வாசிப்பின் நிலப்பரப்பு: ஜாய்ஸின் டப்ளின்

கதைகள் சாதாரண வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றன, நிச்சயமாக அவை அந்தச் சாதாரணத்துவதையும் அது ஏற்படுத்தும் விரக்திகளின் பட்டியல்கள் மட்டுமே அல்ல. ஜாய்ஸ் குறிப்பிட்ட “scruplously mean” மொழி , கட்டுப்பாடு, துல்லியம், நடையின் சிக்கனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது, அழகியலும் தார்மீகத் துல்லியமும் அவற்றில் பொதிந்திருந்தன. ‘எபிஃபனீஸ்’ (epiphanies) என்ற விஷயத்தைப் பேசிவிட்டு, இந்த உரைநடை பாணிக்கு வருகிறேன். இது ‘டப்ளினர்ஸ் -இன் புகழ்பெற்ற அடையாளமாக மாறிவிட்டது

காண்பதுவே உறுதி கண்டோம்

எனக்கென்ன தோன்றுகிறது என்றால்…ஒருவருடைய நிலை, ஆளுமை நியாயவாதியா, பொய்யரா என்பது அனிச்சையாகத்தான், நிகழும் அந்த கணத்தில்தான் தெரியவரும்…கொஞ்சம் மாற்றிச்சொன்னால்…யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டாலே தங்களுக்கு ஏற்ப, சூழ்நிலைகளை ஆராய்ந்து தக்க எதிர்வினை செய்யலாம் என்றாலே ஒரு மாதிரி நீர்த்து போய்விடுகிறதோ என்று படுகிறது…”

சிக்கலான வன்முறை செறிந்த விட்டேத்தியான உலகமும், நக்கலான அபத்த எதிர்வினையும்

‘ஈருருவில் ஒளிரும் ஒற்றைக் கலைச்சுடர்’ என வர்ணிக்கப்படும் இந்த சகோதரர்கள், கூட்டாக தங்கள் படங்களை எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், தயாரிக்கிறார்கள், மேலும் படத்தொகுப்பும் செய்கிறார்கள்; பிந்தையப் பணியை பொதுவாக ரோட்ரிக் ஜெயின்ஸ் (Roderick Jaynes) என்ற புனைப்பெயரில் மேற்கொள்கிறார்கள். ஒரு கருவின் முதல் பொறி முதல் இறுதி வடிவம் வரை நீளும் இத்தகைய விரிவான தனித்துவமிக்க செயற்பாடு, ஒரு வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் மட்டுமல்ல, அவர்களின் நிலையான கலைத்துவ முத்திரையை இயக்கும் மற்றும் வரையறுக்கும் ஒரு முதன்மை நெறிமுறையாகும். இந்த ஒருங்கிணைந்த செயல்முறை கட்டுப்பாடு, அவர்களின் தனித்துவமான திரைமொழியை அவர்களின் தனித்துவமான காட்சி மற்றும் தொனிநயத்துடன் தடையின்றி சங்கமிக்க அனுமதிக்கிறது

இரவு

உள்ளே
எங்கேயோ
இந்தப் பிரபஞ்சத்துக்குள்
ஒரு பேனா மூடி அளவேயான
குப்பி உள்ளது.
உள்ளதா?
கடல் கொண்டும் அதை
நிரப்ப முடிவதில்லை.

ஒலிமுகவாசல்

அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.

உணவாகும் எச்சில்!

அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன.  சின்ன உழவாரப்பறவைகள்  (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு  உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின.  மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை  அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின்  புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.

துரதிருஷ்டம்

“எப்படி? எப்படி முடிப்பீர்கள்? 2120ல் நடந்த கொலை, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.  பகலில் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சிசிடிவிக்கள். அதை வைத்து வீட்டிற்கு யாரும் வரவில்லை, யாரும் வீட்டிலிருந்தும் வெளியே செல்லவும் இல்லை என்பது தெளிவு. ஆனால், ஜெய் கிஷோர் கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் கத்தியால் நடுமார்பில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கத்தில் கைரேகைகள் ஏதும் இல்லை.

