மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை

பெரும்பாலான தொழில்நுட்பங்கள் கடந்த பத்து-15 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்டவை, மெருகேற்றப்பட்டவை. அவற்றினை உருவாக்குவதற்கு, அதற்கு முன்பு சுமார் 30 வருட காலம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைக்க ☺ பணமும், மனமும் கொண்ட நல்லுள்ளங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள்தான் தொழில்நுட்பத்திற்கும், முன்னேற்றத்திற்குமான அஸ்திவாரம்; இப்பொழுது புரிந்திருக்கும், இந்தியாவில் ஏன் இது போல் ஒரு புரட்டிப்போடும், புதுமையான தொழில்நுட்பம் கூட உருவாகவில்லையென்று. இங்கு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி கொடுங்கள் என்று கேட்பது, ஒட்டகப் பாலில் டீ போடுங்க – என்று நாம் கேட்பது போல் பார்க்கப்படும்.

நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா?

ஏதாவது ஒரு நூலின் வரிகள் திரித்துக் கூறப்படுவது வரலாற்றில் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்கு நவீன அறிவுத்துறை நூல்களும் தப்புவதில்லை எனும்போது இலக்கியம் விதிவிலக்கில்லை. இலக்கியப் படைப்புகள் இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொள்ளலுக்கு இடம் கொடுக்கிறது. குறிப்பாக சுருக்கமான படைப்புகள், செய்யுள் வடிவில் எழுதப்பட்டவை அல்லது கவித்துவமான மொழிநடையைக் “நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா?”

பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி

நான்காவது வகுப்பிற்குமேல் அவளை படிக்கவிடாத, கராச்சியைச் சேர்ந்த குடும்பத்தின் இளம் பெண் ; தினசரிகளை படித்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்துகொண்ட ஆர்வம்மிக்க பெண் ; தான் மேலே படிக்கா விட்டால் அறிவியலில் தான் கண்டுபிடிப்பதற்கென்று எதுவுமே இல்லாமல் போய்விடுமா என்று கவலை கொண்ட பெண் ; பிரிவினைக்குப் பின், இருபத்தியிரண்டு வயதில், ஐந்து சகோதரிகளும் ஐந்து சகோதரர்களும் கொண்ட தன் குடும்பம் பிழைக்க ஏதேனும் ஒரு வழி தென்படாதா என்று பம்பாய் தெருக்களில் தன் சகோதரனுடன் அலைந்து திரிந்த பெண் ; ஆராய்ச்சிக்கூடத்தில் அலுப்பே கொள்ளாமல் உழைத்த ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி; அறிவியல் அறிவு மூலமாக தான் அறிந்து கொண்டதெல்லாம் புறவுலகம் பற்றியதுதான் என்பதால் சுயத்தின் தன்மையை அறிய முயலும் ஒரு சந்நியாசி – சாந்தூ குர்னானியின் கதையிலிருந்து உருவாகும் பலமும் உறுதியும் கொண்ட பிம்பங்கள் இவை. இந்த வாழ்க்கைக் கதையிலிருந்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பெண்களின் கல்வித் தேர்வு பற்றியும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் நாம் அறிகிறோம்.

முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்

நேரடிப் பேட்டிகளுக்கு வயதான விஞ்ஞானிகள் கிடைக்காததே இந்தக் கட்டுரையை எழுதும்போது நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை. என்றாலும் அவர்களில் இரண்டு பேரோடு பேச எனக்கு அதிர்ஷ்டம் கிட்டி யது. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசிப் பார்க்கும்போது, பரந்த இந்திய வானத்தை அழகுபடுத்தும் அற்புத வண்ணங்களின் அழகான வானவில்லை காட்சிப்படுத்தும். இந்த முன்னணி பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தின் செயல்வகையை அந்த வண்ணங்களில் ஒவ்வொன்றாகக் காணப் போகிறோம். கண்ணாடிக் கூரையை உடைத்து வெளியேறி, தன்முனைப்பான முயற்சிகளால் அவர்கள் தங்களுக்கு மட்டும் வரலாறை உருவாக்கிக் கொள்ளவில்லை; இந்திய சமூகத்தின் சமூகப் புரட்சிப் போக்கில் அவர்கள் சரித்திர காரணகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

