இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை

This entry is part 3 of 4 in the series குடாகாயம்

தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.  பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.

கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம்

This entry is part 3 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

“கலையெனத் தோற்றமளிக்காத மெய்யான கலை என்றதைக் கூறலாம். அதன் மறைமைக்கு மேல் எதையுமே ஒருவன் கற்றறியத் தேவையில்லை.” “மறைமை” நமக்கு பரிச்சயமான ஒரு கலாஸ்ஸோ வார்த்தை… டியெபோலோவின் படைப்புகளில் ஒரு வகைமையான ஸ்கெர்ச்சி-ஐ (The Scherzi, ஸ்கெர்ஸோவின் பன்மை, ஜோக் அல்லது சேட்டை என்ற அர்த்தம் கொண்டது) அறிமுகம் செய்து வைக்கும் ஒரு விசிடிங் கார்டை போலக் கையாளப்படுகிறது. ஸ்கெர்ச்சியும் கப்ரிச்சியும் (மனம் போன போக்கில் என்று பொருட்படும் …

“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”

ஆங்கிலம் நம்மீது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினால், மேலை இலக்கியத்தை ஆங்கிலப் படைப்புகளாகவே எதிர்கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் ஆங்கிலப் படைப்புகள் அல்ல; நம்மை நெகிழ்த்திய, நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளே அல்ல, அவர் ஆகிருதிக்குப் பின் மறைவாக நிற்கும் மொழிபெயர்ப்பாளருடையது. இக்கண்டுபிடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவை மூலவடிவங்கள் அல்ல என்ற பிரக்ஞையுடன் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

பிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்

மரபையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் புள்ளிகளையும் செயல்முறையையும் கண்டறிந்து விளக்கிய பாதல் சர்க்கார் தனது செயல்பாட்டுத் தளங்களிலும் பயிற்சி முறைகளிலும் அதனைச் சோதனைசெய்து காட்டியதோடு, நாடகப்பனுவலாக்கத்திலும் செயல்படுத்திக் காட்டியவர். அதன் ஆகச் சிறந்த பனுவலாக இருப்பது ஏவம் இந்திரஜித்.

பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது

தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.

சாவித்ரி- ஓர் இசை

ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.

அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!

எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும்  உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது  என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய மொழிகள், பெற்ற விருதுகளின் பட்டியல் போன்றவற்றை பேச வேண்டாம் என்று தோன்றுகிறது. எஸ்பிபி “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!”

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

இசைபட வாழ்வோம்- 2

This entry is part 2 of 2 in the series இசைபட வாழ்வோம்

“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”

நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை

ஜுனைதா பேகத்தின் குடும்பத்தில் அவருக்கு முன்பும் பின்பும் பல அறிஞர்களும், தமிழ் மொழி வித்தகர்களும் இருந்திருக்கின்றனர். இருக்கிறார்கள். ”என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்” என்று ஒரு முகவுரையில் உறுதியாகக் கூறும் ஜுனைதா பேகத்தின் கட்டுரைகளில் அவர் இஸ்லாமும் பெண்களும் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சொத்துரிமை, விவாக ரத்து உரிமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்கள் சினிமா பார்க்கலாமா என்ற கேள்வி எழும்போது, அராபிய மன்னர் இப்னுசௌத் கூறியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ”குர் ஆனும் ஹதீதுகளும் …

ஆனியெஸ் வர்தா

திரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.

இசை வேளாளர்கள்

அரசு நூலகங்களில் இருந்து எதிர்பாராத வகையில் சில பொக்கிஷங்கள் கிடைப்பதுண்டு. அந்த வகையில் சில காலம் முன்பு எனக்குக் கிடைத்தது இசை அறிஞர் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம் எழுதிய  “மங்கல இசை மன்னர்கள்”. 19 ஆம் நூற்றாண்டின்பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைப் பற்றிய “இசை வேளாளர்கள்”

‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து

கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.

