‘மனைமாட்சி’ அவருடைய மற்றொரு பெரிய நாவல். அதன் முதல் வரைவில் ஆயிரத்து நானூறு பக்கத்திற்கும் மேல் இருந்தது. அதை எனக்குத் தெரிந்து மூன்று நான்கு தடவை திரும்பத் திரும்ப மாற்றி எழுதினார். கணினியில்தான் என்றாலும் இதுவெல்லாம் என்னால் கற்பனை கூட செய்ய முடியாத உழைப்பு. சமீபத்திய காணொளி வாயிலான நேர்காணல் ஒன்றில் தனது அலுவலகப் பணி நெருக்கடிகளுக்கப்பாலும் தன்னால் எப்படி இவ்வளவு அதிகமாகவும் தீவிரமாகவும் எழுத முடிகிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார்.
Tag: எம். கோபாலகிருஷ்ணன்
வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்
துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு சுல்தான் புரி, பிறகு மச்சிலி
கலைச் செல்வம் சேர்க்கும் பணியில் ஒரு கை
இரண்டாவதாக, நான் கவனப்படுத்த எண்ணியது தமிழில் நாடகங்களின் நிலையைப் பற்றி. தமிழில் நவீன நாடகங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிகச் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி, நெருக்கமான இளம் நண்பராக வாய்த்திருக்கும் விக்னேஷ் ஹரிஹரன் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆழமான வாசிப்புக்கும் தேடலுக்கும் பிறகு தீவிரமான கேள்விகளை எழுப்பும் விதமாக இந்தக் கட்டுரையை தந்திருக்கிறார் விக்னேஷ்.
தமிழ் நாவல்கள் 2025
ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி.
ஒதுங்குதல்
உறவுகள் சூழ வாழ்கிறார். ஆனால், உண்மையில் அவர் தனியன்தான். எப்படி? கதை தொடங்குவதே ஒரு தற்காப்புடன்தான்! ஒரு பழைய தோழி சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததும், “நான் இல்லைன்னு சொல்லிடுமா” என்று கூறி மாடி அறைக்குள் விரைந்து கதவைத் தாழிட்டுக் கொள்கிறார்.
எம். கோபாலகிருஷ்ணன்: சித்திரகூடம்
எம். கோபாலகிருஷ்ணன் கௌரவ ஆசிரியராக
உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்:
