நாவலாய் நீடுவிரியும்  நெஞ்சையள்ளும் கவித்துவம்

யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது.  நாவலில் பயிலும்  மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு,  ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும்  வித்தியாசமான உரையாடல்களும்  சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து  நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன.

வினோத் குமார் சுக்லாவின் கவிதைகள்

ஒரு சுவரில் வாழ்ந்து வந்த ஒரு ஜன்னலிருந்தது.
அந்த ஜன்னலால் வாழ்ந்து வந்தது ஒரு காட்சி:
ஒரு குடில், இரு நடைபாதைகள், ஒரு நதி,
குளங்களிரண்டு.
ஒரே ஒரு வானம் அவற்றுக்கு போதுமாயிருந்தது.
மனிதர்கள் வந்து போயினர்.
மரங்களும், பறவைகளும் அங்கிருந்தன.
ஒவ்வொன்றும் ஜன்னலில் வாழ்ந்து வந்தது.

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா

திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறவிருக்கும், வினோத்குமார் சுக்லா 2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் “வினோத்குமார் சுக்லா கவிதைகள்”