நியூயார்க் ஓணம்

ஒன்றும் இணங்காமலிருந்தாலும் இடையில்
சமரசம் செய்பவன் கொழுத்திடுவான்
சொந்தமாய் ஒருவரைக் கொண்டு சேர்த்தே
ஒருவன் இரண்டாமவனைப் புறந் தள்ளுவான்

தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்

ப்ரபஞ்சம் முழுதையும் படைத்த கர்த்தர், பரலோக ராஜ்ஜியத்தைத் தான் ஆண்டுகொள்வதாகக் கூறி, பூமியை இவர்கள் ஆண்டுகொள்ளும் உரிமையை அளித்திருந்தார். இவர்கள் இருவரும் வசிப்பதற்காகவே இந்த ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். சுற்றிலும் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும், செடி கொடிகளும் உண்டாயின. தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்

எழுது சித்திரம்

கண்ணனின் குழலிசையும் அதற்கான விலங்குகளின் எதிர்வினையும் கவிதையில் இரண்டிரண்டு அடிகளில் மிகச்சரியாக வகிர்ந்து அளிக்கப் படுகின்றன. குழலூதும் கண்ணனின் மெய்ப்பாடுகளும், இசை நுகரும் விலங்குகளின், பறவைகளின் உடல் மொழியும் இயல்பாகக் கவிதையில் பதிவு செய்யப் பட்டுள்னை, அளவான விவரணைகளும் அவற்றின் துல்லியமும் அதி கேள்வி அனுபவத்தைக் காட்சி அனுபவமாக மாற்றிக் கொடுத்து விடுகின்றன.

சோற்றுப் பொட்டலம்

பசியையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வியர்க்க, விறுவிறுக்க தங்கள் வகுப்பறைகளுக்குள் வந்தனர். கஞ்சி அல்லது சோறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த அதிர்ஷ்டவசமான குழந்தைகள், வீட்டில் எதுவும் அன்று சமைக்கவில்லை என்று தெரிந்தே வந்திருந்த அதிர்ஷ்டமற்ற குழந்தைகள் என்று எல்லோரும் உட்கார, பெஞ்சுகள் நிரம்பின. சோற்றுப் பொட்டலங்களச் சாப்பிட்ட குழந்தைகள் திருப்தியாகவும், சாப்பாடு இல்லாத குழந்தைகள் பக்கத்திலுள்ள கிணற்றுத் தண்ணீரில் வயிற்றை நிரப்பிக் கொண்டும், தங்களிடத்தில் உட்கார்ந்து கொண்டனர்.

சின்னச் சின்ன இழைகள் நெய்யும் தத்துவச் சித்திரம்

பொய்யான மீபொருண்மையை (Metaphysics) விடவும் மோசமானது, மீபொருண்மையைப் பற்றிய எச்சரிக்கைகள். எப்போது, ஐம்புலன்களால் மட்டுமே அறிந்ததைத் தாண்டி செல்கிறோமோ, அப்போது அது ஆடம்பரமாகத் தோன்றும் என்பது வெளிப்படைதான். ஆனால், அது மீபொருண்மையின் குற்றமல்ல; அது துறை சார்ந்த ஒரு ஆபத்து; எப்படி மூட நம்பிக்கைகள், மதம் சார்ந்த விபரீதங்களோ, தர்க்கப் பூர்வமாக விவாதிக்கையில், வறட்டுப் பிடிவாதம் வரட்சியைத் தருமோ, (சரியான காரணங்கள் அமையாத நிலையில் அது போடும் ஆவேச வேடம்!) அவ்விதம் தான் மீபொருண்மையிலும் நிகழ்கிறது. நான் ஆடம்பரம் என்று தான் சொன்னேன்- தவறு என்று சொல்லவில்லை.

பைசாசம்

சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.

ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?

ஒரு செல்லுக்கு “நினைவு” என்பது, நம் போன்ற பழைய நினைவுகளை நினைவுகூர்வது அல்ல. அது, முன்னர் நடந்த அனுபவங்களின் அடிப்படை மாற்றங்களால், அடுத்த முறை ஒரு சைகை வரும்போது அதை வேறு விதமாக எதிர்கொள்வது. ஒரு செல், ஊட்டச்சத்து, ஹார்மோன், அருகில் உள்ள செல்களின் சைகைகள் போன்ற வேதியியல் வடிவங்களை ஒவ்வொரு தருணத்திலும் பெறுகிறது. அந்த அனுபவங்கள், செல்களின் உள்ளே உள்ள புரோட்டீன்/டிஎன்ஏ செயல்பாடுகளை மாற்றுகிறது.

