இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்

கொச்சியிலிருந்த பிரம்மாண்டமான அந்த டச்சுக்கோட்டை முழுக்க உப்புக் காற்றின் ஈரம் நிறைந்திருந்தது. கொச்சி ஆளுனரான வான் ரீடி மிகுந்த மனவருத்தத்துடன் ஒரு சாளரத்தின் அருகே அமர்ந்து வெளியே விரிந்திருந்த அரபிக்கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.   அது 1674-ம் ஆண்டு. ஐரோப்பிய இறைப்பணியாளர் மேத்யூவின் உதவியுடன் மலபார் பகுதியின் தாவரங்களை ஆவணப்படுத்தும் “இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்”

சாமுண்டியின் குழி

அவன் கற்படிகளில் ஏறி நடந்து கோயிலின் முற்றத்தில் மறைந்தான். விதியைப் போல பயமுறுத்தித் தன் முன்னால் நின்ற செங்குத்தான சுவர்களை ருக்மிணி வெறித்தாள். அந்தச் சுவர்கள் பாறைகளிலிருந்து வடிக்கப் பட்டவை ; கீழே ஒரு சிறையைப் போல சிறிது உயர்த்தப்பட்ட பகுதி. யாருமே, காற்று கூட அவளுடைய வேய்ந்த சிறிய குடிசையைப் பார்க்க முடிந்ததில்லை

மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

இடிந்த புராதனக் கோவிலாகவும், கூரை இல்லாத கோவில் சந்நிதியாகவும், தரையில் கிடக்கும் கல்வெட்டுப் பதித்த கல்தூண்களாகவும் மட்டும் உயிர்த்து, நானூறு வருடத்தில் ஒரு நகரமே சிதைந்து   பொடிபொடித்துப் போய்விட்டது. நாகர்பஸ்திகேரி என்று பக்கத்து கிராமத்தின் பெயரை வைத்து கெருஸொப்பாவை அடையாளம் காண்பது இன்றைய வழக்கம்.

எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி

வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல்

மிளகு அத்தியாயம் பத்தொன்பது

நானும் அகல்யாவும் மட்டும் இருந்தவரைக்கும் பம்பாய் பாண்டுப் சால் குடித்தனத்தைத்தான் நடத்திட்டு இருந்தோம். அதுனாலே பெரும்பாலும் மராட்டி தான் பேசினது. கூடவே பம்பாய் இந்தியும். குழந்தைகள் ஏற்பட்டு, ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலே இருந்து அக்கம் பக்கத்திலும் ஸ்கூல்லேயும் பேசிப் பேசி பசங்களுக்கு வாயிலே மலையாளம் சர்வசாதாரணமாக வந்துடுத்து. நானும் அகல்யாவும் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வழியா மலையாளி ஆகிட்டோம். இன்னும் தமிழ் உச்சரிப்பிலே தான் மலையாளம்.

குருதி

வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள்.  ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.

வெறுமையில் பூக்கும் கலை

இது முற்றிலுமாக ஒரு கொரோனா காலப்படம். திரையில் தோன்றும் பிம்பங்கள், பின்னணிக்குரல்கள், இசை, உரையாடல்,படத்தொகுப்பு, இடையிடை மௌனம் எல்லாமே கொரோனாவின் தாக்கம் கொண்டிருக்கின்றன. புதைத்து விட்ட காதல் என்னும் கொரோனாவைத் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரும் திடீரென்று தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இல்லை. அந்தப் பெண் அணிந்து கொள்கிறாள்.