2024 அமைதிக்கான நோபல் பரிசு

அணு குண்டுவெடிப்பில் இருந்து தப்பியவர்களின் ஜப்பானிய அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடான்கியோவிற்கு தரப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது “2024 அமைதிக்கான நோபல் பரிசு”

அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்

நிகான் ஹெடாங்க்யோ (Nihon Hidankyo, என்ற சமூக இயக்க அமைப்பிற்கு 2024 ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அணு குண்டுகளை வீசி 1,20,000 நபர்கள் இறந்த நிகழ்வின் 79ம் ஆண்டில் இருக்கிறோம். அதன் கதிர்வீச்சுக்களாலும், அதன் எரியூட்டலாலும் கிட்டத்தட்ட 1,20,000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். “அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்”

ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு

1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய “ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு”

கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு

உயிர்களின் பன்முகத்தன்மை புரதங்களின் அற்புதமான இரசாயன கருவிகளின் திறனைக் காட்டுகிறது. அவை ஒன்றாக வாழ்வின் அடிப்படையான அனைத்து இரசாயன எதிர்வினைகளையும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன. புரதங்கள் ஹார்மோன்கள், சமிக்ஞை பொருட்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பல்வேறு திசுக்களின் கட்டுமானத் தொகுதிகளாகவும் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று “கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு”

இயந்திர கற்றல் முன்னோடிகளுக்கு 2024 இயற்பியல் நோபல் பரிசு

“செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) இன் இன்றைய ஏற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் இயந்திர கற்றல் நுட்பங்களை உருவாக்கியதன் அடிப்படை கண்டுபிடிப்புக்களுக் காக ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட்  (Princeton University, USA) மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் (University of Toronto, Canada) ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கும், 2024 இயற்பியலுக்கான நோபல் “இயந்திர கற்றல் முன்னோடிகளுக்கு 2024 இயற்பியல் நோபல் பரிசு”

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024

நம் உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லிலும் ஒரே மாதிரியான மரபணு வழிமுறைகள் அல்லது டிஎன்ஏ உள்ளது. இந்த மரபணுக்களில் சில மட்டுமே ஒவ்வொரு ‘செல்’லிலும் வெளிப்படுத்தப்படுகின்றன, இது ‘செல்’லின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்யும் புரதங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 2024ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க “உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024”

முட்டை போண்டா

நான் முதன் முதலாக சண்முகராஜனின் பெட்டியைத் திறந்த போதே அதனுள் ஒரு பத்து ரூபாய் கட்டு கிடந்ததைக் கண்டு கொண்டேன். பெரிய தொகையை எடுத்தால் அவன் கண்டுபிடித்து வார்டனிடம் புகார் சொல்லக் கூடும் என்பதால் வெறும் பத்து ரூபாயை மட்டும் எடுத்தேன். ஏற்கெனவே விடுதியில் பணம் திருடு போன புகார்கள் நிறைய இருந்தன.

சொர்க்கம்

இவரிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை. எழுந்து நின்று, போவதற்கு முன் ஒருமுறை அவரை உற்று நோக்கியபடியே, “நீங்க என்ன அந்த மினிஸ்டரோட சகலைக்கு உறவா?” என்றேன். ஒருகணம் பொட்டில் அறைந்ததுபோல துணுக்குற்றவர், “என்ன…என்ன சொல்றீங்க?” என்று தடுமாறினார்.

கலைத்தீவிரவாதி  – ஓவியர் ஃப்ரான்சிஸ் நியூட்டன் சூசா (Francis Newton Souza)

தெய்வீகமும், ஒழுக்கமும் சூசாவின் இயல்பில் இல்லை. கிறிஸ்துவப் பள்ளியின்  ஒழுங்குமுறையும், கட்டுப்படும் அவருக்கு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆபாசப் படங்களைக்  கழிவறையில் வரைந்ததிற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பதினாறாம் வயதில் கலைக்கல்லூரியில் சேர்ந்த சூசா, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்தற்காக மீண்டும் வெளியேற்றப்பட்டார். அதே தினம் தன் முதல் ஓவியத்தைக் காய்கறி நறுக்கும் பலகையின் மேல் நீல நிறத்தில் வரைகத்தியினால் தீட்டினர்.