இயற்கை என்னும் நிலையாமை

இயற்கையில் இருந்து கலைப் படைப்பை உருவாக்குவது ஆண்டி கோல்ட்ஸ்வொர்தி (Andy Goldsworthy)க்கு உவப்பானது. காலப் போக்கில் அந்த படைப்பு உருமாறுகிறது; சிதைகிறது. அந்தத் தோற்ற மாற்றங்கள் ஒளிப்படங்களில் கண்காட்சியாகின்றன. அவற்றை இங்கே காணலாம். “என்னுடைய ஆக்கங்கள் கலையைக் குறித்து அல்ல; அவை வாழ்க்கையைக் குறித்தவை. நம் வாழ்வின் பெரும்பாலான “இயற்கை என்னும் நிலையாமை”

இடைத்தரகர் குடும்பம்

சின்ன பொம்மைகளை வீட்டில் கொலு வைப்போம். பாரதி கெர் (Bharti Kher) பொது இடத்தில் பதினாறடிக்கு சிலை எழுப்பி கண்காட்சியில் வைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ரீஜண்ட் பூங்காவில் இந்த வடிவம் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் பிறந்து பாதி வாழ்க்கையை கழித்திருந்தாலும் லண்டனில் இப்போதைய பாதி இருப்பதை இது குறிக்கலாம் என்கிறார். “இடைத்தரகர் குடும்பம்”

அம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்

சமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார். அவரின் ஓவியங்களை இங்கு பார்க்கலாம்.

ப்ரமீதியஸ்கள்

சோவியத் ரஷியாவில் பல்வேறு பொது இடங்களில் பெரிய ஓவியங்களையும் சித்திரவடிவுகளையும் சோசலிஸப் பிரச்சாரத்திற்காக நிறுவினார்கள். ரஷியா சிதறுண்ட பின் அந்த கல்லோவியங்கள் இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவ்வாறு உக்ரெய்ன் நாட்டில் பொது இடங்களில் அமைந்திருக்கும் சிற்பங்களையும் பிரும்மாண்ட கலைப்படைப்புகளையும் தேடி யூஜென் நிகிஃபொரவ் கிளம்புகிறார். இன்னும் பல அரசு “ப்ரமீதியஸ்கள்”

ஓவியம் வரைய – மைக்ரோசாஃப்ட் எக்செல்

73 வயதில் டட்சுவோ ஒரியுச்சி ஓவியம் வரைந்து தன் ஓய்வுக் காலத்தைக் கழிக்க நினைத்தார். கடைக்குச் சென்று தூரிகைகள் வாங்குவதற்கு பதில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் நிரலியைத் திறந்தார். வண்ணங்கள் தீட்டி தன் படைப்பை, அட்டவணைச்செயலி கொண்டு உருவாக்குவதை இங்கே காணலாம்:

புனைதலும் கலைதலும்

தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

குறிப்பிற் குறிப்புணர்வார்

தமிழ் நிலத்தின் வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது? எப்படி அடையாளப்படுத்துவது? நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி : “சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ ….. வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச் (இந்திய) ஒழுங்கமைவு” என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.

இந்தியாவின் முகங்கள்

ஜோஷுவா க்ளக்ஸ்டைன் (Joshua Gluckstein) இந்தியா நெடுக பயணித்திருக்கிறார். சந்தித்தவர்களில் சிலரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். கோட்டோவியமாக இந்தியர்களின் முகங்களை அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு தெரியுமாறு பதிந்திருக்கிறார்.

