புருஷ சூக்தத்திற்காக உறுதியாய் நிற்பதைப் பற்றி! –  முதல் பகுதி

இப்புதினத்தின் முன்னுரையிலும் கதையின் பல பகுதிகளிலும், ஏராளமான  குறீப்பிடுகள் தூவப்பட்டுள்ளன. இவை  கதையுடனும்  அக்காலத்திய இந்து சமுதாயத்துடனும்  குறிப்பாக சாதியுடனும் சம்பந்தமுள்ளதாக அமைந்துள்ளது.  உண்மையாகவே, சாமானிய இந்துக்கள்  எதிர்கொள்ளக்கூடிய  விவரங்களின் சிறந்த சுருக்கமாக அமைந்துள்ளது.

பைசாசத் திருமணமும் ராக்ஷசத் திருமணமும்: கொடியது எது? – ஒரு சிந்தனை

சமீப காலமாக, இந்து காரணங்களுக்காக உழைப்பதாக உண்மையாகவே நினைப்பவர்கள்-இந்து வெறியாளர்கள் என மதச்சார்பற்ற சக ஊழியர்களால் சீட்டு ஒட்டப்பட்டவர்கள்-கூட இக்கருத்தை உபயோகிப்பதை  பார்க்கிறேன். சென்ற வார ஸ்வராஜ்யா இதழில், முஸ்லீம் மக்கள் தொகை அதி வேகப் பாய்ச்சலில் முன்னேறுவதிற்கு ( 26 விழுக்காடுள்ள முஸ்லீம் சமூகம் 42 விழுக்காடு புதிய பிறப்புகளை அடைந்துள்ளது) பதிலடியாக இந்துக்கள் தங்கள் மனைவியை அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது தந்தையாட்சி முறையாகும் என்கிறது.

ஒழிக தேசியவாதம்-2

விவாதத்தின் போது  ஏமாளிகள், சோம்பல் ம்மிக்கவர்கள் என்பதற்கு பதிலாக மந்தமானவர்கள் (தமஸிக்)என்ற வார்த்தையை கூறினேன். வெடித்தெழுந்த ஒருவர், நான் எல்லா இந்தியர்களையும் மந்தமானவர்கள் எனக் குற்றம் சாட்டுகிறேன் என எச்சரித்தார். தொடந்து நடந்த வாக்குவாதங்களின் போது  இவ்வரியை விடாமல் திருப்பி திருப்பி சொன்னார். இத்தகைய அரசியல் பிரமை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மேற்கத்தியர்களுக்கும் பொதுவானது. முஸ்லிம்களை தட்டித் தடவி சமாதானம் செய்வது இந்தியாவை போலவே ஐரோப்பாவிலும் மிகையாக உள்ளது. அதே சமயம், முஸ்லிம்களுடன் சமாதானமாக செல்வதை மறைக்க வேண்டி நீண்ட காலமாக செத்துக் கிடக்கும்  காலனீயத்துக்கு எதிராக காட்டப்படும் போலி வீராப்பை நம்பாதவர்களும்  இந்தியாவில் பலர் உள்ளனர். அதில் முதன்மையானவர் மறைந்த எஸ்.ஆர். கோயல், ஒரு உண்மையான தேச பக்தர். 

ஒழிக தேசியவாதம்!

தசாப்தங்களாக முன்பிருந்த கருத்தை முற்றிலும் மறந்துவிட்டு ஹிந்து இந்தியன் இவற்றிற்குள்ள பாகுபாட்டை அழித்துக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வசிக்கும் அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று கூறுமளவிற்கு சென்று விட்டனர். இது முற்றிலும் தவறான நோக்கு என்பதை நான் திருப்பித்திருப்பி சொல்ல வேண்டிய தேவையில்லை. இது நயமானதல்ல என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். முஸ்லிம்களும் கிருத்துவர்களும், தங்களை கேட்காமலேயே ஹிந்துத்துவ பிரிவில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை ஒருவரும் காதில் வாங்குவதாகவே தெரியவில்லை. அரை குறை அரசியல்வாதிகள், இப்பொய் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இன்றியமையாதது என்றால், அவர்கள் வாயிலிருந்து வரும் பொய் அவர்கள் மனதில் பதிந்துள்ள நம்பிக்கைக்கு மாறானது என்பதை உணர்த்த வேண்டும். பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றால் இப்பொய்கள் எதிரிகளை முட்டாள்களாக்குவதற்காக கூறப்படுவது தங்களையே முட்டாள்களாக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதை உணர வேண்டும். ஹிந்துவும் இந்தியனும் ஒன்றல்ல எனும் உள்ளுணர்வு மிக அத்தியாவசியம்.

ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?

தாகூர் பிரம்ம சமாஜத்தின் வாரிசு. இம்மார்க்கம், உபநிடத சித்தாந்தத்தை மட்டுமே துணையாகக் கொண்டுள்ள, பலருக்குப் புலப்படாத ஹிந்துயிச வழி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. பல்வேறு வண்ணங்களை உடைய கடவுள்களை கொண்ட பக்தி மார்க்க ஹிந்துயிசத்தை பார்த்து முகம் சுளிக்கக் கூடியது அந்த சமாஜம். எனவே தாகூர் யாரந்த இறைவன் என நேரடியாகக் கூறவில்லை. ஆனால், எண்ணிலடங்காக் காலமாக, மனித வரலாற்றில் யாத்திரீகர்களை அவர்களது பயணத்தில் முன் நடத்திச் செல்லும் நித்தியத் தேரோட்டி யாரென்பதை எவருமே சந்தேகமின்றி அனுமானம் செய்ய இயலும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்த கண்ணனையே தாகூர் இங்கு குறிப்பிடுகிறார்.

இந்திய கீதத்தின் சின்னம் – 1

தேசியக் கொடிக்கு சத்ரபதி சிவாஜியின் குங்குமப்பூ நிறத்தைப் போன்ற முழு ஆரஞ்சு வண்ணத்தையே உபயோகிக்கலாமா என விவேகமாகச் சிறிது காலம் சிந்தித்தது. இது மௌமார் கடாஃபியின் முழு பச்சைக் கொடியைப் போலிருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கம் இந்தப் படிகம் போன்ற தெளிவான சின்னத்தை விரும்பாததால் தூர தள்ளி வைக்கப்பட்டது. 1907ல் ஷ்டுட்கார்டில்நடந்த சோஷலிச மாநாட்டில் திருமதி. பிகாஜி காமா1 சூரியனையும் சந்திரனையும் கொண்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்.

மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)

வெள்ளையரின் தலையில் இந்த வேலையை கட்டுவது ஒரு சுலபமான மாற்று வழி. அதிலும் நம்பிக்கையானவர்களாக இருந்தால் இன்னுமே வசதி. ஃப்ராலி புத்திசாலித்தனமாக தன்னை ஹிந்து என அறிவித்து கொள்வதோடு பண்டிட்.வாமதேவ சாஸ்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இவரது புலமையை கண்டு ஹிந்துக்கள் இவரை ஒரு பார்ப்பனராகவே  ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது மனைவி இந்தியர்;ஒரு “யோகினி”யும் கூட. மாறாக, எல்ஸ்ட் தான் ஹிந்துவல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால், யாரையும்  ஹிந்து மதத்திற்கு “மாற்ற முடியாது” அது பிறப்புடன் இணைந்தது என்பதையும்,  ‘ஹிந்துயிசம் பூகோள அமைப்புடன் ஆழமாக இணைந்த ஒன்று’ என்பதையும் அறிந்தவர். 

மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்

புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.

ஓரிரவில் அமெரிக்க நிலப்பரப்பு இருமடங்கான அதிசயம்

தேர்ந்த அரசியலறிஞரும் மூத்த அமெரிக்க தலைவருமாகிய இவர், ஒரு பெரிய மாகாணத்தையே எவ்வித சண்டை சச்சரவும் செய்யாமல் மற்றொரு நாட்டிடமிருந்து சரியான தருணத்தில் அவர்கள் கேட்ட விலையை கொடுத்து தன்னாட்டுடன் இணைத்துக் கொண்டார். அதன் நிலப்பரப்பு 828800 சதுர மைல். தற்போது, ஆர்கன்ஸா, மிசோரி,அயோவா,ஒக்லஹாமா,