நேற்றைய மனிதர்கள் – புராண முறைகளின் மரணம்

மீண்டும் கட்டமைத்து ஆரம்பிக்கக்கூடிய சில அடித்தளம் எப்போதும் மீதமிருக்கும். அத்தகைய நேரங்களில், அரசியலின் முக்கிய சவால் என்பது தவிர்க்க முடியாத வீழ்ச்சிகளின் பாதிப்பை குறைப்பதும், காட்டுமிராண்டித்தனத்தின் எல்லையை குறுக்குவதும், படிப்படியாக முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை உண்டாக்குவது தான். இத்தகைய நம்பிக்கை, பிற காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமய காரணங்களுக்காக அவசியமானது என அவர் கருதுகிறார்

எல். சுப்பிரமணியத்தின் ராக ஹார்மனி கருத்து எவ்வாறு உலகளாவிய இசைக் கலவையை உருவாக்க உதவும்?

மேற்கத்திய இசைக்கு ஒத்த சுருதியான ஏற்றங்களை மாற்றி மேம்படுத்த விரும்பும் இசைக்கலைஞர்கள் ஒத்திசைவாகக் கட்டப்பட்ட ராகத்தை புரிந்து கொண்டால் அவ்வாறு செய்யலாம். மேற்கத்திய இசை ஒன்றிப்பும் கோட்பாட்டையும் நன்கு அறிந்தவர்களுக்கு இந்த அமைப்பு மேலும் பயனுள்ளதாக இருக்கும். மேற்கத்திய பாரம்பரிய நல்லிணக்கம் அதன் வரலாறு முழுவதும் மாற்றங்களையும் புதுமைகளையும் கண்டுள்ளது.

ஓய்வில் மனம்

இவனுடைய குடும்பம் பற்றி ஏதாவது கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது.   பழுது பார்ப்பவன் வரும் வேலையில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம்.  இல்லை இவ்வளவு பேசியதே போதும்.  ஒரு நிறைவு இருக்கும்போது மேலும் ஏன் பேசவேண்டும்.  பூக்கடையில் செருப்பை மாட்டும்போது ஏன் அவன் கோவிலில் மேலும் சிறிது நேரம் இருப்பதாக சொன்னான் என்று யோசித்தேன்.

தம்மையே தமக்கு நல்கும்

ஒரு குறிப்பிட்ட குவாண்ட நிலையில் உள்ள ஒரு துகளை, கடந்த காலத்திற்கு எடுத்துச் சென்று, வேண்டுமென்றே அதன் கடந்த கால நிலையை மட்டும் மாற்றி, அதன் நிகழ்கால நிலையை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றாமல் உருவகப்படுத்திப் பார்க்கையில், குவாண்ட நிலையில் அந்தப் பட்டாம் பூச்சி விளைவு ஏற்படவில்லை என்று அவர்கள் கண்டறிந்தனர்.

விசாலாட்சி என்னும் யாஸ்மின்!

வான் நீலத்தில் பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்தது எனக்கு,  அடர் ஆரஞ்சில் பெரிய பாக்கெட்டுகள் வைத்தது மித்ராவுக்கு.   அப்போது பொள்ளாச்சியில் புழக்கத்துக்கு வந்திருக்காத தெர்மோ ஃப்ளாஸ்க் தண்ணீர் பாட்டில்கள் இரண்டும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.  அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு பொள்ளாச்சியிலிருந்து நேராக ஊட்டி செல்லும் பேருந்தில் தூங்கி  வழிந்து கொண்டே செல்லும் நாங்கள் இருவரும் பர்ளியாறு நிறுத்தத்தில் விழித்துக்கொள்வோம்.

குமார சம்பவம்: பாகம் – 2

அசலராஜபுத்ரீ! மலை மகளே இனியும் ஏன் யோசிக்கிறாய். நன் மக்களை பெற்ற தாயார்களின் வரிசையில் நீ முதலாக எண்ணப் படுவாய்.  உலகமே இவனைக் கண்டு பரவசமாகி நிற்கிறது. பிரிய தர்சனன்-  கண்களால் காண அழகன்,  தயங்காதே.  உன் மகன், அள்ளி அணைத்துக் கொள், என்றார். 

