ஆறு தாரகைகள்

படு நிதானமாக, யானையின் சாவகாச நடைபோலத் தொடங்கிய வாசிப்பு, துள்ளிப் பாயும் மான் போலவும், அதைத் துரத்தும் வேட்டைநாய் போலவும் வேகமெடுத்து நாலுகால்ப் பாய்ச்சலில் முன்னேறியபோது, யாருக்கு யார் பக்கவாத்தியம்  வாசிக்கிறார்கள் என்ற குழப்பம் மையத்தில் அமர்ந்து அபாரமாக  ஸாரங்கி வாசித்த மிஸ்.ரிஹானாவுக்கே ஏற்பட்டிருக்கும். அமர்த்தலான தலையசைப்பும், வசீகரமான சிரிப்புமாக அவனைத் தாண்டித்தாண்டி மேலேறினார்.

காலத்தின் சுமையை அறிதல் அல்லது ராபர்ட் பென் வாரனின் ஆல் த கிங்ஸ் மென்

ஆல் த கிங்ஸ்மென்-இன் கதைசொல்லியான ஜாக் பர்டனின் (Jack Burden) குரல் கிரேட் காட்ஸ்பி-இன் அற்புதமான ஏக்கமும் விரக்தியும் தோய்ந்த குரலின் வாரிசுதான் (அந்த முன்னோடி நாவலைப் படித்திருப்பவர்களுக்குப் புரியும் இது எவ்வளவு பெரிய புகழாரமென்று). காட்ஸ்பி நாவலின் கடைசி வரியை நினைவுகூரும் வகையில் ஜாக் அவன் கடந்தகாலத்துக்குள் “இடையறாது சுமந்து செல்லப்படுகிறான்”

கல்பகாலத்தில் ஒரு காதல்

அந்த நீளமான அறையைத் தாண்டி அலுவலகத்துக்குள் வந்ததும் இன்று விடுப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. என்னைத் தாண்டி ஒரு இளம் ஆய்வாளர்கள் கூட்டம் உள்ளே சென்றது. மதியம் ரெண்டு மணிக்கு இவ்வளவு பரபரப்பாக சென்னை டெலிமெட்ரி வளாகம் இருந்ததில்லை. துறைமுகத்தை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட அமைப்பில் ஊட்டி தொலைநோக்கியின் நேரடி கட்டுப்பாட்டு அறையும், தென் தமிழகத்தின் வானவியல் அமைப்பும் இயங்கி வந்தன. இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின் தரைக்க்கட்டுப்பாடு கூடம் இருந்த கட்டடத்தில் மட்டுமே அத்தனை பரபரப்பு

ரவிச்சந்திரன் அஷ்வின்  –  சுழற்றி அடித்த கலைஞன்

அஷ்வினுக்கு சதுரங்க ஆட்டத்திலும் ஆர்வம் அதிகம். அதில் தென்படுகிற, அதன் அங்கமே ஆகிற லாவகங்களை, சாதுர்யக் காய்நகர்த்தல்களை கிரிக்கெட்டிலும் புகுத்தப் பார்த்தாரோ ! கிரிக்கெட் எனும் மாபெரும் ஆட்டத்தின், குறிப்பாக அவரது கலையான ஸ்பின் பௌலிங்கில் மரபுவழி நுணுக்கங்களை அங்கீகரித்ததோடு, நவீன விளையாட்டின் விளிம்புகளில் மேலும் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள்பற்றி சிந்தித்தவண்ணமே இருந்தவர்.

ஐஸ்கிரீம்

‘வாங்குனா எங்க வெச்சு திங்கறது? வீட்டுக்கு நேரா போவ முடியாது, மருமவ இருப்பா. பேரனும் பேத்தியும் பள்ளிக்கூடம் விட்டு வந்திருப்பாங்க. பேசாம வீட்ட விட்டு தள்ளியிருக்கற மாட்டுக்கொட்டத்துக்கு போயிரலாமா? அங்க வெச்சு மளமளனு தின்னுட்டா என்ன? தின்னுட்டு வாயத் தொடைக்கறத மட்டும் மறந்தரக்கூடாது’ என்று செய்யவேண்டியவற்றை மனதில் அடுக்கிப் பார்த்தாள்.

புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்

அச்சமயத்தில், ‘படிக பொறியியல்’ சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், ‘Dots, lines and crystal structures’ என்ற கண்ணோட்டத்தில், எப்படி கோலம் என்கிற தென்னிந்தியர் கலை  அணுக்கள் மற்றும் மூலகங்களால் கட்டமைக்கப்பட்ட படிகத்தின் வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கும், மேலும் அது இயற்கையில் காணப்படும் பல கனிமங்கள் காலநிலைக்கு தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது என்பதற்கான விளக்கமும் இதில் பெற முடியும் என்பதற்கான ஒரு புதிய முயற்சி ஆகும்.

வக்கீலின் கடிதம்

அக்கம்பக்கத்தில் கரும்புத் தோட்டம் இருப்பதால் சிராஜ்ஜித்தௌலா சண்டையிட்ட யுத்தகளம் இப்பொழுது காடுமேடாகிக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த மாம்பழத் தோட்டமும் இல்லை. இருந்தாலும் பலாஷி என்ற பெயர் மிகவும் சரித்திரப் புகழ் பெற்று விட்டது. ஸ்டேஷனுக்கு அருகே இந்த மீராபஜாரும் அந்தப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கல்கத்தாவிற்கு நான்கு மணி நேர வழி லாங்கோலா பாசஞ்சரில். கேஷ்டநகர் போகாமல் நல்ல பொருள் கிடைப்பது மிகவும் கஷ்டம்.

பண்பாட்டுத் தரிசனம்

“அரவு ஆட்டவல்லான்” என்ற கட்டுரையின் தொடக்கத்தில், அட்டபுயங்கப்பிரான் என அழைக்கப்படும் சிவனின் புராணக் கதையை விளக்குகிறது. அனந்தன், கார்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்கன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகிய எட்டு நாகங்களைக் கொண்டு ஆடும் சிவனின் தோற்றத்தை விவரிக்கிறது. இந்த ஆடும் சிவனின் குறிப்பு தமிழ்க் கவிதை மரபில் வளர்ந்த பக்தி இலக்கியமான காஞ்சிப் பதியில் குறிப்பிடப்படுகிறது.

புத்தனின் புன்னகை

இளமையினால் கண்களின் கூர்மையும் பிரகாசிப்பும் அதிகமிருந்ததோடு மிக ஆழத்தில் அமைதி தெரிந்தது. அவ்வமைதியினால் புன்னகை  மயக்கும் வசீகரத்தை தெறித்தது. பார்சல் கட்டுவதிலும் வரிசை எண்ணை அழைப்பதிலும் தனித்துவமும் பணிவுடன் கண்டிப்பும் நிறைந்திருந்தது.. இருபது நிமிடங்கள் கரைந்தது குறிப்பிட்ட எண்ணை மூன்று முறைகள் அழைத்தார் ஒருவரும் பதிலளிக்கவில்லை.

எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி

வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல்

ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்

கேரள வள்ளுவ நாட்டிலும், நிளா நதிக்கரையிலும் உலவிய மனிதர்களே அவரது அனைத்துப் படைப்புகளிலும் கதைமாந்தர். ஒரு கதையையோ அல்லது அதன் மாந்தரையோ வேறெங்கும் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை. ஒருகூட்டுக்குடும்பத்தில் அன்னையரின் வளர்ப்பில் வளர்ந்த எம்டி, நலிந்த நடுத்தரக்குடும்பங்களின் ஆண்கள் வழியறியாது தவித்து நின்றபோது தைரியமாக நின்று சவால்களை எதிர்கொண்ட பெண்களைக் கண்டும் அவர்களின் கதைகளை அறிந்துமிருந்தார்.

புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்

கதைசொல்லிகளுக்கும் வாசகர்களுக்கும் ஓர் உணர்வுமயமான ஒப்பந்தம் அமைய வேண்டியிருக்கிறது.  ஆயுர்வேத பத்திரிகை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை, ஒரு காலணாவிற்கு (1940களின் நாணயம். ஒண்ணரை பைசாவிற்கு சற்றே கூடுதலான மதிப்பு கொண்டது) கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கடவுள் பிரசன்னமாகிவிடுகிறார். 

பகரம்

‘ஒருத்தொருத்தரும் அவங்க வழியில அதை எதிர் கொள்வாங்க. நீங்க ப்ராபப்லி உங்க வேலைல இன்னும் கொஞ்சம் மூழ்கிருக்கலாம்’. உண்மை தான் என்று நினைத்துக் கொண்டான் அஸ்வின். கடந்த சில மாதங்களாக எளிதாகத் தவிர்த்திருக்கக் கூடிய அலுவல் நிமித்தமான வெளியூர் பயணங்களை வேண்டுமென்றே தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

தொலைநோக்கிகளின் அறிதிறன் வழியே எதிர்பாராத புதிய புவனங்களைக் நோக்குகிறோம். பொருட்களின் நுண்மையை நோக்கி நகர நகர அவற்றின் அபாரமான கட்டமைப்பினை அறிகிறோம். விண்மீன் மண்டலங்கள்(Galaxies) தோன்றிய, ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருவெடிப்பு நிகழ்வு வரை கிட்டத்தட்ட நெருங்கினாலும், அதற்கு முன் உள்ள ஏதோ ஒன்றின் தீற்றலை அறிகிறோம். வெளி(Space) வளைவானது என தெரிந்திருந்தாலும் அது அதிரும் துளிமக் கூலங்களால் (Quantum Grains) நெய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னறிகிறோம். 

இசைக்கும் புத்தகம்

This entry is part 4 of 11 in the series காருகுறிச்சி

காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும்

நேர்காணல்

வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே

உள்ளம் தாங்கா வெள்ளம்

This entry is part 19 of 19 in the series கவிதாயினி

உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள்.

மர பொம்மைகள்

“இல்லை, ஆனால் ஏன்  மிக அற்புதமான அழகு என்று நீங்கள் சொன்னீர்கள்? அவை விற்பனைக்காக இல்லை. அவை என்றாவது ஒரு நாள் பயன்படலாம். என்னைப் பற்றி தெரியாதவர்கள் கையில் இந்த பொம்மைகள் கிடைக்கும் போது விலைமாதால் காட்சிப்படுத்தப் பட்ட பொருட்கள் என்று அவர்கள் அவற்றைப் பரிகாசம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்”

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது.

மிளகு – அத்தியாயம் 86

இவர் திலீப்புக்கு பிறந்ததிலிருந்து பழக்கமான அப்பா தான். அப்போ எப்படி நூற்றுப் பதினொன்று வயது ஆகி இன்னும் உயிரோடு இருப்பார்? அவரே அவர் வயதை நூற்றுப் பதினொன்று என்று போன வாரம் ஒரு சின்ன கண்ணாடிக் கோப்பையில் வெள்ளை ஒயினை அணுஅணுவாக ரசித்தபடி திலீப்புக்கும் பிஷாரடிக்கும் விஸ்கி ஆன் தி ராக்ஸ் குடிக்க ஆதரவு கொடுத்தபடி கூறினார். 

நினைவோடையின் படிமம் –  ஜெயந்த மஹாபாத்ரா

வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடுசையில் காற்று நுழைவதுபோல அந்த குடுசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1

பாணருடைய படைப்புகள் நீள நீளமான சம்ஸ்க்ருத கூட்டு எழுத்துக்களால் ஆன வசன நடை.  காதம்பரியில் எளிய சொற்களை பயன்படுத்திய பாண கவி, இந்த ஹர்ஷ சரித்திரத்தில் பத பிரயோகங்களும், வசனங்களுமாக  கடினமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.  பதங்களைப் பிரித்தபின் திரும்ப படித்தால் தான் பொருளே புரியும்,  மற்ற மூன்று நாடகங்கள் பிரசித்தமானவை. ரத்னாவளி, நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா. அவர் காலத்தில் ஹிந்து மதமும், பௌத்தமும் தழைத்திருந்தன என்று அறிகிறோம்.

