2025 அமைதிக்கான நோபல் பரிசு

சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் “2025 அமைதிக்கான நோபல் பரிசு”

ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்

பேரழிவின் கலை இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும்  இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது.  அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை “ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்”

வேதியியல் நோபல் பரிசு 2025

நவீன வேதியியலை ஆராய்வதற்கான புதிய அறைகள் ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), ஓமர் எம். யாகி (Omar M. Yaghi), மற்றும் சுசுமு கிடகாவா (Susumu Kitagawa) என்ற மூவரின் ஆய்வுகள், பலகாலமாக கருதி வந்த “இயற்கையானது நிலைத்தன்மை காரணமாக நுண்துளைகள் கொண்ட பொருட்களை விட அடர்த்தியான பொருட்களையே “வேதியியல் நோபல் பரிசு 2025”

இயற்பியல் நோபல் பரிசு 2025

விஞ்ஞானிகள் எவ்வாறு குவாண்டம் கோட்பாட்டை யதார்த்தமாக மாற்றினார்கள் இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு, குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் (Quantum Mechanical Tunneling) என்ற அடிப்படை கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது மேக்ரோஸ்கோபிக் (பெரிய அளவிலான) குவாண்டம் டன்னலிங் மற்றும் மின்சார சுற்றுகளில் ஆற்றல் குவாண்டைசேஷன் (energy quantization) “இயற்பியல் நோபல் பரிசு 2025”

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025

இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்புகள் அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெறும். அனைத்து பரிசு அறிவிப்புகளும் தமிழில் இங்கே — சொல்வனம் — தளத்தில் பகிரப்படும். பரிசுகள் குறித்த விரிவான தகவல்களும் இங்கே சொல்வனத்தில் வெளியிடப்படும். நமது உடலை ஒரு பரபரப்பான நகரமாக கருதுவோம். அங்கு “உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025”

ஆறாவது லார்ஜ்

கதிர்வேலனின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லாமல் அப்பா இப்படித்தான் அதிரடியாகப் பேசி அவனை  வாயை மூட வைப்பார். இருந்தும், கதிர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைக் கிடுக்கிப்பிடியான  கேள்விகளோடு திணறடிப்பான். மாறாக இளங்கோவை அப்பா சர்வ சாதாரணமாக வாயடைத்துவிடுவார்.

வாக்தேவி துதி

கடினமான கற்களும்
நோகக் கூடாதெனக் கருதி
புல்லும் நலுங்கிடாத மெல்லடி
வைத்து நடந்த நாமகளே
மோப்பக் குழைந்திடும்
என் மனதைப் பற்றி எண்ணாமல்
விரைவடி வைத்து மறைந்ததேன் தேவி

நட்சத்திர இரவு

அந்த நிசப்தம் அவன் காதுகளில் ஒலித்தது. மௌனமும் ஏதோ சொல்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.  மொழிக்கு தான் அர்த்தம் உள்ளதா என்ன?  மௌனங்களும்  அர்த்தங்களால் நிரம்பியுள்ளது. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் ஒரு ஆழ்ந்த மௌனம் போல. சொல்லப்படாத உணர்வுகள், கேட்கப்படாத கேள்விகள், கிடைக்காத பதில்கள் என அனைத்தையும் அந்த மௌனம் சுமந்து நிற்கிறது

மூலமும் உரைகளும்

வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.

மாதவரே…

ஒரு மனிதனானவன் அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது. மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில் அவ்வாறு பிரிக்க முடியாது.

கிங் காங்

இந்தப் படத்தின் திரைக்கதையைத் தயார் செய்த கூப்பர், தனது நண்பர் டீலோஸ் (Delos W. Lovelace) என்ற எழுத்தாளரைக் கொண்டு தான் உருவாக்கி இருக்கும் கிங் காங் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுத வைத்தார். இந்த நாவல் கிங் காங் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பு பதிப்பிக்கப்பட்டது.

அடுத்த பரிணாமம்

“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.

