தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை

ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2

எந்தக் கதையைப் படித்தாலும், யாருடைய கதையைக் கேட்டாலும் அதில் பெண் கதாபாத்திரம் என்ன என்று கவனமாகப் பார்த்து அந்தப் பாத்திரத்தை ஆராய்வது என் வழக்கம். இந்தக் கவனிப்பால் பல பெண்களின் மேன்மையை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் முன்பென்றும் அறிந்திராத பெண்களும், அவர்களுடைய இயல்புகளும் கதைகளின் மூலம் அறிமுகமாகி, என்னோடு உரையாடுவதும், உயிரோடு நினைவில் நிற்பதுமாக சிறந்த அனுபவத்தைத் தருகிறார்கள்

‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)

சாகசம் என்று ஏன் கூறுகிறேன் என்றால், ஆணாதிக்க சமுதாய அமைப்பில் பெண்களின் வளர்ச்சிக்கும் சாதித்த முன்னேற்றத்திற்கும் அங்கீகாரம் குறைவு என்றே கூற வேண்டும். சென்ற நூற்றாண்டில் வந்த சிறுகதைத் தொகுப்புகள், சாஹித்திய அகாடமி, தெலுகு பல்கலைக் கழகம், கதா சாகர், நல்ல கதைகள், சிறுகதைச் சிலம்புகள் (மஞ்ஜீரம்), போன்ற தொகுப்புகளில் பத்து சதவிகிதம் கூட பெண் எழுத்தாளர்களின் கதைகள் இல்லை தொண்ணூறு சதவிதம் கதைகள் நாம் மீண்டும் மீண்டும் படித்த ஆண் எழுத்தாளர்களுடையதே.

நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1

சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக்  கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன. 

கே. சிவாரெட்டி

பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.   

கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்

இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது.

பாபிநேனி சிவசங்கர்

உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன

சையது சலீம்

பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும்   விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்

கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்

பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.