இரண்டாவதாக, நான் கவனப்படுத்த எண்ணியது தமிழில் நாடகங்களின் நிலையைப் பற்றி. தமிழில் நவீன நாடகங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிகச் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி, நெருக்கமான இளம் நண்பராக வாய்த்திருக்கும் விக்னேஷ் ஹரிஹரன் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆழமான வாசிப்புக்கும் தேடலுக்கும் பிறகு தீவிரமான கேள்விகளை எழுப்பும் விதமாக இந்தக் கட்டுரையை தந்திருக்கிறார் விக்னேஷ்.
Category: இதழ்-342
தமிழ் நாவல்கள் 2025
ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி.
ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்
மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல, அது ஒரு பண்பாட்டு பரிமாற்றம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலின் வாயிலாக நாம் புதிய உலகங்களை கண்டுபிடிக்கிறோம்; புதிய யூகங்களை அணுகுகிறோம்;புதிய மனிதர்களை அறிந்தும் புரிந்தும் கொள்கிறோம்.
நமக்குத் தேவை நவீன நாடகங்கள்
உலகம் முழுவதுமே வெகுஜனக் கலைகளுக்கும் செவ்வியல் கலைகளுக்குமான பிரிவு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் யுகசந்திகளிலும் பெரும் சமூக மாற்றங்களின் காலகட்டங்களிலும் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையிலான வேற்றுமைகள் மறைந்து, இவற்றுக்கு இடையில் பாலமாக அமையும் புதிய கலை வடிவங்கள் உருவாகி, அவை சமூகத்தை மறு வரையறை செய்யத் தொடங்குகின்றன. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக ஆங்கிலேய ஆட்சியாலும் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தாலும் இந்தியாவெங்கும் உருவான நவீன சிந்தனைகள் மற்றும் கலைகளின் பேரலையின் ஒரு பகுதியாகவே உருவானது நவீன நாடகம்.
குறுங்கதைகள் – ஓர் உரையாடல்
பொதுவாக எழுத்து ஊடகம் காட்சி ஊடகத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது என்பது என் எண்ணம். காட்சித் துணுக்குகள் கவனக்குறைவை உருவாக்குகின்றன என்பது உண்மை. ஆனால் அக்கவனக்குறைவு ஒட்டுமொத்த வாசிப்பை குறைக்கிறதேயன்றி குறுங்கதை எழுதப்படுவதை ஊக்குவிக்கிறது என்று நான் எண்ணவில்லை. அப்படியெனில் குறுங்கதையைவிட குறைவான சொற்களில் எழுதப்படும் கவிதை அதற்கு அனுசரணையான வடிவமல்லவா!
ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்
நாவலில் அல்புனைவுத் தன்மைகள் அதிகம் உள்ளன. டிவிட்டர் நாவல் வந்து விட்டது. சென்ற வருட புக்கர் பரிசை வென்றது முழு உருவக நாவல். யுத்திகளில் பல மாறுதல்கள் செய்து நூல்கள் வருகின்றன. போரா சுங் அபத்தவியலை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டார். ரெபெக்கா யாரோஸ் காதல்கதையையும் பான்டஸியையும் இணைத்து Romantasy என்ற புதுவகைமையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார். நம்மைச் சுற்றி ஏராளமான மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்
என்னை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்;பயந்தவாறே அவனை விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.கதவு வழியாக உற்றுக் கேட்ட போது குளியலறைச் சுவர்களில் கடற்கன்னியின் நீச்சலால் எழுந்த நீர்த்தெறிப்போசையின் எதிரொலி மட்டுமே காதில் விழுந்தது.எனோமோட்டோ எந்த சப்தங்களையுமே எழுப்பவில்லையென்றாலூம் கூட அவனுடைய இருப்பு எனது குடியிருப்பு முழுவதும் கனமாகப் படர்ந்திருந்தது.இரண்டு மணி நேரங்கள், மூன்று மணி நேரங்கள் கடந்தன, எனோமோட்டோ வெளிவரவேயில்லை
முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் அடையாள சக்தி
எங்கும் தம்மை முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் இன்னொரு அடையாள சக்தியென குறிப்பிடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருபவர். அம்மன் நெசவு , மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கைவனம் எனத் தொடரும் நாவல் வரிசைகளால் தமிழின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.
தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்
எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது.
கலைகளை சார்ந்து இருத்தல்
மொழி வழி கலைகளில் சிறுகதை என்பது ஒரு சில பக்கங்களில், வாழ்க்கையின் மிக சிறிய பகுதியை முன்வைத்து, அதனுள் மறைந்திருக்கும் மீதி வாழ்வை படிப்பவர்கள் தேடி தேடி அடைய செய்வது. ஒரு மனிதனின் வாழ்வு, ஒப்புநோக்க அளவில் சிறு துளி மட்டுமே. இந்த துளியில் இருந்து காட்சிக்குள் அடங்கா பெரு மழையை, பெரு விரிவை அவன் எண்ணி எண்ணி அறிவதை போலவே சிறுகதை வாசிப்பு என நாம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒதுங்குதல்
உறவுகள் சூழ வாழ்கிறார். ஆனால், உண்மையில் அவர் தனியன்தான். எப்படி? கதை தொடங்குவதே ஒரு தற்காப்புடன்தான்! ஒரு பழைய தோழி சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததும், “நான் இல்லைன்னு சொல்லிடுமா” என்று கூறி மாடி அறைக்குள் விரைந்து கதவைத் தாழிட்டுக் கொள்கிறார்.
குழலினிது
சண்முகநாதன், “டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்” என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.
ஏழு கவிதைகள்
இரவு வானத்தில்
தனித்துப் பறக்கிறது பறவை.
வானம் தனித்திருக்கும்
பறவை தனித்திருக்கும்
தனித்திருக்கும்
இரண்டின் சந்திப்பிலும்
தனிமையிருக்கும்
தனிமையின் கரங்களில்
வானம் புகும்
பறவை புகும்
இங்கு யாவுமே உட்புகும்
வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள்
தமிழில் எனக்குப் பிடித்த சொல் ஊரா காடா என்பதில் எனக்குள் நிறைய போராட்டம் நடந்தது. இறுதியில் காடே வென்றது. காடு ஊரைவிடத் தன்னிறைவானது. சங்ககாலத்தில் ஊரே காடாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் காடு இருந்தது. பாலை நிலமும் பாலைவனமாகவே இருந்தது.வயலும் காடாக வயல்காடாக. மலையும் மலைக்காடாக.
மூட்டைப் பூச்சி
நாங்கள் போய் சேர்ந்த போது கோவிலில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. கோவில் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கோவில் மீது குடை போல் விருந்திருந்த மல்லிக் கொடியின் கிளையிலிருந்து பறவை ஒன்று பாடிக் கொண்டிருந்தது. காற்றில் நறுமணம் நிரம்பியிருந்தது. நாங்கள் கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு மூலையில் வைத்திருந்த விளக்கைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டடோம். சங்கர் கௌடா ஒரு நிமிடம் நின்று தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டான். அவன் என் நெற்றிலும் குங்குமத்தை இட்டுவிட்டு அதன் துகள்கள் என் கண்களில் விழாமல் கையால் தடுத்தபடி ஊதி விட்டான்.
தன்னைத் தெரிந்து கொள்ளல்
ஒரு பொருளை மற்றொரு குழந்தையிடமிருந்து மாணவர் பறித்தபோது, அந்தச் செயலால் மற்ற குழந்தை எப்படி வருத்தமடைந்தது என்பதை விளக்குதல். “அவர் எப்படி உணர்ந்திருப்பார்? ஏன் அவர் அழுதார்?” போன்ற கேள்விகள் மூலம் விளக்குதல்.
அம்பு
அது ஒரு வழி பாதை. அதன் பிறகு அல் ஷபாப் இருக்கும் வரை நான் சோமாலியாவில் கால் வைக்க முடியாது. என் மொத்த கனவும் முடிந்து போகும். லண்டனிலோ, நியூ யார்கிலோ கார் கழுவிக் கொண்டு, கட்டிட வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். அதற்கு நான் சாகலாம். இப்போதே என் சகோதரனை போல உடல் சிதறி சாகலாம்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 8
இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது
இராஜகுமாரனின் மன விசாரங்கள்
தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும் கவனித்துச் செய்தார். என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே. ஏன் இப்படி செய்தான்? அப்படி என்ன துக்கம் அல்லது கவலை? தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்
அறிவு அளித்த விடுதலை
பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal). ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது.
முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள்
‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினம் ஒரு அஸ்திரத்தை ஏவி முதல் 100 நாட்களில் “கண்ல மரண பயத்தை காமிச்சிட்டான் பரமா” என்று ‘வால்ஸ்ட்ரீட்’டை மிரட்டி வருவதால் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகளவிலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதுவும், அங்கிள்சாமின் ராணுவ நிலைப்பாடு, வர்த்தக கூட்டணிகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றின நிர்வாக உத்தரவுகள் கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விவாதங்களும் அதிகரித்து வருகிறது.
சுஜய் ரகு கவிதைகள்
வறண்ட ஓடைப் பாதையில்
கிடந்து தகிக்கும் ஒரு கூழாங்கல்லைச்
சீண்டுவதுபோல
நடுநிசி இரவைக் கிழித்தபடி
காற்றில் ஓங்கரித்தது
ரயிலோசை
இருள் வெளி அதிரவும்
துளி துளி வண்ணங்களாக
ஒளிர்ந்து உதிர்ந்தன
திரளாய் பற்பல சொற்கள்
ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
மலர்களின் இதழ்கள் கவிஞர்களுக்கு எப்போதும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டும் ஒரு கருப்பொருளாக இருக்கின்றன. இதழ்களின் மென்மை, வண்ணம், வாசனை, அழகு ஆகியவை காதல், இயற்கை, நிலையாமை, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் போன்றவற்றை உருவகப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளிலும், உலக இலக்கியங்களிலும் இதழ்கள் குறித்து கவிஞர்கள் பலவாறு பாடியுள்ளனர்.
மூன்று கவிதைகள்
மிகப்பெரிய அநீதி
நிகழ்ந்தது போல்
தலையில் கொத்திவிட்டு
இருளிலே அபாயத்தைத்
தோற்றுவித்துச் சென்றது ஒரு காகம்
அது இங்கும் அங்கும் பறந்து
மரணத்தின் அருகாமையை காட்டி
மீண்டும் இன்னொன்றாகப்
பறந்து போகிறது
உறங்காமை
தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள், சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள்.
கய்த பூவு
ரோசாளை முதலில் பெண் பார்க்க வநதவன் தன்னைப் பார்த்துத்தான் கையசைப்பதாக நினைத்து அவளும் கையசைத்தது குற்றமாகிப் போய் தடைப்பட்ட திருமணம் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்காட்டி தடைபட்ட மயமாகிப் போகிறது. ஒரு பெண்ணுக்குத் திருமணம்தான் வாழ்க்கையில் மிக முக்கியமான தகுதியாகப் பார்க்கப்படும் பாழாய்ப்போன சமூகத்தை சபிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?
நாவித யுகம்!
உதறிடும்
கையறு நிலையில்
அகாலமாய்
வீடுவரை
அயல் முகம்!
கரு
உன் ஆன்மா மிகப் பெரியது, அழகானது, பிரம்மாண்டமானது, உன்னுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஒரு மனித மனம் உன்னில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு, ஒரு கோப்பைத் கிளாஸ் தண்ணீரில் உன் விரலை வைத்து அது சூடாக இருக்கிறதா அல்லது குளிர்ச்சியாக இருக்கிறதா என்று பார்ப்பது போல.
காதலெனும் திசைமானி
சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது
பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
ன்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்,” திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!” என்றான்.
நண்டுப்பிடி – பாகம் 2
கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்து ஒரு மைலில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை. ரப்பர் மற்றும் டயர் தயாரிப்பில் பென்ஸீன் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பங்கு நிச்சயம் வெளிப்பட்டு காற்றில் கலந்திருக்கும். இத்தனை வேதியியல் பொருட்களில் எதாவது ஒன்று, முக்கியமாக பென்ஸீன், என் உடலில் தங்கி கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியைக் கிளப்பிவிட்டிருந்தால்…”
எம். கோபாலகிருஷ்ணன்: சித்திரகூடம்
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.