யூகான் – ஒரு ஆர்க்டிக் வாழ்க்கை முறை

குளிர், அனைத்து கனேடியர்களுக்கும் பரிச்சயம். ஆனால், வெறும் 2 மணி நேர வெளிச்சம் என்பது ஒரு ஆர்க்டிக் அம்சம். நீண்ட, இருண்ட குளிர்காலத்தில், வீட்டில், பல பிரத்யேக மின் விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை அவர்களுக்கு சூரிய ஒளி தரும் Vitamin D  -ஐ கொடுக்கிறது. வீட்டிற்குள் பிரகாசமாக வைத்திருப்பதால், அவர்களின் மனநிலையும் ஓரளவிற்கு சரியாகிறது. சூரிய ஒளியின் மிக முக்கிய ஒரு அம்சத்தை, யூகான் பயணம் கற்றுத் தந்தது.

மருதத் திணை

அவ்வையாரின் இன்னொரு குறுந்தொகைப் பாடலில் பரத்தை தலைவன் மீதான தன்னுடைய இறுக்கமான பிடி பற்றிய நம்பிக்கையில் இவ்வாது பேசுகிறாள்: ‘தலைவனை நான் கவர்ந்து கொண்டதாகப் புறம் கூறும் தலைவி, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்துக்கு வந்து பார்க்கட்டும். தலைக்கை எனக்குத் தந்து தலைவன் ஆடும் போது, யார் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரிந்து விடும்.’ 

அவர் அவர் எச்சத்தால் காணப்படும்

“உன்னை மாதிரி எல்லா காபிடலிஸ்ட்களும் இருந்தா, மார்க்ஸ் ‘டாஸ் காபிடல்’ எழுதி இருக்க மாட்டார். இப்ப… ‘வென்டிஸ்’ல வேலை செய்யறவன் அதிக சம்பளத்துக்கு ‘மெக்டனால்ட்ஸ்’ போனா தொழில் ரகசியத்தை கடத்திண்டு போயிடறான்னு அதைத் தடுக்கலாம். அது மாதிரி இன்னும் பல வேலைகள். நாங்க இருக்கற கட்டடங்களை மெய்ன்ட்டெய்ன் பண்ணற ஆட்கள் கூட சுலபத்தில வேலை மாற முடியாது.

இப்படித்தான் இப்பாடலை நான் கேட்டேன்

மொத்தத்தில் இந்தப் பாடலின் ரிதம், கடந்த காலத்தை இடத்தை உணர்த்தும் காட்சிப் படிமங்கள், ஒரு கவிதை மெட்டாய் மலரும்போது நிகழும் அற்புதம், இது உருவாக்கும் ஆதரவற்ற தனிமை, கையறு நிலை, சரணடைதல், சொல்லும் பொருளும் இயைந்து முயங்கியதில் கிறங்கிய இடங்கள், பாடிக்கொண்டே  வரும்போது இசைக்கலைஞர் ஏற்படுத்தும் மெளனவெளி, ஏற்ற இறக்கங்கள், சிறியது பெரியதாகப் பாடுதல், சில இடங்களில் துரிதகதி மற்றும் குறுங்கமகங்கள் போன்றவை எல்லாமே ஒரு சரியான கலைச் சேர்மானத்தில் புதிய ஒன்றாக மாறியுள்ளது கவிதை.

கம்பளிப் பூச்சி

எரிப்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அந்த மரத்தின் எச்சங்களை முற்றுமாக அழிப்பது முக்கியம். அதன் கதை முடிந்து விட்டது. அதற்கு எரித்தல் ஒரு சுலபமான வழி அவ்வளவுதான். இதைக் கணேஷுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியுமா? 

லாவண்யா சத்தியநாதன் கவிதைகள்

நான் மகிழும்படி
என் வாழ்க்கையில்லை.
நான் உவக்கும்படி
நான் வாழும் உலகமில்லை.
குறை யார் மீது?
என் மீதா? உலகின் மீதா?
விடை தெரியாத கேள்வி ஒன்றை
தலைகனக்க சுமந்துகொண்டிருந்தேன்.

