியும். கூறினான் கூட
தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம்
1962 லேயே கட்டி ஆஞ்சநேய சர்மா என்பவர் லதாவின் இலக்கியம் பற்றி ‘சாஹிதீ லதா’ என்ற புத்தகம் எழுதினார் என்றால் இலக்கிய துறையில் பிரவேசித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆவதற்கு முன்பே லதா எத்தனை தூரம் வாசகர் உலகத்தை கவர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. அதற்குக் காரணமான மூலசக்தி தன் காலத்துப் பெண் எழுத்தாளர்களை விட மாறுபட்டு அவருக்கு கிடைத்த பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் என்று கூறவேண்டும். அதுவே அவருடைய நாவல்களை சமகாலத்து பெண் நாவல்களை விட மாறுபட்டவையாக நிலைநிறுத்தின.
தென்னேட்டி ஹேமலதா
ஒன்பதாம் வயதிலேயே அதாவது 1944 ல் தென்னேட்டி அச்சுதராவு என்பவரோடு திருமணம் நடந்தது. அப்போதிலிருந்து இவர் தென்னேட்டி ஹேமலதா என்று அழைக்கப்பட்டார். 18 வயதில் 1952ல் ரேடியோவில் பணிபுரியும் நிமித்தம் உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்ததோடு ரேடியோவில் நடிகை, நாடக எழுத்தாளர் என்று பல துறைகளில் நுழைந்தார். (ஏபி ஆனந்த் இன்டர்வியூ யூ ட்யூப்).சுமார் அதே நேரத்தில் நாவல்கள் கூட எழுதத் தொடங்கினார். 1982ல் ‘நிடுதவோலு’ மாலதிக்குக் கடிதம் எழுதிய போது லதா எழுதிய நாவல்களின் எண்ணிக்கை நூறு. 1997 ல் லதா காலமானார். அந்த பதினைந்து ஆண்டுகளில் லதா மேலும் சில நாவல்கள் எழுதி இருப்பார் என்று கூறுகிறார் எழுத்தாளரும் இலக்கிய விமரிசகருமான மாலதி. (Eminent scholars and other essays in Telugu literature 2012 e- book edition 2011).
காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
இந்திரா என்றால் கூட பயம்தான். தன் விருப்பு வெறுப்புகளை அவளிடம் அவனால் கூற முடியாது. அவனுக்குப் படிக்க வேண்டிய வேலை இருந்தாலும் அவள் வா என்றால் அவளிடம் இருக்கும் அச்சத்தால் அவள் பின்னால் செல்வான். கல்யாணியோடு அவனுடைய சினேகம் பற்றியும், காதல் விவகாரம் பற்றியும் விமர்சனம் செய்த சக மாணவியிடம் தகராறு செய்கிறான். அதாவது உலகத்திற்குத் தன்னை எப்போதும் நல்லவனாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்ற குணம் அது. உண்மையில் அவனுக்கு என்ன வேண்டுமோ அவனுக்கே தெரியாது.
காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி
அதாவது வீடு என்பது உறவோடும் பொறுப்போடும் கட்டிவைக்கும் ஒரு கட்டடம் என்றுதானே பொருள்? வீடு ஒரு பெண்ணுக்கு மறுபெயராக உள்ளது. இல்லத்திற்கு விளக்கு இல்லாள். இல்லத்தைப் பார்த்து இல்லாளைப் பார் போன்ற கூற்றுகள் எல்லாம் வீட்டை நடத்துபவளும் வீட்டுக்கு முக்கியத் தூணாக நிற்பவளும் பெண்தான் என்பதைக் குறிக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு ‘காலாதீத வ்யக்துலு’ நாவல் குடும்பத்தை பற்றி என்ன சொல்ல வருகிறது என்று பார்க்கும்போது ஆர்வமூட்டும் அம்சங்கள் புரிகின்றன.
காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் டாக்டர் பி. ஸ்ரீதேவி எழுதிய ஒரே ஒரு நாவல் ‘காலாதீத வ்யக்துலு’ – (காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்). ஆனாலும் அந்த ஒரு நாவலே இலக்கிய வரலாற்றில் அவர் பெயரை நிலைநாட்டி விட்டது. 1929 செப்டம்பர் 21ம் தேதி அனகாபல்லியில் பிறந்த ஸ்ரீதேவி மருத்துவப் “காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி “
வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
பாப்பாயம்மாவோடு சிறைக்குச் சென்ற மற்றொரு பெண் சிட்டம்மா. இவள் திருமணமானவள். கணவன் சொத்தையெல்லாம் அழித்தபின் வேறு வழியில்லாததால் பிறந்து வீட்டிற்கு வந்தாள். வீட்டைத் தாண்டி வெளியில் சென்றறியாத சிட்டம்மா, ராட்டினம் நூற்க வேண்டும் என்று கூறிய காந்தியின் அழைப்பை ஏற்றாள். சம்சாரம் இல்லாத பெண்ணாக, தாய் கொடுக்கும் வேதனையையும் உலகத்தின் பரிதாப பார்வைகளையும் தாங்க முடியாமல் மூச்சு விடக் கூட முடியாத நிலையை அனுபவிக்கையில். சிறைக்குச் செல்லத் துணிந்த பாப்பாயம்மாவை ஆதரிசமாக ஏற்று தானும் சிறைக்குச் செல்வதற்கு தயாரானாள். சிறைக்கும் சென்றாள். அதன் பின்பு ஹரிஜன சேவை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாள். ஹரிஜன குடியிருப்பகளுக்குச் சென்று வந்தபின் குளிக்கக் கூட மாட்டாயா என்று தாய் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு கூறிய சொற்களை பழங்காலம் என்று எடுத்தெறிந்து பேசக் கூடிய அறிவு வளர்ச்சி அவளிடம் தென்படுகிறது.
நிஷ்காம யோகி நாவல்
நிஷ்காம யோகி என்ற நாவல் 1956 ல் பிரஜாவாணி பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. பிரஜாவாணி பதிப்பகத்தாரே அதனை வெளியிட்டனர். கைதி நாவலைப் பிரசுரித்த காங்கிரஸ் பத்திரிக்கையை மாநிலக் கமிட்டி இனி நடத்த இயலாது என்று தீர்மானித்த பின் வட்டிகொண்ட ரங்கையா அதனை எடுத்து பிரஜாவாணி என்று பெயர் மாற்றி நடத்தினார். 1954 ல் வட்டிக்கொண்ட ரங்கய்யா மதராசிலிருந்து குண்டூருக்கு இடம் மாறி வந்தபோது பிரஜாவாணி அலுவலகமும் குண்டூருக்கு வந்தது. வட்டிகொண்ட விசாலாட்சியின் நாவல்கள் பிரஜாவாணி பதிப்பகத்தின் மூலமே வெளிவந்தன. 1998ல் வட்டிகொண்ட ரங்கய்யா மரணமடைந்தார். அவருடைய ‘திவ்ய ஸ்ம்ருதிக்கு’ அர்ப்பணிப்பாக நிஷ்காம யோகி நாவலை மீண்டும் பதிப்பித்தார் விசாலாட்சி.
வட்டிகொண்ட விசாலாட்சி
மதராஸில் இருந்தால் ஆந்திர தேசத்தில் உள்ள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர் செல்லும் வாய்ப்புகள் இருக்காது என்று அவர் கருதினார். அதுவே உண்மையாயிற்று. பரம்புரம் என்ற ஊரில் நடந்த இலக்கிய பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்று சாப்பிடாமல் இருந்து பிடிவாதம் பிடித்தாலும் கூட விசாலாட்சி நினைத்ததை சாதிக்க இயலாமல் போனார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெற்றிகரமாக அவரை வெளியேற்ற முடிந்ததாக கணவர் மகிழ்ந்தார். தனக்கு விருப்பமான சாகித்ய சங்கத்தில் பணி செய்யும் சுதந்திரதத்தை தன்னிடமிருந்து பிடுங்கி கட்டுப்படுத்திய கணவர் மீது அதிருப்தியில் இருந்த விசாலாட்சி உரைநடை இலக்கியத்தின் மீது பார்வையைத் திருப்பினார். 1951ல் இருந்து கதைகளும் நாவல்களும் எழுதத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை பெண்களின் கோணத்தில் பார்த்து அன்றைய இயக்கங்களையும் போராட்டங்களையும் மதிப்பிட்டு அவர் படைத்த கதைக்கருக்கள் அதற்கு முன்பு யாரும் எழுதாதவை.
ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
மாலதி சந்தூர் சொந்தமாக நாவல்களை எழுதியதோடு கூட சுவாதி பத்திரிகையில் பாத்தகெரடாலு என்ற தலைப்பின் கீழ் முன்னூற்றைம்பது ஆங்கில நாவல்களை அறிமுகம் செய்துள்ளார். அவை முன்னர் பாத்தகெரடாலு என்ற பெயரோடே பிரசுரமாயின. அது இப்போது 160 உள்நாட்டு வெளிநாட்டு மொழி நாவல்களின் அறிமுகம் – நவலா மஞ்சரி என்ற பெயரில் ஆறு தொகுதிகளாகக் கிடைக்கிறது. உலக நாவல் இலக்கியத்தை தெலுங்கு வாசகர்களுக்கு அத்தனை சரளமாகவும் சுந்தரமாகவும் அறிமுகம் செய்த மாலதி சந்தூரின் முயற்சி அசாதாரணமானது.
கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
மகன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த போது அவள் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகப் போகிறாள் என்று நினைத்த அவனுக்கு அவளுடைய நடத்தை இயற்கைக்கு விரோதமாக தோன்றுவது இயல்பு. இங்கு பிரசாதின் கண்ணோட்டம் சாதாரண ஆணின் பார்வையை முன்வைக்கிறது. அது ஆண்களின் கண்ணோட்டம் என்று மாலதி சந்தூருக்குத் தெரியும். அதற்கு மாறாக பெண்கள் நடந்து கொண்டால் ஆணாதிக்கம் அடிபட்டு போகும் என்று கூட அவருக்கு தெரியும். அதனை அவர் பிரசாதின் வாய்வழியே விமரிசனம், சுய பரிசோதனை என்ற விதமாக, மூர்த்தியோடு நடந்த உரையாடலில் ஒரு பகுதியாகக் காட்டுகிறார். கற்பு, தாய்மை என்னும் மாயத் திரைகளை கிழித்துக் கொண்டு பெண்கள் சைதன்யம் உள்ளவர்களாகும் இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்களும் தம் அதிகார, அகங்கார இயல்புகளை விட்டு விட வேண்டும் என்ற எச்சரிக்கை அதில் தெரிகிறது.
மாலதி சந்தூர், ரேணுகா தேவி
மாலதி சந்தூருக்கும் அவ்விதமாக பெண் வாசகர்கள் மிக அதிகம். 1952 லேயே பிரமதாவனம் என்ற பெயரோடு ஆந்திரபிரபா பத்திரிக்கையில் வெளிவந்த மாலதி சந்தூரின் பத்திக்காகக் காத்திருந்த பெண் வாசகர்கள் மிகப் பலர். அந்த நாட்களில் குக்கிராமங்களில் வசித்த பெண்கள் கூட அந்த பத்திரிகையை தபால் மூலம் வரவழைத்துக் கொண்டார்கள் என்றால், மாலதி சந்தூர் போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண் வாசகர்களை எத்தனை ஏற்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. பல வெளிநாட்டு மொழி நாவல்களை தெலுங்கு மக்களுக்கு அறிமுகம் செய்து எழுதிய கதைகள் ‘பாத்த கெரடாலு’ (பழைய அலைகள்) என்ற பெயரோடு பிரசுரமாயின.
மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
அவர் எழுதிய த்ரி வர்ண பதாகை என்ற நாவல் சமூக சீர்திருத்ததில் ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இருவரில் ஒருவர் முஸ்லிமையும் ஒருவர் ஹரிஜனனையும் திருமணம் செய்து கொள்வதும் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டச் சம்பவங்களையும் கதைப் பொருளாக கொண்டது. அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு நடத்திய விதம், மேலும் இரு இளம் பெண்கள் குல மதத்துக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்வதற்கு ஊக்கமளித்ததாக கதையை நடத்தியுள்ளார் ஆசிரியை
அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
சாரதா விஜயம் வரலாற்று நாவல். 14 ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சங்கம வம்சத்தைச் சேர்ந்தவரான ஹரிஹராயரின் வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தில் பாமினி அரசர்களோடு நடந்த போர்கள், அரசாங்க விரிவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த நாவலின் கதையம்சம் நடக்கிறது. வரலாற்றுப்படி பார்த்தால் தேவராய விஜயம் என்று இருக்க வேண்டிய நாவலின் பெயர் சாரதா விஜயம் என்றுள்ளதால் இந்த நாவலின் கதை முழுமையாக கற்பனை என்பது தெளிவு .
ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
1929ல் பிரசுரமான சம்பகமாலினி என்ற நாவலை எழுதிய ஆ ராஜம்மா அப்போtது திருவல்லிக்கேணி லேடி வெல்டிங்டன் பயிற்சிக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். சமஸ்கிருதம், கன்னடம் இரு மொழிகளிலும் சந்திரமௌலி, மதுவன பிரசாதம் முதலிய படைப்புகளை செய்திருந்தார். சம்பகமாலினி ஒரு வரலாற்று நாவல், ஜனமஞ்சி சுப்ரமண்ய சர்மா இந்த நாவலை எடிட் செய்தார். ஆந்திர நாரிமணிகளுக்கு இந்த நாவல் அர்ப்பணம் செய்யப்பட்டது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்களானாலும் பிற பெண்களானாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை சாமர்த்தியத்தோடு உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த நாவலின் நோக்கம். அவ்வாறு உபயோகித்து கொண்டு வெற்றியடைந்த இரு பெண்களின் கதை இந்த நாவல். அவர்கள் தாயும் மகளுமாக இருப்பது சிறப்பு.
பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
விண்ணப்பம் என்ற பெயரில் கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா எழுதிய முன்னுரையில் இந்த நாவலின் கருப்பொருளாக அவருடைய பதினான்காவது வயதில் அவருடைய வீட்டிற்கு வந்த ஒரு முதிய பெண்மணி தன் தாய்க்குக் கூறிய கதையை எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். பிற பெண்டிர் மோகத்தில் அலைந்த கணவனிடம் மகள் பட்ட கஷ்டங்களைப் பற்றி அவர் கூறிய விஷயமே தனக்கு நாவல் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி அப்படியே விட்டு விட்டதாகவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிழிந்து போகும் நிலையிலிருந்த பிரதியை மீண்டும் எழுதி அச்சேற்றியதாகவும் கூறுகிறார்.
புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்
1924 ல் புலவர்த்தி கமலாவதி தேவி ‘குமுத்வதி’ என்ற வரலாற்று நாவலை எழுதி, நாவல் இலக்கிய வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக தன் பெயரை பதிவு செய்து கொண்டுள்ளார். இந்த நாவலை ராஜமகேந்திரவரத்தில் உள்ள சரஸ்வதி கிரந்த மண்டலி பிரசுரித்தது. சிவசங்கர சாஸ்திரி இதன் எடிட்டர். முன்னுரையில் நாவலாசிரியை இது மகாராஷ்டிராவில் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன் சம்பாஜியின் அரசாட்சி காலத்தில் நடந்த அரசியல் குழப்பத்தைச் சித்தரிக்கும் நாவல் என்றும் கொமர்ராஜு வெங்கட் லக்ஷ்மணராவு எழுதிய சிவாஜி சரித்திரம், சில்லகிரே சீனிவாச ராவு எழுதிய மகாராஷ்டிரர்களின் சரித்திரம் ஆகியவற்றைப் படித்து தன் நாவலுக்கு வரலாற்று உபகரணங்களைத் தொகுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
ராவோஜியும், ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாயும் சகதேவராவிடமிருந்து சேதுபிண்டாரியைக் காப்பாற்றுவது ஒரு அம்சம். பிரியம்வதா என்ன ஆனாள், சேதுபிண்டாரி எதனால் நாவலின் கரு பொருளுக்கு மையமானான் என்பதைக் கூறும் கதைப்பகுதி இரண்டாவது பாகத்தில் இருந்திருக்கலாம். நாவலில் முதல் பாகம் மட்டுமே இப்போது கிடைக்கிறது. ஸ்ரீனிவாசம்மாவின் வரலாற்று அறிவு, சரித்திரப் பார்வை, பூகோள அறிவு, காடுகளைப் பற்றிய புரிதல் போன்றவை இந்த நாவலில் அழகாக வெளிப்படுகின்றன.
ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
தெலுங்கில் நாவல் செயல்முறையை எடுத்து வந்தார்களே தவிர, ஆரம்ப காலங்களில் அதனை எந்தப் பெயரால் அழைப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. சில நாட்கள் அதற்கு முன்னால் அறிந்திருந்த பிரபந்தம் என்ற இலக்கிய வடிவின் சிறப்பைக் கூறும் உரைநடைச் செய்யுள் என்ற பொருளில் ‘வசனப் பிரபந்தம்’ என்று அழைத்தார்கள். கந்துகூரி வீரேசலிங்கம், ‘ராஜசேகர சரித்திரம்’ என்ற நாவலுக்கு விமரிசனம் எழுதுகையில், ‘காசீபட்ட ப்ரஹ்மய்ய சாஸ்த்ரியின் நவல’ என்ற பெயரை பயன்படுத்தினார். புதிய என்ற பொருள் படும் ‘நவ’ என்ற சொல்லின் ஆதாரத்தோடு நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருகாமையில் விளங்கும் ‘நவல’ என்ற சொல், அன்று முதல், நாவல் என்ற முயற்சியின் தெலுங்குப் பெயராக நிலைபெற்றது. ‘நவல’ என்பது தேசியச் சொல். ‘பெண்’ என்பது அதன் பொருள்.
