என் வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை விலைக்கு வாங்க முடியுமா என்ன, அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை. நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை விடுங்கள் அந்த மனையை விலைக்கு வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும் “நாய்வால்”
Author: எஸ்ஸார்சி
பொய்
‘இப்ப இந்த அறுவது கல்யாணம் அவசியமா. எனக்கும் தான் அறுவது வந்துது. நானும் ஆச்சியும் திருக்கடையூர் பஸ் பிடித்துப் போனோம். காதும் காதும் வச்சமாதிரி சுப காரியத்த முடிச்சிகிட்டு வூட்டுக்கு வந்தம்.ஒரு பாயசம் வச்சம் வாழ எல போட்டு சாப்டம். பெரிய செலவு எதுவும் இல்ல. ஆனா கடன் வாங்கியாவது இப்ப இந்த மணிவிழாவை செஞ்சிகிணுமா’
விட்டல் ராவ் ஓர் கலைச்சுரங்கம்
பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது
மனசுப் போல
‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம் வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை. இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்
சுழல்
களவு போன வண்டியை சரியாய் இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும். அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ் இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.
இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர் ஜே .பி.
ஜூன் 5 1978 ல் ஜேபி ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’ என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்
கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன
நாய்வால்
வாழ்க்கைச்சக்கரத்தில் வயோதிகம் எவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஆக்கிரமிக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் ஆயிற்று. தலை நரைத்தது. கண் முகம் தோல் சுருங்கிப்போனது. முட்டிவலி நெட்டிக்கொண்டு வந்தது. இயலாமை அன்றாடம் அனுபவமானது. சர்க்கரையும் இரத்த அழுத்தமும் கொலஸ்ட்ராலும் உன்னை விட்டேனா பார் என்று ஒன்றன் பின் ஒன்றாகத் துரத்திக்கொண்டு வந்தன.
ஜம்பம்
குப்பைக்காரனுக்கு ஒரு நாள் ஈரக்குப்பை மறுநாள் உலர் குப்பை என்பதாய்க்கணக்கு. உலர் குப்பை போடும் நாள் என்றால் எனக்கும் மகிழ்ச்சி. குப்பைக்காரன் விசில் சப்தம் வீட்டருகே நெருங்குகிற மாதிரிக்கு உணர்ந்தேன். ஆமாம் என் வீட்டருகே வந்துவிட்டான். தமிழ் உச்சரிப்பில் வீணாய்ப்போன தெலுங்கு பேசும் ஆந்திரப்பெண் கையில் வெள்ளை சாக்கு வைத்துக்கொண்டு குப்பை வண்டியோடு தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள்.
பாரபட்சம்
கீழ் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் எங்கோ மறைமலை நகர் உறவினர் வீட்டுக்குப்போய்த் தங்கிவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். கீழ் வீட்டு தோட்டக்கதவு, ரூம் கதவு இவை பொல பொல என உதிர்ந்து தூளாய்க் கொட்டியன. தரை தள வீட்டில் குடியிருந்தவர் ஆந்திரா ஊறுகாய் வியாபாரம், எல் ஜி கூட்டுப் பெருங்காயம் இத்யாதிகளை லொட லொட டூவீலரில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்பவர்.
வாலு போச்சி கத்தி வந்தது
சம்பந்தி அனுப்பிய லிஸ்ட்டை எடுத்துக்கொடுத்து சாமான்கள் அத்தனையும் வாங்கிக்கொண்டான். ரூபாய் மூவாயிரத்து முந்நூற்றி முப்பத்து மூன்று . ரூபாயை இரண்டு முறை எண்ணினான். கடைக்காரனிடம் கொடுத்தான். அவன் சொல்வதுதான் கணக்கு. எந்த பொட்டலத்தில் என்ன வைத்துக்கட்டினானோ யார் கண்டார்கள். நேராக வாயுவேகா கொரியர் காரனிடம் போய் நின்றான்.
சகோதரி நிவேதிதையின் பார்வையில் இந்தியா
தொடக்க கால வைணவத்தில் இலக்குமி என்னும் கடவுள் ஏது? வரலாறு கொண்டு சேர்த்ததே அப்பெண்கடவுள். வாசகச் சிந்தனையைக் கிளறிவிடுகிறார் நிவேதிதா. ராஜபுதனத்தப்பெண் கிருஷ்ணப்ரேமி மீராபாய்க்கும் வங்காளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் வசமிருந்த கயாவை மீட்க ராஜபுதனத்து இளவரசர்கள் விரும்பினார்கள்.சைதன்யரைப்போல் கிருஷ்ணனை பிரேமித்த மீரா வங்களாத்து கிருஷ்ண வழிபாட்டை கையிலெடுத்தார்.வைணவ வரலாறு வங்கத்து மகான் சைதன்யரோடு பிணைந்ததே. சுடலைக்கு உறவான சிவபெருமான் அர்த்தநாரி ஆனார். சிவனே மஹாதேவர் ஆனார்.ஆதிசங்கரருக்கு இதனில் பங்கில்லாமல் இல்லை.
கோட்டைகளை ஆய்ந்த விட்டல் ராவ்
’பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச்சென்றார்கள். அங்கே எல்லாபடங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி ஆக்வாடிண்ட்( நீர்வண்ண) பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக அவை வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் ( ஓரியண்டல் சீனரி) என்னும் தலப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப்பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல் ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தை தனக்குள் வகுத்துக்கொண்டார்.’
எச்சத்தாற்பாகம்படும்
பதினொன்றரை மணிக்கு இண்ட்ரோல் பெல் அடித்தார்கள். அப்போது என் அப்பாவை நான் பார்க்கவில்லை. பள்ளிக்கூட ஆசிரியரோ மாணவரோ ஆண்கள் யாருக்கும் கக்கூஸ் கிடையாது. ஹெட்மாஸ்டருக்கும் இல்லைதான். பேருந்து செல்லும் சாலையோரம் தான் எல்லோருக்குமே எதற்குமே. பெண்பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டிடத்திற்குப்பின்புறம் சிமெண்ட் ஷீட் போட்டு ஒரு மறைப்பு கட்டி வைத்திருந்தார்கள். அதனுள்ளாக என்ன வசதியிருக்குமோ யார் அறிவார்.
’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம்
’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.
உபநிடத சாரம்
அனைத்து உயிர்களையும்
தன் ஆன்மாவுக்குள்ளே காண்பதுவும்
அனைத்து உயிர்களிலும்
தன் ஆன்மாவைக் காண்பதுவும்
ஆத்ம அனுபவம்