கல்வித் துறைக் கொடுமையாளர்கள்

அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது

‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல

இந்திரப்ரஸ்தா எனும் பேரூர் மஹாபாரதம் மூல பிரபலமான பாண்டவ சகோதரர்களால் தங்களது தலைநகராக நிர்மாணிக்கப்பட்டது. மூத்த சகோதரரான யுதிஷ்டிரர் தர்மராஜாவாக பதவி ஏற்றார். மூவாயிரம் வருடங்களுக்கு பிறகு 2016 நவம்பர் 22-23 தேதிகளில், திரௌபதி கனவு அறக்கட்டளை(Draupathi Dream Trust) முதல் இந்திரப்ரஸ்தா மாநாட்டை டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் நடத்தியது. இம்மாநாடு, இந்திரப்ரஸ்தாவைப் பற்றிய பெரிய அளவு துவக்க முயற்சியில் ஒரு பகுதி

மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்

ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..

இச்சட்டம் யாரையும் பாகுபடுத்தவில்லை. இது அனைத்து மத இந்தியர்களுக்கும் பொதுவானது.  இதன் வரலாற்றைப் பார்த்தால்   முகம்மதியர்களை அவமதிக்கும் புத்தகங்களைத் தடை செய்வதற்கும்  ஹிந்துக்களின் வாயை அடைப்பதற்குமாக ஏற்படுத்தப்பட்ட சட்டம் என்று தெரிகிறது. இச்சட்டம் ஹிந்துக்களை ஆதரிக்கிறது,  ஹிந்துக்களுக்கு  மட்டுமே பாதுகாப்பு சலுகை அளிக்கிறது எனும் டானிகரின் மறைமுகமான குறிப்பீடுகள் இரண்டுமே தவறு. …மாறாக, ஹிந்துக்களுடன் எதிருக்கெதிராக  ஒப்பிட்டால்  இச்சட்டம் சிறுபான்மையினருக்குதான்  சலுகை அளிப்பதாக உள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்

பெரும்பான்மையான இந்திய பத்திரிகை நிருபர்களும்  இந்திய நிபுணர்களும், மதச்சார்பற்றவர்கள் அவர்களது மூக்கில்  ஏற்றியுள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதால், அவர்கள் கூறும் ஹிந்துக்களுக்கு எதிரான, பாரபட்சமான, தவறான செய்திகளையே  மக்களிடம் கக்குகிறார்கள். நிகோலஸ்ஸுடன் காரில் சென்ற சமயச்சார்பற்றவரின் முதல்  குறிப்பே  ஒரு சராசரி பார்வையாளரின் மனத்தில்  பின் வரப்போகும் சம்பவங்களைப் பற்றிய சந்தேக மேகத்தை கவிழ்க்கிறது. ஆனால், திறம்பட படமாக்கப்பட்டிருந்த அந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், காரில் சென்றவர் சொன்னதை ஊர்ஜிதப்படுத்துவது போலவோ, விளக்கப்படுத்துவது போலவோ ஒன்றுமே நடக்கவில்லை. 

குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி

இந்திய பாரம்பரியங்களின் கவர்ச்சியை வெளி உலகிற்கு மதபோதக உணர்வுடன் எடுத்துச் செல்வதும் ஹிந்துத்தனம் அல்ல. ஒரு மதபோதகர் மற்றொரு மதத்தினரை பார்த்த மாத்திரத்திலேயே அவரது உணர்வு மட்டுமல்லாமல், முகபாவமும், உடற்வாகும் மாறிவிடும். இவரை எந்த இடத்தில் தட்டினால் நான் சொல்லப் போவதை உடனே ஏற்றுக் கொள்வார் என்பதைதான் சிந்திப்பார். ஹிந்துக்கள் இவ்வாறு சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பிற மதத்தினர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் வாயிலிருந்து வருவதை கேட்பதில்தான் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய மத உணர்வை அழித்து அவ்விடத்தில் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கில்லை. பிற மதங்களின் சாராம்சமும் இந்து மதத்தினுடையது போல் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவர்களது அனுமானம்தான் இதற்கு காரணம்.

குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்

இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும்- அத்தியாயம் -17 ஆசிரியரின் முன்குறிப்பு: முன்னணியிலுள்ள ஒரு சிந்தனையாளர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.)மிக்க செல்வாக்கு பெற்றவரும் அதனாலேயே தற்போது ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் மதிப்பிற்குரியவருமான, குரு கோல்வால்கர் எழுத்துகளை கூர்ந்து ஆய்வு செய்வதற்காக நேரம் ஒதுக்க முற்பட்டது அறிதிறன் “குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்”

அமெரிக்க பாரம்பரிய மீட்டெடுப்பு

மாண்டேல், அவர் எடுத்துக் கொண்டுள்ள காலத்தை அலசும்போது வழக்கமான ஊகவணிகர்களை (Speculators) கண்டனம் செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக, இப்புத்தகத்தின் 107ம் பக்கத்தில், எல்ஹானன் வின்செஸ்டர் (Elhanan Winchester) எனும் நியூ இங்கிலாந்து சமய போதகர் தனது “The Plain Political Catechism” என்ற புத்தகத்தின் மூலம் பள்ளிமாணவர்களிடம் ‘பொது நிலங்கள் அங்கு குடியேறியவர்களுக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். நிலவர்த்தகங்களுக்கும் ஊகவணிகர்களுக்கும் விற்கக் கூடாது’ என போதித்ததை பதிப்பித்துள்ளார்….இவரது புத்தகமும் எவ்வாறு இடத்திற்கேற்ற விலை பிற சமுதாய பிரச்சினைகளை தீர்க்க உதவும் போன்ற கருத்துகளுடன் மல்லாடவில்லை. மேலும்,  நிலத்தை அதிக விலை கொடுப்பவருக்கு விற்பது வின்செஸ்டர் போன்றவர்கள் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கு  உதவக்கூடியதாகவும்  இருக்கலாம்  என்பது போன்ற  கருத்திலும் ஆர்வம் காட்டவில்லை. 

அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு

மாக்ஸ் வேபரின் எழுத்தில் பல பிழைகள் நுழைந்துள்ளன. ஒரு பிழை, இந்தியாவில் இஸ்லாமிய மதத்தின் இருப்பையும் சீனாவில் புத்த மதத்தின் இருப்பையும் முழுவதுமாக புறக்கணித்ததாகும். ஏனென்றால், இவ்விரு மதங்களின் அந்நியத்தன்மை, இந்தியாவின் பொருளாதார செயலாக்கம் இந்திய மதங்களிலிருந்து கிளம்பியதே எனும் விளக்கத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லா மதங்களையும் ஓட்டைகள் இல்லாத டப்பியில் அடைந்துள்ளதாக காட்டியுள்ளார்.

ஸார்ஸ் கோவிட்- 2ன் தோற்றம் எவ்விடம்?

கோவிட் போன்ற ஒரு நுண்ணுயிர் கிருமி ஒட்டகங்களைத் தொடர்ந்து தொற்றும்போது தங்கள் மரபணுக்களில் அதற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்கிறது.

தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம்

கந்தல் துணி அணிந்த, அடிமட்டத்திலுள்ள, இறையியல் பள்ளியினர் கூட்டு சேர்த்த, முறையான போர்ப் பயிற்சி சிறிதளவும் இல்லாத, மத அடிப்படைவாதக் கூட்டம், பிரிட்டன், சோவியத், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் உலகிலேயே வல்லமை வாய்ந்த படைகளினால் அடக்க முடியாத நிலப்பகுதியை எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது? ஏன் முன்னிருந்த ஆப்கான் அரசாங்கம் அத்தகைய வேகத்தில் நொறுங்கியது?

ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை

ஔரங்கசீப்பின் குற்ற உணர்வை வேறு மாதிரியாகக் காண்பிப்பதற்காக ஆட்ரி ட்ருஷ்கி செய்ததைப்போல் உண்மைக்குப் புறம்பான சுண்ணாம்புப் பூச்சை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. காசி விசுவநாதர் கோயில், கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்து அச்சிதிலங்ககளின்மேல் எழுப்பிய மசூதிகள் இன்றும் அவனது உருவ வழிபாட்டு எதிர்ப்புக்குச் சாட்சியாக நிற்கின்றன.

ஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்

ஒரு சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்து அமெரிக்க மக்களை வலுக்கட்டாயமாக வேலைக் காலத்தில் சேமிக்க வைத்துப்பின் அவர்களது ஒய்வுக் காலத்தில் வட்டியுடன் அச்சேமிப்பைத் திருப்பாமல், பிற்பாடு பங்கேற்பவர்கள் பணத்தை ஒய்வு பெற்றவர்களுக்கு அளிக்கும் ஒரு பான்சி (ponzi) திட்டத்தை அரசாங்கம் நிறுவியது. இத்திட்டம் மற்ற பான்சி திட்டங்களைபோலவே, பங்கேற்பவர்களிடமிருந்து வரும் தொகை ஒய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைவிட அதிகமாக இருக்கும் வரைதான் நடைபெறும்.

“கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்

இந்தியாவை சிறுமைப்படுத்துவதற்கு எவ்வாறு கிருத்துவ மரபுகள் இடதுசாரி நுட்பங்களை உபயோகிக்கின்றது என்பதை மல்ஹோத்ரா சரியாக சுட்டிக்காட்டுகிறார். ஹிந்துக்கள், மேற்கத்தியர்கள் அனைவருமே கிருத்துவர்கள் என நினைக்கின்றனர். இது தவறு.

தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?

ஓ! நாட்டின் வளர்ச்சி முதல் தேவை!. மற்றவையெல்லாம் பிறகுதான் என்றால் நான் கேட்கிறேன்! பாகுபாடுகளை நிவர்த்திப்பது எவ்வாறு வளர்ச்சியைத் தடைசெய்யும்? சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதும் வளர்ச்சியோடு சேர்ந்ததுதானே.

சதி எனும் சதி

சதியைப் பற்றிய காலனிக் கால விவரங்களை அறிய இந்நூல் உறுதுணையாக உள்ளது. அதிலும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எடுத்துச்செல்லும் கிருத்துவ மதத்திற்கு ஹிந்துக்களை கூட்டங்கூட்டமாக மாற்றுவதற்கு எவ்வாறு பாதிரிமார்கள் சதியை உபயோகப்படுத்தினர் என்பது நன்கு விவரமாகிறது.

இலா நகரில் பன்மைத்துவம்

நூற்றுக்கணக்கான ஹிந்துக்களிடையே ஒரு முஸ்லீம் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் எல்லா ஹிந்துக்களும் தங்கள் எண்ணங்களை பதுக்கிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், அனைத்து ஹிந்துக்களும் அந்த ஒரு முஸ்லீம் நபரை அவர் கேட்பதற்கு முன்னரே அவரைச் சந்தோஷப்படுத்தத் தலைகீழாக நிற்கின்றனர். இவர்கள் முஸ்லீம்களுக்கு பயந்து நிலத்தடியில் வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ?

புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்

கிருத்துவர்கள், முதலாவதாகக் கடலோரப் பகுதியிலுள்ள தென்னிந்தியாவிற்கு 4ம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசிலிருந்து துரத்தப்பட்ட அகதிகளாக வந்தடைந்ததாகத் தெரிகிறது. இவர்கள் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் எதிரி நாடான ருமேனியா முழுவதும் கிருத்தவ மதத்தைத் தழுவியதேயாகும். பல தெய்வங்களை வழிபடுபவரைக் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தியதைப் போலல்லாமல் இக்கிருத்துவ அகதிகளைத் தென்னிந்தியர்கள் சுமூகமாக வரவேற்றனர்.

மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை

மயக்கம் தெளியும் சமயம் இரு தரப்பினரின் காதிலும் கேட்கும்படி உண்மையான அறுவை சிகிச்சையில் என்ன செய்யப்பட்டதோ அதை மருத்துவர்களும் உதவி செய்த செவிலியர்களும் கூறுவர். போலி அறுவை சிகிச்சையும் நிஜ அறுவை சிகிச்சையும் ஒரே அளவு குணத்தை உண்டு பண்ணியது என்ற ஆச்சரியமான முடிவு இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்தது.

கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’

அயோத்யா சர்ச்சை பலமுறை எழுப்பப்பட்டாலும் முடிவான விவரத்தைச் சொல்ல மறுக்கிறது இப்புத்தகம். ஒருகாலத்தில் இது இந்துக்களின் கோவில் என்ற பாத்தியதைக்குச் சட்டபூர்வமான ஆதாரங்கள் உள்ளன என்ற புதிய விவரம் எங்குமே தலைகாட்டவில்லை.

ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர்

பீரங்கித் தாக்குதலில் காயமுற்று ஹால்டேன் ஸ்காட்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு கருப்புக் காவலர்களின் எரிகுண்டுப் பயிற்சிக்காக ஒரு பள்ளியைத் துவக்கினார். பிறகு மெசபொடோமியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆங்கிலேயர்களின் குண்டடியில் காயமுற்றதால் மேற்கொண்டு சேவைசெய்ய இயலவில்லை. காயங்களிருந்து குணமடைவதற்காக யுத்தத்தின் கடைசி இரண்டு வருடங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். தாய்நாடு திரும்பியபோது இந்தியா, இந்தியர்கள், இந்தியக் கலாசாரம் ஆகியனவற்றின்மேல் ஏற்பட்ட நிரந்தரமான பற்றையும் கையோடு எடுத்துச்சென்றார்.

கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்

என் பார்வையில், பா.ஜ.க. இந்தியத்தை ஆதரிக்கும் அடிமட்டக் கட்சிக்காரர்களைத் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் உபயோகப்படுத்திக்கொண்டு, பதவியேற்றபின், அவர்களை எச்சில் இலையைப்போல் தள்ளி வைத்துவிடுகின்றது. பொருளாதார முன்னேற்றங்களைப் பிரபலப்படுத்துவதிலும் நிறைவேற்றுவதிலும் மதச்சார்பற்றவர்களைக் குஷிப்படுத்துவதிலுமே குறியாக இருக்கிறது.

யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?

மதச்சார்பற்றவர்களின் திட்டத்தில் ஒரு முக்கியப் பகுதி இந்து மதத்தைக் கீழ்மைப்படுத்துவதாகும். இந்து சமுதாயத்தில் காணப்படும் தீமைகளுக்கும் தீமைகளாக எண்ணப்படுவதற்காக இந்து மதத்தைப் பழித்தலும் நல்லவைகளையும் நல்லவைகளாக எண்ணப்படுபவைகளின் சம்பந்தத்தை உடனடியாக இந்து மதத்திலிருந்து கழித்துவிடுதலும் இவர்களின் தொழிலாகும்.

சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?

மதச்சார்பின்மைதான் எங்களது நோக்கம் என்று கூறும் இயக்கங்களின் உண்மையான இலக்கு, ஹிந்துத் தன்மையை நிர்மூலமாக்குவதே என்பது என் அபிப்பிராயம். பா.ஜ.க. இந்துக்களை ஆதரிக்கும் கட்சி என நினைப்பவர்கள், அக்கட்சி இத்திட்டத்தை ஆதரித்தது என்றறிந்தால் ஆச்சரியப்படுவர்.

ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?

பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை.

ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?

எல்லா மதங்களும் சரிசமமானவையே; ராம், ரஹீம், அல்லா இவர்கள் எல்லாம் ஒருவரே; ஈஸ்வரன், அல்லா என்பவை ஒரு கடவுளின் பெயர்களே என்று சொல்லிக்கொண்டிருந்த, 1947க்குமுன் கிழக்கு வங்காளத்தில் வசித்த ராமகிருஷ்ண இயக்கத்தின் சந்நியாசிகளும் மற்ற ஹிந்து மத சந்நியாசிகளும் எங்கு குடிபெயந்தார்கள் என்ற கேள்வியையும் ரே எழுப்புகிறார்.

யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?

முதலாவதாக, யோகம் இந்துக்களை சேர்ந்ததுதான். ஹிந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள, உருவ வழிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மத மரபுகள் அனைத்தும் சேர்ந்ததாகும். தொன்றுதொட்ட காலமாக இருந்துவரும் மரபுகளும் இதில் அடங்கும். எனவே, யோகம் இந்து மதத்தைவிடப் பழமையானது எனும் தீபக் சோப்ராவின் கூற்று வேடிக்கையான ஒன்று.

இந்துக்கள் கோழைகளா?

“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களை தட்டி எழுப்ப சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார்

கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’

ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன.

