- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
- யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
- நீர்ப்பறவைகளின் தியானம்
- ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
- மாறாத புன்னகையும் மனவிரிவும்
- கதைகளை ரசிப்பது எப்படி?
- மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்
- கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்
- முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்
- கனவு மழை
- அயல் சுவை
- புத்தக அறிவிப்பு – மாயக் குரல்
- கே.ஜே அசோக்குமாரின் ‘ரமணி குளம்’
- சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்
- மயிலன் சின்னப்பன்
- உயரும் : சுரேஷ் பிரதீப்
- பேரன்பை அருளும் துக்கம்
- மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்
- சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து
- மோட்சமெனும் தப்பிச்செல்லல்
- மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்
- மானஸா- லஷ்மி பாலகிருஷ்ணன்
- பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது
- மனதில் புதைந்த காயம்பட்ட மிருகம் !
- உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை
- இரு மதிப்புரைகள்
- அனைத்துக்கும் சாட்சியாக நாம்
- புதுவெளிச்சம்

கதைகள் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே உண்டு. கதைகள் சொல்லப்படுகின்றது, பின்னர் சொல்லப்பட்ட கதைகள் எழுதப்படுகின்றது. கதைகளில் பல விதம். சில கதைகள் நடந்ததை சொல்கின்றது, சில கதைகள் கற்பனையாக ஓன்றினை ஊகித்து சொல்கின்றது. சில கதைகள் கற்பனையையும், நடந்ததையும் இணைத்து சொல்கின்றது.
கதையை சொல்பவர் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றார். சொல்லும் த்வனி முக்கிய இடம் கொள்ளும். உதாரணத்துக்கு சொல்பவர் தன்னை வெளியில் இழுத்துக் கொண்டு சொல்வது, தன்னை கதைக்குள் இழுத்து வைத்துக் கொண்டு சொல்வது. கதைக்குள் கேட்பவரை , படிப்பவரை பாத்திரமாக்குவது என பல முறைகளில் சொல்லலாம். சொல்லால் கதைகளை கதை சொல்பவன் கதை வடிக்கின்றான். சொல் வழியேதான் எண்ணம் வெளி உலகை தொடும்.
முதலில் எண்ணம் கதை கதாசிரியரின் மனதில் ஒரு ஓற்றை அலகாக திரண்டு உள்ளது. அதுவே உந்துவிசை சிந்தனைக்கு வெளிப்புற வடிவத்தைக் கொடுக்கும் செயலாகிறது. சொல் முளைகிறது. சொல் வாக்கியம் ஆகிறது. பின்னர் பல வாக்கியங்கள் கதையாகின்றது. ஒரு வாக்கியத்தின் தொடர்பும் அதன் அர்த்தமும் அதன் கடைசி வார்த்தை உச்சரிக்கப்படும் வரை முழுமையடையாது.வாசகன் மனதில் அக்கதையை வாசிக்கையில் வார்த்தைகள் தனிதனியாக அவனை சென்றடைந்தாலும், இறுதியில் அவை அனைத்தும் ஒன்றாக இணைகின்றன; வாசகனால் ஒற்றை அலகாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
கேட்பவர் மனதிலும் அந்த சொல், வாசிப்பவர் மனதிலும் கதைகள் மருந்தாய், கீறலாய், ரணமாய், போர்வையாய் என பல நேரம் தங்குகின்றது. பல நேரம் வாசிப்பவர் கதையால் இழுக்கப்பட்டு கதைகளுக்குள் தானும் ஒரு பாத்திரமாக பொருந்தி போவதும் உண்டு. கதையின் ஆற்றலும், கதை சொல்லுபவர் ஆற்றலும் அக்தகையது.
