சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்

தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.

ஜேம்ஸ் வாட்சன் (1928 –2025)

கேம்பிரிட்ஜில் வாட்சன், க்ரிக் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, DNA வின் அமைப்பை கண்டறிவதில் ஈடுபட்டார். DNA-வின் சரியான அமைப்பை ரோசலின்ட் ப்ராங்ளின் மற்றும் வில்கின்ஸ் வழங்கிய எக்ஸ்-கதிர் விளிம்பு வளைவுப் படங்கள் (X-ray diffraction photographs) மூலம் கண்டறிந்தனர். பாஸ்பேட் முதுகெலும்புகள் மூலக்கூறின் வெளிப்புறத்தில் உள்ளது மற்றும் அது ஒரு இரட்டைச் சுருள் என்றும் ரோசலிண்ட் சுட்டிக் காட்டினார். இந்த முக்கிய நுண்ணறிவு, இரண்டு இழைகளும் எதிரெதிர் இணையானவை என்பதை உணர்ந்துகொள்ளவும், சரியான இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கும் ஏதுவானது. 

🕊️ 2025 நோபல் அமைதி பரிசு — கேள்வி & பதில் தொகுப்பு (FAQ)

மரியா கொரினா மச்சாடோ யார்? அவருக்கு ஏன் நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது?
தகவல்: வெனிசுலாவில் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்தும் முக்கிய தலைவி.
கிண்டல்: மேற்குலகத்திற்கு பிடிக்காத ஆட்சிக்கு எதிராக நின்றதால் பதக்கம் கிடைத்தது.

2025 அமைதிக்கான நோபல் பரிசு

சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் “2025 அமைதிக்கான நோபல் பரிசு”

ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்

பேரழிவின் கலை இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும்  இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது.  அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை “ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்”

வாசிப்பின் நிலப்பரப்பு: ஜாய்ஸின் டப்ளின்

கதைகள் சாதாரண வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றன, நிச்சயமாக அவை அந்தச் சாதாரணத்துவதையும் அது ஏற்படுத்தும் விரக்திகளின் பட்டியல்கள் மட்டுமே அல்ல. ஜாய்ஸ் குறிப்பிட்ட “scruplously mean” மொழி , கட்டுப்பாடு, துல்லியம், நடையின் சிக்கனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது, அழகியலும் தார்மீகத் துல்லியமும் அவற்றில் பொதிந்திருந்தன. ‘எபிஃபனீஸ்’ (epiphanies) என்ற விஷயத்தைப் பேசிவிட்டு, இந்த உரைநடை பாணிக்கு வருகிறேன். இது ‘டப்ளினர்ஸ் -இன் புகழ்பெற்ற அடையாளமாக மாறிவிட்டது

பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்

அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”

கருவியில் கிடைத்த சுநாதம்

வேதமூர்த்தி என்றதும் முதலில் மனத்தில் எழுவது அவர் கருவியில் கிடைத்த சுநாதம். ஸ்ருதி பத்திரிக்கையில் தொடர்ந்து கலைஞர்களைப் பற்றி எழுதிய சங்கரநாராயணன் ஒருமுறை சொன்னார், “பகவான் எதுக்கு ரெண்டு காதைக் கொடுத்திருக்கான் தெரியுமா? ஒரு காதுல காருகுறிச்சி அருணாசலத்தோட நாதத்தை நிரப்பிக்கணும். இன்னொரு காதுல வேதாரண்யம் வேதமூர்த்தியோட நாதத்தை நிரப்பிக்கணும்.”. பொதுவாக நாகஸ்வர கலைஞரின் நாதத்தை, பாடகரின் குரல்வளம் போல, இயற்கையில் அமைந்தது என்று கருதுவதுண்டு.

தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை

ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

குகே வா தியாங்கோ

தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது. 

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்

பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா

திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறவிருக்கும், வினோத்குமார் சுக்லா 2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் “வினோத்குமார் சுக்லா கவிதைகள்”

எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி

வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல்

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது.

ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி

இதனைக் கண்ட டாட்டி திருவாளர். ஹ்யூலோ கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். R K லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் (Common Man) போன்ற ஒரு மனிதன்.  வட்டத்தொப்பி, நீள் மேலங்கி, குதிகாலுக்கு மேல்வரை மட்டும் நீண்ட பேண்ட், வாயில் புகைகுழாயுடன் சற்றே முன் சாய்ந்து குதிகாலை உந்தி நடக்கும் ஒரு கனவான். ஹ்யூலோவுக்கு என்ன வேலை எங்கு வசிக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எந்த ஒரு காட்சியிலும் அவர் நுழையும்போது ஏற்கனவே அறிமுகமாகியவரென்றே பார்வையாளருக்குத் தோன்றும்.

