மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது.
ஆசிரியர்: லலிதா ராம்
அளவுமீறா அமுதப் பெருக்கு
கையாளுவதற்கு கடினமான கருவிகளில் நாகஸ்வரமும் ஒன்று. வாசிக்கப் படும் சூழல், வாத்தியத்தின் எல்லை, வாசிப்பவரின் திறன் என்ற விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் மறைந்து வாசிக்கப்படும் ராகம் மட்டுமே வாசிப்பவரையும், கேட்பவரையும் ஆட்கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் தருணங்களை நாகஸ்வர கச்சேரிகளிலேயே அதிகம் காண முடியும். அப்படி பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வப்போது வாசிப்பில் பிசுறுகள் தோன்றுவதுண்டு. காருகுறிச்சியாரின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பதிவுகளில், வற்றாது பெருகியோடும் கற்பனைப் பெருக்கில் எத்தனை நுட்பமான சங்கதியை வாசித்த போதும், அவர் மனம் நினைத்ததை ஸுஸ்வரமாய் அவர் வாத்தியம் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.
காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, ”ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்கும் போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே சமயம் எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாசாயமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக கேட்கக் கூடிய குரல்களில் மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து …
உசைனி
“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன்.
ரசிக’மணி’கள்
கான கலாதரர் மதுரை மணி ஐயர். கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் பெயர் தெரிந்திருக்கும். கர்நாடக சங்கீதத் துறையில் பல விசேஷமான பட்டங்களுண்டு. அந்தப் பட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேலான கலைஞர்களை கௌரவிக்கப் பயன்பட்டிருக்கும். ஆனால் ‘கான கலாதரர்’ என்கிற பட்டம் மணி ஐயருக்கு மட்டுமே “ரசிக’மணி’கள்”
சால கல்லலாடு
ரத்தினம் பிள்ளை வருகிறார் என்றாலே உள்ளூர் நாயனக்காரர்கள் ஊரைக் காலி பண்ணாத குறைதான். அவர்களுள் யார் இவருக்கு ரெண்டாவது நாயனம் வாசிக்க வருவார்கள். அதிலும் அவர் வாசித்த இடைபாரி நாயனத்தை அந்தக் காலத்தில் வேறு யாரும் வாசித்ததில்லை.
காருகுறிச்சியைத் தேடி… (3)
செவல்ல நடந்த கல்யாணக் கச்சேரி நினைவுக்கு வருது. அண்ணாச்சி கல்யாணத்துல வாசிக்கறாங்கன்னா முதல்லையே அதை நடத்தறவங்ககிட்ட கேட்டுக்குவாங்க. தூரத்துல இருந்து வரவங்களுக்கு சாப்பாடு போட முடியுமா-னு தெரிஞ்சுகிட்டு, முடியாத சூழல்ல அவாளே ஏற்பாடு பண்ணிடுவாங்க. செவல்ல நடந்த கல்யாணத்துல, “அதெல்லாம் யாரு வந்தாலும் பார்த்துக்கலாம்”-னு கல்யாண வீட்டுக்காரங்க சொல்லி இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கலை. ரசிகர்களைக் கொஞ்சம் மரியாதைக் குறைவா நடத்திட்டாங்க. அண்ணாச்சிக்கு அதைப் பார்த்துட்டு சரியான கோவம். உடனே சந்திர விலாஸுக்குச் சொல்லி அத்தனை பேருக்கும் தன் செலவுல சாப்பாடு ஏற்பாடு செஞ்சாங்க. அப்புறம் எவ்வளவு கெஞ்சியும் கல்யாண வீட்டுல சாப்பிட மறுத்துட்டாங்க.
காருகுறிச்சியைத் தேடி… (2)
காருகுறிச்சியார் வளர்ந்து வரும் காலத்தில் அவரை ஆடி அமாவசைக்கு வாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் நாட்குறிப்பில் தவறாக ஆனி மாதத்தில் குறித்துக் கொண்டு ஒரு மாதம் முன்பே ஏரலுக்குச் செல்கிறார். சென்றபின்தான் நடந்த குளறுபடி தெரிய வருகிறது. ஆடி அமாவாசைக்கோ வேறு ஓர் இடத்தில் வாசிக்கக் காருகுறிச்சியார் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், “கவலைப்படாதீர்கள். நான் பொறுப்பெடுத்து சிறப்பான மாற்றுக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருகிறேன்,” என்று வாக்களிக்கிறார். சொன்னபடி தன் குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அப்போது ஏற்பட்டப் பழக்கம் …
காருகுறிச்சியைத் தேடி…
“ஏழாம் திருநாளைக்கு…”, என்று சொல்ல ஆரம்பித்துப் பேசமுடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.
நேனெந்து வெதுகுதுரா
அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும்.
கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்
பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க “கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்”
சீனா குட்டி
சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
துருவ நட்சத்திரம் – தனி ஆவர்த்தனக் கச்சேரி
இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன்.
மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு
தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன்.
இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.
மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்
ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.
இரு மணிகள்
மிருதங்க மேதைகளான மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது.
பழநி முத்தையா பிள்ளை
மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.
தட்சிணாமூர்த்தி பிள்ளை
காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை.
மான்பூண்டியா பிள்ளை
கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாகபிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர்.
மிருதங்கம் – தஞ்சாவூரும் புதுக்கோட்டையும்
மிருதங்கத்தில் கண்கள் உண்டு. வலந்தலையையும் தொப்பியையும் இணைக்கும் எட்டு ஜோடி இடங்களை கண்கள் என்று குறிப்பதுண்டு. அனைத்து கண்களிலும் ஒரே விதமாய் ஸ்ருதி சேர்ந்தால்தான் கேட்க இனிமையாக இருக்கும். நடைமுறையில் அத்தனை கண்களிலும் சீராய் ஸ்ருதி சேர்வது கடினம். அழகநம்பிக்கோ ஒரு கண்ணில் ஸ்ருதி சேர்ந்தாலே, நாதம் வெகு சௌக்யமாய் வெளிப்படுமாம். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்த அழகநம்பியைப் பற்றி சிலேடையாய், “அழக நம்பிக்கு ஒரு கண்ணே போதும்”, கூறியுள்ளனர்.
மிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.
குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு
கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார். சொல்வனத்துக்காக இவரோடு நடத்திய உரையாடல் இது.
ஆனந்த்-40 – ஒரு ரசிகானுபவம்
ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும்.