கதை எழுதப்படுகையில் வாசகன் தானே வாசிக்கின்றான். கொச்சையாக சொல்கையில் மைண்ட் வாய்சில் சொல்லிக் கொள்கின்றான். கதை சொல்லப்படும் பொழுது கதை சொல்பவன் கதை சொல்லும் நோக்கத்தினை முடிவு செய்து அதற்கேற்ப குரலை எங்கு அழுத்த வேண்டும், எங்கு உயர்த்த வேண்டும், எங்கு இறக்க வேண்டும், எங்கு தத்தழுக்க வேண்டுமென முடிவு செய்து பேசலாம். அது கேட்பவருக்கு சரியாக போய் சேரும். கதை வாசிப்பது வேறு வகையான அனுபவம். இங்கு நாமே வாசிக்கையில், சொல்பவனாகவும் நாம் மாற வேண்டியுள்ளது. இரட்டை பாத்திரம் வகிக்கின்றோம்.
நம்முடைய சார்புநிலை, வளர்ந்த விதம், முன் முடிவுகள் எல்லாம் நாம் வாசிக்கையில் நமக்கான மனதின் குரலில் இருக்கின்றன. இந்த இடத்தில்தான் நவீனத்தில் கதை பற்றி பகிர்ந்து கொள்ளும் சக வாசகன் முக்கிய பங்கு வகிக்கின்றான். அதை மேம்பட்ட நிலைக்கு எடுத்து செல்கையில் சக வாசகன் விமர்சகன் ஆகின்றான்.
புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும் தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது.
அவ்விடத்தில் புதிதாக வாசிக்க இருக்கும் வாசகன் தன்னிடம் ஏற்கனவே உள்ள சார்புநிலை, வளர்ந்த விதம், முன் முடிவுகள் கடந்தும் சிந்திக்க இயலும்.புதிதாக உள்ளே செல்லும் வாசகனின் கற்பனை முளைக்க களம் அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. கண்னுக்கு முன்னே உள்ள நூலின் கதையை கண்ணுக்கு புலனாகாத சிந்தனையாக கற்பனையின் வழியே சேமிக்க செய்கையையில் துணையாக இருக்கின்றது.
விமர்சனத்தில் 1) நெடிய மரபினை சுட்டி , இந்த மரபில் இங்கே இந்த கதையாசிரியர் இங்கனம் பொருந்துகின்றார் என அடையாளம் சொல்வது 2) கதை சொல்லும் தத்துவ பின்புலத்தினை சொல்லி அக்கதையின் உவமை, உருவகம் , குறியீடுகளை விளக்குவது 3)கதையின் வடிவத்தில் உள்ள வித்தைகளை விளக்குவது என பகுதிகள் உள்ளன.
வாசகன் இத்தனை நுட்பங்களை எடுத்துக் கதைக்குள் போட்டு அதன் வழியே அந்த கதையை மனதில் வாசிக்கையில் அவன் புத்தியில் கதை அவனது இயல்புக்கு ஏற்ப உட்காரும். பந்திக்கு கூட்டி சென்று இலை போட்டு உணவு பரிமாறி உட்கார வைப்பது போல ஒரு செயல், சாப்பாடும், அதன் ருசியும் சாப்பிடுபவனிடம் விடப்படும்.
இதை சொல்லி இப்பொழுது ஆசிரியர் சுரேஷ்குமார இந்திரஜித் கதை உலகுக்கு செல்வோம்.
இலக்கிய மரபில் சுரேஷ் குமார இந்திரஜித் அவர்களின் இடத்தினை பதாகை சிறப்பிதழிலும், ஜெயமோகன் தளத்திலும் விரிவாக ஆவணப்படுத்தி உள்ளார்கள்.
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பதாகை இதழில் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை பேட்டிக் கண்டது வந்துள்ளது. அப்பேட்டியில் இருந்து சுரேஷ்குமார இந்திரஜித் உலகினை காணும் விதம் பற்றி அறிந்து கொள்ளலாம். அவர் கதை சொல்லுக்கான அடித்தளம் பற்றி விரிவாக சொல்லியுள்ளார்.