திறந்து விடு

வெறும் காலோடு இருவரும்தான் ஒன்றாக ஓடினார்கள். ஓடும்போது சகினாவின் துப்பட்டா கீழே விழுந்தது. அதை எடுக்க அவன் குனிந்தபோது, அவள் அலறினாள், “அப்பா, போகட்டும் விடு!” ஆனால் அவன் துப்பட்டாவை எடுத்துக் கொண்டான். அந்த நினைவு வந்தவுடன், தன்னுடைய மேலங்கியின் பையில் கையை விட்டு அதிலிருந்த துப்பட்டாவை வெளியில் எடுத்தான். துப்பட்டா அவனிடம்தான் இருக்கிறது — ஆனால் சகினா எங்கே?

கு. அழகர்சாமி கவிதைகள்

கைகள்
என் முகங் காட்டுவது போல்
கண்ணாடி
என் முகங் காட்டுவதில்லை-
ஏனென்றால்
முகங் காட்ட,
வருடிக் கைகள்
என் முகத்தை ஸ்பரிசிப்பது போல்
கண்ணாடி ஸ்பரிசப்பதில்லை.

சால்மோனெல்லோசிஸ்

சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால்  2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.

வ ஸ்ரீ கவிதைகள்

இது எழுதும்நேரம்.
கபாலம் பிளந்து
கவிதை கொப்புளிக்கும்.
அமைதியின் வளைந்த வழி அரித்து
கடல் ஆர்பரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்வான்.
மேகங்களின் வெள்ளையை
அலைகள் விழுங்கும்.

சுவரில் தொங்கிய படம்

“என்னடி? என்னடி அங்கே வந்து வேஷம் போடுறே? கிளிக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி சொன்னாலும் அங்க வந்து அந்த அழுகை அழுவறே? இந்த சான்ஸ் மட்டும் கை நழுவிப் போயிருந்தா, அங்கேயே உன்னை வெட்டிக் கூறு போட்டிருப்பேன்” என்று உறுமியவன், அவள் தலை முடியைப் பிடித்து பலமாகப் பின்னால் இழுத்தான்.  

மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை

உயிர்களின் மிகப்பெரிய களஞ்சியமாக கருதப்படும், உயிருள்ள மரங்களைக் கொண்ட காடுகள் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும் அவற்றின் தண்டுகள், கிளைகள் மற்றும் வேர்கள் அனைத்தும், விலங்குகள் மற்றும் மனிதர்களை விடவும் அதிக கார்பனைத் தாங்கியுள்ளன. இந்த மர உயிர்த்திணிவு (biomass) வெறும் செயலற்ற சேமிப்பு இடமல்ல, இது ஒரு மாறும் ஆற்றல் மையமாகும். வளர்ச்சிக்கு எரிபொருளாக நீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சர்க்கரைகளை அதன் நரம்புகள் வழியாக செலுத்தப் படுகிறது.

அந்தக் கீழ்நிலைப் பெண் பணியாளர்

அவள் உடலுக்குச் சாப்பாடு தேவையாக இருந்தது; ஆனால் வேறு ஏதோவும் தேவையாக இருந்தது —அன்பு, வாத்சல்யம்— மனதுக்கும், உடலுக்கும் தேவைப்பட்டன. அந்தப் பாட்டியிடமிருந்து அவையும் அவளுக்குக் கிடைத்தன. அவளுடைய இடத்தில் வேறொருவர் இருந்தால், அந்த நிறைவேற்றத்தின் விளைவுகள் முழுமையாக வெறுக்கத் தக்கவை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒருவர் பசியால் வாடும் போது, ஒருவர் விஷம் கலந்த உணவு தந்தால் அதைச் சாப்பிட்டு இறப்பது பரவாயில்லை.

உண்மையைத் தேடி

ன் புரிதல்கள், நம்பிக்கைகள், இவற்றை அவன் சரி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே? அவன் சிந்தனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சீரற்ற குணத்தை சாதியா வெறுக்கிறாரோ, அதை நேர்மை என நான் உணர்கிறேன். கீழ்ப்படிதல் என்பது சிறந்த குணம் என்று மதங்கள் சொல்லக்கூடும்-ஆனால், அது அறிவுத் துறைக்குப் பொருந்துமா? ஏதோ ‘வெளிப்பாடுகளினால்/ உபதேசங்களால்’ சிந்தனை முன்னேறாது-அது கடவுளிடமிருந்து வந்தாலும், அது உனக்கு ஆன்ம விடுதலை தருவேன் என்று உறுதி கூறினாலும்.