நவகைலாயங்கள்

நவ திருப்பதிகளுள் ஒன்றான ‘அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன்’ திருக்கோவிலுக்கு வந்து சென்ற இனிய நினைவுகளுடன் தென்திருப்பேரையில் நவ கைலாய புதன் ஸ்தலத்தில் வண்டியில் காத்திருந்தோம்…
அழகான கோவில் பிரகாரம். அரசமர பிள்ளையார். நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அலங்கரிக்க பெரிய கோவில் மதிற்சுவர்கள். கோவில் திறந்தவுடன் உள்ளே சென்று விட்டோம். ஏழாவது கைலாய தலத்தில் தாமரை பீடத்தின் மேல் கைலாச நாதர். அம்மன் அழகிய பொன்னம்மை தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகங்கள், முருகன் சந்நிதிகளும், கொடி மரமும் பலி பீடமும் உண்டு. நவ கைலாயங்களில் இரண்டாவது பெரிய கோவில்.
..அருகே அங்கன்வாடி அரசுப் பள்ளியில் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளந்தி குழந்தைகள் கூட்டமாகச் செல்லும் ஆடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தார்கள். மழையைக் கண்டதும் அகவும் மயில்கள் அந்த இடத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன.

மிளகு -அத்தியாயம் பதினாறு 

தாங்கனீகாவிலே முதல் நாள் ஆபீசுக்குப் போனபோது கட்டை ரெண்டையும் வாசல்லே விட்டுட்டுப் போகணும்னுட்டாங்க. போயிருப்பேன். நாலாவது மாடி. லிப்ட் கிடையாது. உள்ளூர் மகா ஜனங்கள் மாடிப்படி ஏடி இறங்கறது கவர்மெண்ட் கூட தொடர்பு கொள்றதிலே ஒரு அம்சம்னோ என்னமோ, சளைக்காமல் காகிதங்களைத் தூக்கிண்டு ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேணும்னாலும் படி ஏறுவா.

இவர்கள் இல்லையேல் – என்னுரை

டோக்ரி மொழியை எட்டாம் பட்டியலில் இணைக்க, மற்ற டோக்ரி கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து போராடியதில், பத்மா பெரும் பங்காற்றினர். டோக்ரி மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கும், டோக்ரி மொழியை தன் படைப்புகளால் செழுமைப்படுத்துவதிலும், பத்மா ஆற்றிய பங்கு ஒப்பில்லாதது. அதனால்தான், ‘டோக்ரி மொழியின் தாய்’ என டோக்ரி மொழி பேசுபவர்களால் பத்மா பெரிதும் கொண்டாடப்படுகிறார்.

தண்ணிப்பாம்பு

கோலப்பன் பேசுவதற்கென்று எதும் இருக்கவில்லை. உடல் தளர்ந்து மனம் ஆற்றலற்று பிழிந்து போட்ட கரும்பு சக்கையாக கிடந்தது. “யம்மா, மானமா ஒரு வேலைக்கி போறேன். பொங்கதுக்கு வழியிருக்கும். இந்த கட யாவாரம்லா வேண்டாம்மா. எனக்கு முடியல்ல.”
“சீ…வாயமூடுல..அறுதப்பயல…நல்ல அப்பனுக்குத்தான் பொறந்தியா. ஆம்பளையா பொறந்தா மட்டும் காணாது கேட்டியா,” என்று வேகமாக அவனிடம் வந்தவள் “கடைக்கு போயி யாவாரத்த பாரு. பிள்ளன்னு பொறந்துருக்கு பாரு சவம்…சவம்….

காகம்

திவாகர் கூட்டையும் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மா அவர் இலையில் மேலும் ஒரு கரண்டி வைக்க முயன்றாள். 

அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள்

இலேசாக நான் பாவிக்க முடியும் ஒரு வீடு,
நேற்றைய உரையாடல்கள்
அடைக்காத அறைகள், அவற்றில்
பிளவுகளை நிரப்ப என் தன்மை
உப்பத் தேவையின்றி.

போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில்

ஒலிப்பெருக்கம்;
விரிந்த வெளியும் ஒளியும் கலந்த உணர்வு.
இரவின் தூரங்களை வெளிச்சப்படுத்தும்
இரயிலின் மாபெரும் மஞ்சள் கண்கள்.
குறு முள்எலி,கம்பளிப் பூச்சி,குழி எலி,
சிறு பெரணிகள் எல்லாம் சரிதான்.
ஆனால் எனக்கு வேண்டியது
பூ மரங்கள், நீளும் படர் கொடிகள்,
பரவும் ஒட்டுண்ணிகள்.

வ அதியமான் கவிதைகள்

எங்கும் பச்சை வற்றிப்போன
எரிகோடை காலத்தில்
மேய்ப்பனற்ற மந்தை ஆடுகள்
அத்தனையும்
ரகசியமாய் புற்கள் கொண்டு தரும்
கசாப்பு கடைக்காரனிடம்
தனித் தனியாக
ரகசிய ஒப்பந்தம்
செய்து கொண்டிருக்கின்றன

பொன்மான்

பிட் ஃபைனெக்ஸ் (Bitfinex) என்ற நிகர்நிலை தளத்திலிருந்து 2016-ல் 1,19,754 பிட் காயின்கள், சுமார் 2000 பரிமாற்றங்களில் திருடப்பட்டன. அப்போது அவற்றின் மதிப்பு $71 மில்லியன். நம் ஸ்ரீகி சொல்கிறார்: ‘அந்தப் பங்கு வர்த்தகத் தளம் இருமுறை கொந்தப்பட்டது; அதையும் முதலில் செய்தவன் நானே. இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றும் இருவர் பின்னர் அதே தளத்தில் களவாடினார்கள். அப்போது ஒவ்வொரு பிட்காயினின் மதிப்பு $100- $200 வரை. பின்னர் மற்றொரு பிட் காயின் பரிவர்த்தனைத் தளமான பி டி சி-ஈ. காமைக் (BTC-e.com) கொந்தி 3000 பிட் காயின்கள் திருடினேன்.

கிராவின் திரைப்பட ரசனை

This entry is part 9 of 10 in the series கி.ரா. - அ.ரா.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் அவருடன் நடைபோவதற்குப் புதுப்புது இடங்களைத் தேடிச் செல்வதுண்டு. அப்படித்தான் இப்போது கருவடிக்குப்பம் மயானத்தோப்புக்குள் ஒருநாள் நுழைந்தோம். நூற்றாண்டைத் தாண்டிய மரங்கள் அடர்ந்த வனமாக இருக்கும் சுடுகாட்டை நான் வேறெங்கும் கண்டதில்லை. அந்த வனத்திற்குள் தான் தமிழ் நாடகத்தின் தந்தையென அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறை இருக்கிறது.

வலி

ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.

நட்சத்திரம்

‘எப்படியாச்சு நல்லபடியா ஒரு வேலையோட வந்திரு தாயி. பொம்பள பிள்ளைக்கு என்ன நாடு வந்தாலும் ஊன்றி பிடிக்க வேலைன்னு ஒன்னு இருந்தா, நாலு எட்டு கூடுதலா விரசா வைக்கலாம்’ கல்லூரி விடுதியில் என்னை விட்டுவிட்டு திரும்பும் போது என் கையை பிடித்து வைத்துக் கொண்டு அம்மா சொன்னது. அது கேட்காமல் கேட்ட ஒரு சத்தியம் போல் இருந்தது.

அனல்

“நீ ஆ சோங் கடையிலத்தானே பசியாற வருவ? உன்ன அங்க வச்சி செருப்பால அடிக்கறன் பாரு,” என முடியை அவிழ்த்து விரித்துவிட்டு வீட்டின் முன்னே நின்று கத்துவாள். சாந்தியின் பேச்சுக்குப் பயந்தே எப்படியாவது வட்டியைக் கொடுத்துவிடுவார்கள்.