சுரேஷ்குமார இந்திரஜித் கதையுலகம்
சுரேஷ்குமார இந்திரஜித் புனிதம் என உலகில் மதிப்பீடுகள் உள்ளதை காண்கின்றார். ஆனால் புனிதம் என்பதை கோரும், மயில் தோகை என விரித்துக் காட்டும் எல்லா நடப்புகளும், மனிதர்களும் புனிதம் என்பதை உண்மையில் சுட்டவில்லை என்கின்றார். பல நேரங்களில் அது போலித்தன்மையுடையது என்கின்றார். கோவில், குடும்பம், திருமணம் என்பதில் புனிதம் எனப்படுவது சுட்டப்பட்டு பேணப்படாத இடங்களை காட்டுகின்றார். ஓவ்வொரு முறையும் புனிதம் என வைக்கப்படுவதை நேரடிக் காட்சியாக அவ்வாறே எடுத்துக் கொள்ளாமல், புனிதம் என கோரப்படுவதை என்பதை மலை மேல் வரும் புகையாக கண்டு அது வரும் இடத்தின் தீயின் ஓட்டத்தினை காண சொல்கின்றார்.
யாரோ இவள் யாரோ கதை தாய்பாசம் என்னும் புனிதமாக நினைக்கப்படும் விஷயத்தினை இல்லை என சொல்லி துவங்கும். பெரிய நாயகி, சிறிய நாயகி என அக்காள் தங்கைகள் அம்மாவால் கொள்ளும் சிரமங்களில் துவங்கி டிமானிட்டைஷேசனில் நோட்டு மாற்ற முடியாமல் போய் அழுவதில் முடியும்.
புனிதமாக்குவதும், சிறப்ப்பாக்குவதும் மானுடனே, அதை உடைப்பதும், பாரமாக்குவதும் மானுடனே.
முற்றுப்புள்ளிக் கதையில் சினிமாவில் பாடல்களுக்கு நடனம் ஆடும் பழைய நடிகையை சந்திக்க விழையும் அமெரிக்க ரிட்டர்ன் க்ளாமர் நாயகியை தாயை போல என சொல்லி முடிப்பான். கூட வரும் நண்பன் இது முற்றுப்புள்ளி என்பான். தாய் போல என முடிவு செய்ததும் தொடர்கதை அல்ல, அது முற்றுப்புள்ளி என்பது ஒரு முரண்சுவை. புனிதம் போல சொல்லப்படுவது, ஆனால் புனிதம் ஆக இருப்பதல்ல.
வாழ்வில் நேர்நிலை, செயல்நிலை, எதிர்நிலை மூன்றும் ஒரே நேரம் மானிடத்தில் அமையலாம். நேர்நிலை அன்பு, கனிவு,விவேகம், ஊக்கம் என நிற்கும். செயல்நிலை வேகம்,போட்டி,சந்தோஷம், துக்கம் என நிற்கும். எதிர்நிலை சோம்பல், பொறாமை, ஆற்றாமை, கோபம், குரோதம் என நிற்கும். சுரேஷ்குமார இந்திரஜித் நேர் நிலை என மனக்கோட்டை கட்டுமிடங்களில் எதிர்நிலையும் ஓங்கி, செயல்நிலையில் வெளிப்படும் இடங்களை தன் கதையில் வைக்கின்றார். அதே நேரம் எதிர்நிலை என ஐயுறும் இடங்களில் நேர்நிலைக்கும் இடம் இருப்பதை காட்டுகின்றார்.
ஆங்கில புத்தகம் படிக்கும் பெண் புத்தகம் பற்றி சுனிலும், சுரேஷ்குமார இந்திரஜித்தும் பேசிக் கொள்வது நேர்க்காணலில் உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்த பெண் ஒருவர் தன் பழைய வாடிக்கையாளருடன் கொள்ளும் உரையாடல் அக்கதை. துவக்கத்தில் அவள் அவனிடம் அனுசரனையாகவே பேசுகின்றாள். அந்த வாடிக்கையாளனின் அணுக்கத்தினை ஒரு காலத்தில் விடுவிப்பாக கருதியே பேசுகின்றாள். ஏதோ ஒரு நொடியில் சுரண்டல் என்னும் அந்த செயலின் வலிமையும், அது தன்னை தாக்கிய விதத்தினையும் எண்ணி மெல்லிய குரலில் வாடிக்கையாளனை உணர்வு ரீதியாக தொடும் விதத்தில் ஓன்று சொல்லி சென்று விடுகின்றாள். அவள் சொன்னது உண்மை என சுனிலும், பொய் என சுரேஷ்குமார இந்திரஜித்தும் பேசிக் கொண்டார்கள். வாசகனாக சுனிலும் அந்தப் பெண் சொன்னது உண்மை எனப் பட்டது, ஆசிரியர் அது பொய் என்கின்றார். வாசிக்கும் நமக்கும் அது எப்படி வேண்டுமானாலும் தோனலாம். நேர்நிலை மையம் கொண்ட செயல்நிலையாகையில் அது நேர்நிலையாகவே முடியலாம் என்ற விதத்தில் சுனிலும், அது நேர்மறையாக சொல்லபப்ட்டாலும் எதிர்நிலையாகவே முடியலாம் என ஆசிரியரும் சொல்கின்றார்கள். வாசகனை கதைக்குள் பங்கு பெற வைத்துள்ளார் என நினைத்துக் கொண்டேன். வாசகன் புத்திக்குள் எப்படி பொருள் கொள்வது என்பது அவன் சுதந்திரம்.