றெக்கை – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 18 in the series றெக்கை

“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும்  குழந்தை பெத்துக்கலியா? அவ   தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப்  போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ  பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன்  முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”

கவரப்பட்ட குழந்தை 

ஆடித் திரியும் ஆறு
மேலிருக்கும் மலையிலிருந்து
இறங்கி வரும் பாதையெல்லாம்
குட்டி நட்சத்திரமும் குளிக்க முடியாத
குட்டைகளாய் தேங்கும்.
அங்கு
பெரும் தூக்கத்திலிருக்கும்
மீன்களை பிடித்து
கலக்கமுறும் கனவுகள் உண்டாக
காதில் மந்திரங்கள் ஓதுவோம்.

சம்பந்தம்

நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்பச் செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம்… நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும்…”  அவன் கண்கள் ஒரு நொடி கலங்கி தெளிந்தன. அவன் திரும்பி மாலியை பார்த்தான். அடுத்த நொடி அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. ”சாரி உங்களை குழப்புகின்றேன். நான் என் பர்சனல் மம்போ ஜம்போவை எங்கள் தீவின் விருந்தினரிடம் சொல்லி விட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் பார்த்துப்பேன்

கே. சிவாரெட்டி

பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.   

பை பை ஜெஜு

This entry is part 3 of 5 in the series தென்கொரியப் பயணம்

வீடுகளைச் சுற்றி எரிமலைக் கற்களால் சுவர்களைக் கட்டியிருந்தார்கள். எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. சதுர வடிவில் நான்கைந்து பேர் அமரும் வகையில் மரப்பலகை இருக்கை. அருகில் இருந்த பேக்கரிக்குச் சென்றால் அங்கே தொடரை எடுத்த காட்சிகளைப் படங்களாக மாட்டியிருந்தார். சிறிது நேரம் தொடரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் போன்ற கே-ட்ராமா பைத்தியங்கள் அதிகம் பேர் அந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கூட பல காட்சிகள் எடுத்திருப்பதாகவும் கூறினார். டாஞ்செரின் கேக் அத்தனை சுவையாக இருந்தது.

12. என்றென்றும் நிலைத்திருப்பது  

கார்ல் பாப்பர் எது அறிவியல் என்று வரையறை செய்தவுடன் மற்ற மருத்துவ முறைகள் பொய்ப்பித்தலின் வழியே அறிவியலை விட்டு வெளியே சென்றுவிட்டன. பொதுவாக மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு உவப்பு இல்லை. வேண்டுமென்றால் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஹிப்னிடிசம், ஐசோபதி, ஆண்டிபதி போன்றவற்றை அப்படி கூறலாம். மற்றபடி ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை மாற்று அல்ல. நவீன அறிவியல் கொள்கைக்கு பின் அவை வரையறைக்கு உட்படாமல் போனவை.

வீரனாக மாறிய பேடி

துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான்

மின்மினிகள்

காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’

தொடரும் தேடல்

புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான்.  ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான்.  அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான்.  அருகில் ஒர் சிறுவன்.  ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.

வதனமுறு பெரும் கொள்கை

காலம் தொடர்பான இந்நிகழ்வு பொருட்கள் ஏன் விழுகின்றன என்பதைக் குறித்து சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளிக்கிறது. நியூயார்க்கிலிருந்து ரோம் நகருக்கான விமான பாதை நேரானதாக இல்லாமல் வடக்கு நோக்கி வளைந்து செல்வதை வரைபடத்தில் காணலாம். ஏன்?  பூமி வளைந்துள்ளதால், நேராக செல்வதை விட வடக்குமுகமாக வளைந்து செல்வதே குறைவான தூரமாகும்.  இரு தீர்க்க ரேகைகளுக்கு இடையேயுள்ள தொலைவு வடக்கு நோக்கி செல்கையில் குறையும் – எனவே வடதிசை நோக்கிய பயணப்பாதையே குறைவான தூரம் உடையதாகும்.

வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு

This entry is part 8 of 12 in the series சமூக உணர்ச்சி

அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது. 

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.   

பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்

அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”