கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.
ஆசிரியர்: சந்திரா நல்லையா
மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’!
இன்றைய 19ம், 20 ம் நூற்றாண்டு சமூகவியலாளர்கள் மிசோஜினி குறித்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. இவ்வாறு காலகட்டங்களை அவதானிக்கும்போது பெண் வெறுப்பு(Misogyny) என்ற செயற்பாடு எவ்வளவு ஆழமாக புரையோடிப்போய் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்திய தமிழ் புராண, இலக்கியங்களில் கூட பெண்வெறுப்பு கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய ஆய்வாளர் செல்வி திருச்சந்திரன் தமது நூலில் நாலடியாரில் வரும் பாடல் ஒன்றை குறிப்பிடுகிறார்.
மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள்
திருமணத்தில் மூலமாக நல்லதொரு கணவனைப் பெற்று அவனை மகிழ்விப்பதும், அவனுக்கான வாரிசை பெற்றுக்கொடுப்பதுமே பெண்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு உகந்த விதத்தில் அழகானவர்களாக, அடக்கமானவர்களாக, கீழ்ப்படிவானவர்களாக, கவரச்சியானவர்களாக உருவாகும் விதத்தில் பெண்களை சிறுவயதில் இருந்தே பயிற்றுவிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.18 ம் நூற்றாண்டின் சட்டத்தின் பார்வையில் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, சுதந்திரமாக செயற்படும் உரிமை என எல்லா வகையான உரிமைகளும் மறுக்கப்பட்டதுடன், அவர்கள் கணவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவராகவும் இருக்கும் நிலையே காணப்பட்டது.