ஸ்கின்ஷிப் – பகுதி 3

This entry is part 3 of 3 in the series ஸ்கின்ஷிப்

என் தம்பி சி-ஓ இத்தனை வருடங்களாக மடக்கி வைத்திருந்த தன் பார்வையை முழுதுமாக என் அப்பாவை நோக்கித் திருப்பியதைப் பார்த்தேன். அது அவனுடைய அறையின் அந்தரங்கத்தில், அவனுடைய தன்னிறைவினுள் இருந்த வெற்றிடங்களில், கடினமான போராட்டத்தால் வெல்லப்பட்ட, ஒளிக்கப்பட்டிருந்த, இப்போது வெளிச்சத்துக்குள் இழுத்து வரப்பட்டு விட்ட ஒவ்வொரு சிறு பொருளையும் சேகரிக்க அவன் காட்டிய கட்டுப்பாட்டிலும் பொதிந்து இருந்து வெளியில் தெரியாமல் இருந்தது. எங்கள் அப்பா மீது முழு உணர்ச்சி வேகமும், குற்றச்சாட்டும், பழிசுமத்தும் நோக்கமும் கொண்ட ஒரு பார்வையை, முழுதுமாக அவன் திருப்பியதை நான் பார்த்தேன்

ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்

இன்னொரு முறையான ஹீயுமோரல் (Humoral theory) என்பது உடம்பில் உள்ள நான்கு ஹீயுமர் ஆன ரத்தம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் மற்றும் சளி இவற்றின் சமநிலையில் ஏற்படும் குறைவே நோய் என்றும் நம்பப்பட்டது. இதற்குத் தீர்வாக ரத்தத்தை பல்வேறு கசாயங்கள் மூலம் சுத்தப்படுத்துவதும், அதிகப்படியான ரத்தத்தை வெளியேற்றுவதும் சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டது.

5. இரவுநேர யாத்திரிகன்

இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை.

இருத்தலும் ஆணையும்

அழல்
மோகம்
காமம்
இன்னும்
இன்னும்
கீழ்மைகள்
இருக்கும்
திசைக்கூட திரும்பப்போவதில்லை

பத்து வைரங்கள் – புத்தக விமர்சனம்

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் சமூகத்தை விட்டு விட்டு அகத்தை மட்டுமே பேசவில்லை. மனிதர்கள், அவர்கள் வாழும் சமூகங்கள், குறிப்பாக பெண்கள், அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதிகமான விவரணைகள் இல்லாவிட்டாலும் அது ஒரு குறையாக எங்கும் தெரியவில்லை. கதைகளுக்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் உள்ளது

கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2

This entry is part 1 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க  கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன். 

குளக்கரையில்- சில குறிப்புகள்

குளத்தில் மிதக்கிறது
முன்பு எப்போதோ
கடைசியாய்ப் பார்த்து
மலங்கலாய் நினைவுபடுத்திக் கொள்கிற
ஒரு பால்ய சிநேகிதியின்
முகம் போல்
முழுநிலவு.