மிளகு  அத்தியாயம் எழுபத்தொன்பது

நேமி உன் நல்லதுக்குத்தான் சொல்றார் நாயக்கர். விஜயநகர பேரரசர் கிட்டேயும் சொல்லி ஒப்புதல் வாங்கிட்டார். நீ ஆட்சி அனுபவம் இல்லாமல் இருக்கறதாலே இன்னும் ஒரு  வருஷம் எப்படி ஆட்சி நடத்தறதுன்னு நாயக்கரையும் என்னையும் பார்த்து கத்துக்கலாம். அவர் மிர்ஜான் கோட்டை, ஹொன்னாவரை ஆளப் போறார். நான் ஜெருஸூப்பாவை நிர்வகிக்கப் போறேன். ஒரு வருஷம் பனிரெண்டே மாசம். அது போதும் நீ கத்துக்க. கற்பூர புத்தியாச்சே உனக்கு. 

கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி

This entry is part 12 of 14 in the series குடாகாயம்

இந்தப் பின்புலமெல்லாம் தெரியாமல் இதைப் பார்த்தாலும் இது மிகச் சிறந்த ஓவியம் என்று பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்வார்கள். பார்த்தவுடனேயே இந்த மனிதர் உயிருடன் இல்லை என்பது தெளிவு.  மார்பின் காயம், இரத்தம், குருதி படிந்த கத்தி, தொய்ந்த முகம், தளர்ந்த கை போன்றவை மரணத்தைத் துல்லியமாக வரையறுக்கின்றன.  கிட்டத்தட்ட சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல இந்த மனிதர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

உடைகளும் சுமையடி தனிமையிலே!

ஓஷிமா மீனவர்களின் உடையை உவமையாகக் கூறுவது ஒருவகை என்றால் கடலுக்குள் எப்போதும் ஈரமாகவே இருக்கும் பாறையை உவமையாகக் கூறுவது தொடர்ச்சியாக நிற்காமல் கண்ணீர் பெருகிக்கொண்டிருக்கிறது என்று பொருள்தரும்படி இயற்றுவது அடுத்தவகை.

அதிரியன் நினைவுகள் – 44

This entry is part 43 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இருந்தபோதிலும், என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்யான கனவுலகில் திரும்பப் பிரவேசிப்பதை  நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். கனவுகள்தோறும் ஒரு சில கணங்கள் சில இரகசியங்கள் எனக்குச் சொந்தமானவை. ஆம், நான் தெரிவிப்பதைப் போலச் சில கணங்கள் மட்டுமே சொந்தம் ; பின்னர் அவை என்னிடமிருந்து தப்பிவிடும்.

தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 22 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ன்று மாலையே வசந்தம் சந்திப்பில் டிரிப்பிள் எஸ்  சார் இதில் ஏதோ விஷமமான வேலை நடந்திருப்பதாக தோழர் குருசாமியிடம் ஐயப்பட்டார். ஆகவே மறுநாளே இருவருமாக கிளம்பி திருனவேலிக்கு சென்றார்கள். கட்சி மற்றும் சங்க ஆட்கள் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன. அன்று இரவு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கட்சி அலுவலகத்தில் தங்கிய இருவரும் மறுநாள் தெய்வநல்லூர் திரும்பினார்கள். கைவசம் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த வேண்டி உடனே குருசாமியண்ணனால் அழைக்கப்பட்ட உள்ளூரின் ஒரே வக்கீல் குமாஸ்தாவான நயினா(ர்)ப்பிள்ளை வரவும் பேசியதில் ஒரு விஷயம் தெளிவானது

விஜி ராஜ்குமார் கவிதைகள்

பாதை நீண்டு நீண்டு
தொலைக்காட்சி பெட்டியில்
சென்று சேர்கிறது.
ஒருத்தி வண்ண மணிகளின் பாதை ஒன்றை கோர்த்து கோர்த்து
சேர்க்கிறாள்.
வடாம் துணியை விரித்து விரித்து வெயிலின் பாதையில் ஏறி போகிறாள்
ஒரு கிழவி.

இரு கவிதைகள் – ப்ரீத்தி வசந்த்

ஆசையாய் இன்னொன்று கேட்ட
குழந்தைக்கு பூசை கொடுக்க
வந்த தோசையம்மாவிடமிருந்து
ஜீப்ராவில் ஏறி
காட்டுப்பூக்கள் வழி
அவசரகதியில் ஹாலுக்கு
தப்பிச்சென்ற குழந்தை,
இந்தமுறை
ஒரு பெரியக்கோடு போட்டு
குச்சிக்குச்சியாய் கைக்கால்களிட்டு
தானே அம்மாவாகி
“அம்மாவுக்கு நாலு .. இப்போ என்ன பண்ணுவீங்க”