கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”

கம்பனின் இரணியன்

பிரகலாதனையும் விபீஷணனையும் துரோகிகள் என்று தமிழில் வலிந்து வலிந்து எழுதப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று நாடகம் ஒன்று எழுதியிருக்கிறார். நாடகத்தைப் பார்க்கவில்லை. படித்திருக்கிறேன். படித்தால் தமிழ்த் துரோகியாக மாறிவிடலாமா என்ற சபலம் உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நரசிம்மர் வதைக்கப்படுகிறார். இரணியன் கதாநாயகியை மணக்கிறான் என்று ஞாபகம். இவற்றைப் போன்ற படைப்புகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினால் அது புரட்சி அல்லது புதுமை என்ற மூட நம்பிக்கையில் விளைந்தவை. இவற்றையெல்லாம் சர்க்கஸில் கோமாளி கைகளால் நடந்து வருவதைப் பார்த்து கைதட்டி சிரித்து விட்டு மறந்து விடுவதைப் போல மக்கள் மறந்து போய் விடுவார்கள்.

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்

இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும் என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை கூறியது. நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது. ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன? 19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்: இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

அறிவியலும் பழந்தமிழ்ப் பாடல்களும்

பழந்தமிழ்ப் பாடல்களில் வானம், விண்மீன்கள், ஐம்பூதங்கள், பூக்கள், செடிகள், உயிரினங்கள், பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் பார்த்தவற்றைப் பற்றிக் கூறுபவை. அல்லது கேட்டவற்றைப் பற்றிக் கூறுபவை. பார்ப்பவற்றைப் பற்றியும் கேட்பவற்றைப் பற்றிக் கூறுவதும் அறிவியல் கோட்பாடுகளாக ஆகி விட முடியாது. இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்கான பயணத்தில் அன்றைய மக்களுக்குக் கருவிகளாக அவை உதவியிருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்று தான் கூற முடியும். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு வலிந்து பொருள் கொண்டு அவை அறிவியல் கோட்பாடுகளை நிறுவுகின்றன என்று நான் சொல்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், தமிழ்த் துரோகி, வடமொழி அடிவருடி, என்று குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள் என்ற வகையில்தான் இன்று பலர் எழுதி வருகிறார்கள்.

’கலங்கிய நதி’ – பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் சமீபத்திய நாவல் ‘கலங்கிய நதி’. அவரது ஆங்கில நாவலான ‘The Muddy River’ என்ற ஆங்கில நாவலை அவரே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மத்திய அரசு அதிகாரியின் வாழ்க்கையினுடான பயணத்தில் பல விஷயங்களை பேசிச் செல்லும் இந்நாவலின் வடிவம் தமிழ்க்கு புதிது. இந்நாவல் குறித்து பி.ஏ.கிருஷ்ணனுடன் நடந்த ஒரு உரையாடல் இது. ’ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விட தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும்’, என்று சொல்லும் கிருஷ்ணன், இந்த உரையாடலில் தன் நாவல் குறித்து மட்டுமல்லாமல், தன்னுடைய இளவயது குறித்தும், அதிகார மட்டத்தில் நிகழும் ஊழல், காந்தியம், அண்ணா ஹசாரே முதலிய பலவற்றைக் குறித்தும் பி.ஏ.கிருஷ்ணன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் : ‘நேசிப்பவர்களுக்கிடையே நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இடைவெளியும் இருக்கிறது. இது ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பைச் சிறிதளவும் குறைப்பதில்லை. ஆனாலும் அன்புடை நெஞ்சங்கள் தாங்கலந்தாலும் வானம் நீரை மீண்டும் இழுத்துக் கொள்கிறது. செம்புலம் உலர்ந்து விடுகிறது. வானம் மறுபடியும் பொழியும், நீர் திரும்பச் செம்புலத்தை வந்தடையும் என்ற நம்பிக்கையே இந்த நாவலின் மைய அச்சு. கதையின் இரு முக்கியமான பாத்திரங்களான சந்திரனும், சுகன்யாவும் இந்த நம்பிக்கையை வெவ்வேறு பாதைகளில் பயணம் சென்று சேர்ந்தடைகிறார்கள் அவர்களது பயணங்களைப் பற்றிப் பேசும் ஒரு சிறிய முயற்சியே இந்த வடிவம்.’