இசை நாடகம் நடக்கும் முன்னே

நியு யார்க் நகரத்தில் இருக்கும் மெட் ஆபரா (Metropolitan Opera House) எவ்வாறு தன்னை தயார் படுத்திக் கொள்கிறது? ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் என்ன நடக்கிறது? யாரெல்லாம் என்ன வேலையை எப்பொழுது செய்கிறார்கள்? இசை நாடகம் துவங்குவதற்கு முன் பின்னணியில் நடக்கும் தயாரிப்புகள் குறித்த வீடியோவை இங்கு பார்க்கலாம்:

அமெரிக்க நூலகங்கள்: அன்றும் இன்றும்

அமெரிக்காவின் பல்வேறு நூலகங்களை தாமஸ் ஆர் ஷிஃப் (Thomas R Schiff) என்பவர் படம் பிடிக்கிறார். இது அகல் பரப்புத் தொடர் காட்சியாக விரிகிறது. அந்தக் கால நிறுவனங்கள் முதல் தற்கால கட்டிடங்கள் வரை நம் கண் முன்னே தி கார்டியன் நாளிதழில் பரந்ததோற்றம் காண்கிறது.

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண் சிலை

“அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்த விதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்ளது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன…

பல்லவர்களின் பெரிய கோவில்

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்ற மதுமிதா கோபாலன் தன்னுடைய படங்களையும் அனுபவத்தையும் ஆலய வடிவமைப்பையும் இங்கே பகிர்கிறார்.

மரமும் இசையும்

மரக்கட்டையின் ஒரு பகுதியை டிரௌபெக் (Traubeck) எடுத்துக் கொள்கிறார். அந்த மரத்துண்டின் பல்வேறு வண்ண மாறுபாடுகளையும் அடர்த்தி மாற்றங்களையும் ஒளிச்சிதறல்களாக மாற்றிக் கொள்கிறார். அடர் பழுப்புக்கு ஒரு தரவு. சாம்பல் நிறத்திற்கு இன்னொரு தரவு. வெளியில் காணப்படும் மெல்லிய பட்டைக்கு ஒரு ஒலித்துண்டு. நடுவே கல்லாகிக் கிடக்கும் வடப்பகுதிக்கு “மரமும் இசையும்”

இந்திய கலை திருவிழா – 2016

டெல்லியில் நிறைய ஓவியக் கண்காட்சிகளும் கலைவிழாக்களும் நடக்கின்றன. வரைபட சந்தைக்கும் ஓவிய விழாவிற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று சற்றே வியந்துவிட்டு, ஜனவரி 14 முதல் 17 வரை நடந்த கொண்டாட்டத்தில் பிடித்த படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். கீழே ராக்கீ ராய் ஓவியம்.

வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை

வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் “வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை”

வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்

This entry is part 34 of 72 in the series நூறு நூல்கள்

சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்

வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்

இக்காலங்களில் இவர் நம் வாழ்வின் அநேக முகங்களை – இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், சங்கீதம், ஓவியம் ஆகிய அனைத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேம்போக்கான மாறுதல்களுக்கு முன் வைத்த எளிய திருத்தல் யோசனைகள் அல்ல இவை. நம் வாழ்வின் அடித்தளம் பற்றிய நம் எண்ணங்கள் இவரால் புரட்டித் தள்ளப்பட்டிருக்கின்றன. எவற்றைச் செல்வங்கள் என மதித்து, உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு கலாச்சார வாழ்வின் அவகாசிகள் நாம் என புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தோமோ அவற்றைப் போலிக் கனவென, வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து தாட்சண்யமின்றித் தாக்கியவர் இவர். சரி, இக்கருத்துகளை நம் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது? கனவுகள், மாய்மாலங்கள், போலி லட்சியங்கள், போலி மதிப்பீடுகள், பழமைக் கிரீடங்கள், தனி இனம் என்ற மார்தட்டல்கள் எல்லாம் தாக்கப்பட்டபோது, தமிழின் பல்வேறு துறையைச் சார்ந்த காவல் நாயகர்கள்…