கனடா! கனடா!

“எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?” என்ற கவிதை நூலுக்காக இளவாலை விஜயேந்திரன் பரிசு பெற்றார். இலங்கையின் மலையக நகரான நுவுரேலியாவில் பிறந்தவருக்கும் கங்கை என்ற நதியின் குறியீட்டுப் பாதிப்பு இருப்பதைக் கண்டு வியந்தேன். புனித நதிகள் என்ற கோட்பாடு இந்தியாவுக்கு மட்டும்தானா? பிற ஆசிய நாடுகளுக்குக் கூட இல்லையா? இவரும் தன் உரையாற்றும்போது மிகுந்த மனவெழுச்சியுடன் காணப்பட்டார். 

மூன்று அறிஞர்கள்

மூவரும் அவர்கள் காலகட்டத்தைய இந்தியாவை (கால்ட்வெல்லைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை) புரிந்து கொள்ள முயன்றவர்கள். இவர்களின் புரிதல் முற்றிலும் தவறானது என்பதால் இவர்களை அவதூறு செய்வது முட்டாள்தனமானது. மூவரும் அன்றைய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள். அதே சமயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்ய முயன்று அவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டவர்கள்.

பிபேக் தேபராய் (1955-2024)

‘(Requiem) ‘கோரிக்கை’ என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்தியில், தன்னைத்தானே உள்விசாரணை செய்யும் விதத்தில், அவர் கடைசியாக எழுதியது  வாழ்வின் நிதர்சனம், இயற்கையின் இயக்கம், தத்துவ விசாரங்களைத் தொட்டுச் செல்லும் ஒன்று.  அவர் எழுதுகிறார் “முன்னர், யயாதி, புலனின்பத்திற்காகத்தான் இளமையைக் கேட்டான் என நினைத்தேன். இப்போது தோன்றுகிறது- தன் உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஏக்கம் அது. 

ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு

1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய “ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு”

எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர்

மேலாக நகைச்சுவையாக அறியப்படும் இது, அவரின் சிந்தனை முறையையும், எழுதும் முறையையும் காட்டுவது எனப் பல எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். 34 அபாரமான நூல்களை எழுதியிருக்கிறார். அதைவிட முக்கியமாக அபாரமான வாசகர். “படைப்பாளியின் வார்த்தைகள் எதிரொலியாக உங்கள் சிந்தையில் கேட்கும்போது உங்களைச் சுற்றியுள்ள இரம்மியமான அமைதி”க்காக வாசிப்பின்பமாக பிறரின் கதைகளை விரும்பினார்.

வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல்

This entry is part 10 of 22 in the series இசைவாணர்

அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.

கதைகளை ரசிப்பது எப்படி?

This entry is part 50 of 72 in the series நூறு நூல்கள்

புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும்  தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது. 

கருஞ்சாந்து நிற ஆற்றலாளர்கள்

ஈரம் கசியாத, சுகாதாரப் பட்டியுடன், அணையாடையும் இருக்கும், பெண்கள் பாதுகாப்பாக சங்கடமில்லாமல் உணரும். ‘அட்ஜெஸ்டபில் பெல்ட்டை’ இவர் வடிவமைத்தார். முதலில் இந்த சாதனத்தை வரவேற்ற ஒரு குழுமம், இவர் ஒரு கறுப்பினத்தவர் என்று அறிய வந்ததும் சந்தைப் படுத்த மறுத்து விட்டது. காப்புரிமைக் காலம் முடிந்து விட, எவரும் இந்த சாதனத்தை வடிவமைக்கலாம், சந்தைப் படுத்தலாம் என்ற விதி முறையின் படி, இவரது இந்தக் கண்டுபிடிப்பு, இவருக்கு அழியாப் புகழை தந்ததே தவிர, பணம் தரவில்லை.

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்

மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது.   பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”

பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்

கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். 

டாக்டரும், முனைவரும்

திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில்  அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை  கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில்  என் மாமியார்  அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.

உசைனி

This entry is part 7 of 11 in the series காருகுறிச்சி

“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன்.

நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்

ஜமீலா நிஷாத் ஒரு கவிஞர். பல வண்ணங்களிலும் வேறுபட்ட வடிவங்களிலும் கனவுப்படிமங்களாகக் கவிதைகள் தன்னிடம் உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அவரது கவிதைகளில் காணப்படும் கனவுத்தன்மை இது சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிறது. தன்மீது 1992க்குப் பிறகு திணிக்கப்பட்டதாக அவர் கருதும் முஸ்லிம் அடையாளத்தை பரிசீலனை செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இறங்கியுள்ளார். கோயில்களுக்குச் செல்வது, தர்கா விழாக்களில் கலந்து மகிழ்வது என்ற தோழமையும் பகிர்வுணர்வும் நிறைந்த சூழலில் வளர்ந்த அவரால் ஹைதராபாதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் வெறுப்பையும் பகைமையுணர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நடவுகால உரையாடல் – சக்குபாய்

ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார்.

மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்

ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது

நாங்களும் படைத்தோம் வரலாறு

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்தி வைப்பார்.

பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி

நான்காவது வகுப்பிற்குமேல் அவளை படிக்கவிடாத, கராச்சியைச் சேர்ந்த குடும்பத்தின் இளம் பெண் ; தினசரிகளை படித்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்துகொண்ட ஆர்வம்மிக்க பெண் ; தான் மேலே படிக்கா விட்டால் அறிவியலில் தான் கண்டுபிடிப்பதற்கென்று எதுவுமே இல்லாமல் போய்விடுமா என்று கவலை கொண்ட பெண் ; பிரிவினைக்குப் பின், இருபத்தியிரண்டு வயதில், ஐந்து சகோதரிகளும் ஐந்து சகோதரர்களும் கொண்ட தன் குடும்பம் பிழைக்க ஏதேனும் ஒரு வழி தென்படாதா என்று பம்பாய் தெருக்களில் தன் சகோதரனுடன் அலைந்து திரிந்த பெண் ; ஆராய்ச்சிக்கூடத்தில் அலுப்பே கொள்ளாமல் உழைத்த ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி; அறிவியல் அறிவு மூலமாக தான் அறிந்து கொண்டதெல்லாம் புறவுலகம் பற்றியதுதான் என்பதால் சுயத்தின் தன்மையை அறிய முயலும் ஒரு சந்நியாசி – சாந்தூ குர்னானியின் கதையிலிருந்து உருவாகும் பலமும் உறுதியும் கொண்ட பிம்பங்கள் இவை. இந்த வாழ்க்கைக் கதையிலிருந்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பெண்களின் கல்வித் தேர்வு பற்றியும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் நாம் அறிகிறோம்.

முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்

நேரடிப் பேட்டிகளுக்கு வயதான விஞ்ஞானிகள் கிடைக்காததே இந்தக் கட்டுரையை எழுதும்போது நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை. என்றாலும் அவர்களில் இரண்டு பேரோடு பேச எனக்கு அதிர்ஷ்டம் கிட்டி யது. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசிப் பார்க்கும்போது, பரந்த இந்திய வானத்தை அழகுபடுத்தும் அற்புத வண்ணங்களின் அழகான வானவில்லை காட்சிப்படுத்தும். இந்த முன்னணி பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தின் செயல்வகையை அந்த வண்ணங்களில் ஒவ்வொன்றாகக் காணப் போகிறோம். கண்ணாடிக் கூரையை உடைத்து வெளியேறி, தன்முனைப்பான முயற்சிகளால் அவர்கள் தங்களுக்கு மட்டும் வரலாறை உருவாக்கிக் கொள்ளவில்லை; இந்திய சமூகத்தின் சமூகப் புரட்சிப் போக்கில் அவர்கள் சரித்திர காரணகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

சொல்லாத கதைகள்

கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.

தனியாய் ஒரு போராட்டம்

முஸ்லிம்கள் தனக்கு அளித்த உதவிகளை பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில் கலா அவர்கள் தன்னிடம் கேட்ட பல கேள்விகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். “நீங்கள்—ஹிந்துக்கள்— ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? உங்கள்மேல் எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லையே?” அவர் அதற்கு முன்பும் அதன் பின்பும் அளித்த—-அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த— பதிலைத்தான் அப்போதும் அளித்தார். “நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. மத வேறுபாடுகள் பாராட்டாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நாமெல்லாம் ஒன்று. மனிதர்கள் என்ற நிலையில் நாமெல்லாம் சகோதர சகோதரிகள்.”]

“பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மட்டும் மரியாதெ செய்யுது?”