சிற்றின்பம் மற்றும் உணர்திறன்

விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான்

எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு

This entry is part 24 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

எம் எஸ் சி சார் செந்நாய்களால் சூழப்பட்ட சிறுத்தை போல தன்னை உணர்ந்தார். அவர் செயலைக் கண்டித்துப் பேசும் மாணவர்கள் ஒருவரைக் கூட இதுவரை அவர் பார்த்ததில்லை. இங்கே ஒரு பையனை அடித்தால் இத்தனை பேர் வந்து எதிர்ப்பது அவருக்கு திகைப்பை கொடுத்தது. ஆனாலும் இந்தப் பயகளுக்கு நாம என்ன பதில் சொல்றது என நினைத்தவரைப் போல மறுபடி பிரம்பை ஓங்கினார். அனைவரது பார்வையும் தன்னை வெறுப்புடன் பார்ப்பதை உணர்ந்த நொடி எம் எஸ் சி சார்  தன்னிலை இழந்தார்

ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது

“ இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கணேசா. பக்தி இலக்கியம் ஆரம்பித்தது பல்லவர் காலத்தில் இருந்து தான் என்று நான் நினைக்கிறேன். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இலக்கியத்தின் மூலம் சமய மறு மலர்ச்சி ஏற்பட்டது. சமண, புத்த மத தாக்கங்களில் இருந்து, சைவ, வைணவ மதத்தை மறுமலர்ச்சி செய்ததில் தமிழ் பக்தி இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் முன்னோடியாக இருந்து ஆரம்பித்து வைத்தவர் அப்பர் என்று அழைக்கப் பட்ட இந்த திருநாவுக்கரசர் சுவாமிகள் தான்.

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள்

This entry is part 47 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சக்கரவர்த்தி அதிரியனின் எதிர்காலத்தைப் பற்றிய  கணிப்புகளாக நான்  எழுதியவை அத்தனையும் தெளிவானவை எனச் சொல்லவியலாது; இருந்தபோதிலும் நம்பகத்தன்மைக்குரிய எல்லைக்குள் இருந்தேன். மனிதவிவகாரங்களில் பாரபட்சமற்ற பகுப்பாய்வு இழைக்கும் தவறுகள், பொதுவாகவே சம்பவங்கள் ஒரே சீராகத் தொடரும்பொழுது, மிகவும் குறைவு.     இதற்கு நேர்மாறாக ஊகங்களின் அடிப்படையில் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக எப்படி, எவ்வாறென  விவரங்கள் மற்றும் திருப்பங்களைச் சொல்ல முனைகிறபோது தவறுகள் அதிகரிக்கின்றன.

காலம் என்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்

துணை அணுத்துகளின் அலைப் பண்பை கணிதமாக விளக்குவது குவாண்ட இயற்பியல். அந்தப் பண்பு, கால நேரங்களில் எவ்விதம் புலனாகிறது என்று அளவீடு செய்கிறார்கள். ஆனால், இது, அந்தத் துகளின் மற்ற அம்சங்களை, உதாரணத்திற்கு, அதன் நிலையைக் காட்டுவதில்லை. எனவே, நாம் அதன் நிலையை அறிய வேண்டுமென்றால், இடம், காலம் கொண்டு அந்த அலைச் செயல்பாட்டின் மதிப்பின் மூலம், துகளின் சாத்தியங்களுள்ள நிலையை அறிகிறோம்.

மிதப்புக்கட்டை

அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் நுட்பம் மென்மேலும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் ஓர் புதிய உலகைப்படைக்க, காட்ட, ஓரிரு நிமிடங்களில் சிற்சில ப்ரேம்களில், ஒலியமைப்பில் காண்போரின் aweவை எளிதில் அடைந்துவிட முடியும் விஷயத்தை எழுத்தில் காட்ட பத்து, இருபது பக்கங்களும், அதிக வாசக கவனமும் தேவைப்படும்.

மனசாட்சி ஒரு காட்டு விலங்கு

ஒரு சிறுகதைக்குள் மூன்று பாத்திரங்கள் முழுமையாகவும், அவற்றின் அகக் கொந்தளிப்புகளோடும் சித்தரிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்தின் தேர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் கதை சொல்லும் விதம் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது. வாசித்தேன் என்று சொல்வதை விட கதையைக் கண்டேன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதை சொல்லல் உங்களுக்கு சரளமாகக் கைவந்திருக்கிறது.

எம். கோபாலகிருஷ்ணன் கௌரவ ஆசிரியராக

உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்: