வேதமூர்த்தி என்றதும் முதலில் மனத்தில் எழுவது அவர் கருவியில் கிடைத்த சுநாதம். ஸ்ருதி பத்திரிக்கையில் தொடர்ந்து கலைஞர்களைப் பற்றி எழுதிய சங்கரநாராயணன் ஒருமுறை சொன்னார், “பகவான் எதுக்கு ரெண்டு காதைக் கொடுத்திருக்கான் தெரியுமா? ஒரு காதுல காருகுறிச்சி அருணாசலத்தோட நாதத்தை நிரப்பிக்கணும். இன்னொரு காதுல வேதாரண்யம் வேதமூர்த்தியோட நாதத்தை நிரப்பிக்கணும்.”. பொதுவாக நாகஸ்வர கலைஞரின் நாதத்தை, பாடகரின் குரல்வளம் போல, இயற்கையில் அமைந்தது என்று கருதுவதுண்டு.
Category: இதழ்-346
சிறகடிப்பு
கொஞ்சம் தேறிக்கொண்டு வந்த குழந்தை மீண்டும் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கிக்கொண்டு வெடவெடக்க ஆரம்பித்தது. சிஸ்டர் ஒருத்தி அதை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். நானும் தோழியும் சேர்ந்து மூக்காண்டியை சமாதானப்படுத்தி அமர்த்தி விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் எதுவும் அவருக்குள் நுழையவேயில்லை. வரம்பை மீறிய வசைச்சொற்களை முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.
தடுமாற்றத்தின் குரல்
ஒரு கால கட்டத்தின் கதைகளை எழுதத் தொடங்கி, என்றைக்குமான பிரச்சனைகள் சிலவற்றைத் தொட்டுச் செல்வதால் ஆதவன் ஒரு முக்கியமான எழுத்தாளர் ஆகிறார். ஆனாலும், பல சமயங்களில் ஆதவன் சிறு சிறு விஷயங்களிலேயே முட்டி மோதி கொண்டிருப்பதாக படுகிறது. பல நுட்பமான விஷயங்களைத் தொட்டு சென்றவர், ஒரு பெரிய தீர்வை நோக்கி சென்றதாக தெரியவில்லை. ஒருவேளை மனிதனின் வெவ்வேறு பாவனைகளை அப்படியே பதிவு செய்தாலே போதுமானதென்று அவர் நின்று விட்டது போல தெரிகிறது.
நித்தியம் – 2
காத்தின் மூளைக்குள் திடீரென மோட்சார்ட்டின் ரெக்வியம் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சமூட்டும் இசை அவளது நரம்புகளைப் பிடித்து இழுத்தது. இறப்பின் அழைப்பைப் போன்ற அந்தப் பாடல் அவளது இதயத்தை கனமாக்கியது, கல்லறையின் மண்ணை அவள் மீது வீசுவதைப் போல் உணர்ந்தாள். யார் இந்த மனநோய் தந்திரத்தை விளையாடுவது என்பதை அறியாமல் உணர்ந்த காத், அந்த இசையை மறக்க முயன்றாள். ஆனால் அவளது தலையில் ரெக்வியம் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது, அவளது ஆன்மாவை ஒரு கருப்பு துணியால் போர்த்துவதைப் போல்.
திரையும் கவிஞரும்: காலத்தின் திரையில் நிலைத்த கவியுள்ளத்தின் பதிவுகள்
ஒரு முன்னணி தமிழ்க் கவிஞர், தனது படைப்புலகிற்கு இணையாக திரைப்படம் குறித்த ஆழ்ந்த பார்வையையும், நுணுக்கமான நினைவுகளையும் கொண்டிருப்பது கலாப்ரியாவின் காலகட்டத்தில் மிகவும் அரிதானதாகும். கவிதை, ஓவியம் போன்ற கலை வடிவங்களே மேன்மையானவையாகக் கருதப்பட்ட ஒரு சூழலில், வெகுஜனக் கலையாகப் பார்க்கப்பட்ட திரைப்படத்தின் மீது இத்துணை ஆழமான ஈடுபாட்டையும், திறனாய்வுப் பார்வையையும் அவர் கொண்டிருப்பது அவரது பரந்த கலை நோக்குநிலையை சுட்டுகிறது
தெலுங்கு மொழியின் உ.வே.சா.
தனக்குத் தெலுங்கில் புலமை இல்லை என்றும் தான் ஒரு ஆங்கிலேயன் என்றும் பிரவுன் உணர்ந்திருந்தார். அவர் தயாரித்த அகராதியில் செயற்கைச் சொற்களையும் அவற்றின் பொருளையும் விலக்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார். புதிய சொற்களைப் பரப்பும் அதிகாரம் வெளிநாட்டருக்கு இல்லை என்றும், பழக்கத்தில் இருந்த மொழியை மாற்றுவதற்கும் அவற்தைச் சீர் செய்வதற்கும் தன்னால் இயலும் என்று தான் கனவு காணவில்லை என்றும் பிரவுன் தெரிவிக்கிறார்
போட்டியாளர்கள்
எப்படி அவளை அடிபணிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் வயதுடைய பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிடம் பணிந்து விடுவார்கள். இவள் மட்டும்தான் எதிர்ப்புக் காட்டுகிறவளாகத் தெரிகிறாள். அவர்களிடையே குடும்பத் தகராறு இருந்த போதிலும் அவன் வெளிப்படையாக அவளை அவமதித்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் யாரையுமே அவன் அவமதித்ததில்லை.
கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்
இணையை இழந்த பெண் கிரவுஞ்சப் பறவையின் ஓலம் எழுப்பிய சோகம், சுலோகமாய்ப் பரிணமித்ததை ஆதி கவியைப் பற்றிய புனைவு சொல்கிறது. துயரம் வழிந்து விடாமல் கலை உருவம் பெறுகிற போது, துயரமும் காப்பாற்றப் படுகிறது; கவிதையும் காப்பாற்றப்படுகிறது என்று தோன்றுகிறது. பிரக்ஞை பூர்வமாக இல்லாத, இயல்பான சொல் கவனம் “கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்”
ஸாம்பா
புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அந்த வாளியிலிருந்து கொஞ்சம் ஸாம்பாவை எடுத்து காற்றில் மூன்று முறை சுண்டி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் ஸாம்பாவை வாயிலிட்டுச் சுவைத்த பின்னர் ‘’தாஷி டெலெக்’’ ( Tashi delek.) என்று உரக்கச் சொல்லி ஆசியளிப்பார்கள். ’’தாஷி’’ என்றால் நல்ல விஷயங்கள் ’’டெலெக்’’ என்றால் ’’ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ’’என்று பொருள்
அந்தரங்கம் புனிதமானது
என் தொழிலில் அது புனிதமானது. இங்கே பேசப்படும் வார்த்தைகள் இந்த அறையை விட்டு வெளியே போகாது. தப்பித்தவறி விட்னியின் ஒரு காதில் விழுந்தாலும் அவள் அதை இன்னொரு காது வழியாகத் தள்ளிவிடுவாள். நம் உரையாடல் பதிவாகும். ஆனால் அதன் முக்கியமான பகுதிகளை நான் காகிதத்தில் எழுதிக்கொண்டு மொத்தத்தையும் அழித்துவிடுவேன். உன் குழு சாஃப்ட் பால் ஆடுவதை நான் பார்க்க வந்தால், இல்லை ஒரு விருந்தில் நாம் சந்திக்க நேரிட்டால், உன்னைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டேன்.
சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
ஒவ்வொரு மாணவனின் திறமையையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும் பாராட்ட வேண்டும். நம் வகுப்பில் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவர்கள் இருக்கலாம். ஒருவர் கிராமத்து பின்னணி, இன்னொருவர் நகர பின்னணி என்று இருக்கலாம். ஒருவர் வீட்டில் தமிழ் பேசுவார், இன்னொருவர் தெலுங்கு அல்லது இந்தி பேசுவார். இந்த வேறுபாடுகளை பலவீனம் என்று நினைக்காமல், அது ஒவ்வொருவருடைய தனித்துவம் என்று பாவித்து, அவற்றைப் பாராட்ட வேண்டும்.
வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
CRISPR எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த RNA உருவாகும் ஜீனை சில பட்டாம்பூச்சிகளில் நீக்கி பார்த்தனர். அதனால் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது: பட்டாம்பூச்சிகளின் கருப்பு நிறங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன; கருப்பு புள்ளிகள் இருந்த இடங்களில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்கள் மட்டும் காணப்பட்டன. இதன் மூலம், இந்த RNA இல்லாமல் பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாகாது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது
ஆடும் சுருண்ட கேசக்குழல்கள்!
முனிவர் இராமனின் நிலையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்தது அந்தப் பரப்பிரம்மத்திற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இராமனுக்கும் கூடத் தெரியுமோ என்னவோ! ஆக, அப்படியொரு நிலையைத் தனது மனக்கண்ணில் காண்கிறார் தியாகராஜர். ஏனென்றால் அவர் தனது ஒவ்வொரு சுவாசத்திலும் இராமனையே சுவாசிப்பவர். காண்பதெல்லாம் இராமன். அவனுடைய சரித்திரத்தின் ஒவ்வொரு நொடியும் நிகழ்வும் இவருடைய அதீதமான கற்பனையின் உச்சம்தான்.
9. ஒருங்கிணைப்பின் வழியே
அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்
‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
சாகசம் என்று ஏன் கூறுகிறேன் என்றால், ஆணாதிக்க சமுதாய அமைப்பில் பெண்களின் வளர்ச்சிக்கும் சாதித்த முன்னேற்றத்திற்கும் அங்கீகாரம் குறைவு என்றே கூற வேண்டும். சென்ற நூற்றாண்டில் வந்த சிறுகதைத் தொகுப்புகள், சாஹித்திய அகாடமி, தெலுகு பல்கலைக் கழகம், கதா சாகர், நல்ல கதைகள், சிறுகதைச் சிலம்புகள் (மஞ்ஜீரம்), போன்ற தொகுப்புகளில் பத்து சதவிகிதம் கூட பெண் எழுத்தாளர்களின் கதைகள் இல்லை தொண்ணூறு சதவிதம் கதைகள் நாம் மீண்டும் மீண்டும் படித்த ஆண் எழுத்தாளர்களுடையதே.
பகைவனுக்கும் அருள்வாய்!
பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 12
விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் பொழுது, மிகவும் அதிக நேரம், ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும். இணையத்தில், பல அரை வேக்காடு விஞ்ஞானம் கொட்டிக் கிடக்கிறது. இவற்றை நீக்குவது மிகப் பெரிய சவால். இதிலிருந்து தப்ப செயற்கை நுண்ணறிவு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆனால், அடுத்த படியாக, மிகவும் டெக்னிகலான விஷயங்களை, எளிமைப் படுத்த வேண்டும்
நியூயார்க் நகரில் அரசியல் பரிணாமமா?
மம்தானியின் திட்டமோ செல்வந்தர்கள், பெரும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பது. நியூயார்க் நகரம் தனியாக வரிகளை உயர்த்த முடியாது. மாநில சட்டமன்ற ஒப்புதல் தேவை. இதற்குப் பணக்காரர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். செல்வந்தர்களின் தயவில் ஆட்சி நடக்கும் அமெரிக்காவில் இது சாத்தியமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!
புரட்சியின் தொடக்கம்
நியூட்டனுடையதும் மாக்ஸ்வெலுடையதுமான கொள்கைகள் ஓன்றுடன் ஒன்று மிக மிக நுட்பமாக முரண்படுவது போல தோன்றும். மாக்ஸ்வெலின் சமன்பாடு திசைவேகம் (velocity ) – குறிப்பாக ஒளியின் திசைவேகத்தினை கணிக்கிறது. நியூட்டனுடைய இயக்கவியலோ அடிப்படை திசைவேகம் என்னும் கோட்பாட்டிற்கே இயைந்து போகாதது. அதன் சமன்பாட்டில் திசைவேகமல்ல, வேக முடுக்கமே (Acceleration) முக்கியமானது. நியூட்டனின் இயற்பியலில், திசைவேகம் என்பது இன்னொன்றைப் பொறுத்த ஒன்றின் திசைவேகம் மட்டுமே
சமிக்கை
அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய் திரைப்படம் போல் கண் முன்னே விரியும்.
துவங்கிய பயணமும் வந்த பரிசும்
அரசன் இந்த குடையின் வரவினால் தன் பிரயாணத்தின் ஆரம்பமே சோபனம்- நிறைவான பயன் தருவதாக அமைந்து விட்டது என்று மனம் மகிழ்ந்தான். ஹம்சவேகனிடம் பிரியமாக பேசினான். ‘ பத்ர! பரமேஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எல்லா ரத்தினங்களையும், இந்த பெருமை மிக்க குடையையும், குமாரன் அனுப்பியதில் வியப்பில்லை. அவனே பாற்கடலில் நிலவு தோன்றியது போல உயர்ந்த ராஜ குலத்தில் பிறந்தவன். அந்த குலத்தில் வந்தவர்களின் அன்பளிப்பு அவர்களுக்கு கை வந்த கலை.
செல்வசங்கரன் கவிதைகள்
நீரைக் கையால்
அள்ளும் போது
நீர் என்ன செய்கிறது
ஏற ஒத்துழைத்தது
ஏறியதை இழுத்தது
ஏறியதே இறங்கியது
எல்லாவற்றையும் செய்தது
கடிகை
குவிகம் இதழின் ஆகஸ்ட் மாத சிறப்பிதழுக்காக, நீங்கள் வாசித்த மிகச் சிறந்த தமிழ்ப்புத்தகம் (புனைவு அல்லது புனைவிலி) குறித்து 300 வார்த்தைகளில் ஒரு சுவாரஸ்யமான, கருத்துமிக்க விமர்சனம் எழுதுமாறு அழைக்கப்படுகிறீர்கள்.
