ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி

இதனைக் கண்ட டாட்டி திருவாளர். ஹ்யூலோ கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். R K லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் (Common Man) போன்ற ஒரு மனிதன்.  வட்டத்தொப்பி, நீள் மேலங்கி, குதிகாலுக்கு மேல்வரை மட்டும் நீண்ட பேண்ட், வாயில் புகைகுழாயுடன் சற்றே முன் சாய்ந்து குதிகாலை உந்தி நடக்கும் ஒரு கனவான். ஹ்யூலோவுக்கு என்ன வேலை எங்கு வசிக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எந்த ஒரு காட்சியிலும் அவர் நுழையும்போது ஏற்கனவே அறிமுகமாகியவரென்றே பார்வையாளருக்குத் தோன்றும்.

இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…

This entry is part 33 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சமீபத்தில் கப்படோசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ரியன் சமர்ப்பித்த அறிக்கை, காஸ்பியன் கடலோரமுள்ள சிறு இராச்சியத்தை ஆண்டுகொண்டிருந்த பராஸ்மன்ஸ்(Pharasmanès) மீது குற்றம் சாட்டியிருந்தது. இவர், மன்னர் திராயான் காலத்தில் உரோமானிய அரசுக்கு விசுவாசமாக இருக்கத் தவறி, பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தார் ; அதைத் தற்போதும் தொடர்வதாக அறிக்கை தெரிவித்தது.

அதிரியன் நினைவுகள் – 27

This entry is part 26 of 48 in the series அதிரியன் நினைவுகள்

காதல், உடலைப் பிரிந்த ஒரு ஆன்மாவை மீண்டும் பூமிக்குக் அழைத்து வந்து, தற்காலிகமாக அதற்கு ஒரு உடலைக் கொடுப்பதாகும். அளவில் வேறுபாடுகள் இருப்பினும் இக்கதையின் ஆழம் எங்கள் மனதை நெகிழச் செய்தது.  எங்களில் அனேகர் இக்கதையை ஒத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர் : சத்தீரஸ் தனது குரு  நாவன்மை படைத்த அஸ்பாசியஸை (Aspasius) நினைவு கூர்ந்தார் (இவர் சிஷ்யருக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்

அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 48 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 48 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…