காகித விமான சேமிப்பாளர்

ஹாரி எவரெட் ஸ்மித் ஒரு ஓவியர்; திரைப்படகர்த்தா; வித்தியாசமானப் பொருள்களை சேமிப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை மானுடவியலாளராக உணர்ந்தவர். ஈஸ்டர் பண்டிகையின் போது ஒளித்து வைக்கப்படும் முட்டைகளில் துவங்கி பல்வேறு விஷயங்களை கர்மசிரத்தையாகத் தொகுத்தவர். நியு யார்க்கரில் அவர் சேமித்த காகித விமானங்களைப் பார்க்கலாம். விண்ணைத்தொடும் நியு யார்க்கின் “காகித விமான சேமிப்பாளர்”

கண்களும் கவி பாடுதே

நியு யார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் படைப்பாக கலைஞர்களையும் வித்தியாசமானக் காட்சியாக்கங்களையும் திரையிடுகிறார்கள். கீழே பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் கண் சிமிட்டுகிறது. நீங்கள், அவர்களைப் கண்காணிப்பது போலவே, அந்தக் கண்களும் உங்களை கவனிக்கின்றன. Midnight Moment: "Eyes on “கண்களும் கவி பாடுதே”

ஓவிய வியாபாரியின் கண்காட்சி

மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel). ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் “ஓவிய வியாபாரியின் கண்காட்சி”

சரடு விடுவது

கையில் ஒரு சுத்தியலும் சில ஆணிகளும் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? Zenyk Palagniuk இதை படைத்திருக்கிறார். இருநூறு மணி நேரம் உழைத்து இதை உருவாக்குவதற்கு 24 கி.மீ. நீளத்திற்கான இழைநூல்களும், பதின்மூன்றாயிரம் ஆணிகளும் தேவைப்பட்டிருக்கிறது.

மண்டாலா ஓவியங்கள்

மண்டாலா என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” என்று அர்த்தமாகும். காலச்சக்கரம் என்றும் மண்டாலா ஓவியங்களை அழைக்கிறார்கள். இந்து மதத்திலும் பௌத்தத்திலும் இவை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்ளையும் பின்பற்றி பத்து நாள்களில் இவை முழுமையடைகின்றன. காலை முதல் மாலை வரை ஏழு புத்த “மண்டாலா ஓவியங்கள்”

மணல் கோட்டைகள்

ஏழு வயதிலே கடற்கரையில் மணலிலே வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறார் கால்வின் செபர்ட் (Calvin Seibert). விளையாட்டாக ஆரம்பித்த பொழுதுபோக்கு இப்போது நவீனத்துவ பிரதிகளாக, ஆஸ்கார் அரங்குகளாக, மீன்பிடி கிராமங்களாக மணல் சிற்பங்களாக மாறி இருக்கிறது. கால்வினுடன் ஆன பேட்டியும் அவரின் மணல் ஆக்கங்களையும் இங்கே பார்க்கலாம்.

மரக்கலமும் நதியும்

நியு யார்க் நகரத்தில் இந்திய வம்சாவழி ஓவியர்களின் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அது குறித்த பதிவை நியுயார்க் டைம்ஸில் பார்க்கலாம். கீழே இருக்கும் படைப்பின் பெயர்: “கலத்தில் இருப்பதும் நதியில் கிடைக்காததும்” (What Does the Vessel Contain That the River Does Not?)

தெருக்கூத்து – பகுதி 4

இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய ஒரு நாடக மரபு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை விழாமல் தாங்கி, அவற்றை ரசிப்பவர்கள்…