This entry is part 4 of 10 in the series கி.ரா. - அ.ரா.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைக்குக் க.நா.சுப்பிரமண்யம், கி.ராஜநாராயணன் போன்றோரை வருகைதரு பேராசிரியராக அழைத்தது போல சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியிலும் ஒருவரை அழைக்கலாம் என்ற பேச்சு வந்தது. அப்போது உடனடியாக நினைவில் வந்த பெயர் பிரபஞ்சன். நாடக இலக்கியம் என்றொரு தாள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. செவ்வியல் நாடகங்கள் வரிசையில் இந்திய நாடகங்கள், ஐரோப்பிய நாடகங்கள், நவீன இந்திய நாடகங்கள் என அத்தாள்களுக்குப் பெயர். இந்த த்தாள்களில் ஒன்றிரண்டைப் பாடம் சொல்வதற்காக அவரை அழைக்கலாம் என்று பேசினோம். தமிழ்நாட்டில் நடந்த பாதல் சர்க்கார் நாடகப்பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் அவர். அந்த உத்வேகத்தில் அவர் எழுதிய முட்டை, அகல்யா என்ற இரண்டு நாடகப்பிரதிகளும் கவனிக்கத்தக்க நாடகங்கள் தான் என்று சொன்னேன்.

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள்

திருமணத்தில் மூலமாக நல்லதொரு கணவனைப் பெற்று அவனை மகிழ்விப்பதும், அவனுக்கான வாரிசை பெற்றுக்கொடுப்பதுமே பெண்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு உகந்த விதத்தில் அழகானவர்களாக, அடக்கமானவர்களாக, கீழ்ப்படிவானவர்களாக, கவரச்சியானவர்களாக உருவாகும் விதத்தில் பெண்களை சிறுவயதில் இருந்தே பயிற்றுவிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.18 ம் நூற்றாண்டின் சட்டத்தின் பார்வையில் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, சுதந்திரமாக செயற்படும் உரிமை என எல்லா வகையான உரிமைகளும்  மறுக்கப்பட்டதுடன், அவர்கள் கணவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவராகவும் இருக்கும் நிலையே காணப்பட்டது.

”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”

This entry is part 3 of 10 in the series கி.ரா. - அ.ரா.

நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான்

கி.ரா – நினைவுக் குறிப்புகள்

This entry is part 2 of 10 in the series கி.ரா. - அ.ரா.

இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு..
என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது.  

உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்

தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்

தாவரங்களின் இருபெயரீட்டு  விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின்[i] ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica)  நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக,  வெளிப்படையாக விமர்சிப்பவரான  யோஹான் சீகஸ்பெக் (johann siegesbeck)    மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு “இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்”

காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!

கல்யாணம் அவர்கள் இறப்பதற்கு சுமார் 10, 15 நாட்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்து ”இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்து விடுவேன். நீங்கள் எப்போ வீட்டிற்கு வருவேள்?” என்று கேட்ட போது ”நான் நிச்சயம் வருகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் இறக்க மாட்டீர்கள். ஒரு வாரம் கழித்து “காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!”

தந்தைக்கு என்றும் நன்றியுடன்

கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.

கி. ரா. – அஞ்சலி

தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.

காரு குறிச்சி

This entry is part 8 of 11 in the series காருகுறிச்சி

நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே அவருக்கு ‘யோகம்’ தொடங்கிவிட்டதாக இங்கே பேசிக்கொள்வார்கள். ஒருநாள் காலை 7 மணி இருக்கும். நான் வெளிக்குப் போய்விட்டு, குச்சியால் பல் தேய்த்துக்கொண்டே கரை வழியாக ஊருக்குள் வந்தேன். காளியம்மன் “காரு குறிச்சி”

பத்மா அர்விந்த் – பேட்டி

படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை. எழுத்தாளர்களும் மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை….

ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர்

பீரங்கித் தாக்குதலில் காயமுற்று ஹால்டேன் ஸ்காட்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு கருப்புக் காவலர்களின் எரிகுண்டுப் பயிற்சிக்காக ஒரு பள்ளியைத் துவக்கினார். பிறகு மெசபொடோமியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆங்கிலேயர்களின் குண்டடியில் காயமுற்றதால் மேற்கொண்டு சேவைசெய்ய இயலவில்லை. காயங்களிருந்து குணமடைவதற்காக யுத்தத்தின் கடைசி இரண்டு வருடங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். தாய்நாடு திரும்பியபோது இந்தியா, இந்தியர்கள், இந்தியக் கலாசாரம் ஆகியனவற்றின்மேல் ஏற்பட்ட நிரந்தரமான பற்றையும் கையோடு எடுத்துச்சென்றார்.