றெக்கை– அத்தியாயம் 5

This entry is part 5 of 18 in the series றெக்கை

தீனி மேசையில்  வழுக்கு மரத்தட்டில் நான்கு கோழி முட்டைகள்  ஜாஜாவை வரவேற்கக் குறுகுறுப்போடு காத்திருக்கின்றன.  கூடவே வேகவைத்த மொச்சை, ஒரு பெரிய துண்டு ரொட்டி. பெயர் விளங்காத, கோழிக் கழிசல் போல் ஏதோ ஒரு வஸ்து.. ஒரு  வாழைப்பழம். ஐரிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் என்று ஓநெல்லி கிழவியம்மா உண்டாக்கி அனுப்பியது. கிழவியம்மாவின் உதவியாளினி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். 

ஒரு அமெரிக்க ஒடிஸி: ஓ பிரதர், வேர் ஆர்ட் தௌ? (2000) இல் கட்டுக்கதை, இன்னிசை மற்றும் கலாச்சாரக் கலவையின் சிம்பொனி

கோயன்களின் ஹோமரின் ஒடிஸி யை மாற்றியமைப்பதில் விளையாட்டுத்தனமான, கிட்டத்தட்ட அலட்சியமான அணுகுமுறை, தழுவலின் தன்மை மற்றும் கிளாசிக் நூல்களின் கலாச்சார எடை குறித்த ஒரு பின்நவீனத்துவ வர்ணனையாக செயல்படுகிறது. காவியத்தை அமெரிக்க தெற்கிற்கு மாற்றி, பிராந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இசையுடன் அதை உட்செலுத்துவதன் மூலம், அவர்கள் ஒரே நேரத்தில் அசலை மதிக்கிறார்கள் மற்றும் மர்மத்தை நீக்குகிறார்கள்;

நீலமலையில் வாழ்பவனே……..!-  சாலபேகா – ஒடியா கவிஞர்

அவ்வாறே ரத யாத்திரையின்போது, ஜகந்நாதர், பலபத்ரா, சுபத்ரா ஆகியோரின் தேர்கள் சாலபேகாவின் குடிசையின் முன்பு நின்றுவிட்டன. அங்கிருந்து நகரவேயில்லை. சாலபேகா வந்து தேர்க்கயிறுகளைத் தானே இழுத்தபின்னரே அவை அங்கிருந்து நகர்ந்தன. அவனுடைய தாய் லலிதா இறந்தபின்னர் கோவில் பூசாரிகள் அவளை இந்துமுறையில் தகனம் செய்யவும் அனுமதி மறுத்தனர்.

சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு

This entry is part 10 of 12 in the series சமூக உணர்ச்சி

நண்பர்களின் ஆதரவு  என்பது ஒருவழிப் பாதை அல்ல. உதவி பெறுபவருக்கு மட்டுமல்ல, உதவி வழங்குபவருக்கும் மன நலன் மேம்பாடு கிடைக்கிறது. இது சமூகக் கற்றலின் அழகான அம்சமாகும் – கற்பிப்பவனும் கற்கிறான், உதவுபவனும் உதவி பெறுகிறான். ஒரே தடைகளை இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது கலந்து பேசும்போது அந்தத் தடைகளை அவர்கள் இருவரும் சேர்ந்தே தகர்த்தெறியும் வழிமுறைகளை எளிதாகக் கண்டுகொள்கிறார்கள்.

புஷ்பால ஜெயக்குமார் நான்கு கவிதைகள்

நானும் அவளும் அங்கு
அமர்வதற்காக அது காத்திருந்தது
நிழலின் அமைதி ரகசியத்தைப் பேணியது
எத்தனை ஆண்டுக் காலம் அது நீடிக்கிறது
என்பதை துல்லியமாகச் சொல்ல
அவன் இருக்கும் மட்டும்
மற்றும் இப்பிரதியை முன்னிட்டு
நானும் அவளும்
அவள் வீட்டில் எங்கும் இருந்தோம்

ஹர்ஷனின் உறுதிமொழி

என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும்  வரை,   என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை,  என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து  தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன்.  இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்