நிசப்தத்தின் இரகசிய இசை

வலிமறந்து பனுவல்
பல படித்துச் சிறந்து
ஆட்சியர் பதவியில்
அமர்ந்த பெருமை
பஞ்சுமிட்டாயானதே!
தற்குறிக்கும் தறுதலைக்கும்
தலைவணங்க நேர்ந்த்தே!
துட்டரின் கயமைக்குத்
துணைபோக நேர்ந்ததே!

ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்

பெரும்பான்மையான இந்திய பத்திரிகை நிருபர்களும்  இந்திய நிபுணர்களும், மதச்சார்பற்றவர்கள் அவர்களது மூக்கில்  ஏற்றியுள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதால், அவர்கள் கூறும் ஹிந்துக்களுக்கு எதிரான, பாரபட்சமான, தவறான செய்திகளையே  மக்களிடம் கக்குகிறார்கள். நிகோலஸ்ஸுடன் காரில் சென்ற சமயச்சார்பற்றவரின் முதல்  குறிப்பே  ஒரு சராசரி பார்வையாளரின் மனத்தில்  பின் வரப்போகும் சம்பவங்களைப் பற்றிய சந்தேக மேகத்தை கவிழ்க்கிறது. ஆனால், திறம்பட படமாக்கப்பட்டிருந்த அந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், காரில் சென்றவர் சொன்னதை ஊர்ஜிதப்படுத்துவது போலவோ, விளக்கப்படுத்துவது போலவோ ஒன்றுமே நடக்கவில்லை. 

புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்

This entry is part 12 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்த 150 ஆண்டுகளில், 8 மிகப் பெரிய எரிமலை வெடிப்புகள் விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பினால், கரியமில வாயு அதிகமாகிறது என்றால், இரண்டு வெடிப்பிற்கு இடைப்பட்ட காலத்தில், பூமி குளிரவேண்டும் அல்லவா? அப்படி நிகழவில்லை. மாறாக, பூமியின் சராசரி வெப்பம், கடந்த 150 ஆண்டுகளாக, சீராக உயர்ந்து வருகிறது. மனித நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம் என்பது தெளிவாகிறது.

கீதப்ரியா, லதா, ஜோதி

அன்று உழவர் சந்தையிலிருந்து வெளியே வரும் போது, வாசலில் பூக்கார பாயிடம் மல்லிகை பூ எடை நிறுத்தும் போது தான் கவனித்தேன் வலது புற டீக்கடையில் நிற்பது ஜோதி மாதிரி இருக்கிறதே என்று. உழவர் சந்தைக்கு போனால் எப்படியும் ரெண்டு தெரிஞ்சவங்கள பார்த்துவிடுவேன். நின்னு நாலு பழமை பேசிவிட்டு “கீதப்ரியா, லதா, ஜோதி”

ஆயுதம்

தேவு காலேஜை முடித்து விட்டு ஆறு மாசம் வேலை கிடைக்காது தடுமாறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காமேச்வரனிடம் வந்து “அண்ணா, நான் உங்க பாக்டரிலே வேலைக்குச் சேந்துக்கறேன்” என்றான்.

காமேச்வரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். பேண்ட் ஷர்ட் என்று காலேஜ் பையனின் உடை. பளீரென்று திருத்தமாக இருந்தான்.

“விளையாடறயாடா தேவு?” என்று சிரித்தான் காமேச்வரன். “பாஸ் மாதிரி டிரஸ் பண்ணிண்டு எனக்கு முன்னாலே நிக்கறே? என்னைப் பார்” என்று தலையிலிருந்து கால்வரை ஒரு கோட்டை இழுப்பது போல ஒரு கையை உயர்த்தித் தாழ்த்தினான்.

“அவ்வளவுதானே?” என்றபடி தேவு தனது கால்சட்டையையும் அரைக்கைச் சட்டையையும் கழற்றினான். இப்போது அவனும் அரை நிஜார் பனியனில்.

நித்தியமானவன் – கவிதைகள்

நான் இதுகாறும் பெற்ற அனைத்தையும்
தொலைத்து விட்டு பிச்சைக்காரனாய்
அந்த வானத்தின் கீழ் நின்றேன்
அன்று பூத்த மலரை
என் பழுதடைந்த கண்களால்
நெருக்கமாகப் பார்த்தேன்
கனவுகளை இறைத்த தோட்டத்தில்
நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்