நம் வளர்ச்சியின் ரகசியம் 2025 ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நாடுகளின் வளர்ச்சியைத் தாங்குகிறது என்பதை கணித மாதிரிகளால் விளக்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இவை வெறும் கோட்பாடுகள் அல்ல – நமது அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் எல்லாவற்றையும் பாதிக்கும் உண்மையான மாற்றங்கள்! “2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு”
Category: நிதி நிர்வாகக் கட்டுரை
பிபேக் தேபராய் (1955-2024)
‘(Requiem) ‘கோரிக்கை’ என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்தியில், தன்னைத்தானே உள்விசாரணை செய்யும் விதத்தில், அவர் கடைசியாக எழுதியது வாழ்வின் நிதர்சனம், இயற்கையின் இயக்கம், தத்துவ விசாரங்களைத் தொட்டுச் செல்லும் ஒன்று. அவர் எழுதுகிறார் “முன்னர், யயாதி, புலனின்பத்திற்காகத்தான் இளமையைக் கேட்டான் என நினைத்தேன். இப்போது தோன்றுகிறது- தன் உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஏக்கம் அது.
பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்
பொருளாதார அறிவியலிற்கான நோபல் பரிசு 2024 ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான (Sveriges Riksbank) ஸ்வீடன் மத்திய வங்கிப் பரிசு 2024 “நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்காக” டாரன் அசெமோக்லு, (Daron Acemoglu) சைமன் ஜான்சன் (Simon Johnson) மற்றும் “பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்”
காற்றில் கலக்கும் பேரோசை
கிரெடிட் சூயிஸ் மற்றும் யூ பி எஸ் யின் சங்கமம் சிறிய அளவில், அதுவும் சில அன்னிய வர்த்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் செய்திகள் வந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இல்லை. மார்ச் 2021ல் ரூ 9.6 ட்ரிலியனாக இருந்த வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.175.4 ட்ரில்லியனாக வளர்ந்துள்ளது- அதாவது, ஜி டி பியில் (GDP- Gross Domestic Product) 45% ஆக இருந்தது 67.6% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வர்த்தகங்கள் குறையும், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரின் நம்பிக்கைகள் குறையும்
சங்க நிதி, பதும நிதி, வங்கி கதி
மே மாதத்திலிருந்து தொடர்ந்து இதை ஏற்றி வந்த இந்திய மத்திய வங்கி இந்த முறை அதை ஏற்றாமல் விட்டிருப்பது திறமையான ஒரு செயற்பாடு. ‘வட்டி விகிதம் மட்டுமே கொண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது; அதே நேரம் அது கட்டுக்கடங்காமல் செல்லவும் விட்டுவிடக் கூடாது. நிதி நிலைத்தலுடன், வினியோக சங்கிலிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், தேவைகளின் அழுத்தத்தைத் தாங்கும் வழியிலுமே இம்முறை ‘ரிபோ’ வை மாற்றவில்லை, தேவையை உணர்ந்தால் நாங்கள் உடனடியாக வட்டி வீதத்தை மாற்றுவோம்’ என்று பணக் கொள்கையில் அறிவித்திருப்பது என்னைப் பொறுத்த வரை வரவேற்பிற்குரியது. பொதுவாக மேலை நிதிச் சித்தாந்தங்களைப் பின் தொடரும் தன்மையிலிருந்து ஒரு சிறு மாறுதல்.
காசு, பணம், துட்டு, மணி, மணி
பணமாகப் பெற்று அந்த நீர்மைப் பணத்தை அதிக வருவாய் தரும், ஆனால் உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் வங்கிகள் போன்றவற்றிற்கு ஒரு தனி நபர் சந்திக்கும் நிதிச் சிக்கல்களை, கூட்டாகச் சந்திக்கும் நிலை பொதுவாக ஏற்படாது. பலவாறாக, அது, சமச்சீர் பேணுவதாக நினைத்து, உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்து விடும். அதாவது நடப்புக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் ஒரே நாளில் அவசரத் தேவையென பணத்தை எடுக்க நேரிடாது என்பது நம்பிக்கையாகும்.
ஜீ பூம்பா
பரவலாக்கப்பட்ட, மைய அதிகாரமற்ற ஒன்று என்று சொல்லலாம். இடைநிலை அமைப்பாக(Intermediary), இடைத்தரகர்கள் எவருமே இல்லாமல், அதாவது, அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் வால்ஸ்டீர்ட் நிதி நிறுவனங்கள் போலில்லாமல், இணையப் பணச் சேமிப்பு, கடன் வழங்குதல், வணிக வர்த்த்கத்தை எளிதாக்குதல் போன்றவற்றை கணினிக் குறி மொழி கொண்டு நடத்துவது டிஃபை எனப்படுகிறது.