தெருக்கூத்து – பகுதி 3

அன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் …

தெருக்கூத்து – பகுதி 2

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கதகளியும் யக்ஷகானாவும் அவற்றின் தெய்யம் மற்றும் பூதம் கலைகளின் தொடக்கங்களை விட்டு விலகி தம்மை செவ்வியல் நாடகக்கலைகளாய் நாகரிகப்படுத்திக்கொண்டன. இந்த பயணத்தில் அவை கடந்தது பாதி தூரம் தான் . இன்னமும் அவற்றில் நாட்டார் கலை அம்சங்கள் சில ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். .அவை தம் முந்தைய நாட்டார் வடிவங்களின் ஆவியுலகு சார்ந்த விஷயங்களின் தொப்புள் கொடியை துண்டித்துக்கொண்டவிட்டன.. ஆனால் தெருக்கூத்து அப்படிச் செய்யவில்லை. அது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு தன் பரப்பை விஸ்தரித்து அதன்மேல் கட்டுமானத்தை எழுப்பியது இந்த விரிவாக்கமே தெருக்கூத்தின் சிறப்பு அம்சம், இதுவே மற்ற கலை வடிவங்களிலிருந்து அதை வேறுபடுத்துவதோடு அதை ஒரு தனி உலகமாய், தனித்துவம் வாய்ந்ததாய் ஆக்குகிறது.

தெருக்கூத்து – பகுதி 1

தொடக்கத்திலேயே சொல்லவேண்டியது, தெருக்கூத்து ஒன்றும் பழமையின் எஞ்சியுள்ள சின்னமாய் நாட்டார்கலை ஆர்வலர்கள் கருணையுடன் புத்துயிரளிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதன் பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமேயான கிராமத்து மக்களாகவே இருப்பினும், இக்கலைவடிவம் தமிழகத்தின் இதர மக்களால் ஏளனத்துடன் பார்க்கப்படினும், அது ஒரு வீரியமும் வாழ்வும் உடைய கொண்டாட்டமான வெளிப்பாடு. ஓர் இனத்து மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட, வேட்டைக்கார, உணவு சேகரிப்பு பழங்குடி நாட்களிலிருந்து, அவ்வினத்தின் பரிணாமத்தின் ஒவ்வொரு படிநிலையினுள்ளும் ஒன்றினுள் ஒன்றாய் புகுந்து ஊடுருவி, தன் அடர்ந்த பரப்பினுள் உபகண்டத்தின் பிற பகுதிகளினின்று காற்றுவாக்கில் வந்த பாதிப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கும் ஒரு ஆவணம், ஒரு பல்படிவச் சுவடி (palimpsest)

யாமினி கிருஷ்ணமூர்த்தி

யாமினி நடனம் ஆடுவதற்கென்றே பிறந்தவர். அது அவருடைய (passion) பேரார்வமாகவும் இருந்துள்ளது. அந்தப் பேரார்வம் அவருடைய அர்ப்பணிப்பைக் கொண்டுவந்துள்ளது. வாழ்வில் மற்ற அனைத்தையும் முக்கியமற்றதாக பின்னுக்குத் தள்ளி, தியாகம் செய்து, அதைத் தியாகம் என்றே கருதாத அளவிலான விழைவு அது. இந்த விழைவே அவரை நாட்டியத்தின் உருவாய் வடித்துள்ளது. இந்திய மரபின் சிறந்த வகைப்பட்ட ஆன்மீகத் தாபம் இது: யாகத்தீயில் நடனமாடும் பிழம்புகளுக்குத் தன்னை ஆஹுதியாய் அர்ப்பணிப்பது. இது பேரின்பமான ஒன்று.

யாமினி – பகுதி 8

அவரால் சமயத்துக்கேற்றபடி தன் நடன நிகழ்ச்சிக்கான  விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. மகரசங்கராந்தி போன்ற ஒரு பண்டிகைத் தருணம் என்றால் அவருடைய பாடாந்திரத்தில் சூரிய பகவானை வழிபடும் வகையில் ஒரு நடனமும், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் முத்துஸ்வாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டு கோள்களைப் புகழ்ந்து பாடும் ’நவரத்தினக் கிருதி” களும் இருக்கும். சந்திரனில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கால் பதித்த பின், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சியில் சந்திரனைப் பற்றிய ஒரு கிருதி யாமினிக்கு கைகொடுத்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மாநாட்டை ஒட்டிய நிகழ்ச்சி எனில்…

யாமினி – பகுதி 7

சில சமயங்களில் அவருள் இருக்கும் சிறுமி (எப்பொழுதும் அவருள் வளர மறுத்த ஒரு குறும்புக்காரப் பெண் உண்டு) தனது வயதுக்கு மீறிய அறிவாற்றலைக் காட்டத் துடிப்பது போல இந்தத் திறமை கடவுள், குரு மற்றும் பார்வையாளர்களை வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்ட அலாரிப்பின் போதுகூட செல்லமாய், குறும்பாய் தன் தலையைத் தூக்கும். அந்தக் குழந்தை, தன் திறமையைக் காட்டி பெருமை அடித்துக்கொள்ளவில்லை, அவள் குழந்தையாய்த் தான் இருக்கிறாள், அவ்வளவே. பார்வையாளர்களின் மனநிலையைப் பொறுத்து இது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கலாம் அல்லது எரிச்சலூட்டலாம்.

யாமினி க்ருஷ்ணமூர்த்தி – பகுதி 6

யாமினியின் மன அமைப்பில், ஒரு பரிமாணம், காவ்யார்த்த, மேல் நிலைப்பட்ட, கவித்வமும், பாலுணர்வு பாவமும் கொண்டது. இப்பரிமாணம், அவரது துரித கதி நடன வெளிப்பாட்டிலும் தோய்ந்திருக்கும். அவரது துரித நடனங்களில் வெளிப்படுவது, ஏதும் ஆவேசமோ, வெறியோ இல்லை, மாறாக, ஒரு கவித்வம். இக்கவித்வத்தை, இந்திய பரதம், ஒடிஸ்ஸி போன்ற புராதன கலைவடிவங்களில் பரிச்சயமும் அறிவும் கொண்டவர்கள் மட்டுமல்ல, இவற்றிற்கு முற்றிலும் அன்னியப்பட்ட, புதிதாகக் காண வரும், ஆனால் தேர்ந்த கலைஉணர்வு கொண்டவர்களும் உணரமுடிந்திருந்ததால் தான்…

திம்புவின் சோர்டன்கள்

சில ஓவியங்களில் அதை வரைந்தவர் தன் கற்பனை வளம் முழுவதையும் கொட்டி வரைந்திருப்பார். சொர்க்கம் போன்று ஒரு இடத்தைக் கற்பனை செய்தால் அங்கே காவல்காரர்கள் உட்பட அனைத்து விவரங்களும் அந்த வேலைபாட்டில் இருக்கும். பூடான் அரசரின் மாளிகையில் கழுகு முகத்துடன் கூடிய ஒரு கடவுள் தோற்றம் இடம் பெற்றிருக்கும். ராவண் என்றொரு உருவமும் உண்டு. ஆனால் இது ராமாயணத்தின் வில்லன் ராவணன் அல்ல.

யாமினி கிருஷ்ணமூர்த்தி – பகுதி ஐந்து

நடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு

கம்போடிய அங்கோர் வாட்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம்

1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது.

யாமினி – பகுதி 3

டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது.

ஸ்டெல்லா க்ராம்ரிஷ்: ஒரு கர்மவீரரின் கலைப் பயணம்

கால அனுமானங்களின் கச்சிதமின்மையைத் தாண்டிச் செல்லும் சீரிய உள்ளுணர்வும், சித்தாந்தங்களின் புரிதலுமே ஸ்டெல்லாவின் அக்காலத்து கலை-வரலாற்று நூல்களை இன்றளவும் இன்றியமையாதவையாக்குகின்றன. ப்ருஹத் சம்ஹிதை, மானசோல்லாசம், மயமதம் போன்ற பல்வேறு காலகட்டத்தின் வாஸ்து நூல்களையும் ஆராய்ந்து, சதபத-ப்ராஹ்மணம் போன்ற வைதீக ஏடுகளிலிருந்து கோயில் ஸ்தாபனத்தின் சடங்கு வழிமுறைகளையும் அடையாளப் படுத்தி அவர் தொகுத்த “இந்து கோயில்” நூல்களுக்கு ஆனந்த குமாரசுவாமி நேரடியான ஆய்வுரை…