அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.
Tag: கலைஞர்
அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!
எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும் உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய மொழிகள், பெற்ற விருதுகளின் பட்டியல் போன்றவற்றை பேச வேண்டாம் என்று தோன்றுகிறது. எஸ்பிபி “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!”