தடுப்பூசியும் முதியோரும்

எந்த வியாதியானாலும், அதன் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் சுண்டெலிகளிடம்தான் நடத்தப்படுகிறது. இச்சுண்டெலிகளின் வயது 12 வாரங்களுக்கு உட்பட்டதுதான். இது மனிதர்களின் வயதில், 20 அல்லது அதற்கும் குறைவானதாகும். வயதான மனிதர்களுக்கு ஈடான 18 மாத சுண்டெலிகளிடம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மிகக் குறைவே. ரீசஸ் குரங்குகளிடம் நடத்தப்படும் ஒரு சில ஆராய்ச்சிகளும் 3 லிருந்து 6 வயதான குரங்குகளையே உபயோகப்படுத்துகின்றன. இது இளம்பிராய வயதினருக்கு ஈடாகும்.

நீண்ட நேர உண்ணாமை

எலிகள் கிடைக்கும் மொத்த உணவையுமே நான்கு மணி நேரத்துக்குக்குள் உண்டுவிடும். மீதி 20 மணி நேரத்திற்கு எதையுமே உண்ணாது என்பதுதான். இதைத்தான் இப்போது “நீண்ட நேர உண்ணாமை“ என்று கூறுகிறோம். இது பல வகைப்பட்டது. அதைப் பிறகு பார்க்கலாம். இதனால் கிடைக்கும் உடல்நலப் பயன்கள் உடற்பளுக் குறைவினாலோ, பிராணவாயு அணுக்களின் தாக்கக் குறைவினாலோ அல்ல. ஆதி கால மனிதர்கள் நம்மைப்போல் 3 வேளை உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த நேரமே அதிகம். அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே தற்கால மனிதர்களிடையே நீண்டநேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.

அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா?

ரமண மஹரிஷி அவருடைய சீடர்களை விசார சாகரத்தைப் படிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்வாராம். அதனுடைய தமிழாக்கத்தை அனுசரித்து ஒரு சிறிய புத்தகத்தையும் அவரே எழுதியுள்ளார்.
பரமாச்சார்யாள் என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இப்புத்தகத்தின்மேல் பெருமதிப்பு வைத்திருந்தார் 1964ல் இதனுடைய சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பிற்கு முழு ஆதரவளித்தார்.

சுவீடன் ஒரு சோஷலிச நாடா?

இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. செல்வமும் பெருகியது. இதைச் சீரழிக்காமல் விநியோகிப்பதிலும் அக்கறையுள்ளவர்களாக இருந்ததால், நாட்டின் செல்வம் மேலும் கூடியது. உள்நாட்டு வர்த்தகங்களும், மற்றைய நாடுகளோடு மோத வேண்டியிருந்ததால், தக்க சீரமைப்புகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டியதால், தோளோடு தோள் நின்றன. தொழிற்சங்கங்களும், விவசாயம், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் போன்ற வெள்ளை யானைகளை மூட்டை கட்ட அனுமதித்தன. மிகவும் ஏழை நாடாயிருந்த சுவீடன், கிரிப்பேன்ஸ்டெட் ஏற்படுத்திய இம்மாற்றங்களால், அவர் அரசாங்கத்திலிருந்து விலகிய நூறு வருடங்களுக்குப்பின் மிகப் பணக்கார நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாறியது.

அளவு மீறினால் பாலும் விஷமோ?

பால் உடற்பருமனை குறைக்க உதவும் என்பது பொதுவான அபிப்பிராயமாக இருந்தாலும் 29 ஆய்வுகளின் கூட்டாய்வு இதை ஆதரிக்கவில்லை. மேலும் முழுகொழுப்பு பால், மற்றும் பாலடைக்கட்டியிலிருந்து கொழுப்பு குறைந்த பாலிற்கு மாறுவதின் மூலம் பருமன் குறைவதாக தெரியவில்லை. ஆனால், தயிருக்கு மாற்றிக்கொண்டால் பருமன் அதிகமாவது குறைகிறது. பாலிற்கு பதில் தயிரை சேர்த்து கொள்வதால் பருமனாவது குறைவதோடு குடல்வாழ் நுண்ணுயிர்களுக்கும் இது சாதகமாக இருப்பதால் இதர ஆதாயங்களுக்கும் வழிவகுக்கிறது.