வடிவம், மொழி இரண்டும் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொள்கின்றார். காட்சிகளை ஆசிரியர் பெரும்பாலான இடங்களில் தனித்து சொல்லாமல் கதாபாத்திரங்களின் உள ஓட்டங்கள், உரையாடல்கள் வழியே மட்டும் முன் வைக்கின்றார். அவர் கதைகளின் நிகழ்காலம் என்பது நனவுலகிலும், நனவுக்கு அப்பாற்றபட்ட உலகிலும் நிகழ்கின்றது. சூத்திரங்களை போன்ற வடிவத்தில் நிகழ்வுகளை பதிகின்றார். உணர்வுகளை சொல்லாமல் நிகழ்வதை, நிகழ்வதாக நினைப்பதை மட்டும் சொல்கின்றார். அவரது கதையில் உணர்வுகளை வாசகன் கொண்டு வர எதிர்பார்க்கின்றார். கதை சொல்பவர் உணர்வுகளை கொடுக்காமல், தன்னளவில் வாசகனிடம் சொல்லப்படும் நிகழ்வு என்ன உணர்ச்சியை வேண்டுமானாலும் கொண்டு வரட்டும் என்கின் சில உதாரணங்களை பார்ப்போம்.
காமத்தின் வாள் என்னும் கதை திருமணத்துக்கு அப்பாற்றப்பட்ட உறவின் வழியாக திருமணத்தில் இருந்து வெளியேறிய பெண்ணினை பேசுகின்றது. அக்கதையில் “வாசலில் அழைப்பு மணி அடிக்கும் சப்தம் கேட்டது. கதவை திறந்தேன். வாசலில் இறந்து போன என் அப்பா நின்று கொண்டிருந்தார். நான் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடன் கதவை திறந்து அவரை உள்ளே வர சொல்லி நாற்காலியில் அமர சொன்னேன்” என கதாசிரியர் சொல்லுவார். பின்னர் கதாநாயகி இறந்து போன அப்பாவுடன் உரையாடி தான் எந்த இடத்தில் நிற்கின்றோம் என புரிந்து கொள்வாள். அவள் தற்கொலைக்கு பின்னர் தன் காதலனை காண்பதில் கதை முடியும். வாசகனுக்கு கதை நிகழ்காலத்தில் ஒரே நேரம் கதாநாயகியின் நனவுலகின் கணவன், காதலன் காண இயலும், அது நிகழும் அதே காலத்தில் கதாநாயகி தன் இறந்து போன தந்தையுடனும் பேசுவாள். தன்னிலையில் கதை நகரும் உத்தி இருப்பதால் வாசகன் கதாநாயகியாகவே ஆகவும் கதாசிரியர் இடம் கொடுக்கின்றார்.
