வரிசையில் ஒரு சிநேகம்

தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி.  இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.

குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்

தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை.

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

ஏ பெண்ணே – அத்தியாயம் 3

This entry is part 3 of 10 in the series ஏ பெண்ணே

நீ சொல்வது சரிதான். ஆனால், நான் என்ன செய்யட்டும், நீயே சொல்லேன். கீழே விழுந்தாகிவிட்டது வியாதி வெக்கைகள் எல்லாம் எதிரிகள் தானே! ஐயா அம்மா என்று முனகுவதை யோ அல்லது அரற்றுவதையோ தவிர, இப்போது வேறு என்ன செய்துவிட முடியும்? காயப்பட்டுக் கிடக்கிறது இந்த உடல். இப்போது கட்டிலைச் சுற்றி கலகலவென வளையோசையோ அல்லது பிறந்த குழந்தையின் அழுகைச்சத்தமோவா கேட்கும்.. இங்கு டாக்டர்கள் செலவழித்த நேரத்தில், ஒரு குழந்தை பிறந்து, அது எழுந்தே நின்று விட்டிருக்கக்கூடும். வெறும் எண்ணங்களில் குழந்தையை உருவாக்க முடியாது பெண்ணே. குழந்தையை உருவாக்க உழைப்பு தேவை. தாயின் ரத்தமும் சதையும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.

தந்திரக் கை – 1

This entry is part 1 of 3 in the series தந்திரக் கை

சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின.

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள்

நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
அல்லது, தொடங்கவே தொடங்காதீர்கள்.

ஓசிப் மண்டல்ஷ்டாம் ரஷ்ய மொழி கவிதைகள்

ஓசிப் மண்டல்ஷ்டாம் (1891-1938) ரஷ்ய இலக்கியத்தின் இரண்டாம் பொற்காலம் எனரு கருதப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த ரஷ்ய கவிஞர்களில் முக்கியமானவர். அன்னா அக்மடோவா, மரீனா ஸ்வெத்தாயேவா, போரிஸ் பாஸ்டர்நாக் என்ற அந்தக் காலக்கட்டத்தின் முதல்தரக் கவிஞர்களில் ஒருவராக எண்ணப்படுகிறவர். ரஷ்ய மொழிக் கவிதைகளில் பண்டைய கிரேக்க கவிதைகளின் சிக்கனமான சொல்லாடல், துல்லியமான வெளிச்சமிக்க படிமங்கள் ஆகியவற்றைக் கொண்டுவர முயன்ற அக்மெயிஸ (acmeist) இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியவர்.

ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?

ஒரு கருப்பினப் பெண்ணாக,  வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே,  நீங்கள்,  அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில்,  அவர்  பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி,  “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு  அடையாளங்களுமே,  அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.

மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்

ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது

வைரஸ்

உத்ரன், கைகளை ஆட்டி கத்தினான், “ இந்த ஆள் ஒரு கூலிக்காரன். நேத்துதான் தெலுங்கானாவல இருந்து ஊர் திரும்பியிருக்கான். 18 நாட்கள் தனிமையில் இருந்திருக்கணும். அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருக்கு. ஆனா, இவன் ரயிலிருந்து குதிச்சி தப்பியோடியிருக்கான். வீட்டுக்கு போற அவசரத்துல… வேற எதுக்கு? “ ஏளனமாக உறுமினான்.

ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்

ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.

இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா

ஒரு தொலைபேசி செய்யும் வித்தைகள்- நாடகத்தனமான திருப்பங்கள், அர்த்தங்களின் உள்ளீடு, அழைப்பை ஏற்று பதிலளிக்கும் முன்னரே சாவின் நிழலோ என தகிக்கும் மனம் போன்றவையோ? நிலத்தடித் தகவல் வடம் (நம்ம தொலைபேசி தானுங்க) மர்மத்தின் கூறாகவும், சின்னதும் பெரியதுமான நிகழ்வுகளின் ஊற்றாகவும் இருக்கிறது. அது, வெளியுலகின் சத்தங்களை அமானுஷ்யமாக அறைக்குள் கடத்தும் கருவி. புனைவுலகில், அது கொண்டாடப்பட்டும், மெதுவாக மறைந்தும்கொண்டிருக்கும் கருவி.

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்

“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.

ஒரு தூரிகை

ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமேயர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது! சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.

கேதார்நாத் சிங் கவிதைகள்

தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”

வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி

க்ரெய்க் எப்லின் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸின் ( Jorge Luis Borge ) நெடுநாள் நீடித்திருக்கப் போகும் புனைகதைகளில் ஒன்று “டெல் ரிஹோர் என் லா சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) என்ற ஒரே ஒரு பத்தி நீளமே உள்ள கதை. மூலாதாரம் உறுதியாகாத கால வரலாற்றின் ஒரு துண்டாகக் “வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி”

வெளி மூச்சு

This entry is part 1 of 2 in the series வெளி மூச்சு

சாவு நேரும் வகையான விபத்துகளில், மண்டை ஓடு உடைந்தால், மூளை தங்கத்தால் ஆன மேகம் போல சீறிப் பாய்கிறது என்பதும், சின்னாபின்னமான சரடுகளையும், தகட்டையும் தவிர பயனுள்ள எதுவும் கிட்டுவதில்லை என்பதும் சராசரி நிகழ்வு. பல பத்தாண்டுகளாக, ஒரு நபரின் அனைத்து அனுபவங்களும் தங்கத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன என்ற கருத்துதான் நினைவு சக்தியைப் பற்றிய கோட்பாடாக இருந்தது; விபத்துகளுக்குப் பிறகு காணப்பட்ட துகள்களுக்கு, வெடிப்பால் கிழிக்கப்பட்ட இந்தத் தகடுகளே காரணம். உடற்கூறியலாளர்கள் இந்தத் தங்கத் தகடுகளின் சிறு துகள்களைச் சேகரிப்பார்கள்- அவை அத்தனை மெலிதாக இருப்பதால் ஒளி அவற்றூடே கடந்து போகையில் பச்சையாகத் தெரியும்- பிறகு பல வருடங்கள் செலவழித்து அவற்றைத் திரும்ப இணைக்க முயல்வார்கள்,

பறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள்

அது வெல்ஷ் இளவரசனின் ஆவியோ
இட்வால் ஏரியின் அருகில்
தன் சகோதரனால் கொல்லப்பட்ட பிறகு
அந்த ஏரியின் மீது
எந்த பறவையும்
இதுவரை பறக்கவில்லை

எனக்கு நினைவுள்ளது

அவனுக்கு தாங்கள் எங்கு
தலைப்பட்டிருக்கிறோம் என்று
ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
குழுத் தலைவன் கட்டுக்குள் வைத்திருந்தான்

வெற்றிட நிலைகள்

பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.

தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்

ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
 “அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
 “ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
 “அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
 “நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”

மொழியின் இயல்பு

மனிதர் இடையீடு இல்லாமல்  கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக்  கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான்.  ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு,  எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது  தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.

பதனிடப்படாத தோல்

அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.

விடுப்பு

அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரை கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.
புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன. ‘ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.’ ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.