‘Luce’ -திரைப்பட விமர்சனம்

நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத அவ்வுண்மைகள்தான் என்ன? இவ்வுலகம் அருட்தொண்டர்களாலும் சூனியக்காரர்களாலும் நிரப்பப்பட்டதல்ல. சாதாரண மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள் அவர்கள் எல்லோருமே எல்லா துறைகளிலும் மேன்மையடைந்தவர்களல்ல. சில துறைகளில் உயர்ந்தும் பல துறைகளில் தாழ்ந்தவர்களுமாகவே இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையும் அவர்களை ஊக்குவிக்கும் காரணங்களைப் பொறுத்து, நேர்வழியையோ, குறுக்குவழியையோ பின்பற்றுகிறது.

தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள்

உலகளவில் 40% கயிற்றையும் 20% பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மிக அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ததினால் ஸ்ரீலங்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. உயரத்திலிருந்து குதித்தும், சிலமருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டும் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களும் அதிகமாயுள்ளனர். உயரமான கட்டமைப்புகளைச் சுற்றிப் பெரியதடுப்புகளை அமைப்பதின் மூலம் இவ்வழி பயன்படுவதைக் குறைக்கலாம்.

யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள்

ஆஸ்டியோபதி மருத்துவ மன்றத்தின் யோகத்தைப் பற்றிய அறிக்கையில் குடும்பநல மருத்துவரும் குந்தலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளருமான நெவின் சொல்வதாவது யோகப்பயிற்சியின் முக்கிய அம்சம் உடலைத் திடப்படுத்துவதும் உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதுதான் என்கிறார். மேலும் ஆஸ்டியோபதி மருத்துவத்தில் வியாதி வருமுன் தடுக்கும் முறைகளுக்கே முக்கியத்துவம் என்றும் யோகப்பயிற்சியும் அதையே வலியுறுத்துகிறது என்கிறார்.

விண்வெளி மருத்துவம்

நீண்ட நாள் பயணத்தில், புவியீர்ப்பு சக்தியின்மையால், திரவங்கள் உடலின் வெளிப்பா கத்தில் தங்காமல் உடற்மையத்தையும் தலைநோக்கியும் செல்கிறது. இதனால் முக வீக்கமும் தலை வலியும் ஏற்படலாம். சில நாட்களில் இத்திரவம் சிறுநீராக வெளியேறுவதாலும் பசியின்மையாலும் உடல் எடையும் உடல் நீரளவும் குறைகிறது ஆனால் இம்மாற்றங்கள் இதயத்துடிப்பையோ இதய ஓட்டத்தையோ பாதிப்பதில்லை

நூறாண்டு! நூறாண்டு! பலகோடி நூறாண்டு!

இந்து சாஸ்திரம் மனிதர்களின் ஆயுட்காலத்தை 100-120 வருடங்களாக கணித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. காஸ்ட்கோ நிறுவனத்தின் மாத சஞ்சிகை, 105 வயதான ஒருவர் 97 வயதான மனைவியுடன் மாதம் ஒரு முறை அவர்களுடைய அரிசோனா மாநிலக் கிளை உணவுக்கூடத்தில் புசிக்கிறார்கள் என்று சிரித்த முகத்துடன் உள்ள அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு குஜராத்தி அன்பரை ஐடகோ மாநிலத்தில் சந்தித்தபோது அவர் அவர் சமீபத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து அம்மாநிலத்திற்குக் குடியேறியுள்ளதாக கூறினார். ஏனென்று நான் வினவியதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்படைய வைத்தது.

செவித் திறனிழப்பு

தமிழகத் திருமணங்களில் காதைப் பிளக்குமளவில் ஒலிபெருக்கிப் பெட்டிகளை அமைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. இதனால் செவித்திறனிழப்பை அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையின் தெருக்களில் வாகனங்களின் ஹார்ன் சத்தம் ஓய்வதேயில்லை. சினிமா கொட்டகைகளிலும், கலையரங்குகளிலும், சில சமயம் வீடுகளிலுமே காதை மந்தப்படுத்தும் அளவு சத்தம் நிரம்பியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களும் மணிக்கணக்கில் இயந்திரங்களின் சத்தத்தில் இயங்க வேண்டியுள்ளது. தீது விளைவிக்கும் சத்தம் உரோம உயிரணுக்களை நேரடியாகவும் வேறு வழிகளிலும் தாக்குகிறது.

வாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்

முதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது….உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.