நாய்வால்

என்  வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை  விலைக்கு வாங்க முடியுமா என்ன,  அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை.  நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை  விடுங்கள் அந்த மனையை விலைக்கு  வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும்   “நாய்வால்”

ஓர் வார்த்தை & அன்பின் அளபெடைகள்

அத்தனை நியாயங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை
எதிர்க்கும் ….

விரலிலிருந்தும் இதழிலிருந்தும்
விழும் முன் வார்த்தைகள்
விழுந்த பின் வெறும் எச்சங்கள்…

1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்

அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.

எரியும் மரங்கள்

ஹான் காங்கின் எழுத்துக்கள், உடல் மற்றும் மன வேதனையின் இணைப்பை, அவற்றின் வெளிப்பாட்டை. கிழக்கிய சிந்தனைகளை ஒட்டி வெளிப்படுத்துகின்றன. Convalescence 2013, நாவலில் காலில் உள்ள புண் உருவகமாக வருகிறது. அது குணமாவதில்லை. அதைப் போல முக்கியக் கதாபாத்திரத்திற்கும் அவரது இறந்து விட்ட சகோதரிக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஆறாத அந்தப் புண், அடிப்படையான இருத்தலின் அனுபவமாக உருவெடுக்கிறதே தவிர கடந்து செல்லும் இரணமாக இருக்கவில்லை.

காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்

“உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை” – கவிஞர் சுகுமாரன். பின் நவீனத்துவம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டியபோது வந்துசேர்ந்த சிந்தனைப் போக்குகளில் பெண், பெண்ணுடல், பெண் மொழி, பெண் வாழ்க்கை போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆண்களின் வாழ்வியல் “காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்”

தந்தைக்கு என்றும் நன்றியுடன்

கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.

கி. ரா. – அஞ்சலி

தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.