மாயப்பெண் கதையில் கதாநாயகன் வயதான காலத்தில் தன் பழைய அன்பின் காதலை மகாநதி என வந்து மறையும் பெண்ணின் வழியாக காண்கின்றான். கண்டதும் காட்சி “நான் அவளைத் தொட கையை நீட்டினேன்.அவள் ஜொலித்துக் கொண்டே சிரித்துக் கொண்டே மாயமாக மறைந்து போனாள். நான் தனித்து நின்றேன். காகம் கத்தும் குரல் கேட்டது” என முடியும். காகத்தின் குரலில் மகாநதி என்னும் அந்த மாயப்பெண் செயல் படுகின்றாள். முதல் முறை காகம் கரைகையில் மாயப்பெண்ணுடன் பயணம் செய்யும் கதாநாயகன் காகத்தின் குரலில்தான் நனவுலகம் திரும்புகின்றான். எது நிஜம் திரும்பியதா? சென்று காதலை கண்டதா? வாசகனுக்கே ஊகிக்க இடம் உள்ளது. கற்பனையில் நித்தம் பயணம் செய்கையில் எது கற்பனை? எது நிஜம் என பிரிக்க முடியாத இடம் சாத்தியமுள்ளதுதானே.
சொப்பனவாழ்வில் மகிழ்ந்து கதையில் கதாநாயகன் தெருவில் மயங்கி கிடக்கும் பெரியவரை காப்பாறுகின்றான். அவரை ஆட்டோவில் தூக்கி போட்டு கொண்டு செல்கின்றோம். கதை காப்பாறிய கதாநாயகன் காதலை அடைந்து , கல்யாணம் செய்து என ஓட்டிக் கொண்டே இருக்கையில் , கதாசிரியர் நடுவே வந்து விடை பெற்றுக் கொள்கின்றார். ஆட்டோவில் காப்பாற்றப்பட்ட பெரியவர் கதாநாயகனை வைது கீழே இறக்கி விடுகின்றார். காப்பாற்றியதற்கு பரிசாக நாலு வசவுதான் கிடைத்தது. கீழே மயங்கி விழுந்தவரை காப்பாற்றுதல் உதவி செய்தல் புனிதம் என நினைத்துக் கொண்டிருக்கையில் காப்பாற்றப்பட்ட பெரியவருக்கு எவனோ மயங்கி விழுந்த தன்னை தூக்கிக் கொண்டு செல்வதாக படுகின்றது. இதில் கதாநாயகன் காதலித்து, மனந்தெல்லாம் கதைக்குள் நடக்கும் நிஜத்தில் நடக்கவில்லை, கதாசிரியர் இவ்வண்ணமெல்லாம் நிகழ்ந்தால் நன்றாக இருக்குமென கூறி செல்கின்றார்.
மானுடத்தின் பெரும் திட்டங்கள், எண்ணங்கள், ஆசைகள் நடுவே தற்செ யல்களின் தாக்கத்தினையும் கதைகளில் முன் வைக்கின்றார். செயல், இடம், காலம், ஆசை, அறிவு என்ற எல்லைகளை போல நியதியும் மனித வாழ்வில் ஒரு எல்லையை அளிக்கின்றது. அந்த எல்லைக்குள் முட்டி நிற்கையில் கண்ணுக்கு புலப்படும் காரண காரியங்கள் செயல் இழக்கின்றன.
ஒரு பாடகி , ஒரு மாயப்பிறவி கதையில் பாடகியானாவள் கணவனை பிரிந்து, காதலை அடைந்து, பல சிரமங்களுக்கு இடையே காதலில் இருந்து திருமண வாழ்வுக்கு நகர்கையில் தற்செயலாக கோவிலுக்கு சென்று மனநிலை இழப்பாள். யுகம் யுகமாக மறைந்தும், பிறந்தும் வாழும் மாயனொன்றினை சந்தித்தது தற்செயலே. ஆனால் அத்தனை திட்டங்கள், ஆசைகள் எல்லாவற்றிலும் இன்னோரு திசைக்கு இழுத்து விட்டது.
தற்செயல், தனக்கென ஒரு வடிவமும் மொழியும், மனக்கோட்டைகள் உடைதல்,ஐயத்தின் நடுவே மிளிர்தல், மலை மேல் புகையென புனிதம் கோரப்படும் இடங்களை காணுதல் என சுரேஷ்குமார இந்திரஜித் கதை உலகம் உள்ளது. கதைகள் விடாமல் சொல்லப்படுகின்றது. வாசகனுக்கும் அங்கு வேலை இருக்கின்றது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
